Published:Updated:

ஷேர்லக் : சந்தை இறக்கம் ஏப்ரலிலும் தொடருமா?

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

எஃப் அண்ட் ஓ சொல்லும் சேதி

ஷேர்லக் : சந்தை இறக்கம் ஏப்ரலிலும் தொடருமா?

எஃப் அண்ட் ஓ சொல்லும் சேதி

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்
ரடங்கு உத்தரவால் மொத்த இந்தியாவே வீட்டில் முடங்கிக்கிடக்க, அவர் நம் அலுவகத்துக்கு வர முடியாது.

நாமும் அவர் வீடு தேடிச் செல்ல விரும்பவில்லை. ‘‘ஸ்கைப் இருக்கிறதே! மாலை ஐந்து மணிக்கு அதில் வாருங்கள். நம் வீடுகளில் இருந்தபடியே விஷயங்களைப் பேசி முடிப்போம்’’ என்று நமக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தார் ஷேர்லக். அவர் சொன்ன நேரத்துக்கு ஸ்கைப் மூலம் அவருடன் பேசத் தொடங்கினோம்.

ஷேர்லக் : சந்தை இறக்கம் ஏப்ரலிலும் தொடருமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆர்.பி.ஐ கவர்னர் சக்திகந்த தாஸ், ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ, சி.ஆர்.ஆர் என முக்கியமான நடவடிக்கைகள் பல எடுத்தும் சென்செக்ஸ் இன்று (வெள்ளிக்கிழமை) குறைந்திருக்கிறதே?

“இன்று வர்த்தக முடிவில் 131 புள்ளிகள் குறைந்திருக்கின்றன. (ஆனால், நிஃப்டி 18 புள்ளிகள் உயர்ந்துள்ளன.) சந்தை இறங்கியதற்குக் காரணம், குறியீட்டில் இடம்பெற்றிருக்கும் பஜாஜ் ஃபின்சர்வ் (-8.87%), ஹீரோ மோட்டோ கார்ப் (-8.04), பார்தி ஏர்டெல், (-6.07%), இண்டஸ் இந்த் பேங்க் (-5.95%), மாருதி சுஸூகி (-4.81%) பங்குகள் விலை கணிசமாகக் குறைந்ததே. அதேநேரத்தில், பேங்க் நிஃப்டி 355 புள்ளிகள் ஏற்றம் கண்டிருக்கிறது.”

பங்குச் சந்தை வீழ்ச்சியில் பல நிறுவனங்களின் பங்குகள் பைசா பங்குகளாக மாறியிருப்பது கவலையாக இல்லையா?

“பல பங்குகளின் விலை 80% அளவுக்கு வீழ்ச்சிகண்டன. பி.எஸ்.இ-ல் பட்டியலிடப்பட்ட சுமார் 150 பங்குகள் பென்னி (Penny Stocks) பங்குகளாக மாறி, அவற்றின் விலை ரூ.10-க்கும் கீழே இறங்கியது. சவுத் இந்தியன் பேங்க், டிஷ் டி.வி., ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி, ரிலையன்ஸ் கேப்பிட்டல், ஆர்.சி.ஐ. இண்டஸ்ட்ரீஸ், பி.வி.வி இன்ஃப்ரா, ஐ.ஓ.பி., யூகோ பேங்க், பேங்க் ஆஃப் மஹாராஷ்ட்டிரா, ஃப்யூச்சர் கன்ஸ்யூமர், சென்ட்ரம் கேப்பிட்டல், பி.டி.சி இந்தியா ஃபைனான்ஷியல், ஹெச்.எம்.டி போன்ற பங்குகளை முக்கியமாகக் குறிப்பிடலாம்.

இந்தப் பங்குகளில் சிலவற்றின் விலை தற்போதைய சந்தை ஏற்றத்தில் விலை ஏறத் தொடங்கியிருக்கின்றன. `இவற்றில் முதலீடு செய்வதற்கு முன்னர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்கிறார்கள், பகுப்பாய்வாளர்கள். காரணம், மிக மிக நீண்ட காலம் பொறுத்திருந்தால்தான் ஓரளவுக்காவது வருமானத்தை இந்தப் பங்குகளிலிருந்து பார்க்க முடியும்.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த வியாழக்கிழமை அன்று முடிந்த இந்த மாத எஃப் அண்ட் ஓ எக்ஸ்பயரி என்ன சொல்கிறது?

“பல பங்குகளில் சார்ட் கவரிங் நடந்ததால், சென்செக்ஸ் 1410 புள்ளிகள் ஏறியது.

