Published:Updated:

இரண்டாம் காலாண்டு... இன்ஃபோசிஸ் ரிசல்ட் எப்படி? - முக்கிய நிறுவனங்கள்..!

இரண்டாம் காலாண்டு
பிரீமியம் ஸ்டோரி
News
இரண்டாம் காலாண்டு

பார்தி இன்ஃப்ராடெல் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை 5.88% உயர்ந்து 1,766.40 கோடி ரூபாயாக இருக்கிறது!

செப்டம்பர் காலாண்டு முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. முக்கிய நிறுவனங்கள் சிலவற்றின் முடிவுகள் இங்கே...

பார்தி இன்ஃப்ராடெல் (Bharathi Infratel)

நடப்பு 2020-21–ம் நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை 5.88% உயர்ந்து, ரூ.1,766.40 கோடியாக இருக்கிறது.

இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,668.30 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபம் 23.96% குறைந்து, ரூ.732.60 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 963.50 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 0.39% உயர்ந்து ரூ.929.20 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.925.60 கோடியாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 5.21 ரூபாயிலிருந்து 3.96 ரூபாயாகக் குறைந்துள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சுப்ரோஸ் (Subros)

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனையானது 7.73% குறைந்து, ரூ.458.10 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.496.48 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபம் 32.81% உயர்ந்து, ரூ.17.73 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 13.35 கோடியாக இருந்தது.

இரண்டாம் காலாண்டு... இன்ஃபோசிஸ் ரிசல்ட் எப்படி? - முக்கிய நிறுவனங்கள்..!

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 11.91% உயர்ந்து, ரூ.57.24 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.51.15 கோடியாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 2.05 ரூபாயிலிருந்து 2.72 ரூபாயாக உயர்ந்துள்ளது.

அதுல் (Atul)

இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை செப்டம்பர் காலாண்டில் 4.16% குறைந்து, ரூ.1,002.09 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.1,045.63 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபம் 16.57% குறைந்து, ரூ.174.35 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.208.97 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 9.04% உயர்ந்து, ரூ.267.62 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.245.44 கோடியாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 70.45 ரூபாயிலிருந்து 58.78 ரூபாயாகக் குறைந்துள்ளது.

கோஃபோர்ஜ் (COFORGE)

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை 11.09% உயர்ந்து, ரூ.1,153.70 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.1038.50 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபம் 1% உயர்ந்து, ரூ.120.70 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.119.50 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 0.35% உயர்ந்து, ரூ.202.50 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.201.80 கோடியாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 19.25-லிருந்து 19.93-ஆக உயர்ந்துள்ளது.

அக்ரோ டெக் ஃபுட்ஸ் (Agro Tech Foods)

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை 11.75% உயர்ந்து, ரூ.228.58 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.204.55 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபம் 42.25% குறைந்து, ரூ.8.90 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.15.41 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 15.26% குறைந்து, ரூ.16.71 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.19.72 கோடியாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 6.56 ரூபாயிலிருந்து 3.76 ரூபாயாகக் குறைந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் (Bajaj Consumer Care)

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 1.60% உயர்ந்து, ரூ.56.92 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.56.02 கோடியாக இருந்தது.

இரண்டாம் காலாண்டு... இன்ஃபோசிஸ் ரிசல்ட் எப்படி? - முக்கிய நிறுவனங்கள்..!

இதன் ஒட்டுமொத்த வருமானமானது 3.83% உயர்ந்து, ரூ.235.36 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.226.67 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் மொத்தச் செலவு ரூ.166.34 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.162.23 கோடியாக இருந்தது.

ஹாத்வே கேபிள் அண்ட் டேட்டா காம் (Hathway Cable and Datacom)

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனை 10.02 % உயர்ந்து, ரூ.153.33 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.139.36 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபமானது 734.56% உயர்ந்து, ரூ.27.29 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 3.27 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 19.14% குறைந்து, ரூ.83.22 கோடியாக உள்ளது.இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.102.92 கோடியாக இருந்தது. இந்தப் பங்கின் இ.பி.எஸ் 0.02 பைசாவிலிருந்து 0.15 பைசாவாக உயர்ந்துள்ளது.

இன்ஃபோசிஸ் (Infosys)

இந்த நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனை செப்டம்பர் காலாண்டில் 7.02% உயர்ந்து, ரூ.21,046.00 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.19,666.00 கோடியாக இருந்தது.

இதன் நிகர லாபம் 17.45% உயர்ந்து, ரூ.4,497.00 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.3,829.00 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 19.48% உயர்ந்து, ரூ.6,802.00 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.5,693.00 கோடியாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 8.97 ரூபாயிலிருந்து, 10.56 ரூபாயாக உயர்ந்துள்ளது.

மைண்ட்ட்ரீ (Mindtree)

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனை 0.61% உயர்ந்து, ரூ.1,926.00 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.1,914.30 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபம் 87.93% உயர்ந்து, ரூ.253.70 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.135.00 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 54.83% உயர்ந்து, ரூ.414.80 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.267.90 கோடியாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 8.20 ரூபாயிலிருந்து, 15.41 ரூபாயாக உயர்ந்துள்ளது.

டாடா ஸ்டீல் பி.எஸ்.எல் (Tata Steel BSL)

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனை 21.18% உயர்ந்து, ரூ.5,519.40 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.4,554.63 கோடியாக இருந்தது.

இதன் நிகர லாபமானது 228.21% உயர்ந்து, ரூ.328.08 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.255.89 கோடியாக இருந்தது.

எபிட்டா வருமானம் 125.69% உயர்ந்து, ரூ.1,139.65 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.504.96 கோடியாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 2.34 ரூபாயிலிருந்து, 3 ரூபாயாக உயர்ந்துள்ளது.