Published:Updated:

'தொடர்புடைய தரப்புப் பரிவர்த்தனைகள்' உஷார்... பங்கு முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பங்கு முதலீட்டாளர்கள்
பங்கு முதலீட்டாளர்கள்

தொடர்புடைய தரப்புப் பரிவர்த்தனைகள் அனைத்துமே மோசமானவை என்று சொல்ல முடியாது. சில தொடர்புடைய தரப்புப் பரிவர்த்தனைகள் ஒப்பந்தச் செயல்திறனை அதிகப்படுத்த மிகவும் உதவியாக இருக்கும்

பங்குச் சந்தை முதலீட்டில் முதலீட்டாளர்கள் கவனிக்கவேண்டிய பல்வேறு விஷயங்களில் 'தொடர்புடைய தரப்புப் பரிவர்த்தனைகள்' (Related Party Transactions) முக்கியமானவை.

அது என்ன 'தொடர்புடைய தரப்புப் பரிவர்த்தனைகள்'... ஒரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தம் குறைந்தபட்சம் இரண்டு நிறுவனங்களுக்கு இடையே நடக்கும்போது ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டிருப்பது அல்லது மேற்படி இரண்டு நிறுவனங்களும் வேறொரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வருவது. இந்த மாதிரியான பரிவர்த்தனைகள் பங்குதாரர்களின் நலன்களை, குறிப்பாக சிறுபான்மைப் பங்குதாரர்களை பாதிக்கின்றன.

உதாரணமாக, ராகேஷ் கங்குவால் மற்றும் ராகுல் பாட்டியாவால் நிறுவப்பட்டது 'இண்டிகோ விமான நிறுவனம்' (Interglobe Aviation Ltd). அண்மையில், பாட்டியா அவருடன் தொடர்புடைய தரப்புப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக கங்குவால் குற்றம் சாட்டி நிறுவனத்தின் இயக்குநர் குழுமத்திடம் புகாரளித்தார். இதன் காரணமாக இண்டிகோ நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சி கண்டன. இதனால் சிறுபான்மைப் பங்குதாரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.

'தொடர்புடைய தரப்புப் பரிவர்த்தனைகள்' உஷார்... பங்கு முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

சிக்கல் எங்கே?

கார்ப்பரேட் கட்டமைப்புகளில் உரிமையையும் கட்டுப்பாட்டையும் பிரிப்பது சற்றுக் கடினமான காரியம். எனவே, தொடர்புடைய தரப்புப் பரிவர்த்தனைகள் பெரும்பாலும் ஓர் ஆதாய முரண் (Conflict of Interest) சார்ந்ததாகவே அறியப்படுகின்றன. உதாரணமாக, ஒரு பட்டியலிடப்பட்ட நிறுவனம் அதன் உபரிப் பணத்தை அதன் பட்டியலிடப்படாத துணை நிறுவனத்தில் நீண்ட காலத்துக்கு டெபாசிட் செய்யலாம். இதன் மூலம் தன்னுடைய கம்பெனிக்கு குறிப்பாக, சிறுபான்மைப் பங்குதாரர்களுக்கு லாபம் ஈட்டும் வாய்ப்பைக் குறைத்து, தன்னுடைய பட்டியலிடப்படாத துணை நிறுவனம் லாபம் சம்பாதிக்க வழிவகை செய்கிறது. துணை நிறுவனம் ஈட்டும் லாபம் அனைத்தும் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களை மட்டுமே சாரும். இவ்வாறாக சிறுபான்மைப் பங்குதாரர்கள் சட்டப்படி ஏமாற்றப்படுகிறார்கள். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/37XfyLR

மேலும், பட்டியலிடப்படாத துணை நிறுவனத்திடமிருந்து சொத்துகளை சந்தை விலையைவிட அதிக விலைக்கு வாங்குவது அல்லது துணை நிறுவனத்துக்கு வங்கிக் கடன் வாங்க உத்தரவாதம் தருவது போன்ற பெரும்பான்மைப் பங்குதாரர்களின் பரிவர்த்தனைகள் மூலம் சிறுபான்மைப் பங்குதாரர்கள் அதிக வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்பை இழக்கிறார்கள்.

'தொடர்புடைய தரப்புப் பரிவர்த்தனைகள்' உஷார்... பங்கு முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

- தொடர்புடைய தரப்புப் பரிவர்த்தனைகள் அனைத்துமே மோசமானவை என்று சொல்ல முடியாது. சில தொடர்புடைய தரப்புப் பரிவர்த்தனைகள் ஒப்பந்தச் செயல்திறனை அதிகப்படுத்த மிகவும் உதவியாக இருக்கும். எனினும், தொடர்புடைய தரப்புப் பரிவர்த்தனைகள் குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இதிலுள்ள 'நிறுவனத்துக்கு நஷ்டம்... நிறுவனருக்கு லாபம்', 'வணிகக்குழுவின் கட்டுப்பாடு', 'சட்டப்படியான நடவடிக்கைகளே', 'தொடர்புடைய தரப்புப் பரிவர்த்தனைகளின் வகைகள்' ஆகிய அம்சங்களுடன் கூடிய முழுமையான கட்டுரையை நாணயம் விகடன் இதழில் வாசிக்க > பங்கு முதலீடு... முக்கியமான எச்சரிக்கை! - முதலீட்டாளர் கவனத்துக்கு https://www.vikatan.com/news/share-market/know-these-things-before-doing-share-investments

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு