Published:Updated:

நீண்டகால முதலீட்டாளர்களைக் 'குறிவைக்கும்' பங்குச் சந்தை புரோக்கிங் நிறுவனங்கள்!

பல முதலீட்டாளர்கள் தங்கள் டீமேட் கணக்கிலிருக்கும் பங்குகளை வர்த்தகம் செய்யாமல் வைத்திருப்பதால், அது போன்ற கணக்குகள் குறிவைக்கப்படுகின்றன

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

இந்தியாவில் பங்குச் சந்தை முதலீடுகளில் ஈடுபடுவது, கடந்தகாலத்தைவிட மிகச் சுலபமானதாக மாறிவிட்டது என்பது உண்மை. நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் இந்த மாற்றம் சாத்தியமாகியிருக்கிறது. அதே வேளையில், பங்குச் சந்தைகளில் இன்னும் பல சிக்கல்கள் தொடர்ந்து இருந்துவருவதும் வருந்தத்தக்கது.

இந்தத் தொழிலில், `நாணயம்’ என்பது ஒரு தாரகமந்திரமாக இருக்க வேண்டும். ஆனால், அண்மைக்கால நிகழ்வுகளைப் பார்த்தால், நிலைமை வேறுவிதமாக இருக்கிறது என்பதே நிஜம். பங்கு வர்த்தகத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களின் விதிமீறல்களும் ஏமாற்று வேலைகளும் அதிகரித்துவருவதுதான் இதற்கு முக்கியக் காரணம்.

நீண்டகால முதலீட்டாளர்களைக் 'குறிவைக்கும்' பங்குச் சந்தை புரோக்கிங் நிறுவனங்கள்!

பங்குச் சந்தையை நெறிப்படுத்தும் அமைப்பான செபியின் தீவிர கண்காணிப்பு இருந்தும் விதிமீறல்களும் ஏமாற்று வேலைகளும் நடந்துவருகின்றன. இந்தச் செயல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் பெரும்பாலும் அதிக ரிஸ்க் உள்ள வர்த்தகங்களில், முக்கியமாக டெரிவேட்டிவ் (Derivative) வர்த்தகத்தில் ஈடுபடுவதும், அதில் ஏற்படும் இழப்புகளைச் சரிகட்ட, தங்களிடம் கணக்கு வைத்திருக்கும் இதர முதலீட்டாளர்களின் கணக்குகளில் கைவைப்பதும் வாடிக்கையாகிவருகிறது.

நிறுவனங்களின் பேராசைதான் இது போன்ற நிகழ்வுகளுக்குக் காரணம். நேர்மையற்ற, ஏமாற்று வேலைகளைச் செய்யும் நிறுவனங்களால் அதிகம் பாதிக்கப்படுவது நீண்டகால முதலீட்டாளர்களே. பல முதலீட்டாளர்கள் தங்கள் டீமேட் கணக்கிலிருக்கும் பங்குகளை வர்த்தகம் செய்யாமல் வைத்திருப்பதால், அது போன்ற கணக்குகள் குறிவைக்கப்படுகின்றன. இந்த மோசடிகளுக்கு உடனடியாகத் தீர்வு கிடைப்பதில்லை என்பது மற்றுமொரு குற்றசாட்டாக வைக்கப்படுகிறது.

முதலீட்டாளர்கள் எப்போதுமே தங்களுடைய கணக்குகள்மீது ஒரு கண்காணிப்பை வைத்திருக்க வேண்டும். நீண்டகாலப் பங்குகளை வாங்கினாலும், தொடர் கண்காணிப்பு அவசியம். மேலும், ஏதாவது சந்தேகமான பரிவர்த்தனை நிகழ்ந்தால் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு விசாரிக்க வேண்டும். உரிய வகையில் மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அப்படியே முறைகேடுகள் நடந்துவிட்டால் உடனடியாக செபியிடம் முறையிட வேண்டும்.

நீண்டகால முதலீட்டாளர்களைக் 'குறிவைக்கும்' பங்குச் சந்தை புரோக்கிங் நிறுவனங்கள்!

> முறைகேடுகளை அறிந்தவுடன் முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன? - முழுமையான வழிகாட்டுதலை நாணயம் விகடன் இதழில் வாசிக்க > ஏமாற்றும் புரோக்கிங் நிறுவனங்கள்... என்னதான் தீர்வு? https://www.vikatan.com/news/share-market/how-to-identify-faulty-broking-companies

*

நாணயம் விகடன் 15-ம் ஆண்டு சிறப்பிதழுக்காக, முன்னணிப் பங்குச் சந்தை நிபுணர்களிடம் நீண்டகால முதலீட்டுக்கு ஏற்ற பங்குகளைப் பரிந்துரைக்கும்படி கேட்டோம். வணிக வளர்ச்சி மற்றும் லாபத்தின் அடிப்படையில் பங்குகளைத் தேர்வுசெய்து கொடுத்தார் பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். அவரது பரிந்துரைகளை அறிய > நீண்டகால முதலீட்டுக்கு 15 பங்குகள்! https://www.vikatan.com/news/investment/15-shares-for-long-term-investments

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |