Published:Updated:

ஷேர்லக் : ஃபண்ட், எஃப்.ஐ.ஐ தொடர்ந்து முதலீட்டை அதிகரிக்கும் பங்குகள்..! - ஓராண்டுக் காலத்தில்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

SHARE LUCK

ஷேர்லக் : ஃபண்ட், எஃப்.ஐ.ஐ தொடர்ந்து முதலீட்டை அதிகரிக்கும் பங்குகள்..! - ஓராண்டுக் காலத்தில்..!

SHARE LUCK

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்
“அவசர வேலையாக நான் மும்பை செல்கிறேன். கேள்விகளை மெயிலில் அனுப்புங்கள்” எனக் காலை யிலேயே தகவல் அனுப்பியிருந்தார் ஷேர்லக். நாம் கேள்விகளை அனுப்பிவிட்டுக் காத்திருக்க, சரியாக மாலை 4.30 மணிக்கு நம் மெயிலுக்கு பதில்களை அனுப்பி வைத்தார்.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகித்து வரும் சொத்து மதிப்பு உயர்ந்திருக்கிறதே?

“இந்தியப் பங்குச் சந்தையின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை அதிகபட்ச ஏற்றத்தைச் சந்தித்திருப்பதால், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகித்துவரும் சொத்து மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நவம்பர் மாதத்தில் 30 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய அக்டோபர் மாதத்தில் 28 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த நவம்பர் மாதத்தில் எஸ்.ஐ.பி முதலீடுகளின் பங்கு 7% குறைந்து 7,302 கோடி ரூபாயாக இருந்தது. அதே நேரத்தில் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐபி முதலீட்டுக் கணக்குகளின் எண்ணக்கை 3.37 கோடியிலிருந்து 3.41 கோடியாக அதிகரித்திருக்கிறது.”

ஐ.டி.சி பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“கடந்த டிசம்பர் 9-ம் தேதி கிரெடிட் சூஸே பங்கு தரகு நிறுவனம் ஐ.டி.சி பங்குகளை நியூட்டரலிலிருந்து, அவுட்பர்ஃபார்ம் தரத்துக்கு உயர்த்தியது. இந்தப் பங்கின் இலக்கு விலையை 200 ரூபாயிலிருந்து 255 ரூபாயாக நிறுவனம் அதிகரித் திருக்கிறது.”

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியும் அதிகபட்ச ஏற்றத்தைச் சந்தித்திருக்கிறதே?

“கொரோனா தடுப்பூசி மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாகக் கடந்த புதன்கிழமை பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்றத்தில் ஆரம்பித்தது. அன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 495 புள்ளி அதிகரித்து 46100 ஆனது. நிஃப்டி 136 புள்ளி அதிகரித்து 13529-ல் வர்த்தக மானது. பங்குச் சந்தை வரலாற் றிலேயே சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவற்றின் அதிகபட்ச ஏற்றம் இதுவாகும்.”

ஆனால், வியாழக்கிழமை இந்தியப் பங்குச் சந்தை இறக்கத்தைச் சந்தித்திருக்கிறதே?

“சென்செக்ஸ் 144 புள்ளிகளும் நிஃப்டி 51 புள்ளிகளும் இறங்கியிருக்கிறது. காரணம், முதலீட்டாளர்கள் லாபத்தைக் கொஞ்சம் வெளியில் எடுத்திருப்பதுதான்.

வியாழக்கிழமை எஃப்.எம்.சி.ஜி, மெட்டல் குறியீடுகள் தவிர மற்றவை இறக்கம் கண்டன. குறிப்பாக, பொதுத் துறை வங்கிகள், வாகனம், இன்ஃப்ரா குறியீடுகள் இறக்கம் கண்டன.”

எஸ்.பி.ஐ பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“கடந்த செப்டம்பர் மாத இறுதியில், எஸ்.பி.ஐ வங்கியின் வாராக் கடன் 5.28 சதவிகிதமாகக் குறைந்தது. மூன்று மாதங்களுக்கு முன்பாக இது 5.44 சத விகிதமாக இருந்தது. இதன் காரண மாகவும், சில தரகு நிறுவனங்கள் எஸ்.பி.ஐ பங்குகளை வாங்கச் சொல்லி பரிந்துரைத்திருப்பதாலும் கடந்த வார திங்கள்கிழமையில் பங்கு விலை 3% வரை அதிகரித்திருக்கிறது. கடந்த மூன்று வர்த்தக தினத்தில் மட்டும் 10% வரை அதிகரித்திருக்கிறது. ஜே.எம் ஃபைனான்ஷியல் மற்றும் மோதிலால் ஆஸ்வால் என்ற தரகு நிறுவனமும் எஸ்.பி.ஐ வங்கியின் வாராக்கடன் விகிதம் நிர்வகிக்கக் கூடியதாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது. இதனால் இதன் இலக்கு விலை ரூ.300-ஆக நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.”

