காலையிலேயே ஷேர்லக் ஒரு குறிப்பிட்ட காபி ஷாப்புக்கு வரச்சொல்லியிருந்தார். மாலை ஐந்து மணிக்குப் போய்ச் சேர்ந்தோம். நமக்கு முன்னதாகவே வந்திருந்தார் ஷேர்லக். அமர்ந்தபடி இருவருக்கும் கோல்டு காபி ஆர்டர் செய்துவிட்டு, நாம் கேள்விகளைக் கேட்க, பதில் சொல்ல ஆரம்பித்தார்.

யெஸ் பேங்க் பங்குகளில் முன்னணி முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முதலீடு செய்திருக்கிறாரே?

“பிரபல முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா யெஸ் பேங்கின் 1.30 கோடி பங்குகளை, பங்கு ஒன்றுக்கு ரூ.67.10 என்ற விலையில் மொத்தம் 86.89 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்.பங்குத் தரகு நிறுவனமான மார்கன் ஸ்டான்லி, யெஸ் வங்கியின் இலக்கு விலையை 55 ரூபாயிலிருந்து ரூ.40-ஆகக் குறைத்திருக்கிறது. சிட்டி நிறுவனமும் இலக்கு விலையை 80 ரூபாயிலிருந்து ரூ.50-ஆகக் குறைத்திருக்கிறது. சி.எல்.எஸ் நிறுவனம், 110 ரூபாயிலிருந்து ரூ.75-ஆகக் குறைத்திருக்கிறது. கோல்டுமேன் சாக்ஸ் ரூ.62-ஆகவும் மெக்குவொரி (Macquarie) ரூ.50-ஆகவும் இலக்கு விலையை நிர்ணயித்துள்ளன.”

பர்கர் கிங் இந்தியா ஐ.பி.ஓ வருவது பற்றி..?

“துரித உணவுத் துறையில் செயல்பட்டுவரும் பர்கர் கிங் நிறுவனம்,ஐ.பி.ஓ வெளியிடுவதற்கு, பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் விண்ணப்பித்துள்ளது. இதன் மூலம் ரூ.1,000 கோடியைத் திரட்ட அந்த நிறுவனம் முடிவுசெய்துள்ளது. ரூ.400 கோடியைப் புதிய நிதித் திரட்டலின் மூலமாகவும் ரூ.600 கோடியைப் பங்குச் சந்தை மூலமாகவும் திரட்டவுள்ளது. நுகர்வோர் பொருள்களுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருப்பதால், பர்கர் கிங் ஐ.பி.ஓ-வுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வருடம் பர்கர் கிங் பட்டியலிடப்பட்டால், அது ஜுபிலன்ட் ஃபுட் வொர்க்ஸ் (டாமினோஸ் பீட்சாவின் ஆப்பரேடர்) மற்றும் வெஸ்ட் லைஃப் டெவலப்மென்ட் (மெக்டொனால்ட்ஸின் ஃப்ரான்சைஸி) போன்ற கம்பெனிகளோடு மோதும்.”

வரும் மாதங்களில் அதிக ஐ.பி.ஓ-க்கள் வரும் போலிருக்கிறதே?

“சந்தை புதிய உச்சத்தைத் தொட்டிருப்பதால், புதிய பங்கு வெளியீட்டுக்கு (ஐ.பி.ஓ) ஏற்றதாக இருக்கிறது. இந்த நிலையில் மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் அதன் பங்களிப்பைக் குறைக்கும் திட்டத்தில் இருக்கிறது. பி.ஹெச்.இ.எல் உள்ளிட்ட சுமார் 10 நிறுவனங்களில் மத்திய அரசு அதன் பங்களிப்பைக் குறைக்கிறது. இவை தவிர, சில டஜனுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கத் தயாராகி வருகின்றன. யூ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட், ஏஞ்சல் புரோக்கிங், எஸ்.பி.ஐ கார்ட்ஸ், பஜாஜ் எனர்ஜி, சி.எஸ்.பி. பேங்க், உஜ்ஜிவன் எஸ்.எஃப்.பி உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சுமார் ரூ.30,000 கோடியை ஐ.பி.ஓ மூலம் திரட்டத் திட்டமிட்டுள்ளன. இந்த ஐ.பி.ஓ-க்களில் சிறு முதலீட்டாளர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். ஆனால், பங்கின் விலை சரியாக மதிப்பிடப் பட்டிருக்கிறதா, ஐ.பி.ஓ வரும் நிறுவனத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என கவனித்து முதலீடு செய்ய வேண்டியது அவசியம்.”

இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் தங்களின் பங்கு மூலதனத்தைக் குறைக்க, பொதுத்துறை வங்கிகள் முடிவெடுத்திருக்கின்றனவாமே?

“பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு நடவடிக்கைக்குப் பிறகு ஒருங்கிணைக்கப்பட்ட வங்கிகள், ஒழுங்குமுறை விதிமுறைகளின்படி இன்ஷூரன்ஸ் நிறுவனங்களிலுள்ள அவற்றின் பங்கு முதலீட்டு விகிதத்தைக் குறைக்க வேண்டியிருக்கிறது. இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் முதலீட்டு ஒழுங்குமுறை விதிமுறைகளின்படி, அந்த நிறுவனங்களில் 10 சதவிகிதத்துக்கும் மேல் முதலீடு செய்யும் நிறுவனங்கள் `புரொமோட்டர்’ என்ற நிலைக்கு உயர்கின்றன. 10 சதவிகிதத்துக்குக் குறைவாக முதலீடு செய்யும் நிறுவனங்கள் மட்டுமே முதலீட்டாளர்களாகக் கருதப்படுகின்றன. இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் புரொமோட்டர்களாக இருந்தால், குறைந்தது 30-35% கட்டண வருமானம் கிடைக்கும். எனவே, இந்த வருமானத்தை இழக்க விரும்பாத வங்கிகள், தங்களது முதலீட்டை 10 சதவிகிதத்துக்கும் கீழாகக் குறைத்துக் கொண்டாலும் அவற்றிலிருந்து முற்றிலும் வெளியேறுவதில்லை. கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி, பத்து வங்கிகளை நான்கு வங்கிகளாக ஒருங்கிணைக்கும் அறிவிப்பு வெளியானது. அந்த வங்கிகளில் ஓ.பி.சி, பி.என்.பி., கனரா பேங்க், யூனியன் பேங்க் மற்றும் ஆந்திரா பேங்க் ஆகியவை ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புரொமோட்டர் களாகவும் இருக்கின்றன. ஒழுங்குமுறை விதிமுறை களின்படி, `ஒரு வங்கி ஒன்றுக்கு மேற்பட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் புரொமோட்டர்களாக இருக்கக் கூடாது.’ ஒன்றுக்கு மேற்பட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனங்களிலிருந்து இந்த நிறுவனங்களின் பங்கு விகிதம் 10 சதவிகிதத்துக்குக் கீழே கொண்டுவந்தாலும் முதலீட்டாளர்களாகத் தொடர வாய்ப்பிருக்கிறது.’’

இந்தியாவின் டாப் 10 நிறுவனங்களில் எட்டு நிறுவனங்களின் மார்க்கெட் கேப்பிட்டலைஷேசன் அதிகரித்திருக்கிறதே..!

“கடந்த வாரத்தில் மட்டும் மிகவும் மதிப்புமிக்க 10 இந்திய நிறுவனங்களில், எட்டு நிறுவனங்களின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் ரூ .1.34 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்திருக்கிறது. இதன் அடிப்படையில், டி.சி.எஸ் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் ரூ.28,893.36 கோடி உயர்ந்து, ரூ.8,26,293.87 கோடியாக உள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் ரூ.24,704.61 கோடி அதிகரித்து, ரூ.2,98,535.04 கோடியாக உள்ளது, அதே நேரத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ) மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் ரூ.28,469.51 கோடி அதிகரித்து, ரூ.2,79,786.57 கோடியாக உள்ளது. ஆர்.ஐ.எல் நிறுவனத்தின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் ரூ.16,671.95 கோடி அதிகரித்து, ரூ.9,23,613.71 கோடியாக உள்ளது. இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் ரூ.7,977.33 கோடி அதிகரித்து, ரூ.4,71,864.08 கோடியாக உள்ளது. ஹெச்.டி.எஃப்.சி-யின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் ரூ.4,428.96 கோடி அதிகரித்து, ரூ.3,67,534.58 கோடியாக உள்ளது.’’

சன் பார்மா, இண்டிகோ, எம்.எஸ்.டி.சி பங்குகளின் திடீர் விலை உயர்வுக்கு என்ன காரணம்?

“கட்டுமான மற்றும் பொறியியல் நிறுவனமான எல் அண்ட் டி, தன் விற்பனை முகவராக அரசுக்குச் சொந்தமான இ-காமர்ஸ் நிறுவனம் எம்.எஸ்.டி.சி-யை நியமித்த பின்னர் அதன் பங்கு விலை 20% அதிகரித்து, ரூ.147.80-ஆக வர்த்தகம் ஆனது. சன்பார்மா நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் ரூ.1,064 கோடியை நிகர லாபத்தைப் பதிவுசெய்த பிறகு, அதன் பங்கு விலை 3% அதிகரித்தது. கத்தார் ஏர்வேஸுடன் ஒப்பந்தம் கையொப்பமானதை அறிவித்ததையடுத்து, இண்டிகோவின் ஆபரேட்டரான இன்டர் குளோப் பங்கு விலை 1.75% அதிகரித்தது.”

ரேமண்ட்ஸ் நிறுவனத்துக்குள் நிறைய மாற்றங்கள் நடக்கிறதாமே!

‘‘ரேமண்ட்ஸ் லிமிடெட், தன் வணிகத்தை மறுசீரமைப்பு செய்து, லைஃப்ஸ்டைல் வணிகத்தைத் தனிநிறுவனமாக மாற்றவுள்ளது. இது குறித்து நிறுவனத்தின் நிர்வாகக்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. ரேமண்ட்ஸ் நிறுவனத்தின் ஒவ்வொரு பங்குதாரருக்கும் 1:1 என்ற விகிதத்தில் புதிய நிறுவனத்தின் பங்குகள் வழங்கப்படும். இதன் மூலம் லைஃப்ஸ்டைல் வணிகத்தைத் திறம்பட நடத்த இயலும்.

புதிய லைஃப் ஸ்டைல் வணிகத்தை பிராண்டடு டெக்ஸ்டைல், பிராண்டடு அப்பேரல் அண்ட் கார்மென்ட்டிங் நிறுவனங்களின் மூலம் செயல்படுத்தவிருக்கிறது. தற்போதுள்ள நிறுவனம் தனது ரியல் எஸ்டேட் புராஜெக்ட்களைத் தக்கவைத்துக்கொள்ளும். எதிர்காலத்துக்கான நிறுவனக் கட்டமைப்பை உருவாக்குதற்காகக் கடந்த மூன்றாண்டுகளாகத் திட்டமிட்டுச் செயல்படுவ தாகவும், பல சவால்களுக்கு மத்தியில் இந்த மாற்றங்களை நோக்கிப் பயணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது’’ என்றவர், “அடுத்த வாரம் சந்திக்கலாம்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்!