Published:Updated:

ஏற்றத்தில் சந்தை... புதிய ஆண்டில் கவனிக்க வேண்டிய பங்குகள்! - முதலீட்டு வழிகாட்டல்

சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
சந்தை

SHARE INVESTMENT

ந்தியப் பங்குச் சந்தை, 2021-ம் ஆண்டில் எப்படி இருக்கும் என்பதையும், நிஃப்டி, சென்செக்ஸ் ஆகிய முக்கிய குறியீடுகளின் கணிப்பு குறித்தும் ஏற்கெனவே முந்தைய இதழ்களில் வெளியான கட்டுரைகளில் கூறியிருந்தோம்.

இலக்குகள் குறித்த எதிர்பார்ப்பு

அதில் குறிப்பிட்டிருந்த பங்குச் சந்தை இலக்குகள் குறித்த எதிர்பார்ப்பு நிலையாக இருப்பதோடு மட்டும் இல்லாமல், பங்குச் சந்தை நகர்வின் வேகம் தொடர்ந்து நம்மை ஆச்சர் யத்துக்கு ஆளாக்குவதுடன், சிலரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையிலும் தொடர்ந்து ஏற்றத்திலேயே இருந்து வருகிறது.

அடிப்படையில் இந்தியப் பொருளாதாரம், ‘கோல்டிலாக்ஸ்’ கட்டத்தில் இருக்கிறது. தற்போது எதிர்பார்க்கப்படும் பொருளாதார சமநிலை என்பது இயல்பில் ஏட்டள விலும், நடைமுறையில் மிக அரிதான தாகவும் இருக்கிறது. இதைத்தான் ‘கோல்டிலாக்ஸ்’ நிலை என்கிறார்கள்.

ரெஜி தாமஸ்  முதலீட்டு ஆலோசகர்
ரெஜி தாமஸ்  முதலீட்டு ஆலோசகர்

என்றாலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) சரிவு நினைத்ததைவிடவும் குறைவாகவே இருக்கிறது என்பதால், பங்குச் சந்தைக்கு உள்ள அச்சுறுத்தலும் மிகக் குறைவாகவே இருக்கிறது.

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாற்றம் கண்ட கொரோனா வைரஸ் பரவலானக உலகம் முழுவதையும் மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியது. ஆனால், அதன் தாக்கம் பயப்படும் அளவுக்கு இல்லை. அதேசமயம், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்த பாசிட்டிவ் செய்திகளும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

அபரிமிதமான முதலீடுகள்

இந்த நம்பிக்கையின் காரணமாகவே பங்குச் சந்தைகளில் அபரிமிதமான முதலீடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்களின் ஈடுபாடு தொடர்ந்து பங்குச் சந்தையை ஏற்றத்தின் போக்கில் வலுவாக நகர்த்துவதற்கு உதவியாக இருக்கிறது.

இந்தியப் பங்குச் சந்தைகளில் 2020–ம் ஆண்டு டிசம்பரில் சுமார் ரூ.62,016 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ள நிலையில், பங்குச் சந்தையின் போக்கு என்னவாக இருக்கப்போகிறது என்பது குறித்த நம் எதிர்பார்ப்பில் எந்த சந்தேகமும் இல்லை என்பது உறுதியாக இருக்கிறது.

இது இந்தியச் சந்தைகளில் தொடர்ந்து மூன்றாவது மாத அதிகபட்ச அந்நிய நிதி நிறுவனங்களின் (எஃப்.ஐ.ஐ-க்கள்) முதலீடாகப் பதிவாகியுள்ளது. இதனால் பங்குச் சந்தைகள் புதிய வரலாற்று உச்சங்களை எட்டியுள்ளன. இதன் அடிப்படையில் பார்க்கையில், சந்தையில் முதலீடுகள் தொடர்ந்து வருவது வலுவாக இருந்தால், சந்தையின் போக்கானது தொடர்ந்து ஏற்றத்தில் இருப்பதோடு, இறக்கத் துக்கான வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கும்.

நிஃப்டி 15300 புள்ளிகள்

எனவே, தற்போதைய எதிர்பார்ப்புகளின்படி, நிஃப்டி 14700 முதல் 15300 வரை எட்டலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 2020 மார்ச் மாதம் அடைந்த இறக்கத்திலிருந்து இதுவரை கிட்டத்தட்ட 7510 புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ள நிஃப்டி, இந்த இலக்கை எட்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

சந்தை
சந்தை

இந்த நிலையில், பங்குச் சந்தையில் எந்தெந்த பங்குகளில் முதலீடு செய்யலாம் என்ற கேள்வியும் நம்முன் எழுகிறது. அதன்படி பார்க்கும்போது, நீண்டகால அடிப்படையில் சில பங்குகளை உங்களுக்காகப் பரிந்துரைக்கிறோம்.

ஹெச்.டி.எஃப்.சி லைஃப்

இந்த கொரோனா பேரழிவு காலத்தில் எதிர்பாராத நிதிச் செலவுகளைச் சமாளிப்பதற்கான அம்சமாக ஆயுள் காப்பீடு மற்றும் ஆரோக்கியக் காப்பீடு இருப்பதை எல்லோருக்கும் கற்பித்திருக்கிறது. இதுவரையிலும் தயக்கம் காட்டிய பலரையும் காப்பீட்டின் முக்கியத்துவத்தை உணர வைத்திருக்கிறது.

வழக்கமாகவே ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்கள் காப்பீடுகளுக்கான காலம் என்று நிதிச் சேவைகள் துறையில் கூறுவார்கள். ஏனெனில், வருமான வரிக் கணக்குக் தாக்கல் செய்யும் காலம் என்பதால், வரி சேமிப் புக்காக பலரும் காப்பீடுகளை எடுப்பது வழக்கம்.

இந்தியாவின் முன்னணி ஆயுள் காப்பீடு நிறுவனங்களில் ஒன்று, ஹெச்.டி.எஃப்.சி லைஃப். இந்த இன்ஷூரன்ஸ் நிறுவனம், கடந்த இரண்டாம் காலாண்டில் நல்ல வருமான வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.

ஆயுள் காப்பீடு பாலிசி விற்பனையிலும் சரி, லாப வளர்ச்சியிலும் சரி, நல்ல வளர்ச்சிப் பதிவாக்கியிருக்கிறது.

இந்தப் போக்கு தொடரும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால், இந்த இன்ஷூரன்ஸ் நிறுவனப் பங்கின் விலை குறுகியகாலத்தில் ரூ.750 வரை எட்டுவதற்கான வாய்ப்புள்ளது. மூன்றாம் காலாண்டு முடிவுகள் சிறப்பாக வரும்பட்சத்தில் பங்கின் விலை ரூ.770 வரை உயரவும் வாய்ப்புள்ளது.

கொரமண்டல் இன்டர்நேஷனல்

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உரத் தயாரிப்பு கொரமண்டல் இன்டர்நேஷனல் நிறுவனமாக இருக்கிறது. உரம் மற்றும் சிறப்பு ரசாயனங்கள், பயிர் பாதுகாப்பு மற்றும் சில்லறை விற்பனை ஆகியவற்றில் முன்னணி நிறுவனமாக இருக்கிறது.

ஆண்டுக்கு கிட்டத்தட்ட 4.5 மில்லியன் டன் உரம் உற்பத்தி செய்யும் நிறுவனமாக இருப் பதால், சந்தையில் முன்னணி நிறுவனமாகவும் உள்ளது.

அதேசமயம், வருவாய் வளர்ச்சி மற்றும் நிகர லாப வளர்ச்சி அடிப் படையிலும் தொடர்ந்து நிலையான மேம்பாட்டைப் பதிவு செய்துள்ளது. தற்போது பருவமழை சிறப்பாக இருப்பதால், இந்த நிறுவனத்தின் காலாண்டு நிதிநிலை முடிவுகளும் சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இதன் அடிப்படையில் பங்கின் விலை ரூ.828 என்ற நிலையைக் கடந்து நகரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அப்படி நடக்கும்போது பங்கின் விலை ரூ.842 முதல் ரூ.855 வரை உயர வாய்ப்புள்ளது.

சின்ஜென் இன்டர்நேஷனல்

ஒருங்கிணைந்த ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் உற்பத்தி தொடர்பான அறிவியல் சார்ந்த ஆரம்பக் கட்ட சேவைகள் முதல் வணிக ரீதியிலான சப்ளை வரை சின்ஜென் இன்டர்நேஷனல் நிறுவனம் செய்து வருகிறது.

தொழில்துறை, பார்மா, பயோ டெக்னாலஜி, நியூட்ரிசன், கால்நடை பராமரிப்பு, நுகர்வோர் பொருள்கள் மற்றும் சிறப்பு கெமிக்கல் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு சேவைகளை வழங்கி வருகிறது.

சின்ஜென் இன்டர்நேஷனல் பயோ கான் குழுமத்தின் ஓர் அங்கமாகும் மேலும், இந்த நிறுவனம் இதனுடைய பணிக்காகப் பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளது. 2020 மார்ச் மாதத்துக்குப் பிறகு, பங்கின் விலை ரூ.400 வரை உயர்ந்துள்ளது. அதாவது, ரூ.230-லிருந்து ரூ.620 வரை உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், இதன் விலை நகர்வு தொடர்ந்து வலுவானதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

பங்கின் செயல்பாடு வலுவாக இருப்பதுடன், ரூ.578 - 608 என்ற நிலைகளில் நல்ல சப்போர்ட்டும் இருக்கிறது.

மூன்றாம் காலாண்டு முடிவுகள் அடிப்படையில் பங்கின் விலை ரூ.650 முதல் 670 வரை உயர வாய்ப்புள்ளது.