இண்டஸ்இண்ட் பேங்க் பங்கு 45% விலை ஏறவும் இதுதான் காரணம். நிஃப்டி ரோலோவர் 62%, பேங்க் நிஃப்டி ரோலோவர் 55 சதவிகிதமாக உள்ளது. இவை இரண்டும் கடந்த மூன்று மாத சராசரியைவிடக் குறைவு. அந்த வகையில், `ஏப்ரல் மாதத்திலும் இந்தியப் பங்குச் சந்தை இறக்கத்தில் இருக்கக்கூடும்’ என்கிறார்கள், மும்பையைச் சேர்ந்த முன்னணிப் பகுப்பாய்வாளர்கள். முதலீட்டாளர்கள் கொஞ்சம் உஷாராக இருக்கத்தான் வேண்டும். ஆனால், ஏப்ரலில் பங்குச் சந்தை பாசிட்டிவ் போக்குக்கு மாறிவிடும் என்ற ஒரு கருத்தையும் சிலர் சொல்கிறார்கள். ஐ.ஐ.எஃப்.எல் செக்யூரீட்டீஸ் நிறுவனத்தின் இயக்குநர் சஞ்சீவ் பாசின் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

`ஏப்ரல் மாதத்தில் முதலீட்டாளர்களிடம் பயம் விலகித் தெளிவடைந்துவிடுவார்கள். இதனால், பங்குச் சந்தை ஏற்றத்தின் போக்கிலிருக்கும்’ என்கிறார் அவர்.

இவர் சொல்கிற மாதிரி நடக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

ஷேர்லக்
ஷேர்லக்

ஹெச்.டி.எஃப்.சி பேங்க் பங்கு விலை அதிகரித்திருப்பதேன்?

‘‘ஹெச்.டி.எஃப்.சி பேங்க் பங்குகள் கடந்த வாரம் சுமார் 15% அதிகரித்து வர்த்தகமாகின. கட்டமைப்புரீதியாக, இந்த வங்கி பலமானதாக இருக்கிறது. வங்கியின் மொத்தச் செலவு குறைவாக இருக்கிறது. இதன் போட்டி யாளர்களைப்போல அல்லாமல், சிக்கல் இல்லாத பேலன்ஸ்ஷீட்டைக் கொண்டுள்ளது. தற்போதைய பொருளாதாரநிலை மாறிவரும்போது, இந்த வங்கியின் பங்கு 20% வரை உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது. இன்னும் 2-3 ஆண்டுகளில் இதன் வளர்ச்சி நன்றாக இருக்க வாய்ப்பிருக்கிறது. இதனால் சில புரோக்கர் நிறுவனங்கள் இதன் இலக்கு விலையை 1,285 ரூபாயாக அதிகரித்துள்ளன.’’

யெஸ் பேங்க் மதிப்பீடு உயர்ந்தபோதும் அதன் பங்கு விலையில் தொடர்ச்சியாக இறக்கம் ஏற்பட்டுவருகிறதே ஏன்?

‘‘யெஸ் பேங்க்கின் குறிப்பிட்ட சில பாண்டுகள் மற்றும் சில நிதித் திட்டங்களின் மதிப்பீட்டை இக்ரா தரக்குறியீட்டு நிறுவனம் உயர்த்தியது. இருந்தபோதும் கடந்த புதன் அன்று, வர்த்தக நாளின் இடையே அந்த வங்கியின் பங்கு விலையில் 18% இறக்கம் ஏற்பட்டது. யெஸ் பேங்க்கின் பங்கு விலை 35.05 ரூபாயிலிருந்து, வர்த்தக நாளின் இடையே 18.26% இறக்கம் ஏற்பட்டு 28.65 ரூபாயை எட்டியது. வெள்ளிக்கிழமையும் பங்கின் விலை இறங்கியது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 50% இறக்கத்தைச் சந்தித்துள்ளது. கடந்த மார்ச் 19-ம் தேதி, அந்த வங்கியின் தனிப்பெரும் புரொமோட்டரான மது கபூர் (இந்த வங்கியின் நிறுவனராக இருந்து மறைந்த அசோக் கபூரின் மனைவி), தன் வசமுள்ள 2.5 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றது முதலாக, கடந்த நான்கு வர்த்தக நாள்களில் தொடர்ச்சியாக 43.97% அளவுக்குப் பங்கு விலையில் இறக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு மாதக்கணக்கில் 15 சதவிகிதமும், ஓர் ஆண்டுக்கணக்கில் 36 சதவிகிதமும் இறக்கத்தைச் சந்தித்துள்ளது.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பங்கு விலையில் திடீரென ஏற்றம் ஏற்பட்டு, முதலீட்டாளர்களை மகிழ்ச்சியடையச் செய்திருக்கிறதே, எப்படி?

