Published:Updated:

கம்பெனி டிராக்கிங் : ப்ரஸ்டீஜ் எஸ்டேட்ஸ் புராஜெக்ட்ஸ்!

கம்பெனி டிராக்கிங்
பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி டிராக்கிங்

(NSE SYMBOL: PRESTIGE)

கம்பெனி டிராக்கிங் : ப்ரஸ்டீஜ் எஸ்டேட்ஸ் புராஜெக்ட்ஸ்!

(NSE SYMBOL: PRESTIGE)

Published:Updated:
கம்பெனி டிராக்கிங்
பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி டிராக்கிங்
பெங்களூருவைத் தலைமையகமாகக்கொண்டு 1986-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ப்ரஸ்டீஜ் எஸ்டேட்ஸ் புராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தைத்தான் இந்த வாரம் நாம் டிராக்கிங் பகுதியில் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.

கட்டுமானத் துறையில்...

கட்டுமானத் துறையில் உள்ள பல்வேறு விதமான பிரிவுகளிலும் கால்பதித்து வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம். கடந்த நிதியாண்டின் இறுதியில் உள்ள நிலவரப்படி, இந்தக் குழுமம் கிட்டத்தட்ட 134 மில்லியன் சதுர அடி அளவிலான 247 புராஜெக்ட்டுகளை வெற்றிகரமாகச் செய்துமுடித்திருக்கிறது. அதேபோல், கடந்த நிதியாண்டின் இறுதி நிலவரப்படி, 52 மில்லியன் சதுர அடி அளவிலான 45 புராஜெக்ட்டுகளைத் தற்சமயம் கட்டுமானம் செய்துவருகிறது இந்த நிறுவனம்.

கம்பெனி டிராக்கிங் : ப்ரஸ்டீஜ் எஸ்டேட்ஸ் புராஜெக்ட்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேலும், 57 மில்லியன் சதுர அடி அளவிலான கட்டுமானங்களை எதிர்காலத்தில் கட்டுவதற்கான திட்டத்தையும் தன்வசத்தே கொண்டுள்ளது. இவை தவிர, 27 மில்லியன் சதுர அடி அளவிலான கட்டுமானம் செய்யும் அளவுக்கான 262 ஏக்கர் அளவிலான நில வங்கியையும் தன்வசத்தே கொண்டுள்ளது இந்த நிறுவனம். இந்த நிறுவனம் கட்டுமானத் துறை சார்ந்த மற்றும் சார்ந்திராத பல்வேறு தொழில்களிலும் கால்பதித்துள்ளது. கடந்த நிதியாண்டின் இறுதியில் ரூ.81,248 மில்லியன் அளவிலான வர்த்தகத்தைச் செய்திருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பல்வேறு துறைகளிலும்...

தென் இந்தியாவில் குடியிருப்புகள், அலுவலகப் பயன்பாட்டுக்கான கட்டடங்கள், ரீடெயில் நிறுவனங்களுக்கான கட்டுமானங்கள், பொழுதுபோக்குகளுக்கான கட்டுமானங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் போன்ற பல்வேறு விதமான கட்டுமானங்களைச் செய்யும் ஒரு பெரிய நிறுவனமாக இந்த நிறுவனம் இன்றைக்கு உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்க விஷயம்.

கம்பெனி டிராக்கிங் : ப்ரஸ்டீஜ் எஸ்டேட்ஸ் புராஜெக்ட்ஸ்!

பல்வேறு நகரங்களில் 205-க்கும் மேற்பட்ட பெருமைமிகு கட்டுமானங்களைச் செய்து முடித்துள்ள இந்த நிறுவனம் பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொச்சி, மைசூர், மங்களூர் மற்றும் கோவாவில் கால்பதித்து வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. கால்பதித்த நகரங்கள் அனைத்திலுமே மிகச் சிறந்த அனுபவத்தைத் தரும் வகையிலான மால்கள், அதிக எண்ணிக்கையிலான அடுக்குமாடிக் குடியிருப்புகள், டெக் பார்க்குகள், ஹோட்டல்கள், ஆடம்பர பங்களாக்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போன்றவற்றைச் சிறப்பாகக் கட்டுமானம் செய்து முடித்திருக்கிறது இந்த நிறுவனம்.

கம்பெனி டிராக்கிங் : ப்ரஸ்டீஜ் எஸ்டேட்ஸ் புராஜெக்ட்ஸ்!

சென்னையில் இந்த நிறுவனத்தின் கட்டுமானங்களான ப்ரஸ்டீஜ் சைபர் டவர்ஸ், ப்ரஸ்டீஜ் பாலிகான் மற்றும் ப்ரஸ்டீஜ் பலாடியம் என்ற பெயருள்ள வணிகரீதியிலான பயன்பாட்டுக்கான கட்டுமானங்கள் மிகவும் பிரசித்திபெற்றவையாகவும் அதிக வரவேற்பைக் கொண்டவையாகவும் இருந்து வருகிறது. சென்னையில் இந்த நிறுவனம் கட்டுமானம் செய்திருக்கும் ‘தி ஃபோரம் விஜயா மால்’ 2013-ம் ஆண்டில் சென்னையில் கட்டப்பட்டு நிறைவு செய்யப்பட்ட மிகப்பெரிய மால்களில் ஒன்றாகும்.

பெங்களூரில் ‘ப்ரஸ்டீஜ் அக்ரோபோலிஸ்’ எனும் பண்டைய கலை வேலைப்பாடுகளுடன் கூடிய தோற்றம் கொண்டிருக்கும் கட்டு மானத்தைச் செய்தது இந்த நிறுவனம். பெங்களூருவில் முதன்முதலாகக் கேட்டட் கம்யூனிட்டியாக ‘ப்ரஸ்டீஜ் ஓசோன்’ என்ற கட்டுமானத்தைச் செய்த இந்த நிறுவனம் நவீன காலத்துக்கு ஏற்றவாறு ரீடெயில் வர்த்தகத்துக்கு மிக உதவியாக இருக்கும் வண்ணம் ‘தி ஃபோரம் மால்’ எனும் மால் கட்டுமானத்தையும் செய்தது.

அகில இந்திய ரீதியாக இந்த மால்தான் முதன்முதலாக நவீனகால மால்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டு வெற்றிகரமாக இயங்கிய மால் ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெங்களூரில் உள்ள நந்தி ஹில்ஸில் ‘ப்ரஸ்டீஜ் கோல்ஃப்ஷயர்’ என்னும் 205 ஏக்கரில் அமைந்த மிக ஆடம்பரமான பங்களாக்கள், க்ளப் ஹவுஸ், ஃபால்கல் க்ரீன் எனும் ஆடம்பர மற்றும் அதி நவீன ஸ்பா போன்றவற்றுடன் ஒரு தனிப்பட்ட குளத்துடன் கூடிய சேம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தும் அளவிலான கோல்ஃப் கோர்ஸையும் அமைத்தது இந்த நிறுவனம்.

கம்பெனி டிராக்கிங் : ப்ரஸ்டீஜ் எஸ்டேட்ஸ் புராஜெக்ட்ஸ்!

இந்த புராஜெக்ட்டுடன் ப்ரஸ்டீஜ் எஸ்டேட்ஸ் குழுமம் பெங்களூரில் ‘தி மாரியட் இன்டர்நேஷனல்’ என்ற ஆடம்பரமான தங்கும் விடுதியையும் கட்டுமானம் செய்தது. தென் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த டவுன்ஷிப் டெவலப்மென்டாக ‘ப்ரஸ்டீஜ் சாந்திநிகேதன்’ என்ற டவுன்ஷிப்பையும் கட்டுமானம் செய்தது இந்த நிறுவனம்.

கம்பெனி டிராக்கிங் : ப்ரஸ்டீஜ் எஸ்டேட்ஸ் புராஜெக்ட்ஸ்!

பெங்களூரில் மிகப்பெரிய குடியிருப்பு அமைப்பாக ‘ப்ரஸ்டீஜ் லேக்சைட் ஹாபிடட்’ என்றதொரு கட்டுமானத்தை இந்த நிறுவனம் வெற்றிகரமாகச் செய்துமுடித்தது. இந்தக் குடியிருப்பு 102 ஏக்கர் இடத்தில் 271 வில்லாக்கள் மற்றும் 3,428 அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கொண்டதாக இருக்கிறது. பெங்களூரில் கட்டுமானம் செய்த தி போரம் மாலின் வெற்றியை அடிப்படையாகக்கொண்டு ‘தி ஃபோரம்’ என்ற பிராண்டில் தென் இந்திய நகரங்களில் மால்களைக் கட்டுமானம் செய்துள்ளது இந்த நிறுவனம். 2013-ம் ஆண்டில் சென்னையில் ‘தி போரம் விஜயா மால்’, 2014-ம் ஆண்டில் மங்களூரில் ‘ஃபோரம் ஃபிஸா மால்’, ஹைதராபாத்தில் ‘ஃபோரம் சுஜானா மால்’ என்பது போன்ற மால்களைக் கட்டுமானம் செய்தது இந்த நிறுவனம்.

