கடந்த வாரம் ஷேர்லக் வீட்டுக்கு நாம் சென்று வர, இந்த வாரம் அவருடைய வீட்டில் அனுமதி பெற்றுக்கொண்டு நம் இருப்பிடத்துக்கே இரட்டிப்புப் பாதுகாப்புடன் வந்து சேர்ந்தார். ஆறடி தூரம் தள்ளியே உட்கார்ந்தவர், நம் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தொடங்கினார்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு அதிகரித்து வருவது ஏன்?

“ `கடந்த ஜூன் மாதத்தில், பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ரூ.1.24 லட்சம் கோடியை முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள். அதே நேரத்தில், ரூ.94,200 கோடியைப் பல மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலிருந்து வெளியே எடுத்திருக்கிறார்கள்’ என ஆம்ஃபி தெரிவித்துள்ளது. ரூ.1.1 லட்சம் கோடி டெப்ட் மியூச்சுவல் ஃபண்டுகளிலும், ரூ.20,930 கோடி ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகளிலும், ரூ.11,730 கோடி ஈக்விட்டி சார்ந்த திட்டங்களிலும் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன.”

டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் பங்கு விலை ஏற்றத்துக்கு என்ன காரணம்?

‘‘கடந்த வாரம் புதன்கிழமை அன்று, டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் பங்கு விலை வர்த்தகத்தின் இடையே 7.01% அதிகரித்து 4,334 ரூபாய்க்கு உயர்ந்தது. அன்றைய தினத்தில் வர்த்தகம் முடியும்போது 6.17% விலை அதிகரித்து 4,300 ரூபாயில் நிலைபெற்றது. புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்திருக்கிறது. ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகள் சிறப்பாக வெளியாகியிருப்பதுதான் இதற்கு மிக முக்கியக் காரணம். இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 45.31% அதிகரித்து ரூ.662.80 கோடியாக இருக்கிறது. இது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.456.10 கோடியாக இருந்தது.

கடந்த ஒரு வருடத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 62% ஏற்றத்தைச் சந்தித்திருக்கிறது. நடப்பு ஆண்டின் ஆரம்பத்திலிருந்து 49.46% ஏற்றத்தைச் சந்தித்திருக்கிறது.’’
.ஷேர்லக்: புதிய உச்சம் தொடும் பங்கு விலைகள்..!.
டாடா காபி பங்கு விலை அதிகரித்திருப்பது மகிழ்ச்சியான செய்திதானே!

‘‘ஜூன் காலாண்டில் டாடா காபியின் நிகர லாபம் 77% அதிகரித்து ரூ.62 கோடியாக அதிகரித்திருக்கிறது. இது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.35 கோடியாக இருந்தது. சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்டதால், கடந்த புதன்கிழமை சந்தை ஆரம்பிக்கும்போதே 16.28% விலை அதிகரித்து ரூ.96.80 என்ற விலையில் வர்த்தகமானது. நிறுவனத்தின் சிறப்பான செயல்பாட்டின் காரணமாக, கடந்த இரு நாள்களில் மட்டுமே 14.77% பங்கின் விலை அதிகரித்திருக்கிறது.’’

பொதுத்துறை வங்கிப் பங்குகளின் விலை திடீரென உயர்ந்திருக்கிறதே... என்ன காரணம்?

‘‘கடந்த வாரம் புதன்கிழமை அன்று பிரதமர் நரேந்திர மோடி அனைத்துப் பொது மற்றும் தனியார் வங்கிகளின் தலைமை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப் போகிறார் என்பதால், வங்கிப் பங்குகளின் விலை ஏற்றம்கண்டன. அன்றைய தினத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இறக்கத்தில் வர்த்தகமானாலும், நிஃப்டி பொதுத்துறை வங்கி இண்டெக்ஸ் 4% அதிகரித்தது. பேங்க் ஆஃப் மஹாராஷ்ட்ரா, யூகோ பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, ஜம்மு அண்டு காஷ்மீர் பேங்க் ஆகிய வங்கிப் பங்குகள் ஏற்றம்கண்டன. இந்த வங்கிகளின் பங்கு விலை 5-7% வரை ஏற்றத்தைச் சந்தித்தது. எஸ்.பி.ஐ., பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் பேங்க், யூனியன் பேங்க் மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய பங்குகளின் விலை 2-5% வரை ஏறின.’’

