Published:Updated:

வங்கிப் பங்குகளில் முதலீடு... கவனிக்க வேண்டிய பங்குகள்!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

ஷேர்லக்

வங்கிப் பங்குகளில் முதலீடு... கவனிக்க வேண்டிய பங்குகள்!

ஷேர்லக்

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

டந்த வாரம் சொன்னபடி நம் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார் ஷேர்லக். அவரை கேன்டீனுக்கு அழைத்துச் சென்று டீ ஆர்டர் செய்தோம். சூடன டீயைப் பருகியபடிநம் கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார்.

வியாழக்கிழமை சென்செக்ஸ் 645 புள்ளிகள் அதிகரிக்க என்ன காரணம்?

‘‘அமெரிக்க-ஈரான் பிரச்னையின் தீவிரம் குறைந்ததை அடுத்து வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமையில் இந்தியப் பங்குச் சந்தை ஏற்றம்காண ஆரம்பித்தது. குறிப்பாக, ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், எஸ்.பி.ஐ., எம்&எம், இண்டஸ்இந்த் பேங்க், மாருதி சுஸூகி, ஏசியன் பெயின்ட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலை அதிகரித்தன. `ஈரானுடன் அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்ததை அடுத்து இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் சென்டிமென்ட், பாசிட்டிவாக மாறியிருப்பதைப் பார்க்க முடிகிறது.”

வங்கிப் பங்குகளில் முதலீடு... கவனிக்க வேண்டிய பங்குகள்!

வங்கிப் பங்குகளில் முதலீடு செய்ய இது சரியான தருணமா?

“அண்மையில் முடிந்திருக்கும் மூன்றாம் காலாண்டு மற்றும் நடப்பு நான்காம் காலாண்டில் வங்கிகளின் வாராக் கடன்கள் கணிசமாகக் குறைந்துவருகின்றன. அந்த வகையில், `விரைவில் வங்கிகளின் நிதிநிலை முடிவுகள் மேம்படும்’ என்று எஸ்.பி.ஐ சேர்மன் ரஜ்னிஷ் குமார் தெரிவித்திருக்கிறார். மேலும், பெரிய வங்கிகள் 2018-19 மற்றும் 2021-22-ம் நிதியாண்டுகளுக்கு இடையே லாப வளர்ச்சிக்கு வருகின்றன. குறிப்பாக, ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், எஸ்.பி.ஐ., ஃபெடரல் பேங்க் போன்றவற்றின் கடன் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கிறது. எனவே, நீண்டகால நோக்கில் இந்தப் பங்குகளை முதலீட்டுக்கு கவனிக்கலாம் எனப் பங்குத் தரகு நிறுவனமான மோதிலால் ஆஸ்வால் தெரிவித்திருக்கிறது.”

இன்ஃபோசிஸ் மூன்றாம் காலாண்டு முடிவு எப்படி வந்திருக்கிறது?

“இந்தியாவின் இரண்டாவது பெரிய சாஃப்ட்வேர் சர்வீசஸ் நிறுவனமான இன்ஃபோசிஸின் நிகர லாபம் மூன்றாம் காலாண்டில் முந்தைய ஆண்டின் இதே காலாண்டைவிட 11% அதிகரித்திருக்கிறது. அதே நேரத்தில், முந்தைய காலாண்டைவிட 23.5% உயர்ந்துள்ளது. 2019-20-ம் நிதியாண்டில் இந்த நிறுவனம் 10-10.5% வளர்ச்சி காணும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.”

இ.எஸ்.ஏ.எஃப் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் புதிய பங்கு வெளியிடுவது பற்றி...