‘‘கடந்த வியாழன் அன்று அசோக் லேலண்ட் நிறுவனம், அதன் துணை நிறுவனமான ஹிந்துஜா லேலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் 1,70,17,995 பங்குகளை ஒரு பங்கின் விலை ரூ.10 என்ற மதிப்பில் வாங்கியது. அதையடுத்து, ஹிந்துஜா லேலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 61.83 சதவிகிதத்திலிருந்து 65.45 சதவிகிதமாக உயர்ந்தது. இந்த விற்பனைக்குப் பிறகு வர்த்தக நாளின் இடையே அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பங்கு விலை 15% ஏற்றத்தை எட்டியது. இதற்கு ஒரு நாள் முன்னதாக, புதன் அன்றுதான் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மதிப்பீட்டை, இக்ரா தரக் குறியீட்டு நிறுவனம், ‘ICRA AA+’ என்ற அளவீட்டிலிருந்து ‘ICRA AA (Negative)’ என்ற அளவீட்டுக்குக் குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.’’

ஷேர்லக்
ஷேர்லக்

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையில் 10% அளவுக்கு ஏற்றம் ஏற்பட என்ன காரணம்?

‘‘இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த வியாழன் அன்று 10% அளவுக்கு ஏற்றம் பெற்றது. கோடீஸ்வரரான ராதாகிஷன் ஷிவ்கிஷன் தமானி, கடந்த புதன்கிழமை, இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் 16 லட்சம் பங்குகளை வாங்கினார். ஒரு பங்கு விலை ரூ.94.97 என்ற விலையில், சுமார் 15.20 கோடி ரூபாய்க்கு 16 லட்சம் பங்குகளை வாங்கினார். அதனால் அடுத்த நாள் வர்த்தகத்தில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 10% ஏற்றம் கண்டது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் ராதாகிஷன் தமானியும் அவருடைய சகோதரர் கோபிகிஷன் தமானியும் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தில் பங்குகளை வாங்கினார்கள். தற்போது மீண்டும் வாங்கியதையடுத்து அந்த நிறுவனத்தில் தமானி குடும்பத்துக்கு 16.5% பங்குகள் உள்ளன.

இண்டஸ்இண்ட் வங்கிப் பங்குகளில் அதிக ஏற்றம் ஏற்பட்டிருக்கிறதே, என்ன காரணம்?

‘‘உலகளாவிய சந்தைகளில் கிடைத்த லாபம் மற்றும் வியாழன் அன்று நிதியமைச்சரின் அறிவிப்பு மீதான எதிர்பார்ப்பால் ஏற்பட்ட தூண்டுதல் காரணமாகவும், தொடர்ச்சியாக மூன்றாவது நாளும் இண்டஸ்இண்ட் வங்கிப் பங்குகளின் விலையில் ஏற்றம் ஏற்பட்டது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி என இரண்டு சந்தைகளிலுமே இந்த வங்கியின் பங்கு விலை தொடர்ந்து ஏற்றப்போக்கில் இருக்கிறது. கடந்த வியாழன் அன்று ஒரே வர்த்தக நாளில் 301.20 ரூபாயிலிருந்து 45% அதிகரித்து, 436.7 ரூபாயை எட்டியது.

கடந்த ஓராண்டாக இண்டஸ்இண்ட் வங்கியின் பங்கு விலையில் 76% இழப்பு ஏற்பட்டது. அதிலும் இந்த ஆண்டுத் தொடக்கத்திலிருந்து அதிக அளவாக 72.75% இழப்பு ஏற்பட்டது’’ என்றவர், ‘‘நாம் பேசி முடிப்பதற்கு முன்பாக ஒரு வேண்டுகோளை வைத்துக ்கொள்கிறேன்’’ என்று பேச ஆரம்பித்தார்.

‘‘ஊரடங்கு நடைமுறையில் இருந்தபோதும் பலரும் தேவையில்லாமல் வெளியே அலைந்து திரிகிறார்கள். இப்படிச் சுற்றித் திரியும்போது கொரோனா வந்துவிட்டால், சாவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே, அடுத்த சில வாரங்களுக்கு தயவுசெய்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்’’ என்று கேட்டபடி ஸ்கைப்பில் டாடா காட்டிவிட்டு மறைந்தார் ஷேர்லக்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism