தீபாவளி இனிப்புகளுடன் சரியாக மாலை 4:00 மணிக்கு வந்து சேர்ந்தார் ஷேர்லக். வழக்கத்துக்கு மாறாக, அன்றைக்கு அவரை நாம் அவசரப்படுத்த வேண்டியிருந்தது. “இரவு ஊருக்குப் போக வேண்டியிருப்பதால், வேலைகளைச் சீக்கிரம் முடிக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டு கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

பிரமல் என்டர்பிரைசஸ் நிறுவனப் பங்கின் விலை இன்று மட்டும் 17% இறங்கியதற்கான காரணம் என்ன?

“இந்த நிறுவனப் பங்கின் விலை கடந்த பத்தாண்டுகளில் இல்லாத வகையில் ஒரே நாளில் 17% இறங்கி, ரூ.1,430-க்கு இறங்கி வர்த்தகமானது. உரிமை மற்றும் முன்னுரிமைப் பங்கு வெளியீட்டின் மூலம் பங்கு ஒன்றின் விலை ரூ.1,300 வீதம் ரூ.3,650 கோடியைத் திரட்ட நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்ததே இந்த விலை இறக்கத்துக்குக் காரணம். அதாவது தற்போதைய சந்தை விலையைவிடக் குறைவான விலைக்கு பங்குகள் விற்பனை செய்யப்படவிருப்பதால், பங்கு விலை அதிரடியாக வீழ்ச்சி கண்டிருக்கிறது.”

இரண்டாம் காலாண்டில் இந்தியன் பேங்க்கின் நிகர லாபம் இரு மடங்காக அதிகரிக்க என்ன காரணம்?

“இந்தியன் வங்கியின் இரண்டாம் காலாண்டு முடிவு ஆச்சர்யம் தரும்படி இருக்கிறது. கடந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த வங்கியின் நிகர லாபம் இரு மடங்காக உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ.150.14 கோடியாக இருந்த நிகர லாபம், தற்போது ரூ.358.56 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த வங்கியின் காலாண்டு முடிவுகள் குறித்த பங்குச் சந்தை நிபுணர்கள் அனைவரின் கணிப்பையும்விட நல்ல லாபத்தை ஈட்டியிருக்கிறது. பல்வேறு கட்டண வருவாய்கள் உள்ளிட்ட இதர வருமானம் ரூ.428.32 கோடியிலிருந்து 72.22% அதிகரித்து, ரூ.737.65 கோடியாக உள்ளது. வாராக்கடனுக்கான ஒதுக்கீடு ரூ.1,004.34 கோடியிலிருந்து 9.46% குறைந்து, ரூ.909.37 கோடியாக இருக்கிறது. நிகர வட்டி வருமானம் ரூ.1,730.93 கோடியிலிருந்து 7.63% அதிகரித்து, ரூ.1,863.04 கோடியாக உள்ளது. வழங்கப்பட்ட கடன்களில், மொத்த வாராக்கடன் மதிப்பு 7.2 சதவிகிதமாக இருக்கிறது.”

எஃப்.எம்.சி.ஜி பங்குகளை இப்போது வாங்கலாமா?

“மக்களிடம் தேவையை உருவாக்கி, நுகர்வை அதிகரிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறது மத்திய அரசு. இதன் விளைவாக, தொழில் நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் ரூ.90,000 கோடிக்குமேல் கடன் தரப்பட்டுள்ளது. மக்களிடம் நுகர்வு அதிகரிக்கும்போது, எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்களின் விற்பனை உயர்ந்து, நிறுவனங்களின் லாபம் அதிகரிக்கும். இது அந்த நிறுவனங்களின் பங்குகளிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், இந்த எதிர்பார்ப்பு குறுகிய காலத்தில் நடந்துவிடும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. அந்த வகையில் `நீண்டகால முதலீட்டு நோக்கில், அடிப்படையில் வலுவான எஃப்.எம்.சி.ஜி நிறுவனப் பங்குகளைத் தற்போது கவர்ச்சிகரமான மதிப்பீட்டில் கிடைத்தால் தாராளமாக வாங்கிச் சேர்க்கலாம்’ என்கிறார்கள் முன்னணி அனலிஸ்ட்கள்.”

என்.எஸ்.இ-லிருந்து புதிய இண்டெக்ஸ் அறிமுகமாகியிருக்கிறதாமே?

“தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ) இண்டெக்ஸ் லிமிடெட் நிறுவனம், புதிதாக ஒரு பீட்டா இண்டெக்ஸை ‘நிஃப்டி மிட்கேப் 150 குவாலிட்டி 50 இண்டெக்ஸ்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. மிட்கேப் நிறுவனங்களின் லாபம், கடன் மற்றும் வருமான வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் புதிய குறியீடு கணக்கிடப் படவிருக்கிறது. இந்த பீட்டா இண்டெக்ஸில், முதன்மை இண்டெக்ஸான நிஃப்டி மிட்கேப் 150 இண்டெக்ஸில் இடம்பெற்றிருக்கும் முன்னணி 50 நிறுவனங்கள் இடம்பெறும். இந்த இண்டெக்ஸின் அடிப்படைத் தேதியாக ஏப்ரல் 1, 2005 மற்றும் அடிப்படை மதிப்பு ரூ.1,000 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த இண்டெக்ஸ் மதிப்பு, ஆறு ஆண்டு களுக்கு ஒரு முறை மறுசீரமைப்பு செய்யப் படுமாம்.”

40% விலை இறங்கியுள்ள நிலையில் ஐந்து நிறுவனப் பங்குகளில், ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முதலீட்டை அதிகரித்துள்ளாரே?

“இந்தியாவின் பங்குச் சந்தை முன்னணி முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன் வாலாவின் போர்ட்ஃபோலியோவில் இடம்பெற்றிருக்கும் பங்குகளில் 80% பங்குகள் விலை இறக்கத்திலிருக்கின்றன. இந்த நிலையில், அவர் ஃபெடரல் பேங்க், வி.ஐ.பி இண்டஸ்ட்ரீஸ், அக்ரோடெக் ஃபுட்ஸ், என்.சி.சி மற்றும் டிவி 18 பிராட்காஸ்ட் போன்ற ஐந்து நிறுவனங்களில் தன் முதலீட்டை அதிகரித்திருக்கும் விவரம் வெளியாகியிருக்கிறது.

இந்தப் பங்குகள் 2019-ம் ஆண்டில் இதுவரை 9-40% வரை விலை இறக்கம் கண்டிருக்கின்றன. இவருடைய போர்ட்ஃபோலியோவில் இடம்பெற்றிருக்கும் பங்கில் ஒன்றான டி.ஹெச்.எஃப்.எல் நடப்பு ஆண்டில் 90% விலை சரிந்திருக்கிறது. மஹிந்திரா ரீடெய்ல் (65%), ஆட்டோலைன் இண்டஸ்ட்ரீஸ் (60%), எடெல்வைஸ் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் (52%) ஆகியவை சரிந்துள்ளன. கிரிசில், லூபின், ஃபர்ஸ்ட் சோர்ஸ் சொல்யூஷன்ஸ், டைட்டன், அயர்ன் எக்ஸ்சேஞ்ச் ஆகிய ஐந்து நிறுவனங்களில் பங்கு முதலீட்டைக் குறைத்திருக்கிறார் ஜுன்ஜுன்வாலா.”

பொதுத்துறை நிறுவனங்கள்மீது ஜுன்ஜுன்வாலா நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிகிறதே?

“ `பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனப் பங்குகள் நல்ல வருமானம் தரக்கூடும்’ என ராகேஷ் ஜுன்ஜுன்வாலா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். `இந்திய வங்கிகள், கடந்த ஐந்தாண்டுகளாக வாராக்கடன் பிரச்னையால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருந்தன. தற்போது முன்னணி வங்கிகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுவருகிறது. வாராக்கடன் பிரச்னையின் இறுதிக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். சில்லறை வங்கிக் கடன்களில் 50 சதவிகிதத்துக்கும்மேல் வீட்டுக் கடன்தான் வழங்கப்படுகிறது. வீட்டுக் கடன் வழங்குவதை ஒழுங்குபடுத்தினாலே வங்கிகளில் நல்ல மாற்றம் ஏற்பட்டுவிடும். பொதுத்துறை நிறுவனங்கள் இனி நல்ல வருமானம் தரக்கூடியவையாக இருக்கும். அதற்கான காரணங்களாக, தற்போது குறைக்கப்பட்ட கார்ப்பரேட் வரி விகிதத்தால் பெரிதும் பலனடைந்திருப்பது இந்த நிறுவனங்களே’ என்று குறிப்பிடுகிறார். அதேபோல, `பி.பி.சி.எல் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் நல்ல வருமானம் தரக்கூடியவையாக இருக்கக்கூடும்’ என்கிறார். `விரைவில் நிஃப்டி 12000 புள்ளிகளைத் தொடும்’ என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் ஜுன்ஜுன்வாலா. அவர் சொல்வது எந்த அளவுக்கு பலிக்கும் என்பதை முதலீட்டாளர்கள் பொறுமையாக இருந்துதான் பார்க்க வேண்டும்.’’

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கலங்கிப் போயிருக்கின்றனவே... நீதிமன்றத் தீர்ப்புதான் காரணமா?

‘‘ `அட்ஜஸ்ட் கிராஸ் ரெவின்யூ (AGR) குறித்து தொலைத்தொடர்புத் துறை தரும் வரையறையை மாற்ற வேண்டும்’ என ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கி, அது கடந்த 14 ஆண்டுகளாக நடந்துவருகிறது. `தொலைத்தொடர்புத் துறை சொன்ன வரையறையை மாற்ற வேண்டியதில்லை’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து, வியாழன் அன்று இறங்கிய ஏர்டெல் பங்கு விலை, வெள்ளியன்று சிறிது ஏற்றம் கண்டிருக்கிறது. ஆனால், வோடஃபோன் 23% வரை இறக்கம் கண்டது. மிக மோசமான காலத்தில் இந்தத் தீர்ப்பு வந்திருப்பதாக இந்தத் துறை சார்ந்த நிறுவனங்கள் வருத்தப்படுகின்றன’’ என்று ஷேர்லக் பேசிக்கொண்டே போக, நாம் நேரத்தைப் பார்த்தோம்.

நம் அவசரத்தைப் புரிந்துகொண்ட ஷேர்லக், ‘‘நாணயம் விகடன் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள். வருகிற திங்கள்கிழமை மும்பையில் தீபாவளி என்பதால், அன்று பங்குச் சந்தை விடுமுறை. ஆனாலும் அன்று மாலை முகூரத் சிறப்பு வர்த்தகம் நடக்கிறது. `அன்றைக்குப் பங்குகள் வாங்கினால், ஆண்டு முழுக்க லாபம் பார்க்கலாம்’ என்பது நம்பிக்கை. நல்ல பங்குகளை சரியான விலையில் கிடைக்கும்பட்சத்தில் வாங்குங்கள்’’ என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குப் புறப்பட்டார்!

ஐ.பி.ஓ வரும் உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்!

உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், புதிய பங்கு வெளியிட (ஐ.பி.ஓ) பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் அனுமதிக்கு விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட செபி, ஐ.பி.ஓ வெளியிடுவதற்கு அனுமதி வழங்கியிருக்கிறது. இதன்படி, இந்த நிறுவனம் புதிய ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம் 1,200 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டிருக்கிறது.