சரியாக 5 மணிக்கு நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். பத்து நிமிடங்களுக்கு முன்னரே அவர் வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பியிருந்ததால் போண்டா, டீயைத் தயாராக வாங்கி வைத்திருந்தோம். அவர் போண்டாவைச் சாப்பிட்டுவிட்டு, டீயைக் கையிலெடுத்துக்கொள்ள கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம். டீயைப் பருகிக்கொண்டே பதில் சொன்னார் ஷேர்லக்.

இந்தியப் பங்குச் சந்தையில் நடப்பு நவம்பர் மாதத்தில் அந்நிய முதலீடுகள் குவிய ஆரம்பித்திருக்கின்றனவே?

“உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச்சூழல் நம்பிக்கையளிப்பதாக இருப்பதால், நடப்பு நவம்பர் மாதத்தின் முதல் பாதியில் மட்டும் இந்தியப் பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தையில் மொத்தம் 19,203 கோடி ரூபாயை அந்நிய நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன. பங்குகளில் ரூ.14,435.6 கோடியும், கடன் பத்திரங்களில் ரூ.4,767.18 கோடியும் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன.

கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.16,464.6 கோடி அளவுக்கும், செப்டம்பர் மாதத்தில் ரூ.6,557.8 கோடி அளவுக்கும் அந்நிய முதலீடுகள் வந்திருக்கின்ற. எனவே, இவற்றுடன் ஒப்பிடுகையில் அந்நிய முதலீட்டின் அளவு இந்த மாதத்தில் இரு மடங்குக்கு மேல் அதிகரிக்கும் என்று தெரிகிறது. அந்நிய நிறுவன முதலீடு தொடர்ச்சியாக அதிகரித்துவருவது இந்தியப் பங்குச் சந்தைக்கு நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது. கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்தியச் சந்தையிலிருந்து வெளியேறின அந்நிய முதலீடுகள். இப்போது கார்ப்பரேட் வரிக் குறைப்பு, பொதுத்துறை வங்கிகள் இணைப்பு, வங்கி மூலதனம் அதிகரிப்பு, ஆட்டோமொபைல் துறையின் மீட்சி உள்ளிட்டச் செயல்பாடுகளால் அந்நிய முதலீட்டாளர்கள் நம்பிக்கையோடு இந்தியப் பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தைகளில் முதலீடு செய்திருப்பதாகத் தெரிகிறது.”

இரண்டாம் காலாண்டில் அதிக நிறுவனங்களின் பங்கு மூலதனத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதே..?

“யெஸ். உதாரணமாக, பி.எஸ்.இ 500 குறியீட்டில் இடம்பெற்றிருக்கும் 500 நிறுவனங்களை எடுத்துக் கொள்வோம். அதில் இடம்பெற்றுள்ள ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ரிலையன்ஸ் நிப்பான், எம்.ஆர்.எஃப் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் பங்குகளை செப்டம்பருடன் முடிந்த இரண்டாம் காலாண்டில் அவற்றின் நிறுவனர்களே வாங்கிச் சேர்த்திருக்கிறார்கள். இதுபோல் சுமார் 55 நிறுவனங்களின் புரொமோட்டர்கள், அவர்களின் நிறுவனப் பங்குகளை அவர்களே வாங்கியிருக்கிறார்கள். இப்படி நிறுவனர்களே அவர்களின் நிறுவனப் பங்குகளை வாங்குவது பங்குச் சந்தையில் பாசிட்டிவ்வாகப் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், நிறுவனர்கள் அவர்களின் நிறுவனப் பங்குகளை விற்பது நெகட்டிவ்வாகக் கருதப்படுகிறது. கடந்த ஓராண்டுகாலத்தில் பங்கு விலை இறக்கம்கண்ட நிறுவனங்களில் சுமார் 75% நிறுவனர்கள், அவர்களின் நிறுவனப் பங்குகளை வாங்கியிருக்கிறார்கள்.

இப்படிப் பங்குகளை நிறுவனர்களே வாங்குவதற்குப் பல முக்கியக் காரணங்கள் இருந்தாலும், இரண்டு காரணங்கள் குறிப்பிடத்தக்கவை. ஒன்று, பங்கின் விலை இறக்கத்தை தடுத்து நிறுத்துவது; மற்றொன்று, தன் நிறுவனப் பங்குகளைக் குறைந்த விலையில் வாங்கிச் சேர்ப்பது. விதிவிலக்காக ரிலையன்ஸ் புரொமோட்டர்கள், அவர்களின் நிறுவனப் பங்கை 52 வார உச்சத்தில் வாங்கியிருக்கிறார்கள். இந்த நடவடிக்கை, இந்த நிறுவனம் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் என்பதை விளக்குவதாக இருக்கிறது.அதேநேரத்தில், ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்.டி.எஃப்.சி பேங்க், கோட்டக் மஹிந்திரா பேங்க், ஹெச்.டி.எஃப்.சி ஏ.எம்.சி., எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ், பார்தி ஏர்டெல், ஸ்பைஸ்ஜெட், கேன் ஃபின் ஹோம்ஸ் ஆகிய நிறுவனங்களில் அவற்றின் புரொமோட்டர்கள் தங்கள் பங்கு மூலதனத்தைக் குறைத்திருக்கிறார்கள்.”

ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, பி.பி.சி.எல் பங்கு விலையில் திடீர் ஏற்றம் ஏற்பட்டிருக்கிறதே..?

“குறிப்பிட்ட சில புளூசிப் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும்விதமாக, மத்திய அரசு தன் முதலீட்டை விலக்கிக் கொள்வதற்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் கொடுத்திருப்பதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதையடுத்து, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனங்களின் பங்கு விலை, கடந்த 52 வார அதிகபட்ச உச்சத்தைத் தொட்டன. ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் 63.75% பங்குகளையும், பி.பி.சி.எல் நிறுவனத்தின் 53.2% பங்குகளையும், நுமலிகார் ரீஃபைனரி நிறுவனத்தின் 30.8% பங்குகளையும் விலக்கிக்கொள்ள மத்திய கேபினட் ஒப்புதல் கொடுத்திருக்கிறது. இந்த அறிவிப்பையடுத்து, ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் பங்கு விலை 2.12% அதிகரித்து, 69.8 ரூபாயை எட்டியது. பி.பி.சி.எல் பங்கு விலை வர்த்தக நாளின் இடையே 52 வார உச்ச அளவாக 549.7 ரூபாயை எட்டியது.”

நெட்வொர்க் 18 நிறுவனத்துடன் சோனி நிறுவனம் கைகோர்க்கும் முயற்சி நடக்கிறதாமே?

“முகேஷ் அம்பானியின் நெட்வொர்க் 18 மீடியா நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு ஜப்பானைச் சேர்ந்த சோனி கார்ப்பரேஷன் ஆர்வம் காட்டுகிறது. நெட்வொர்க் 18 நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்துவரும் சூழலில், அதன் பங்குகளைப் பொது வெளியீடு போன்ற விற்பனையில் வாங்காமல், அதற்கு முன்னதாகவே வாங்கிவிட சோனி விரும்புகிறது. இதற்காகப் பல்வேறு விற்பனை முறைகளையும் செயல்படுத்த முனைகிறது. குறிப்பாக, அந்த நிறுவனத்தை ஏலத்தில் வாங்குவது அல்லது சோனியின் இந்திய வணிகத்தை நெட்வொர்க் 18 நிறுவனத்துடன் இணைப்பது போன்ற வழிமுறைகளை யோசித்துவருகிறது. எனினும், இப்போதைக்கு இதில் தொடக்கநிலை வேலைகளில் மட்டுமே சோனி ஈடுபட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் இரண்டு நிறுவனங்களுக்குமே பலன் அளிப்பதாக இருக்கக்கூடும். இது வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால் சோனி நிறுவனம், இந்தியாவில் அதன் தொழில் போட்டியாளரான நெட்ஃப்ளிக்ஸை வலுவாக எதிர்கொள்ள இயலும். முகேஷ் அம்பானியின் நிறுவனத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும்.’’

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கின் விலை ஏற என்ன காரணம்?

‘‘பங்குத் தரகு நிறுவனமான ஹெச்.எஸ்.பி.சி நிறுவனம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கை ‘வாங்கலாம்’ என்ற பிரிவிலேயே மீண்டும் நிலைநிறுத்தியிருப்பதுடன், அதன் இலக்கு விலையை 1,565 ரூபாயிலிருந்து 1,700 ரூபாயாக உயர்த்தியுள்ளது. இதையடுத்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலையில் 2.1% ஏற்றம் கண்டு, ரூ.1,569.60 என்ற விலையில் வர்த்தகமானது. ரிலையன்ஸ் ஜியோ செயல்படும்விதம், கட்டுக்கோப்பான சில்லறை வர்த்தகம் ஆகியவற்றைப் பார்க்கும்போது குறுகியகாலத்தில் இந்த நிறுவனப் பங்கின் விலை ஏற்றமாகச் செயல்படும் என்று தெரியவருகிறது. ஒருபுறம் மூலதனச் செலவுகளைக் குறைப்பதுடன், மறுபுறம் கட்டண விகிதங்களை உயர்த்தவிருப்பதால் மேலும் லாபத்தைச் சம்பாதிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. இவற்றையெல்லாம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்குச் சாதகமான அம்சங்களாக ஹெச்.எஸ்.பி.சி கருதுகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்கு விலை 40% அதிகரித்திருக்கிறது.’’

சி.எஸ்.பி (கேத்தலிக் சிரியன் பேங்க்) வங்கியின் ஐ.பி.ஓ வெளியீட்டுக்கு பெரிய வரவேற்பாமே..?

‘‘கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்ட சி.எஸ்.பி வங்கி, ரூ.410 கோடி நிதி திரட்ட புதிய பங்கு வெளியீட்டில் (ஐ.பி.ஓ) இறங்கியுள்ளது. இதற்கு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ஐ.பி.ஓ வெளியீடு நவம்பர் 26, 2019 தேதியோடு நிறைவடைகிறது. ஐ.பி.ஓ வந்த தொடக்க நாளிலேயே 90% பங்குகளுக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. பங்கின் விலைப்பட்டை ரூ.193-195 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என்று சொன்னவர், நாணயம் கான்க்ளேவ் அறிவிப்புப் பக்கங்களைப் பார்த்தார். ``பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு சூப்பரான வாய்ப்பு. பதிவு செய்துகொண்டு பயன்பெறட்டும்” என்றவர், ‘‘வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கிறது. வீட்டுக்குப் போகிறேன்’’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

டெலிகாம் பங்குகள் விலை சரிவு!

பார்தி ஏர்டெல், வோடஃபோன் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களின் பங்கு மதிப்பில் திடீர் சரிவு ஏற்பட்டிருக்கிறது. `அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற தொலைபேசி நிறுவனங்கள், அவற்றுக்கான நிலுவைத் தொகையை மூன்றுமாத காலத்துக்குள் அரசுக்குச் செலுத்த வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், `பார்தி ஏர்டெல், வோடஃபோன், ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் தங்களின் ஸ்பெக்ட்ரம் நிலுவைத் தொகையை இரண்டாகப் பிரித்து, இரண்டு ஆண்டுகளில் செலுத்தலாம்’ என்று மத்திய கேபினட் அமைச்சகம் அறிவித்தது. இந்த அறிவிப்பு, பார்தி ஏர்டெல், வோடஃபோன், ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்களுக்குச் சாதகமாக இருந்தாலும் பங்குச் சந்தையில், அவற்றின் பங்கு விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த வியாழனன்று மத்திய அமைச்சகம் இதற்கு ஒப்புதல் தந்தவுடன், அன்றைய வர்த்தக நாளின் இடையே வோடஃபோன் நிறுவனத்தின் பங்குகள் 12 சதவிகிதமும், பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்குகள் 2.26 சதவிகிதமும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 0.83 சதவிகிதமும் இறக்கம் கண்டன. முன்னதாக, தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நாடாளுமன்றத்தில் பேசுகையில், “தொலைபேசி நிறுவனங்களின் அலைக்கற்றை ஒதுக்கீட்டு நிலுவைத் தொகைக்கு எந்த மானியமோ, தள்ளுபடியோ தருவதற்கான திட்டம் மத்திய அரசிடம் இல்லை” என்றார்.