வருண் பெவரேஜஸ்

இது அமெரிக்காவுக்கு வெளியே உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஃப்ரான்சைஸி குழுமமாக இருக்கிறது. கார்பனேட்டட் குளிர்பானங்கள், கார்பனேட்டட் அல்லாத பானங்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் இந்த நிறுவனம் பெப்சி கோ என்ற பிராண்டின்கீழ் விற்பனை செய்து வருகிறது.

வருண் பெவரேஜஸ் இந்தியாவில் 30 உற்பத்தி நிலையங்களைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் தொடர்ந்து சிறப்பான வருவாய் வளர்ச்சியையும் எபிட்டாவையும் பதிவு செய்துள்ளது. இதனுடைய வருங்கால வணிகக் கணிப்பு நிலையான வளர்ச்சியின் போக்கில் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த நிறுவனப் பங்கின் விலை அக்டோபர் மாதத் திலிருந்து நல்ல ஏற்றத்தைக் கண்டு வருகிறது.

தற்போது ரூ.900 முதல் 970 என்ற வரம்பில் வர்த்தகமாகி வருகிறது. பங்கு மீதான எதிர்பார்ப்பு அடிப்படையில் பார்க்கும்போது, காலாண்டு நிதிநிலை முடிவு சிறப்பாக வரும்பட்சத்தில் பங்கின் விலை ரூ.990 முதல் 1,030 வரையும், அதற்கு மேலும் உயரவும் வாய்ப்புள்ளது.

ஏ.யு ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்

இந்த ஏ.யூ ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் அதன் ஆரம்பக்கட்டத்தில் இருந்து மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. இன்று இந்த நிறுவனம் இந்தியாவின் ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பங்கள்மூலம் வங்கிச் சேவைகளை மிக எளிதாகத் தங்கள் வாடிக்கையாளர் களுக்கு இந்த வங்கிச் சேவை வழங்கி வருகிறது.

இதனால் தொடர்ந்து இந்த நிறுவனத்தில் நீண்டகால அடிப் படையில் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கின்றனர்.

இதன் சமீபத்திய நிதிநிலை முடிவுகளில் இதன் மொத்த வாராக் கடன் குறைந்தபட்ச அளவாக 1.54 சதவிகிதமாகவும், நிகர வாராக்கடன் 0.45 சதவிகிதமாகவும் உள்ளது. மேலும், இதன் வட்டி வருமானமும் சிறப்பாக ரூ.1,712 கோடியாக உள்ளது.

தற்போது பங்கின் விலை 840 - 897 என்ற வரம்பில் வர்த்தகமாகி வருகிறது. பங்கின் விலை ரூ.900 நிலையைக் கடந்து நகரும்போது ரூ.940 வரை உயர வாய்ப்புள்ளது.

தற்போது இந்தியப் பங்குச் சந்தையின் மிக முக்கிய நகர்வு காரணியாக லிக்விடிட்டி (எளிதில் பணமாக்கும் தன்மை மற்றும் சந்தைக்கு புதிய முதலீடுகள் வருவது) மிகச் சிறப்பாக இருந்து வருகிறது.

மேலும், சரிவிலிருந்து மீண்டு கொண்டிருக்கும் பொருளாதார காரணிகளும் நல்ல அறிகுறிகளைத் தருகின்றன. இது மேலும், பாசிட்டிவ் போக்கை உருவாக்கியுள்ளது. கொரோனா தடுப்பு மருந்துக்கான முயற்சிகளும் திட்டங்களும் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ள நிலையில், தொடர்ந்து பொருளாதார நடவடிக் கைகளும் கொரோனாவுக்கு முந்தைய நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக் கின்றன.

இந்தக் காரணங்களால் தொடர்ந்து பங்குச் சந்தை ஏற்றத்தில் இருப்பதற் கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதைப் பார்க்க முடிகிறது.எனவே, புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். எதிர்பார்ப்புகளில் ஏற்படும் மாற்றங்களைக் கவனித்து எச்சரிக்கையாக முடிவுகளை எடுப்பதன்மூலம் நல்ல லாபம் பெற வாய்ப்புண்டு என்பதை மறக்காதீர்கள்!

பிட்ஸ்

பேடிஎம் நிறுவனம் ஆன்லைன் மூலம் கேட்டவுன் கடன் தரும் இன்ஸ்டன்ட் கடன் வழங்கும் சேவையையும் போன்பே நிறுவனம் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை ஆன்லைன் மூலம் வாங்கும் சேவையையும் வழங்கப் போகிறது!

பிட்ஸ்

டந்த 5-ம் தேதி வரையில் இந்தியா முழுக்க 5.8 கோடி பேர் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்திருக் கின்றனர். இன்னும் ஒரு கோடி பேர் 10-ம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப் படுகிறது!