பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் தற்போது வெளியாகிவருகின்றன. அவற்றில் சில முக்கிய நிறுவனங்களின் முடிவுகளை இங்கே பார்ப்போம்.

டாடா ஸ்டீல்

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிகர லாபம் இரண்டாம் காலாண்டில் 6% அதிகரித்து ரூ.3,302 கோடியாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு கார்ப்பரேட் வரியை 35 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாகக் குறைத்திருப்பதே இதற்கு முக்கியக் காரணம். இந்த நிறுவனத்தின் டர்ன்ஓவர் 15% குறைந்து, ரூ.34,579 கோடியாகக் குறைந்திருக்கிறது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.40,797 கோடியாக இருந்தது. இந்த நிறுவனத்தின் நிகரக் கடன் ரூ.1.06 லட்சம் கோடியாக இருக்கிறது.

பாஷ்

பாஷ் (Bosch) நிறுவனத்தின் நிகர லாபம் 76.5% குறைந்து ரூ98.40 கோடியாக உள்ளது. வாகன விற்பனை குறைவே இதற்குக் காரணம். இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருமானம்26.9% குறைந்து ரூ.2,313 கோடியாக இருக்கிறது.

இந்தியாபுல்ஸ் ஹவுஸிங்

இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் (ஐ.பி.ஹெச்) நிறுவனத்தின் நிகர லாபம் இரண்டாம் காலாண்டில் 32% குறைந்து ரூ.709 கோடியாக உள்ளது. மொத்த வருமானம் 19.6% குறைந்து, ரூ.3.419.54 கோடியாக இருக்கிறது. நிகர வட்டி வருமானம் 17.8% குறைந்து ரூ.1,252 கோடியாக இருக்கிறது. இந்த நிறுவனத்துக்கு மத்திய அரசின் வரிக் குறைப்பு சலுகை, வருமான வரிக்கான ஒதுக்கீட்டுக்கு உதவியிருக்கிறது. ரூ.2 முகமதிப்புகொண்ட பங்கு ஒன்றுக்கு இந்த நிறுவனம் 350% (ரூ.7) டிவிடெண்ட் அறிவித்துள்ளது.

கனரா பேங்க்

கனரா வங்கியின் நிகர லாபம் 20.36% அதிகரித்து ரூ.442.86 கோடியாக இருக்கிறது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இது ரூ.367.92 கோடியாக இருந்தது. இந்த வங்கியின் மொத்த வருமானம் 15.41% அதிகரித்து ரூ. 15,509.36 கோடியாக உள்ளது. இந்த வங்கிப் பங்கின் இ.பி.எஸ் 5.02 ரூபாயிலிருந்து 5.88 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. வங்கியின் மொத்த வாரக்கடன் ரூ.45,454 கோடியிலிருந்து ரூ.38,934 கோடியாகக் குறைந்திருக்கிறது. இதேபோல் நிகர வாராக்கடன் ரூ.26,808 கோடியிலிருந்து ரூ.22,123 கோடியாகக் குறைந்திருக்கிறது.

கார்ப்பரேஷன் பேங்க்

கார்ப்பரேஷன் வங்கியின் நிகர லாபம் இரண்டாம் காலாண்டில் 26% அதிகரித்து ரூ.130 கோடியாக உள்ளது. இது, ஓராண்டுக்கு முன்னர் இதே காலாண்டில் ரூ.103 கோடியாக இருந்தது. வாராக்கடனுக்கான ஒதுக்கீடு ரூ.729 கோடியிலிருந்து ரூ.658 கோடியாகக் குறைந்துள்ளது. வங்கியின் மொத்த வாரக்கடன் ரூ.21,714 கோடியிலிருந்து ரூ.20,823 கோடியாகக் குறைந்துள்ளது. இதேபோல் நிகர வாராக்கடன் ரூ.13,534 கோடியிலிருந்து, ரூ.6,751 கோடியாகக் குறைந்திருக்கிறது.

பி.எஸ்.இ

வருமானம் குறைந்ததால் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (பி.எஸ்.இ)-ன் நிகர லாபம் செப்டம்பர் காலாண்டில் 22% குறைந்து ரூ.36 கோடியாக உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.46 கோடியாக இருந்தது. செயல்பாட்டு வருமானம் 4% குறைந்து ரூ.109 கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.134 கோடியாக இருந்தது. இந்தப் பங்குச் சந்தையின் மொத்தச் செலவுகள் ரூ.121 கோடியிலிருந்து ரூ. 134 கோடியாக அதிகரித்துள்ளது.

ஹெச்.சி.எல் இன்ஃபோசிஸ்டம்ஸ்

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்.சி.எல் இன்ஃபோசிஸ்டம்ஸ் நிறுவன நிகர இழப்பு செப்டம்பர் காலாண்டில் ரூ.39.92 கோடியாக அதிகரித்திருக்கிறது. காலாண்டு முடிவு வெளியான அன்று பங்கின் விலை சுமார் 5% குறைந்துபோனது.

டாபர் இந்தியா

முன்னணி எஃப்.எம்.சி.ஜி நிறுவனமான டாபர் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிகர லாபம் இரண்டாம் காலாண்டில் 7% அதிகரித்து ரூ.403 கோடியாக இருக்கிறது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.377 கோடியாக இருந்தது. 2019-20-ம் ஆண்டுக்கு இடைக்கால டிவிடெண்டாக 140 சதவிகிதம் (ரூ.1.40)அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பிர்லா கார்ப்பரேஷன்

முன்னணி சிமென்ட் நிறுவனமான பிர்லா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிகர லாபம் இரண்டாம் காலாண்டில் ரூ.16 கோடியிலிருந்து ரூ.88 கோடியாக அதிகரித்திருக்கிறது.

வருமானம் 11% உயர்ந்து, ரூ.1,647 கோடியாக இருக்கிறது. விற்பனை அதிகரித்ததால், வருமானமும் நிகர லாபமும் அதிகரித்திருக்கின்றன.

அப்போலோ டயர்ஸ்

இந்தியச் சந்தையில் விற்பனை மந்தமாகக் காணப்பட்டதால் அப்போலோ டயர்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் இரண்டாம் காலாண்டில் 43% வீழ்ச்சியடைந்து, ரூ.83 கோடியாக இருக்கிறது.

இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.146 கோடியாக இருந்தது. நிகர விற்பனை ரூ.4,192 கோடியிலிருந்து, ரூ.3,926 கோடியாகக் குறைந்திருக்கிறது. இதன் ஐரோப்பியச் செயல்பாடுகள் மூலமான வருமான அதிகரிப்பு ஒற்றை இலக்கத்தில் இருந்ததாலும், விற்பனை மற்றும் லாபம் குறைந்திருக்கிறது.