கொரோனா வைரஸ் குறித்த செய்தி வெளிவந்த தருணத்தில், நிதிச் சந்தையில் எந்த அளவுக்கு அதன் தாக்கம் இருக்குமென்று முதலீட்டாளர்களுக்குத் தெரியாது. 2020-ம் ஆண்டுக்கான சீனாவின் பொருளாதார வளர்ச்சியை, எஸ் & பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனம் 5.7 சதவிகிதத்திலிருந்து, 5 சதவிகிதமாகக் குறைத்து கணித்த பிறகுதான் அதன் வீரியம் முதலீட்டாளர்களுக்குப் புரியத் தொடங்கியது.

உடல்நலத்தைப் பராமரிப்பதில் அக்கறை எடுத்துக்கொள்வது போல், ஒரு முதலீட்டாளராக நிதிநலன் குறித்தும் அக்கறை செலுத்த வேண்டும். அதன்படி, கொரோனா வைரஸ் தாக்குதலால் எந்தெந்தத் தொழில் துறைகள் பாதிப்படையும் என்று பார்ப்போம்.

பார்மா துறை

கொரோனா வைரஸ் தாக்குதல், இன்னும் சில மாதங்களில் கட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும். இல்லையென்றால், இந்திய பார்மசூட்டிக்கல்ஸ் துறையில் கணிசமான பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். இந்திய பார்மசூடிக்கல்ஸ் நிறுவனங்கள், சீனாவின் போட்டி நிறுவனங்களின் பங்களிப்பைப் பெறுவதற்கும் இது ஒரு வாய்ப்பாக அமையக்கூடும். இந்திய பார்மசூட்டிக்கல் நிறுவனங்களின் வசம் தற்போது மருந்துப் பொருள்கள் தயாரிப்புக்கான ஏ.பி.ஐ மற்றும் இடைநிலைப் பொருள்களின் இருப்பு இரண்டுமாத காலத்துக்கே இருக்கிறது. எதிர்ப்பு சக்தி மருந்துகள் மற்றும் வைட்டமின்கள் தயாரிப்பில், நொதித்தல் அடிப்படையிலான ஏ.பி.ஐ மற்றும் இடைநிலைப் பொருள்களுக்கு சீனாவையே பெருமளவு சார்ந்திருக்கும் நிலையிலேயே நாம் இருக்கிறோம். மிகவும் அத்தியாவசியமான மருந்துகள் தயாரிப்புக்குத் தேவையான மூல மருந்துகளை சீனாவிலிருந்தே பெரிய அளவில் இந்தியா இறக்குமதி செய்கிறது. கிளாக்ஸோஸ்மித் க்ளைன், அரபிந்தோ பார்மா, சிப்லா, டிவிஸ் லெபாரட்டரீஸ், டேவா ஆக்டிவ் பார்மசூட்டிக்கல் இன்க்ரிடியென்ட்ஸ், சன் பார்மா, பைஸர், மேட்ரிக்ஸ், ரான்பாக்ஸி, ஐ.பி.சி.ஏ மற்றும் டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் ஆகிய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உங்களின் பங்கு முதலீட்டுக் கலவையில் இருந்தால், இவற்றின் விலை நிலவரத்தை மிகவும் கவனமாகக் கண்காணிக்க வேண்டியது அவசியம்.

ரிஸ்க் எடுக்காதவர்கள் வைரஸ் பாதிப்புகொண்ட துறைகளிலிருந்து விற்று வெளியேறுவது பாதுகாப்பானது!

ஆட்டோமொபைல்ஸ்

கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தால் சீனாவிலுள்ள வாகன உற்பத்திக்கூடங்கள் மூடப்பட்டாலும்கூட இந்தியாவில் அதன் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது என்றே சொல்லலாம். மாருதி நிறுவனத்தின் வாகனத் தயாரிப்புக்கான சில மூலப்பொருள்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்றாலும்கூட, இன்னும் 30 நாள்களுக்கான மூலப்பொருள்கள் நிறுவனத்தின் கைவசம் உள்ளது. `வைரஸ் தாக்குதலின் தாக்கத்தால் விலையுயர்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் வாகனத் தயாரிப்பில் மட்டும் பாதிப்பு ஏற்படும்’ என்று சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.

ஆடைகள் தயாரிப்பு

சீனாவிலுள்ள ஆடை ஏற்றுமதியாளர்களிடம் தங்களுக்கான ஆர்டர் களை அளிக்க மேற்கத்திய நாடுகள் சீனாவுக்குச் செல்லும் சீஸன் இது. வைரஸ் தாக்குதல் காரணமாக தங்களின் பயணத் திட்டம் முழுவதையும் ரத்து செய்துவிட்டு, இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளில் வாங்குவது குறித்து ஆலோசித்து வருகிறார்கள். முழுமைபெற்ற ஜவுளிப் பொருள்களையும், ஆடை மற்றும் துணி வகைகளை யும் 20-30% அதிகமாக ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு இந்தியாவுக்கு இருப்பதாக இந்திய ஜவுளித்தொழில் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.

`போட்டியாளர்களின் விலைக்கு ஈடாக நம் தயாரிப்புகளின் விலை இல்லாதபட்சத்தில் இந்த விசாரிப்புகளை விற்பனை ஆர்டர்களாக மாற்றுவது கடினம்’ என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில், இந்தியாவில் தயாராகும் ‘மேட் இன் இந்தியா’ பொருள்களின் விலை பங்களாதேஷ், வியட்நாம், கம்போடியா உள்ளிட்ட நாடுகளின் விலையுடன் ஒப்பிட்டால் 10-15% அதிகம். இந்தத் தயாரிப்புகளுக்குத் தேவையான சில பொருள்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய முடியாமல் இருப்பதும் இன்னொரு பெரிய சிக்கலாக இருக்கிறது.

இப்போதிருக்கும் சீனச் சூழலில், நிறைய ஜவுளித் தொழிற்கூடங்கள், உற்பத்தியான பொருள்களையும் மூலப்பொருள்களையும் ஏற்றுமதி செய்வதை நிறுத்திவைத்துள்ளன. தோராயமாக, 10% துணிகள் மற்றும் 20% தயாரிப்புக்குத் தேவையான மூலப் பொருள்களை சீனாவிலிருந்தே இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. `பட்டன், ஜிப், ஊசி, ஹேங்கர்கள் உள்ளிட்ட ஆடைத் தயாரிப்புக்குத் தேவையான பொருள்கள் சுமார் ரூ.1,000 கோடி மதிப்புக்குச் சீனாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன’ என்று கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விலை மற்ற நாடுகளைவிட, நம் உள்நாட்டு விலையைவிட 40-50% குறைவு. வெல்ஸ்புன், ஹிமாட்ஷிங்கா செய்டு (Himatsingka Seide Ltd), கணேசா எகோஸ்பியர், மான்ட்கார்லோ மற்றும் ஆர்.எஸ்.டபுள்யூ.எம் ஆகிய நிறுவனங்களைத் தவிர நிறைய ஆடைத் தயாரிப்பு நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இன்ஷூரன்ஸ், வங்கிகள் மற்றும் ஐ.டி நிறுவனங்கள் மட்டுமே கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பைச் சந்திக்காத துறைகளாக இருக்கின்றன.

உரத் தயாரிப்புத்துறை

உரத் தயாரிப்புத்துறையில் பெரும்பாலான நிறுவனங்களின் பங்கு விலை சரிவைச் சந்தித்திருக்கின்றன. கொரமண்டல் மற்றும் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனங்கள் மட்டுமே தங்கள் நிலையத் தக்கவைத்திருக்கின்றன.

சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியா, பங்களாதேஷ், வியட்நாம் போன்ற நாடுகளின் பொருளாதாரம் அந்நிய முதலீடுகளால் வளர்ச்சியடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய தயாரிப்பு மையமான சீனாவைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைத்துக்கொள்வதற்கு உலக நாடுகள் ஆர்வம்காட்டுகின்றன. மோசமான வைரஸ் தாக்குதல், சீனப் பொருளாதாரத்தை மேலும் இரண்டு காலாண்டுகளுக்கு மந்தநிலையிலேயே தொடரச் செய்யும் என்று கணிக்க முடிகிறது. இதன் காரணமாக பெரிய அளவிலான முதலீடுகளும், வணிக வாய்ப்பும் இந்தியாவுக்குக் கிடைக்க வழி பிறந்திருக்கிறது.

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு

2020-ம் ஆண்டில் கச்சா எண்ணெய் தேவைக்கான தனது கணிப்பை ஒபேக் அமைப்பு, வைரஸ் தாக்குதல் காரணமாக சமீபத்தில் குறைத்துள்ளது. 2020-ம் ஆண்டுக்கான உலகளாவிய கச்சா எண்ணெய் தேவை வளர்ச்சி, கடந்த மாதத்தைவிட சுமார் 2,30,000 பி.பி.டி அளவு குறைவாக இருக்கும் என்று கணித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் விலை குறைய வாய்ப்புள்ளது. மேலும், கடந்த ஆறு ஆண்டுகளில் உச்சத்தி லிருந்த பணவீக்க அழுத்தமும் குறைய வாய்ப்பிருக்கிறது. கச்சா எண்ணெய் விலை குறைவானது, பெட்ரோலிய நிறுவனங்களுக்கு குறுகியகாலத்தில் சாதகமான அம்சமாக இருக்கும்.

தற்போதைய சூழல், நிறுவனப் பங்குகளை வாங்குவது அல்லது விற்பதற்கான வாய்ப்பாக இருக்குமா என்ற கேள்விக்குப் பதில் தருவது சவாலான ஒன்று. வைரஸ் தாக்குதல் காலகட்டம் இன்னும் எவ்வளவு தூரத்துக்கு நீடிக்கும் என்பது இதற்கான விடைகாண்பதில் மிக முக்கியமான காரணியாக இருக்கும். இந்த வைரஸ் தாக்குதலின் மையமான ஹுபேய் மாகாணத்தின் அறிவிப்பில், கடந்த ஓரிரு நாள்களில் எதிர்பார்த்ததைவிட பத்து மடங்கு இந்த வைரஸ் தாக்குதல் அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போதுள்ள நிலையில் வைரஸ் தாக்குதல் பாதிப்பு எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியவில்லை. இதற்கான தீர்வாக மருந்து கண்டறிதல் குறித்தும் தெளிவு இல்லை.

இப்படி எதுவுமே உறுதியாகத் தெரியாதபட்சத்திலும் ரிஸ்க் எடுக்கத் தயாரென்றால், மேலே குறிப்பிட்டுள்ள பங்குகளை வாங்க முன்வரலாம். இத்தகைய ரிஸ்க்கை எடுக்கத் தயாரில்லை என்று நினைத்தால் மேற்கூறியுள்ள வைரஸ் பாதிப்புகொண்ட துறைகளிலிருந்து விற்று வெளியேறிவிடுவது பாதுகாப்பானதாக இருக்கும்.

நாம் எதிர்பார்த்ததைவிட வைரஸ் பாதிப்பு முடிவுக்கு வருவதற்கு நீண்டகாலம் எடுக்கும் என்று தெரிகிறது. எனவே, இது இந்தியப் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் உலகப் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். கொரோனா வைரஸ் நம் உடலை மட்டுமல்ல, நம் போர்ட் ஃபோலியோவில் இருக்கும் பங்குகளைக்கூட எட்டாதபடி வைத்துக்கொள்ள வேண்டும்!