பார்தி ஏர்டெல் அதிக நிகர இழப்பைச் சந்தித்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறதே?

‘‘இந்த நிறுவனம், ஏ.ஜி.ஆர் நிலுவைத் தொகையை அதிகமாகச் செலுத்தியதால், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.15,933 கோடி நிகர இழப்பைச் சந்தித்துள்ளது. இது கடந்த மார்ச் காலாண்டில் ரூ.5,237 கோடியாக இருந்தது. கடந்த 2019-20-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.2,866 கோடியாக இருந்தது. இருப்பினும், தனது ஒவ்வொரு வாடிக்கையாளர் வசமிருந்து பெறக்கூடிய வருமானம், கடந்த மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும்போது 154 ரூபாயிலிருந்து 157 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முன்னர் 149 ரூபாயாக இருக்கும் என்றே கணிக்கப்பட்டிருந்தது. இந்த நிறுவனத்தின் செயல்பாடும் எதிர்பார்த்ததைவிட நன்றாகவே இருக்கிறது. தற்போது ஏர்டெல் நிறுவனம் தனது லாபத்தை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. அதில் முக்கியமாக, செலவுக் குறைப்பு நடவடிக்கையைக் கையிலெடுத்திருக்கிறது. இதனால் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு நிதிநிலை முடிவுகள் நேர்மறையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.’’

மைண்ட்ஸ்பேஸ் பிசினஸ் பார்க்ஸ் நிறுவனத்தின் ஆர்.இ.ஐ.டி ஐ.பி.ஓ-வுக்கு என்ன வரவேற்பு?

‘‘இந்த நிறுவனம், 6.77 கோடி பங்குகளை விற்பனை செய்ய ஐ.பி.ஓ வந்தது. கடைசி நாளான, கடந்த வாரம் புதன்கிழமை அன்று 87.55 கோடி பங்குகளுக்கு விண்ணப்பிக்கப் பட்டது. அதாவது, வெளியீட்டு அளவைவிட 13 மடங்கு அதிகமாகப் பங்குகளைக் கேட்டு முதலீட்டாளர்கள் விண்ணப்பித்திருந்தார்கள்.’’

பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் காலாண்டு முடிவுகளை வெளியிட செபி கால அவகாசம் தந்தது ஏன்?

“பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டிருக்கும் நிறுவனங்கள், காலாண்டு முடிவுகளை, அந்தந்தக் காலாண்டு முடிவுக்குப் பிறகு 45 நாள்களுக்குள் வெளியிட வேண்டும். அதன்படி ஜூன் காலாண்டு முடிவுகளை வருகிற ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும். ஆனால், கோவிட்-19 தொற்று காரணமாக பெரும்பாலான நிறுவனங்களுக்குக் காலாண்டு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் உருவாகியிருக்கிறது. இதனால் அந்த நிறுவனங்கள் செபியிடம் கால அவகாசம் கேட்டிருந்தன. இதை எற்றுக்கொண்ட செபி, வருகிற செப்டம்பர் 15, 2020-ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்திருக்கிறது.

இந்தியப் பங்குச் சந்தை கடந்த மார்ச் மாதத்தில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது. ஆனால், கடந்த நான்கு மாதங்களில், மீண்டும் ஏற்றப் பாதைக்குத் திரும்பியிருக்கிறது. அதிகரித்துவரும் கோவிட்-19 நோய்த்தொற்றுகள் மற்றும் உலகளாவிய பிரச்னைகள் இருந்த போதிலும், கடந்த வாரம், பெஞ்ச்மார்க் குறியீடுகள் புதிய நான்கு மாத உயர்வைக் கண்டுள்ளன. மார்ச் மாத இறக்கத்திலிருந்து சென்செக்ஸ் 50% வரை மீண்டிருக்கிறது. பி.எஸ்.இ 500 பங்குகளில் 94% பங்குகள் மார்ச் மாத இறக்கத்திலிருந்து ஏற்றத்தைச் சந்தித்திருக்கின்றன. கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ஹாத்வே கேபிள் அண்ட் டேட்டாகாம், இன்டெலெக்ட் எரீனா, தானுகா அக்ரிடெக், ஜூபிலன்ட் லைஃப் சயின்சஸ், முத்தூட் ஃபைனான்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் உட்பட சுமார் 45 நிறுவனப் பங்குகளின் விலை 100-350% ஏற்றத்தைச் சந்தித்திருக்கின்றன.”

