Published:Updated:

இரண்டாம் காலாண்டு... மைண்ட்ட்ரீ ரிசல்ட் எப்படி? - முக்கிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்!

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
காலாண்டு முடிவுகள்

டாடா ஸ்டீல் பி.எஸ்.எல் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை ரூ.5,519.40 கோடியாக இருக்கிறது!

முக்கிய நிறுவனங்கள் சிலவற்றின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் இங்கே...

ஃபெடரல் பேங்க் (Federal Bank)

செப்டம்பர் காலாண்டில் இந்த வங்கியின் ஒருங்கிணைந்த நிகர வட்டி வருமானம் 23.67% உயர்ந்து 1,462.47 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,182.53 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 25.84% குறைந்து 315.45 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 425.34 கோடி ரூபாயாக இருந்தது.

பங்குகள்
பங்குகள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த வங்கியின் செயல்பாட்டு லாபம் 42.9% உயர்ந்து 1,044.81 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 731.17 கோடி ரூபாயாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 2.14 ரூபாயிலிருந்து 1.58 ரூபாயாகக் குறைந்துள்ளது.

சையன்ட் (Cyient)

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனையானது 13.21% குறைந்து 350.30 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 403.60 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 26.1% குறைந்து 65.40 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 88.50 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 24.14% குறைந்து, 105.90 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 139.60 கோடி ரூபாயாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 8.04 ரூபாயிலிருந்து 5.95 ரூபாயாகக் குறைந்துள்ளது.

டென் நெட்வொர்க்ஸ் (Den networks)

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை 1.58% உயர்ந்து 337.67 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 332.42 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 149.83% உயர்ந்து 36.76 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 14.72 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 13.92% உயர்ந்து 103.58 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 90.92 கோடி ரூபாயாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 0.30 பைசாவிலிருந்து 0.77 பைசாவாக உயர்ந்துள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

டாடா ஸ்டீல் பி.எஸ்.எல் (Tata steel BSL)

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை 21.18 % உயர்ந்து 5,519.40 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 4,554.63 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 240.06% உயர்ந்து 341.71 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 243.97 கோடி ரூபாயாக இருந்தது.

பங்குகள்
பங்குகள்

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 112.53% உயர்ந்து 1,133.01 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 533.11 கோடி ரூபாயாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 2.23 ரூபாயிலிருந்து 3.13 ரூபாயாக உயர்ந்துள்ளது.

டாடா எலெக்ஸி (Tata Elxsi)

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனை 11.5% உயர்ந்து, 430.18 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 385.83 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபமானது 58.38% உயர்ந்து 78.88 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 49.81 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 47.99% உயர்ந்து 122.46 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 82.75 கோடி ரூபாயாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 8.00 ரூபாயிலிருந்து 12.67 ரூபாயாக உயர்ந்துள்ளது.

மைண்ட்ட்ரீ (Mindtree)

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை 0.61% உயர்ந்து 1,926.00 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,914.30 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபமானது 87.93% உயர்ந்து 253.70 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 135 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 54.83% உயர்ந்து, 414.80 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தில் 267.90 கோடி ரூபாயாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 8.20 ரூபாயிலிருந்து 15.41 ரூபாயாக உயர்ந்துள்ளது.

செப்டம்பர் காலாண்டில் சவுத் இந்தியன் பேங்க்கின் தனித்த நிகர வட்டி வருமானம் 13.49% உயர்ந்து 663.11 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 584.3 கோடி ரூபாயாக இருந்தது!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரானே பிரேக் லைனிங்க்ஸ் (Rane break linings)

இந்த நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனை செப்டம்பர் காலாண்டில் 3.6 சதவிகிதம் குறைந்து 105.48 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 109.42 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 54.7% உயர்ந்து 11.53 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 7.46 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 48.62% உயர்ந்து 22.62 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 15.22 கோடி ரூபாயாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 9.42 ரூபாயிலிருந்து 14.57 ரூபாயாக உயர்ந்துள்ளது.

ட்ரைடென்ட் (Trident)

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனை 11.31% குறைந்து 1,171.44 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,320.78 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 26.89% குறைந்து 100.24 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 137.10 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 12.37% குறைந்து 226.95 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 259 கோடி ரூபாயாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 2.69 ரூபாயிலிருந்து 0.20 பைசாவாகக் குறைந்துள்ளது.

சவுத் இந்தியன் பேங்க் (South Indian Bank)

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் தனித்த நிகர வட்டி வருமானம் 13.49% உயர்ந்து 663.11 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 584.3 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபமானது 22.95% குறைந்து 65.09 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 84.48 கோடி ரூபாயாக இருந்தது. செயல்பாட்டு லாபம் 0.61% உயர்ந்து 413.97 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 411.45 கோடி ரூபாயாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 0.47 பைசாவிலிருந்து 0.36 பைசாவாகக் குறைந்துள்ளது.