பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

முக்கிய கம்பெனிகளின் இரண்டாம் காலாண்டு முடிவுகள்!

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

ங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் தற்போது வெளியாகிவருகின்றன. சில முக்கிய நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு முடிவை இங்கே பார்ப்போம்.

முக்கிய கம்பெனிகளின் இரண்டாம் காலாண்டு முடிவுகள்!

மைண்ட்ட்ரீ

மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் செப்டம்பர் காலாண்டில் 45.6% அதிகரித்து, ரூ.135 கோடியாக இருக்கிறது. நிகர வருமானம், 4.4% அதிகரித்து, ரூ.1,914.3 கோடியாக உள்ளது. எபிட் 51.5% அதிகரித்து, ரூ.177.5 கோடியாக இருக்கிறது. எபிட் லாப வரம்பு 2.9% அதிகரித்து, 9.3 சதவிகிதமாக உள்ளது. மைண்ட்ட்ரீ-யின் இயக்குநர் குழு, முகமதிப்பு ரூ.10 கொண்ட பங்கு ஒன்றுக்கு, 3 ரூபாயை இடைக்கால டிவிடெண்ட்டாக அறிவித்திருக்கிறது.

முக்கிய கம்பெனிகளின் இரண்டாம் காலாண்டு முடிவுகள்!

கர்நாடகா பேங்க்

கர்நாடகா வங்கியின் நிகர வட்டி வருமானம், செப்டம்பர் காலாண்டில் 6.63% அதிகரித்து, ரூ.498.72 கோடியாக இருக்கிறது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர வட்டி வருமானம் ரூ.467.71 கோடியாக இருந்தது. நிகர லாபம் 5.32% குறைந்து ரூ.105.91 கோடியாக உள்ளது. செயல்பாட்டு லாபம் 16.02% அதிகரித்து, ரூ.413.43 கோடியாக இருக்கிறது. கர்நாடகா பேங்க், இ.பி.எஸ் 3.96 ரூபாயிலிருந்து 3.75 ரூபாயாகக் குறைந்துள்ளது.

முக்கிய கம்பெனிகளின் இரண்டாம் காலாண்டு முடிவுகள்!

ஏ.சி.சி

ஏ.சி.சி நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் செப்டம்பர் காலாண்டில் 44.66% அதிகரித்து, ரூ.302.56 கோடியாக இருக்கிறது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.209.14 கோடியாக இருந்தது. ஒருங்கிணைந்த நிகர விற்பனை ரூ.3,363.96 கோடியிலிருந்து ரூ.3,464.43 கோடியாக அதிகரித்திருக்கிறது.

முக்கிய கம்பெனிகளின் இரண்டாம் காலாண்டு முடிவுகள்!

விப்ரோ

விப்ரோ நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனை செப்டம்பர் காலாண்டில் 4.34% அதிகரித்து, ரூ.12,522.60 கோடியாக இருக்கிறது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர விற்பனை ரூ.12,002.30 கோடியாக இருந்தது. நிகர லாபம் 39.79% அதிகரித்து ரூ.2,247 கோடியாக இருக்கிறது. வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன் ஆகியவற்றுக்கு முந்தைய வருவாய் ஆகிய எபிட்டா (EBITDA) 28.14% அதிகரித்து, ரூ.3,210.10 கோடியாக உள்ளது. விப்ரோவின் ஒரு பங்கு வருமானம் (இ.பி.எஸ்) 3.57 ரூபாயி லிருந்து 3.79 ரூபாயாக அதிகரித்துள்ளது.

முக்கிய கம்பெனிகளின் இரண்டாம் காலாண்டு முடிவுகள்!
முக்கிய கம்பெனிகளின் இரண்டாம் காலாண்டு முடிவுகள்!

ஃபெடரல் பேங்க்

தனியார் துறையைச் சேர்ந்த ஃபெடரல் பேங்க்கின் நிகர லாபம் செப்டம்பர் காலாண்டில் 56.7% அதிகரித்து, ரூ.416.7 கோடியாக இருக்கிறது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.266 கோடியாக இருந்தது. நிகர வட்டி வருவாய் 9.9% அதிகரித்து ரூ.1,123.8 கோடியாக உள்ளது. நிகர வாராக்கடன் 0.1% அதிகரித்து, 1.59 சதவிகிதமாக இருக்கிறது. செப்டம்பர் காலாண்டில் புதிய வாராக்கடன் ரூ.540 கோடியாகி யிருக்கிறது. வாராக் கடன்களுக்கான ஒதுக்கீடு ரூ.192 கோடியிலிருந்து ரூ.251.8 கோடியாக அதிகரித்திருக்கிறது.

முக்கிய கம்பெனிகளின் இரண்டாம் காலாண்டு முடிவுகள்!

இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஒருங் கிணைந்த நிகர லாபம் செப்டம்பர் காலாண்டில் 2.2% குறைந்து, ரூ.4,019 கோடியாக இருக்கிறது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.4,110 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.23,255 கோடியாக இருக்கிறது. செயல்பாட்டு லாப வரம்பு 23.70 சதவிகிதத்திலிருந்து 21.70 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் 0.40% அதிகரித்து ரூ.4,912 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் இயக்குநர் குழு, பங்கு ஒன்றுக்கு இடைக்கால டிவிடெண்ட் ரூ.8 அறிவித்திருக்கிறது.

முக்கிய கம்பெனிகளின் இரண்டாம் காலாண்டு முடிவுகள்!

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

டி.சி.எஸ்-ன் நிகர விற்பனை செப்டம்பர் காலாண்டில் 5.76% அதிகரித்து, ரூ.38,977 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர விற்பனை ரூ.36,854 கோடியாக இருந்தது. எபிட்டா, 5.25% அதிகரித்து, ரூ.11,586 கோடியாக உள்ளது. டி.சி.எஸ் பங்கின் இ.பி.எஸ் மதிப்பு 20.66 ரூபாயிலிருந்து 21.43 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. நிறுவனத்தின் இயக்குநர் குழு, சிறப்பு டிவிடெண்ட் ரூ.40 உள்பட, மொத்த டிவிடெண்டாக பங்கு ஒன்றுக்கு ரூ.45 என்று அறிவித்திருக்கிறது.

முக்கிய கம்பெனிகளின் இரண்டாம் காலாண்டு முடிவுகள்!

எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ்

எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் செப்டம்பர் காலாண்டில் 48% குறைந்து, ரூ.129.84 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.250.53 கோடியாக இருந்தது. மொத்த பிரீமிய வருமானம் ரூ.12,745.38 கோடியாக அதிகரித்திருக்கிறது. நிறுவனத்தின் புதிய பிசினஸ் பிரீமியம் வருவாய் 40% அதிகரித்து, ரூ.7,820 கோடியாக இருக்கிறது.

முக்கிய கம்பெனிகளின் இரண்டாம் காலாண்டு முடிவுகள்!

இண்டஸ்இண்ட் பேங்க்

இண்டஸ்இண்ட் பேங்கின் நிகர வட்டி வருமானம் செப்டம்பர் காலாண்டில் 32.05% அதிகரித்து, ரூ.2,909.54 கோடியாக உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.2203.28 கோடியாக இருந்தது. நிகர லாபம் 50.33% அதிகரித்து, ரூ.1,383.37 கோடியாக உள்ளது. செயல்பாட்டு லாபம் 30.49% அதிகரித்து ரூ.2,599.94 கோடியாக இருக்கிறது. இண்டஸ்இண்ட் பேங்கின் இ.பி.எஸ் 15.32 ரூபாயிலிருந்து 19.97 ரூபாயாக அதிகரித்திருக்கிறது.

முக்கிய கம்பெனிகளின் இரண்டாம் காலாண்டு முடிவுகள்!

ஹிந்துஸ்தான் யூனிலீவர்

ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் நிகர விற்பனை செப்டம்பர் காலாண் டில் 6.69% அதிகரித்து, ரூ.9,852 கோடியாக இருக்கிறது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.9,234 கோடியாக இருந்தது. நிகர லாபம் 21.18% அதிகரித்து, ரூ.1,848 கோடியாக இருக்கிறது. எபிட்டா 12.87% அதிகரித்து, ரூ.2,623 கோடியாக உள்ளது. இந்த நிறுவனப் பங்கின் இ.பி.எஸ் 7.04 ரூபாயிலிருந்து 8.54 ரூபாயாக அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் இயக்குநர் குழு, பங்கு ஒன்றுக்கு ரூ.11 என்று இடைக்கால டிவிடெண்ட் அறிவித்துள்ளது.