கடந்த வாரத்தின் மத்தியில் நாஸ்டாக் இண்டெக்ஸ் 10% வரை சரிந்தது. குறிப்பாக, டெக்னாலஜி பங்குகள் இந்தச் சரிவில் முன்னிலை வகிக்கின்றன. ஆப்பிள், ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட், ஜூம், ஆல்பபெட், நெட்ஃப்ளிக்ஸ், சாஃப்ட்பேங்க் உள்ளிட்ட அனைத்துப் பங்குகளும் விலைச் சரிவை சந்தித்தன. குறிப்பாக, டெஸ்லா பங்கு விலை 21 சதவிகிதத்துக்குமேல் சரிந்தது.

எஸ் அண்ட் பி 500 குறியீட்டில் டெஸ்லா இடம்பெறாதது, டெஸ்லாவின் போட்டியாளரான நிகோலாவுடன் ஜெனரல் மோட்டார்ஸ் கைகோத்தது ஆகிய காரணங்களால் டெஸ்லா பங்கு விலை கடுமையாகச் சரிந்தது. ஆனால், மற்ற பங்குகள் சரிந்ததற்குக் காரணம் அந்தப் பங்குகளின் மதிப்பீடுதான். கோவிட் 19-க்குப் பிறகு, தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகள் அதிகளவு ஏற்றத்தைச் சந்தித்தன. ஆனால், இந்த மதிப்பீடுகள் மிகையாக இருப்பதை சந்தை உணர்ந்ததால், இந்த நிறுவனப் பங்குகள் தற்போது சரிவைச் சந்தித்துள்ளன.

பங்குகளின் மதிப்பீடு தவிர, அமெரிக்காவின் அதிக கடன். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) சுமார் 98 சதவிகித அளவுக்கு கடன் இருக்கும். அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சிக்கு மைனஸ் 31 சதவிகிதமாக இருக்கிறது. தவிர, அமெரிக்காவில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தல் காரணமாகப் பங்குச் சந்தையில் நிச்சயமற்ற சூழல் இருக்கும். இதுபோல, பல காரணிகள் இணைந்திருப்பதால், அமெரிக்கப் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டிருக்கிறது!