Published:Updated:

ஷேர்லக்: 2020-ம் ஆண்டில் சென்செக்ஸ் 45000

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

நிபுணர்கள் கணிப்பு

ஷேர்லக்: 2020-ம் ஆண்டில் சென்செக்ஸ் 45000

நிபுணர்கள் கணிப்பு

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

காலையில் சொன்னபடி சரியாக மாலை 4:00 மணிக்கு வந்து சேர்ந்தார் ஷேர்லக். நாம் கேன்டீனுக்கு அழைக்க, “வேண்டாம், உடனே பேசி முடிப்போம். 6:00 மணிக்கு ஏர்போர்ட்டில் இருக்க வேண்டும்” என்று பரபரக்க, நாம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

ஷேர்லக்
ஷேர்லக்

நவம்பரில் முன்னணி ஃபண்ட் மேனேஜர்களின் பங்கு முதலீடு எப்படி இருந்தது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“நவம்பரில் மியூச்சுவல் ஃபண்ட் மேனேஜர்கள் முதலீட்டுக்குத் தேர்தெடுத்த நிறுவனப் பங்குகள் விவரம் வெளியாகியிருக்கின்றன. ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் தற்போது ஸ்ரீ சிமென்ட் பங்குகளிலும், ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் இப்போது மாருதி சுஸூகி மற்றும் சன் பார்மா நிறுவனப் பங்குகளிலும் அதிக முதலீட்டை மேற்கொண்டிருக்கின்றன. ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்டானது ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்குகளிலும், ஐ.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்டானது, பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனப் பங்குகளிலும் அதிக முதலீடு செய்திருக்கின்றன.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டைக் குறைத்திருக்கிறார்களே?

“பல முக்கியமான நிகழ்வுகளால் 2019-ம் ஆண்டில் இந்தியப் பங்குச் சந்தை பல உச்சங்களைக் கண்டிருக்கிறது. அவற்றில் நரேந்திர மோடி பிரதமராக மீண்டும் பதவி ஏற்றது, 2019 மத்திய பட்ஜெட் சலுகைகள் மற்றும் பெரு நிறுவன வரிக் குறைப்பு போன்றவை அடங்கும். இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு இந்தியப் பங்கு காளை ஓட்டத்தைக் கண்டுவருகிறது. அதே நேரத்தில் சந்தை, இடையிடையே இறக்கத்தையும் கண்டுவருகிறது. இந்தக் காலகட்டத்தில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்.ஐ.ஐ) பி.எஸ்.இ-யில் பட்டியலிடப்பட்ட சுமார் 220 நிறுவனங்களின் பங்குகளில் தங்கள் முதலீடுகளைக் குறைத்துள்ளனர். அவற்றில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமான பங்குகள் 2019-ம் ஆண்டில் நெகட்டிவ் வருமானத்தை அளித்துள்ளன. இந்த 220 பங்குகளில், 52 நிறுவனங்களின் பங்குகள் 50-90 சதவிகித அளவுக்குச் சரிந்ததால், முதலீட்டாளர்கள் நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறார்கள். குறிப்பாக, டி.ஹெச்.எஃப்.எல்., ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், சி.ஜி.பவர், தாமஸ் குக் மற்றும் ஹெச்.சி.எல் இன்ஃபோ சிஸ்டம்ஸ் போன்ற பங்குகள். இவற்றைச் சிறு முதலீட்டாளர்கள் தவிர்ப்பது நல்லது.”

‘பொருளாதார மந்தநிலை 2020-ம் ஆண்டிலும் தொடரும்’ என்று ஃபைனான்ஷியல் சர்வீஸ் நிறுவனம் கிரெடிட் சூஸ் தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`2020-ம் ஆண்டில் சென்செக்ஸ் நல்ல வளர்ச்சி அடையும்’ என்று கணிக்கப்பட்டிருக்கிறதே?

“தற்போது சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் இரண்டுமே நல்லதொரு ஏற்றத்தில் பயணித்தாலும்கூட, பல நிறுவனப் பங்குகளின் செயல்பாடுகள் குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை. லார்ஜ்கேப் பங்குகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்.டி.எஃப்.சி போன்ற சில நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே பங்குச் சந்தைகளை ஏற்றத்தில் செலுத்துகின்றன. மற்ற பங்குகள் அனைத்தும் பொருளாதார மந்தநிலை, நிதிப் பிரச்னை போன்ற காரணங்களால் பெரிதாக விலையேற்றம் காணவில்லை. வரும் 2020-ம் ஆண்டிலும் பங்குச் சந்தைகளில் இதே போன்ற நிலை தொடரும் என்று குறிப்பிடும் பி.என்.பி பரிபா நிறுவனம், சென்செக்ஸ் ரேட்டிங்கை ‘ஓவர்வெயிட்’ என்ற வரம்பில் வைத்துள்ளது. சில நிறுவனங்களின் அதிக வருமானம் காரணமாக சென்செக்ஸ் 44500 புள்ளிகளை எட்டக்கூடும் என்று கணித்துள்ளது. நிஃப்டி இண்டெக்ஸ் 2020, ஜூன் மாதத்தில் 12300 என்ற வரம்பில் இருக்கும் என்றும் கணித்துள்ளது. எனர்ஜி பிரிவிலிருந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை நீக்கியும், ஐ.டி பிரிவில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தைச் சேர்த்தும் இந்த கணிப்பை வெளியிட்டுள்ளது. ஹெச்.டி.எஃப்.சி., இண்டஸ்இண்ட் பேங்க் மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்குகள் அதிக விலை ஏறும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஷேர்லக்
ஷேர்லக்

இது போன்ற கருத்தைத்தான் கோட்டக் செக்யூரிடீஸும் தெரிவித்துள்ளது. அது 2020-ம் ஆண்டில் சென்செக்ஸ் 45500 புள்ளிகளாகவும், நிஃப்டி 13000 புள்ளிகளாகவும் அதிகரிக்கும் எனக் கூறியிருக்கிறது. மும்பையைச் சேர்ந்த முன்னணி அனலிஸ்ட்கள் சென்செக்ஸ் 45000 புள்ளிகளைத் தாண்டிச் செல்ல வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.’’

ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் ஒருவழியாக ஐ.பி.ஓ வருகிறதே?

“ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், வங்கியாகச் செயல்படத் தொடங்கிய பிறகு பொதுமக்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் பங்கு வெளியிட வேண்டும் என்ற நிலை காணப்பட்டது. அதை மேற்கொள்ளாததால், பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பான செபி அமைப்பு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில், ரூ.1,000 கோடி நிதி திரட்டும் நோக்கில் பங்கு வெளியிட செபியிடம் விண்ணப்பித்தது. இதன் ஒரு பகுதியாக, ஐ.பி.ஓ மூலம் ரூ.550 கோடி மதிப்புள்ள எட்டு கோடி பங்குகளைச் சலுகை விலையில் ஈக்விடாஸ் ஹோல்டிங்ஸின் தகுதியான பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஒதுக்கீடு செய்ய உள்ளதாகத் தெரிகிறது.”

ஷேர்லக்
ஷேர்லக்

பாரத் பாண்ட் இ.டி.எஃப் திட்டத்தில் அதிக அளவில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்திருக்கிறார்களே... ஏன்?

“வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் தவிர, மற்ற கடன் சார்ந்த முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்ய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனால், பாரத் பாண்ட் இ.டி.எஃப் திட்டங்களில் அவர்களால் எளிதாக முதலீடு செய்ய முடிகிறது. மேலும், இந்தத் திட்டத்திலிருக்கும் பாதுகாப்பு, அதிக வருமானம் ஆகியவையும் அவர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கின்றன. பாரத் பாண்ட் இ.டி.எஃப் சுமார் 7.5% வருமானம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.”

இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி கிரெடிட் சூஸ் (Credit Suisse) நெகட்டிவ் கருத்துச் சொல்லியிருக்கிறதாமே?

“பொருளாதார மந்தநிலை, 2020-ம் ஆண்டிலும் தொடரும் என்று உலகளாவிய ஃபைனான்ஷியல் சர்வீஸ் நிறுவனமான கிரெடிட் சூஸ் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்குகளில் மட்டும் முதலீடு செய்வதே சரியான முறையாக இருக்கும் என்று அறிவுறுத்தியுள்ளது.

ஷேர்லக்: 2020-ம் ஆண்டில் சென்செக்ஸ் 45000

30 முக்கிய நிறுவனப் பங்குகளைப் பட்டியலிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்.டி.எஃப்.சி பேங்க், எஸ்.பி.ஐ., டி.சி.எஸ்., ஹெச்.யூ.எல்., ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், ஐ.டி.சி., பார்தி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், டெக் மஹிந்திரா, கோல் இந்தியா, டாபர், சோழா ஃபைனான்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல், மதர்சன் சுமி மற்றும் லூபின் உள்ளிட்ட பங்குகளை முதலீட்டுக்கு கவனிக்கலாம் என தெரிவித்துள்ளது.

இவற்றில், ஹெச்.டி.எஃப்.சி பேங்கைவிட எஸ்.பி.ஐயின் மதிப்பை ‘ஓவர்வெயிட்’ என்று அதிகரித்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அனைத்துப் பங்குகளிலும் முதலீடு செய்யாமல், டாப் 100 பங்குகளை மட்டும் தேர்வுசெய்து முதலீடு செய்வார்கள் என்று கணித்துள்ளது. இவற்றில் நிஃப்டி இண்டெக்ஸ் பங்குகளில் 76% வெளிநாட்டு முதலீடுகள் குவியுமென்று குறிப்பிட்டுள்ளது.”

பங்கு வெளியீட்டில் யூ.டி.ஐ அஸெட் மேனேஜ்மென்ட் களமிறங்கப் போகிறதே?

“யூ.டி.ஐ அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனம், ஐ.பி.ஓ வெளியீட்டுக்காக செபியிடம் விண்ணப்பிக்கவிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஐ.பி.ஓ மூலமாக, யூ.டி.ஐ அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் பங்குதாரர் நிறுவனங்களான ஸ்டேட் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா மற்றும் எல்.ஐ.சி உள்ளிட்டவை சலுகை விலை விற்பனையில் ஈடுபடக்கூடும். ஸ்டேட் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா மற்றும் எல்.ஐ.சி ஆகிய நிறுவனங்கள் தலா 1.05 கோடி பங்குகளை விற்பனை செய்யவுள்ளன. மேலும், பஞ்சாப் நேஷனல் வங்கி, டி ரோவ் பிரைஸ் போன்ற நிறுவனங்கள் 38 லட்சம் பங்குகளை விற்பனை செய்யக்கூடும். இந்த ஐ.பி.ஓ மூலம் மொத்தம் ரூ.3,800-ரூ.4,800 கோடி நிதி திரட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.”

ஜிண்டால் ஸ்டீல் நிறுவனத்தின் பங்கு விலையில் திடீர் ஏற்றத்துக்கு என்ன காரணம்?

“மார்கன் ஸ்டேன்லி பங்குத் தரகு நிறுவனம், ஜிண்டால் ஸ்டீல் & பவர் நிறுவனத்தின் ரேட்டிங்கை காளையின் போக்காகவே தொடர்வதால், அந்த நிறுவனத்தின் பங்கு விலை வர்த்தக நாளின் இடையே 2.6% அதிகரித்தது. கடந்த மூன்று மாதங்களாக இந்த நிறுவனப் பங்கின் செயல்பாட்டில் சீரான ஏற்றம் இருப்பதைக் கண்டதால்தான் காளையின் போக்கு தொடர்வதைச் சொல்லியிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் பங்கு விலை 42% அதிகரித்துள்ளது. தற்போது இந்தப் பங்கின் இலக்கு விலை 25% அதிகரிக்கப்பட்டுள்ளது” என்றவர், ‘‘அடுத்த இதழ் புத்தாண்டுச் சிறப்பிதழா? சூப்பர், அதைப் படிக்க நான் ஆவலாக இருக்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குப் புறப்பட்டார்!

கார்வி பிரச்னை: முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

முதலீட்டாளர்களின் பங்குகளை அடமானம் வைத்து, கடன் பெற்ற கார்வி நிறுவனத்துக்குப் புதிய முதலீட்டாளகளைச் சேர்க்கவும், பங்கு வர்த்தகத்தில் ஈடுபடவும் செபி அமைப்பு நவம்பர் 22-ம் தேதி தடை விதித்தது. 83,000 முதலீட்டாளர்களுக்கு அடமானம் வைக்கப்பட்ட பங்குகள், அவர்களின் டீமேட் கணக்குகளில் மீண்டும் வரவு வைக்கப்பட்டுள்ளன. இன்னும் சுமார் 7,000 முதலீட்டாளர்களுக்குப் பங்குகளைத் திருப்பி அளிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, முதலீட்டாளர்களின் டி.பி கணக்கில் பங்குகள் இருந்தால், பிரச்னை எதுவும் இல்லை. அப்படியல்லாமல் தரகு நிறுவனத்தின் பூல் (Pool) அக்கவுன்ட்டில் பங்குகள் இருந்தால், அவை அடமானம் வைக்கப்பட்டிருக்கலாம். உங்கள் பங்குகள் அடமானம் வைக்கப்பட்டிருக்கின்றனவா என்பதை ‘ஹோல்டிங் ஸ்டேட்மென்ட்’-ஐ வைத்து தெரிந்துகொள்ளலாம். இதற்கு, முதலீட்டாளர்கள் டீமேட் கணக்கு வைத்திருக்கும் கார்வி கிளையை அணுகி ‘ஹோல்டிங் ஸ்டேட்மென்ட்’ பெறலாம். அங்கு கிடைக்கவில்லை எனில், service@karvy.com முகவரிக்கு மின்னஞ்சல் செய்து பெறலாம். ஹோல்டிங் ஸ்டேட்மென்ட்டை அனைத்து முதலீட்டாளர்களும் 6/12 மாதங்களுக்கு ஒருமுறை பார்த்துக்கொள்வது நல்லது.

கார்வி பிரச்னையில் செபி ஜனவரி 6-ம் தேதி இறுதி முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism