பட்ஜெட் அலசல் கூட்டம் ஒன்றில் பேசச் செல்வதாகக் காலையிலேயே வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பியிருந்தார் ஷேர்லக். நாம் கேள்விகளை அனுப்பிவைத்தோம். மாலை 4:00 மணிக்கு பதில்களை அனுப்பினார். அந்தக் கேள்வி பதில்கள் இங்கே...

மத்திய பட்ஜெட், பங்குச் சந்தைக்கு ஏமாற்றமாக அமைந்திருக்கிறதே?

“நிறுவனப் பங்குகள் மூலமாகக் கிடைக்கும் ஆதாயத்துக்கு விதிக்கப்பட்டிருக்கும் நீண்டகால மூலதன ஆதாய வரி இந்த பட்ஜெட்டில் நீக்கப்படும் எனப் பரவலாக எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி அறிவிப்பு எதுவும் வரவில்லை. மேலும், டிவிடெண்ட் விநியோக வரி நிறுவனங்களுக்கு நீக்கப்பட்டிருக்கிறது. ஆனால், `இந்த வரியை முதலீட்டாளர்கள் செலுத்த வேண்டும்’ என்று அறிவிக்கப்பட்டதால், சென்செக்ஸ் 987 புள்ளிகள் வரை வீழ்ச்சிகண்டது.”

ஒருவழியாக எல்.ஐ.சி நிறுவனத்தின் ஐ.பி.ஓ வரப்போகிறதே?

“நலிந்துகிடக்கும் தொழில்துறையைத் தூக்கி நிறுத்த மத்திய அரசாங்கத்துக்கு ஏகப்பட்ட பணம் தேவை. அதற்காக அது பல பொதுத்துறை நிறுவனங்களில் அதன் பங்கு மூலதனத்தைக் கணிசமாக விலக்கிவருகிறது. எல்.ஐ.சி என்பது நாட்டின் மிகப் பெரிய ஒரே பொதுத்துறை நிறுவனம். அதன்மீது நல்ல நம்பகத்தன்மையும் இருக்கிறது. `எல்.ஐ.சி-யின் பங்குகளில் ஒரு பகுதியை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பட்ஜெட் தாக்கலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அதையடுத்து எல்.ஐ.சி ஹவுஸிங் ஃபைனான்ஸின் பங்கு விலை சுமார் மூன்று சதவிகிதத்துக்கு மேல் ஏற்றம்கண்டது. ஆனால், சந்தை முடியும்போது சுமார் 8% விலை இறங்கியது.’’

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ரேட்டிங் குறைக்கப்பட்டிருக்கிறதே... ஏன்?

“மெக்குவாரி ரேட்டிங் நிறுவனம், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ரேட்டிங்கை ‘நியூட்ரல்’ என்ற நிலையிலிருந்து ‘அண்டர்பெர்ஃபார்ம்’ என்ற நிலைக்கு இறக்கியது. அதையடுத்து, வர்த்தக நாளின் இடையே அந்த நிறுவனத்தின் பங்கு விலையில் 2% வரை இறக்கம் கண்டது. அந்த நிறுவனத்துக்குச் சாதகமான செய்திகளுக்கான விலை உயர்வுகள் ஏற்கெனவே நடந்துவிட்டதாக மெக்குவாரி குறிப்பிட்டுள்ளது. சாதகமான செய்திகள் புதிதாக ஏதுமில்லாததால், அதன் இலக்கு விலையில் மாற்றம் செய்யாமல், ரூ.1,300 என்றே வைத்திருக்கிறது. `இனி இந்த நிறுவனத்தின் பங்கு விலையில் ஏற்றத்தை எதிர்பார்க்க வேண்டுமென்றால், முதலீட்டாளர்கள் நீண்டகாலத்துக்குக் காத்திருக்க வேண்டும்’ என்று ரேட்டிங் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.”

இன்ஷூரன்ஸ் துறைக்கு அடுத்ததாக, ஃபைனான்ஷியல் சர்வீஸ் துறை சார்ந்த பங்குகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்த்திருக்கின்றன

வெளிநாட்டு ரேட்டிங் நிறுவனங்களால் இலக்கு விலை அதிகரிக்கப்பட்ட பங்குகள் என்னென்ன..?

“ஜெஃப்ரீஸ் பங்குத் தரகு நிறுவனம், பி.என்.பி ஹவுஸிங் நிறுவனத்தின் இலக்கு விலையை 505 ரூபாயிலிருந்து 525 ரூபாயாக உயர்த்தியுள்ளது. முதலீட்டிலிருந்து கிடைத்த லாபத்தின் பெரும் பகுதியை வாராக்கடன் ஒதுக்கீட்டுக்குப் பயன்படுத்தியிருப்பதாக பி.என்.பி நிறுவனத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

ஆம்பிட் கேப்பிட்டல் நிறுவனம், இண்டிகோ நிறுவனத்தின் இலக்கு விலையை 1,823 ரூபாயிலிருந்து 1,993 ரூபாயாக உயர்த்தியுள்ளது. இந்த நிறுவனத்தில் இதர செலவுகள் குறைவாகவும், இருக்கைக்கான கட்டணம் மூலம் கிடைக்கும் வருமானம் அதிகமாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. டோரன்ட் பார்மா நிறுவனத்தின் இலக்கு விலையை சி.எல்.எஸ்.ஏ ரேட்டிங் நிறுவனம் 1,950 ரூபாயிலிருந்து 2,050 ரூபாயாக உயர்த்தியுள்ளது. டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் நிறுவனத்தின் இலக்கு விலையை ஆம்பிட் நிறுவனம், 3,217 ரூபாயிலிருந்து 3,615 ரூபாயாக உயர்த்தியுள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் செயல்பாட்டு லாபம் வலுவாக இருப்பதால், அதன் இலக்கு விலையை 560 ரூபாயிலிருந்து 650 ரூபாயாக ஜே.பி மார்கன் ரேட்டிங் நிறுவனம் உயர்த்தியுள்ளது. பேங்க் ஆஃப் பரோடா நிறுவனத்தின் இலக்கு விலையை ஜே.பி மார்கன் நிறுவனம் 95 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்த்தியுள்ளது. அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனத்தின் இலக்கு விலையை மார்கன் ஸ்டேன்லி நிறுவனம் 5,000 ரூபாயிலிருந்து 5,350 ரூபாயாக உயர்த்தியுள்ளது. ஜெ.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் இலக்கு விலையை, ஜெஃப்ரீஸ் ரேட்டிங் நிறுவனம் 180 ரூபாயிலிருந்து 199 ரூபாயாக உயர்த்தியுள்ளது. பயோகான் நிறுவனத்தின் இலக்கு விலையை கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் 317 ரூபாயிலிருந்து 350 ரூபாயாக உயர்த்தியுள்ளது.”

ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளதே?

“இந்த நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் மோசமாக இருந்ததால், இதன் இலக்கு விலையை, ஹெச்.எஸ்.பி.சி நிறுவனம் 640 ரூபாயிலிருந்து 630 ரூபாயாகக் குறைத்தது. அதையடுத்து ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை வர்த்தக நாளின் இடையே 3% குறைந்தது.”

எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை உயர என்ன காரணம்?

“எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் நல்லவிதமாக வெளிவந்ததால், அந்த நிறுவனத்தின் இலக்கு விலையை, ஹெச்.எஸ்.பி.சி ஆய்வு அமைப்பு 830 ரூபாயிலிருந்து 900 ரூபாயாக உயர்த்தியுள்ளது. அதையடுத்து வர்த்தக நாளின் இடையே அந்த நிறுவனத்தின் பங்கு விலை 7% வரை உயர்வு கண்டது. அந்த நிறுவனத்தின் லாப வரம்பு வலுவாக உயர்ந்துள்ளது.’’

கோல்கேட் இந்தியா பங்கு விலை ஏன் குறைந்தது?

“சந்தையில் அந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவின் மீதான எதிர்பார்ப்பு குறைந்ததன் காரணமாகவே இந்த இறக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மூன்றாம் காலாண்டில் பண்டிகைக்கால விற்பனையும் இருந்ததால் காலாண்டு முடிவு வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் விற்பனை 2.3% மட்டுமே அடைந்தது. மேலும், நிறுவனத்தின் பணியாளர்களுக்கான சம்பளச் செலவு 8.4% அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டோடு ஒப்பிடுகையில் இந்த நிறுவனத் தயாரிப்புகளுக்கான விளம்பரச்செலவு 13.8% அதிகரித்துள்ளது. அதிகரித்துள்ள விளம்பரச் செலவு, அந்த நிறுவனத்தின் லாபத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.”

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இன்ஷூரன்ஸ் துறை சார்ந்த பங்குகளில் அதிகம் முதலீடு செய்திருக்கிறார்களே?

“நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் இந்தியப் பங்குகளின் நிகர முதலீடு ரூ.54,183 கோடியாக இருந்தது. காப்பீட்டுத்துறை மட்டும் இந்தத் தொகையில் 50 சதவிகிதத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில் காப்பீட்டுத்துறைப் பங்குகளில் மட்டும் சுமார் 26,700 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இன்ஷூரன்ஸ் துறைக்கு அடுத்ததாக, ஃபைனான்ஷியல் சர்வீஸ் துறை சார்ந்த பங்குகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்த்திருக்கின்றன” என்றவர், “பட்ஜெட் பற்றி அடுத்த வாரமும் விரிவாக அலசுங்கள்” என வேண்டுகோள் வைத்து முடித்திருந்தார்.

ஐ.பி.ஓ வரும் பர்கர் கிங்..!

பர்கர் கிங் நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டுக்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் கடந்த நவம்பரில் விண்ணப்பித்திருந்தது. அதற்கான அனுமதியை தற்போது செபி அமைப்பு அந்த நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. அந்த நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் 400 கோடி ரூபாயைத் திரட்ட திட்டமிட்டிருக்கிறது. வெளியீட்டில் ஆறு கோடி பங்குகளை விற்பனை செய்யவிருக்கிறது.