“கேரளாவைச் சேர்ந்த இ.எஸ்.ஏ.எஃப் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் (ESAF Small Finance Bank) புதிய பங்கு வெளியீட்டுக்குப் பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் விண்ணப்பித்திருக்கிறது. இந்தப் பங்கு வெளியீட்டின் மூலம் 976 கோடி ரூபாய் நிதி திரட்டப்படுகிறது. தற்போதைய நிலையில் இந்த வங்கி இந்தியாவில் 16 மாநிலங்களில், 403 கிளைகளைக்கொண்டு செயல்பட்டுவருகிறது. புதிய பங்கு வெளியீடு மூலம் 800 கோடி ரூபாயையும், பங்குச் சந்தையில் ‘ஆஃபர் ஃபார் சேல்’ முறையில் 176.2 கோடி ரூபாயையும் திரட்ட இந்த வங்கி முடிவுசெய்திருக்கிறது. திரட்டப்படும் நிதியைக் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவும், வங்கி விரிவாக்கத்துக்கும் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஐ.பி.ஓ வெளியீட்டை ஆக்ஸிஸ் கேப்பிட்டல் எடெல்வைஸ் ஃபைனான்ஷியல் சர்வீஸ், ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ், ஐ.ஐ.எஃப்.எல் செக்யூரிட்டீஸ் ஆகிய நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன.”

வங்கிப் பங்குகளில் முதலீடு... கவனிக்க வேண்டிய பங்குகள்!

சன்டெக் ரியாலிட்டி நிறுவனப் பங்கு விலையில் திடீர் ஏற்றம் ஏற்பட்டது ஏன்?

“சரியான நேரத்தில் முடிக்க உத்தரவாதம் அளிக்கும் குடியிருப்பு கட்டுமானங்களுக்கு உத்தரவாதத்துடன் நிதி வழங்கும் (ஆர்.பி.பி.ஜி) திட்டத்தை எஸ்.பி.ஐ அறிவித்திருக்கிறது. கடந்த வியாழனன்று இந்தத் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சன்டெக் ரியாலிட்டி நிறுவனம் கையெழுத்திட்டது. இதைத் தொடர்ந்து அதன் பங்கு விலை 6% அதிகரித்தது. அதேபோல எஸ்.பி.ஐ பங்கு விலை 3.17% அதிகரித்தது. மும்பையைச் சேர்ந்த சன்டெக் ரியாலிட்டி, வாங்கத் தகுந்த விலையிலான வீடுகளை ஏழு இந்திய நகரங்களில் கட்டிவருகிறது. உத்தரவாத வீட்டுக் கடன் வழங்கும் திட்டம் இந்தியாவிலுள்ள 10 நகரங்களில் செயல்படுத்தப்படவுள்ளது.”

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஸ்டீல், பவர் நிறுவனப் பங்குகள் விலை அதிகரிக்க என்ன காரணம்?

“நிலக்கரிச் சுரங்க ஏலத்தில் சுரங்கப் பணியில் ஈடுபடாத நிறுவனங்களும் பங்கேற்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதையடுத்து எஃகு, மின்சக்தி மற்றும் சுரங்க நிறுவனப் பங்குகளின் விலையில் ஏற்றம் ஏற்பட்டது. குறிப்பாக, வெல்ஸ்பன் கார்ப்பரேஷன் பங்கின் விலை 5.4%, ஜே.எஸ்.டபிள்யூ பங்கின் விலை 4.33%, ஜே.எஸ்.பி.எல் பங்கின் விலை 2.7% மற்றும் செயில், டாடா ஸ்டீல் நிறுவனப் பங்குகளின் விலை தலா 2.2% வர்த்தக நாளின் இடையே ஏற்றம் பெற்றன.

மின் உற்பத்தித்துறையில் வர்த்தக நாளின் இடையே, அதானி கிரீன் எனர்ஜி பங்கின் விலை 4.98%, அதானி டிரான்ஸ்மிஷன் பங்கின் விலை 3.51%, டாடா பவர் பங்கின் விலை 2.84% ஏற்றம் பெற்றன. சுரங்கத்துறையில் ஆஷாபுரா மைன்செம், சந்தூர் மாங்கனீஸ், ஏ.எஸ்.ஐ இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றன.”

சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்தின் பங்கு விலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது எதனால்?

“சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்துக்கு ரூ.7,256 கோடி மதிப்பிலான வாராக்கடன் இருப்பதாகச் செய்தி வெளியானதை அடுத்து அதன் பங்கு விலை 10% குறைந்து, லோயர் சர்க்யூட்டுக்கு வந்தது. இந்த வங்கிக்கு ரூ.6,717.44 கோடி மதிப்புள்ள அசலுக்கு, ரூ.578.94 கோடி வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ.7,256.38 கோடி கடன் இருக்கிறது. இந்த விவரம் வெளியானதை அடுத்து பங்கு விலை ரூ.3.60 என்பதிலிருந்து ரூ.3.24 எனக் குறைந்தது. இந்த நிறுவனத்தின் பங்கு தொடர்ந்து ஆறு நாள்கள் விலை ஏற்றம் கண்டுவந்த நிலையில், இந்த அறிவிப்பின் காரணமாக இறக்கத்தைச் சந்தித்திருக்கிறது. கடந்த ஓராண்டில் 40% இறக்கத்தைச் சந்தித்திருக்கிறது. எனினும், இந்த ஆண்டில் இதுவரை 73.26% ஏற்றத்தில் இருக்கிறது.”

ஜி.டி.பி.எல் ஹாத்வே பங்கு விலை திடீரென அதிகரித்திருக்கிறதே... அப்படி என்ன நடந்திருக்கிறது?

“இந்த நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் நிறுவனம் சிறப்பாகச் செயல்படுவதைப் பிரதிபலிக்கின்றன. டிசம்பர் காலாண்டில் நிறுவனத்தின் வருமானம் 114% அதிகரித்து, 674 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 314.5 கோடி ரூபாயாக இருந்தது.

ஷேர்லக்
ஷேர்லக்

நிறுவனத்தின் வருமானம் அதிகரித்திருப்பது அதன் பங்கு விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 10-ம் தேதியன்று பங்கின் விலை 11% அதிகரித்திருக்கிறது. அன்றைய வர்த்தக தொடக்கத்திலேயே 8.69% விலை உயர்ந்து 88.20 ரூபாய்க்கு வர்த்தகமானது. மேலும், இந்த நிறுவனத்தின் கடன் மூன்றாம் காலாண்டில் ரூ.47.50 கோடி குறைந்திருக்கிறது. 2019, டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி இந்த நிறுவனத்தின் நிகர கடன் ரூ.186.1 கோடியாக இருந்தது.”

கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தின் பங்குகளின் விலை திடீர் உயர்வு கண்டுள்ளதே!

“கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் தொடங்கியதும் இந்த நிறுவனப் ‌பங்கின் விலை திடீரென 10.7% அதிகரித்தது. கே.என்.ஆர் வாலயார் டோல்வேஸ் நிறுவனத்திலுள்ள தன் 100% பங்குகளையும் விற்கப்போவதாக அறிவித்ததுதான் இந்த திடீர் விலை உயர்வுக்கான முக்கியக் காரணம். இந்தப் பரிவர்த்தனைக்கான சொத்துகளின் நிறுவன மதிப்பு ரூ.529.27 கோடி.”

எடைல்வைஸ் நிறுவனப் பங்கு விலை இப்போது 10% குறையக் காரணம் அமலாக்கத் துறையின் உத்தரவா?

‘‘ரூ.2,000 கோடி அந்நியச் செலாவணி முறைகேட்டில் எடைல்வைஸ் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் ராஷேஷ் ஷாவை விசாரிக்க அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பதாகத் தகவல் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து, இந்த நிறுவனப் பங்கின் விலை 9.98% வரை இறக்கம்கண்டு, லோயர் சர்க்கியூட்டைத் தொட்டது. ஆனால், இந்தச் செய்தி முழுக்கத் தவறானது என இந்த நிறுவனம் விளக்கம் அளித்தைத் தொடர்ந்து இந்தப் பங்கின் விலை 9.56% அளவுக்கு மட்டும் குறைந்து வர்த்தகம் முடிந்தது.’’

மும்பையைச் சேர்ந்த சன்டெக் ரியாலிட்டி, வாங்கத் தகுந்த விலையிலான வீடுகளை ஏழு நகரங்களில் கட்டிவருகிறது.

ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி நிறுவனத்தின் என்.சி.டி-க்களின் தரக்குறியீட்டை, கேர் ரேட்டிங் நிறுவனம் குறைத்திருப்பது கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயமா?

“ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி நிறுவனம், ஜி.எம்.ஆர் கமலாங்கா எனர்ஜி நிறுவனத்தைக் கடன் மூலம் வாங்குவதற்காகத் திட்டமிட்டிருக்கும் நிலையில், முதலீட்டாளர்களிடமிருந்து என்.சி.டி-க்கள் (பங்குகளாக மாறாத கடன் பத்திரங்கள்) மூலம் ரூ.300 கோடி நிதி திரட்ட முடிவுசெய்திருக்கிறது. இதனால் கேர் ரேட்டிங் ஏஜென்சி, இந்த 300 கோடி மதிப்பிலான என்.சி.டி வெளியீட்டுக்கு ‘AA-’ என்ற எதிர்மறைக் குறியீட்டை வழங்கியிருக்கிறது. கேர் ரேட்டிங் ஏஜென்சி, ஜி.எம்.ஆர் கமலாங்கா எனர்ஜி நிறுவனத்துக்கு ஏற்கெனவே ‘D’ என்ற நெகட்டிவ் தரக்குறியீட்டை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகக் கடந்த 9-ம் தேதி ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி நிறுவனத்தின் பங்கு விலை சரிந்திருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் இந்தப் பங்கு விலை 6% குறைந்திருக்கிறது.”

எஸ்.ஐ.பி முதலீடு அதிகரித்திருக்கிறதே..!

“கடந்த 2019-ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீடு அதிகரித்திருக்கிறது. அந்த மாதத்தில் மட்டும் எஸ்.ஐ.பி முறையில் ரூ.8,518.47 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இது அதற்கு முந்தைய நவம்பர் மாதத்தைவிட 3% அதிகம். ஒவ்வோர் ஆண்டும் இந்த முறையில் 6% முதலீடு அதிகரித்து வருகிறது.

2019-ம் ஆண்டில் எஸ்.ஐ.பி மூலம் செய்யப்பட்ட மொத்த முதலீடு 98,612 கோடி ரூபாய். இந்த ஆண்டிலேயே டிசம்பர் மாதத்தில்தான் அதிகமாக முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலையில் தொடர்ந்து முதலீடு செய்யக்கூடிய 2.98 கோடி எஸ்.ஐ.பி கணக்குகள் இருக்கின்றன. மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முதலீட்டின் மூலம் நிர்வகித்துவரும் சொத்து மதிப்பும் 3.17 லட்சம் கோடி ரூபாயை அடைந்து, புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது.

ஆம்ஃபியின் தகவல்படி, மியூச்சுவல் ஃபண்டில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 9.55 லட்சம் எஸ்.ஐ.பி கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. சராசரியாக ஒவ்வொரு எஸ்.ஐ.பி கணக்கிலும் சுமார் 2,850 ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.”

பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவிகளில் ஒருவரே இருக்கக் கூடாது. இரண்டு பதவிகளுக்கும் தனித்தனி நபர்களை நியமிக்கச் சொல்லும் செபியின் உத்தரவு எந்த நிலையில் இருக்கிறது?

‘‘இதுவரை முன்னணி 500 நிறுவனங்களில் சுமார் 200 நிறுவனங்கள் இந்த மாற்றத்தைச் செய்யாமல் இருக்கின்றன. அந்த நிறுவனங்களுக்கு செபி, 2020, ஏப்ரல் 1-ம் தேதி வரை காலக்கெடு கொடுத்திருக்கிறது. பஜாஜ் ஃபைனான்ஷியல் சர்வீசஸ், பஜாஜ் ஆட்டோ, அதானி போர்ட், ஸ்ரீசிமென்ட்ஸ், யூ.பி.எல்., லிபின் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் அடங்கும்.

`பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர்குழுவில் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநராவது இருக்க வேண்டும்’ என்ற செபியின் உத்தரவை சுமார் 50 நிறுவனங்கள் இன்னும் கடைப் பிடிக்காமல் இருக்கின்றன” என்றார் ஷேர்லக். பிறகு நம் கையைப் பிடித்துக் குலுக்கிவிட்டு, நாணயம் விகடன் வாசகர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துச் சொல்லிவிட்டுக் கிளம்பினார்!

மிஸ்திரிக்குத் தடை!

` `டாடா குழும நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து சைரஸ் மிஸ்திரியை நீக்கியது செல்லாது’ என்று தேசியச் சட்ட நிறுவனத் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்குத் தடை விதிக்க வேண்டும்’ என டாடா குழுமம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேசியச் சட்ட நிறுவனத் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, மிஸ்திரிக்கு பின்னடைவுதான்!