எல்.ஐ.சி-யின் பங்கு முதலீடு நல்ல லாபத்தில் இருக்கும் போலிருக்கிறதே...?

“கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் 24-ம் தேதி இந்தியப் பங்குச் சந்தை அது வரை இல்லாத இறக்கத்தைச் சந்தித்தது. அதன்பிறகு படிப்படியாக ஏற்றம் கண்டுவருகிறது. மார்ச் இறக்கத்திலிருந்து சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கிட்டத்தட்ட 30 ஏற்றம் கண்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் ஒரே பொதுத்துறை ஆயுள் காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி-யின் பங்கு முதலீட்டு மதிப்பு இந்தக் காலகட்டத்தில் சுமார் 35% உயர்ந்துள்ளது.

மார்ச் காலாண்டு இறுதியில் எல்.ஐ.சி முதலீடு செய்திருந்த பங்குகளின் மதிப்பு ரூ.4.32 லட்சம் கோடியாக இருந்தது. இது ஜூன் காலாண்டில் ரூ.1.47 லட்சம் கோடி அதிகரித்து ரூ.5.79 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட 35% அதிகரிப்பாகும். எல்.ஐ.சி-யின் முதலீட்டுக் கலவையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கும் இடம் பெற்றுள்ளது. இந்தப் பங்கின் விலை மார்ச் இறக்கத்திலிருந்து 150 சதவிகிதத்துக்கு மேல் ஏற்றம் கண்டிருக்கிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 5.87% பங்குகள் எல்.ஐ.சி வசம் இருக்கின்றன. ஜூன் காலாண்டில் பல நிறுவனப் பங்குகளில் எல்.ஐ.சி முதலீட்டை அதிகரிக்கவும் செய்திருக்கிறது’’ என்றவர், புறப்படுவதற்கு முன்பாக, அப்போதுதான் டிசைன் செய்யப்பட்டு வந்திருந்த அறிவிப்பை எடுத்துப் பார்த்தார்.

‘‘வருகிற திங்கள்கிழமை மாலை தைரோகேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஏ.வேலுமணி பேசப் போகிறாரா? அவர் நடத்தும் நிறுவனம் இந்தியாவின் மிக முக்கியமான நிறுவனம் ஆச்சே! அதுவும் கொரோனா பற்றியும் அது தொடர்பான விஞ்ஞானம், வைத்தியம், வியாபாரம் பற்றியும் பேசப்போகிறார் என்றால், வாசகர்கள் இந்த நிகழ்ச்சியில் கட்டாயம் கலந்துகொண்டு பயன்பெற வேண்டியது அவசியம். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் https://bit.ly/2Do3OZ6 என்ற லிங்க்கைச் சொடுக்கி, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் அல்லவா?’’ என்று கேட்டபடி, இருகரம் கூப்பி விடைபெற்றார்!

நிதித் திட்டமிடல் & முதலீடு!

எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றும் நிதித் திட்டமில்லை எப்படிச் செய்ய வேண்டும்..? இதற்கு தீர்வு அளிக்கும்விதமாக நாணயம் விகடன் ‘நிதித் திட்டமிடல் & முதலீடு..!’ என்ற ஆன்லைன் கட்டணப் பயிற்சி வகுப்பை ஆகஸ்ட் 9-ம் தேதி மாலை 6-8 வரை நடத்தவுள்ளது. நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். பயிற்சி வகுப்புக்குப் பதிவு செய்துகொள்ள: https://bit.ly/2WSB2qv