Published:Updated:

முக்கிய கம்பெனிகளின் இரண்டாம் காலாண்டு முடிவுகள்!

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

முக்கிய கம்பெனிகளின் இரண்டாம் காலாண்டு முடிவுகள்!

காலாண்டு முடிவுகள்

Published:Updated:
காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

ங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் தற்போது வெளியாகிவருகின்றன. அவற்றில் சில முக்கிய நிறுவனங்களின் முடிவுகளை இங்கே பார்ப்போம்.

அதானி என்டர்பிரைசஸ்
அதானி என்டர்பிரைசஸ்

அதானி என்டர்பிரைசஸ்

அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வரிக்கு முந்தைய இழப்பு இரண்டாம் காலாண்டில் ரூ.74.54 கோடியாக இருக்கிறது. குழுமத்திலுள்ள துணை நிறுவனம் ஒன்றின் கடனுக்காக ரூ.130 கோடியை வழங்கிய காரணத்தால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் வரிக்கு முந்தைய லாபம் ரூ.29 கோடியாக இருந்தது. ஒருங்கிணைந்த மொத்த வருவாய் 6% குறைந்து, ரூ.8,627 கோடியாக உள்ளது. எபிட்டா ரூ.540 கோடியாக அதிகரித்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரபிந்தோ பார்மா
அரபிந்தோ பார்மா

அரபிந்தோ பார்மா

அரபிந்தோ பார்மா நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம், இரண்டாம் காலாண்டில் 4.6% அதிகரித்து, ரூ.639.5 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டில், இதே காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.611.4 கோடியாக இருந்தது. செயல்பாட்டு வருவாய் 18% அதிகரித்து, ரூ.5,600 கோடியாக இருக்கிறது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிறுவனத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்தியதால், அடுத்தடுத்து இரண்டு காலாண்டுகளிலும் நல்ல வருமானம் கிடைத்திருப்பதாக நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. மருந்து உருவாக்கத்திலிருந்து கிடைக்கும் வருவாய் 21.8% அதிகரித்து ரூ.4,793.8 கோடியாக இருக்கிறது. இது, மொத்த வருவாயில் 85.6% பங்களிப்பைக் கொடுத்திருக்கிறது.

பாரத் பெட்ரோலியம்
பாரத் பெட்ரோலியம்

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (BPCL) நிகர லாபம் இரண்டாம் காலாண்டில் 40.18% அதிகரித்து, ரூ.1,708.45 கோடியாக இருக்கிறது. வருமான வரி மேல்முறையீட்டில் சாதகமான தீர்ப்பு வந்து, ரூ.580.3 கோடி மதிப்பிலான வருமான வரி திருத்தியமைக்கப்பட்டிருப்பது கைகொடுத்திருக்கிறது. காலாண்டுக் கணக்கில் பார்க்கையில் நிகர லாபம், கடந்த காலாண்டைவிட 55% அதிகரித்திருக்கிறது. செயல்பாட்டு வருவாய் 9.48% குறைந்து, ரூ.75,057 கோடியாக இருக்கிறது. மொத்த செலவினம் 8.92% குறைந்து, ரூ.74,273 கோடியாக இருக்கிறது.

கொச்சின் சிப்யார்டு
கொச்சின் சிப்யார்டு

கொச்சின் சிப்யார்டு

கொச்சின் சிப்யார்டு நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம், இரண்டாம் காலாண்டில் 40.3% அதிகரித்து ரூ.206.33 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.147.05 கோடி. நிறுவனத்தின் மொத்த வருவாய் 22.8% அதிகரித்து ரூ.1,050.8 கோடியாக இருக்கிறது. மொத்த செலவினம் ரூ.789.61 கோடியாக உள்ளது. கொச்சின் சிப்யார்டு நிறுவனத்தின் இயக்குநர் குழு, ரூ.10 முகமதிப்புள்ள பங்கு ஒன்றுக்கு ரூ.1.63 இடைக்கால டிவிடெண்ட் அறிவித்திருக்கிறது.

காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கோல் இந்தியா
கோல் இந்தியா

கோல் இந்தியா

கோல் இந்தியா நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம், இரண்டாம் காலாண்டில் 14% அதிகரித்து, ரூ.3,522.7 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டில், இதே காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.3,084.54 கோடியாக இருந்தது. மொத்த வருவாய் ரூ.23,486.35 கோடியிலிருந்து ரூ.22,012.94 கோடியாகக் குறைந்துள்ளது. நிறுவனத்தின் மொத்த வருவாய் மதிப்பு குறைந்தபோதிலும், வரி ரூ.2,031.71 கோடியிலிருந்து ரூ.754.25 கோடியாகக் குறைந்துள்ளதால் நிகர லாபம் அதிகரித்திருக்கிறது.

சன் டி.வி
சன் டி.வி

சன் டி.வி

சன் டி.வி நெட்வொர்க் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய நிகர லாபம் இரண்டாம் காலாண்டில் 1.04% அதிகரித்து, ரூ.368.79 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டில் இதே காலாண்டில் வரிக்குப் பிந்தைய நிகர லாபம் ரூ.364.99 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் மொத்த வருவாய் 6.79% அதிகரித்து, ரூ.900.74 கோடியாக இருக்கிறது. மொத்த செலவினம் 65.95% அதிகரித்து ரூ.499.54 கோடியாக இருக்கிறது. சன் டி,வி நெட்வொர்க் நிறுவனத்தின் இயக்குநர் குழு, இடைக்கால டிவிடெண்டாக முகமதிப்பு ரூ.5 உள்ள பங்கு ஒன்றுக்கு ரூ.2.50 அறிவித்துள்ளது.

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்
பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்

பிரிட்டானியா தயாரிப்புகளை வாங்கத் தூண்டும் பிரசாரங்களுக்காக அதிகமாகச் செலவிட்டதன் காரணமாக நிகர விற்பனை அதிகரித்துள்ளது. பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை இரண்டாம் காலாண்டில் 6.25% அதிகரித்து ரூ.3,048.84 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டில் இதே காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர விற்பனை ரூ.2,869.59 கோடியாக இருந்தது. நிகர லாபம் 33.42% அதிகரித்து ரூ.404.22 கோடியாக உள்ளது.

ஆதித்ய பிர்லா ஃபேஷன் அண்ட் ரீடெய்ல்
ஆதித்ய பிர்லா ஃபேஷன் அண்ட் ரீடெய்ல்

ஆதித்ய பிர்லா ஃபேஷன் அண்ட் ரீடெய்ல்

ஆதித்ய பிர்லா ஃபேஷன் அண்ட் ரீடெய்ல் நிறுவனத்தின் ஷோரூம்களின் எண்ணிக்கையை உயர்த்துதல், புதிய ரகங்களை உருவாக்குதல் மற்றும் விளம்பரங்களின் மூலம் நிறுவனத்தின் விற்பனை அளவு அதிகரித்திருக்கிறது. இரண்டாம் காலாண்டில் நிகர விற்பனை 14.44% அதிகரித்து ரூ.2,297.18 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டில் இதே காலாண்டில் ரூ.2,007.34 கோடியாக இருந்தது. நிகர லாபம் 83.85% குறைந்து, ரூ.6.90 கோடியாக இருக்கிறது.

என்.எம்.டி.சி
என்.எம்.டி.சி

நேஷனல் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் (என்.எம்.டி.சி)

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை இரும்புத்தாது உற்பத்தி நிறுவனமான என்.எம்.டி.சி-யின் தனித்த நிகர லாபம் இரண்டாம் காலாண்டில் 10% அதிகரித்து ரூ.703.27 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டில், இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.636.37 கோடியாக இருந்தது. மொத்த வருவாய் ரூ.2,369.30 கோடியாகக் குறைந்திருக்கிறது. மொத்த செலவினம் ரூ.1,288.85 கோடியாக அதிகரித்திருக்கிறது.

கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ்
கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ்

கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ்

கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம் இரண்டாம் காலாண்டில் 95.7% அதிகரித்து, ரூ.371.46 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டில், இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.189.76 கோடியாக இருந்தது. வருவாய் 3.6% அதிகரித்து, ரூ.2,628.71 கோடியாக உள்ளது. எபிட்டா 1.6% அதிகரித்து ரூ.151.1 கோடியாக இருக்கிறது. எபிட்டா லாப வரம்பு 5.8 சதவிகிதமாக இருக்கிறது. கடன் பத்திரங்கள், பாண்டுகள், பங்குகள் உள்ளிட்டவை மூலமாக ரூ.2,250 கோடி திரட்டுவதற்கு கோத்ரேஜ் நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் தந்திருக்கிறது.