ரிஸ்க்குகள் ஏதும் உண்டா?

கட்டுமானத்துறையில் செயல்படுகிற அனைத்து நிறுவனங்களுக்கும் உரித்தான ரிஸ்க்குகள் அனைத்தும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. மேலும், கட்டுமானத்துறையின் வளர்ச்சி (இந்த நிறுவனம் செயல்படும் அனைத்து பிரிவுகளிலும்) என்பது முழுக்க முழுக்க பொருளாதார வளர்ச்சியைச் சார்ந்தே அமைவதாகும்.

எனவே, ஏதாவது ஒரு காரணத்தால் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவு இல்லாது போனாலோ, தேக்கநிலையைச் சந்தித்தாலோ அது இந்த நிறுவனத்தின் செயல்பாட்டைப் பாதிக்கவே செய்யும். அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள், வட்டி விகிதத்தின் போக்கு, மூலப்பொருள்கள் விலை உயர்வு மற்றும் தொழிலாளர்களுக்கான சம்பளத்தில் வரும் அதிகரிப்புகள் போன்ற வையும் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும்.

ரிஸ்க்குகள் பல இருக்கிறபோதிலும் நீண்ட தொழில் அனுபவத்தையும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்லதொரு மதிப்பையும் கொண்டிருக்கும் நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் பங்குகளை சந்தை ஏதாவது ஒரு காரணத்தால் நல்லதொரு வீழ்ச்சியைச் சந்திக்கும்போது வருகிற கடுமையான விலை இறக்கத்தின்போது மட்டும் அதிக அளவிலான ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்டிருக்கும் முதலீட்டாளர்கள் மட்டும் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் வாங்க பரிசீலிக்கலாம்.

தங்களுடைய மூன்று ஆண்டுக்காலத்துக்கான போர்ட் ஃபோலியோவில் சேர்த்துக்கொள்ள தொடர்ந்து டிராக் செய்து வரலாம்.

ஏற்கெனவே கட்டுமானம் மற்றும் அது சார்ந்த துறைகளில் செயல்படும் நிறுவனங்களின் பங்குகளை அதிகம் கொண்ட போர்ட் ஃபோலியோவை வைத்திருப்பவர்களும், பங்கை வாங்கிய பிறகு தாங்களாகவே இந்த நிறுவனம் மற்றும் அது செயல்படும் துறையைப் டிராக் செய்துகொள்ள முடியாதவர்களும் இந்தப் பங்கை வாங்குவதைத் தவிர்ப்பதே நல்லது.

This section is not a buy/sell recommendation at the current price levels, but only a compilation of information about the company and the data is compiled by Dr S Karthikeyan (an Independent Research Analyst herein after referred as ‘Research Analyst’). Dr S Karthikeyan is a SEBI registered Research Analyst under the SEBI (Research Analysts) Regulations, 2014 with registration number INH200001384.

Analyst Certification and Disclosures under the provisions of SEBI (Research Analysts) Regulations 2014

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exist no conflict of interest that can bias his views in this report. The Analyst do not hold any share(s) in the company/ies discussed.

Disclosure of Interest Statement

1.Whether Research analyst’s or relatives’ have any financial interest in the subject company/ies and nature of such financial interest? – No; 2. Whether Research analyst or relatives have actual / beneficial ownership of 1% or more in securities of the subject company/ies at the end of the month immediately preceding the date of the document? – No; 3. Whether the research analyst or his relatives has any other material conflict of interest? – No; 4. Whether research analyst has received any compensation from the subject company/ies in the past 12 months and nature of products / services for which such compensation is received? – No; 5. Whether the Research Analyst has received any compensation or any other benefits from the subject company/ies or third party in connection with the research report? – No; 6.Whether Research Analyst has served as an officer, director or employee of the subject company/ies? – No ;7. Whether the Research Analyst has been engaged in market making activity of the subject company/ies? – No.

General terms and conditions of the research report

For a detailed disclaimer and disclosure please visit http://nanayam.vikatan.com/index.php?aid=9985. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One-year Price history of the daily closing price of the securities covered in this report is available in the following URL (https://www.nseindia.com/get-quotes/equity?symbol=PRESTIGE #info-historicaldata) – in this URL select historical data and then click on 1Y and click Filter to get one year price of the stock.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism