பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் தற்போது வெளியாகிவருகின்றன. அவற்றில் சில முக்கிய நிறுவனங்களின் முடிவுகளை இங்கே பார்ப்போம்.

என்.பி.சி.சி (இந்தியா)

என்.பி.சி.சி (இந்தியா) நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை, இரண்டாம் காலாண்டில் 18.47% அதிகரித்து ரூ.1,665.57 கோடியாக இருக்கிறது. இது, கடந்த ஆண்டு, இதே காலாண்டில் ரூ.1,405.88 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் நிகர இழப்பு 230.09% அதிகரித்து ரூ.99.19 கோடியாக இருக்கிறது. எபிட்டா 49.15% அதிகரித்து ரூ.53.42 கோடியாக இருக்கிறது.

என்.பி.சி.சி (இந்தியா) நிறுவனம், டெல்லியிலுள்ள நேஷனல் மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரியை விரிவுபடுத்தும் பணிகளுக்காக ரூ.500 கோடிக்கான ஆர்டரைப் பெற்றிருக்கிறது.

பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்

பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை இரண்டாம் காலாண்டில் 5.63% அதிகரித்து ரூ.3,122.82 கோடியாக இருக்கிறது. இது, கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.2,956.25 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 21.42% குறைந்து, ரூ.184.25 கோடியாக இருக்கிறது. எபிட்டா 7.2% அதிகரித்து, ரூ.524.43 கோடியாக உள்ளது.

பாம்பே பர்மா நிறுவனப் பங்கின் இ.பி.எஸ் 33.60 ரூபாயிலிருந்து 26.41 ரூபாயாகக் குறைந்திருக்கிறது.

கிராசிம் இண்டஸ்ட்ரீஸ்

கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை இரண்டாம் காலாண்டில் 9.74% அதிகரித்து ரூ.18,430.27 கோடியாக இருக்கிறது. இது, கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.16,795 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 169.27% அதிகரித்து ரூ.1,001.67 கோடியாக இருக்கிறது. எபிட்டா 26.94% அதிகரித்து ரூ.4,341.04 கோடியாக உள்ளது.

கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கின் இ.பி.எஸ் 21.99 ரூபாயிலிருந்து, 15.26 ரூபாயாகக் குறைந்திருக்கிறது.

டிஷ் டிவி இந்தியா

டிஷ் டிவி இந்தியா நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை இரண்டாம் காலாண்டில் 43.98% குறைந்து ரூ.893.18 கோடியாக இருக்கிறது. இது, கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.1,594.29 கோடியாக இருந்தது.

நிகர இழப்பு 458.42% அதிகரித்து ரூ.91.36 கோடியாக இருக்கிறது. எபிட்டா 5.63% குறைந்து ரூ.524.05 கோடியாக இருக்கிறது.

ஐ.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் நிறுவனம், டிஷ் டிவி இந்தியா பங்கின் இலக்கு விலையை 19 ரூபாய் என நிர்ணயித்து, நியூட்ரல் ரேட்டிங்கை வழங்கியிருக்கிறது.

எஸ்ஸார் ஷிப்பிங்

எஸ்ஸார் ஷிப்பிங் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர இழப்பு இரண்டாம் காலாண்டில் ரூ.26.26 கோடியாக உள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.87.59 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் மொத்தச் செயல்பாட்டு வருமானம் ரூ.330.59 கோடியிலிருந்து ரூ.436.90 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்தச் செலவு ரூ.462.86 கோடியாக இருக்கிறது.

நிறுவனத்தின் ஒருங்கிணைந்த காலாண்டு முடிவு என்பது நான்கு வெளிநாட்டுத் துணை நிறுவனங்கள் இரண்டு சிறிய துணை நிறுவனங்கள் மற்றும் அசோசியேட் நிறுவனங்களை உள்ளடக்கியது.

ஹெச்.இ.ஜி

ஹெச்.இ.ஜி நிறுவனத்தின் நிகர விற்பனை இரண்டாம் காலாண்டில் 68.54% குறைந்து ரூ.564.38 கோடியாக உள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.179.03 கோடியாக இருந்தது.

எபிட்டா 87.47% குறைந்து, ரூ.174.08 கோடியாக உள்ளது. ஹெச்.இ.ஜி நிறுவனப் பங்கின் இ.பி.எஸ் 222.45 ரூபாயிலிருந்து 46.39 ரூபாயாகக் குறைந்துள்ளது.

பிரெஸ்டிஜ் எஸ்டேட்ஸ் புராஜெக்ட்ஸ்

பிரெஸ்டிஜ் எஸ்டேட்ஸ் புராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம், இரண்டாம் காலாண்டில் 14% அதிகரித்து ரூ.110.6 கோடியாக இருக்கிறது. இது, கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.96.8 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.1,962.7 கோடியாக உள்ளது. இந்த நிறுவனம் 125 மில்லியன் சதுர அடி பரப்பளவில் 241 புராஜெக்ட்டுகளை செய்து முடித்துள்ளது. 48 மில்லியன் சதுர அடியில் மொத்தம் 45 புராஜெக்ட்டுகளைச் செய்துவருகிறது.

மஹாநகர் காஸ்

மஹாநகர் காஸ் நிறுவனத்தின் நிகர விற்பனை இரண்டாம் காலாண்டில் 12.5% அதிகரித்து ரூ.783.58 கோடியாக உள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.696.51 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 98.56% அதிகரித்து ரூ.270.62 கோடியாக உள்ளது. எபிட்டா 23.69% அதிகரித்து ரூ.296.39 கோடியாக உள்ளது. இந்த நிறுவனப் பங்கின் இ.பி.எஸ் 13.80 ரூபாயிலிருந்து 27.40 ரூபாயாக உயர்ந்துள்ளது.

காலாண்டு முடிவுகள் சிறப்பான முறையில் வந்ததால் தற்போது இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 8% வரை உயர்ந்திருக்கிறது.