இந்திய நிறுவனங்களின் வருவாய் குறித்து மூடீஸ் என்ன சொல்லியிருக்கிறது?

“கடந்த செப்டம்பர் மாத காலாண்டில் ஐ.டி, பார்மா மற்றும் வங்கித்துறை சார்ந்த நிறுவனங் களின் காலாண்டு நிதி நிலை முடிவுகள் நன்றாக வந்திருந்தன. ஆனால், பெரும்பாலான நிறுவனங்களில் காலாண்டு முடிவுகள் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டன. ஆனால், தற்போது தளர்த்தப்பட்ட ஊரடங்கு காலத்துக்குப் பிறகு, இந்திய பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுத் திருக்கின்றன. இதனால் வருகிற 2021-ம் ஆண்டில் இந்திய கார்பரேட் நிறுவனங்களின் வருவாய் மேம்படும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக மார்ச்2022-க்குள் இந்திய நிறுவனங்களின் வருவாய் கொரோனாவுக்கு முந்தைய நிலைமையை எட்டும் என மதிப்பீட்டு நிறுவனமான மூடீஸ் தெரிவித்துள்ளது.”

விப்ரோ பங்கு விலை தொடர்ந்து உயர என்ன காரணம்?

“இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ, தியரி டெலாபோர்டே (Thierry Delaporte) என்பவரை முதன்மைச் செயல் அதிகாரியாக நியமித்தது. இவரின் வருகைக்குப் பின் விப்ரோ நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் வருவாய் கொரோனா பாதிப்பையும் தாண்டி வளர்ச்சியைச் சந்தித்துள்ளன. இவர் பதவியேற்ற பிறகு, விப்ரோ நிறுவனத்தின் பங்கு விலை சுமார் 70% உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 50 சதவிகிதமும், கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 28 சதவிகிதமும் ஏற்றமடைந்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் சிறப்பான முறையில் இருப்பதால், ஜனவரி 1, 2021-ம் தேதியிலிருந்து தங்களுடைய இளம்நிலை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கொடுக்க முடிவு செய்திருப்பதைக் காராணம் காட்டி 12 முதல் 18 மாதங்களுக்குள்ளாக விப்ரோ பங்கு விலை 432 ரூபாய் வரை ஏற்றமடையும் என ஆக்ஸிஸ் செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.”

இந்தியப் பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகமாக முதலீடுகளைச் செய்து வருகிறார்களே... என்ன காரணம்?

“வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு, தற்போதைய இந்திய பங்குச் சந்தை சூழல் சாதகமாக இருப்பதாலும், அமெரிக்க டாலர் மதிப்பு மேலும் குறையும் என அவர்கள் எதிர்பார்ப்ப தாலும் இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு முதலீடுகளை மேற்கொண்டிருக் கிறார்கள். கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் அவர்கள் மேற்கொண்ட முதலீடு 8,132 பில்லியன் டாலராக இருக்கிறது. இது இதற்கு முந்தைய அக்டோபர் மாதத்தில் 2,653 பில்லியன் டாலராக இருந்தது.

பேங்கிங் அண்டு ஃபைனான்ஷியல், எஃப்.எம்.சி.ஜி மற்றும் பார்மா ஆகிய துறைகளே வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விருப்ப மான துறைகளாக இருந்திருக் கின்றன. அதனால் அத்துறை சார்ந்த நிறுவனங்களில் அதிக அளவு முதலீடு செய்திருக்கிறார்கள்.

பேங்கிங் அண்டு ஃபைனான்ஷியல் நிறுவனப் பங்குகளில் 3,914 மில்லியன் டாலரையும், எஃப்.எம்.சி.ஜி பங்குகளில் 951 மில்லியன் டாலரையும், பார்மா பங்குகளில் 681 மில்லியன் டாலரையும் முதலீடு செய்திருக்கிறார்கள்.”

முன்னணி முதலீடாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா என்.சி.சி பங்குகளை வாங்கியிருக்கிறாரே?

“பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளர் களுள் ஒருவரான ராகேஷ் ஜுன்ஜுன் வாலா, அவருடைய மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா மற்றும் அவருடைய துணை நிறுவனங்களுடன் சேர்ந்து கடந்த டிசம்பர் 3-ம் தேதி என்.சி.சி நிறுவனத்தின் 1,25,51,168 பங்குகளை வாங்கினார். இதற்கு முன்பாக நவம்பர் 4-ம் தேதியில் இதே போன்று 7,10,53,264 பங்குகளை என்.சி.சி நிறுவனத்திடமிருந்து வாங்கியிருக் கிறார். ஆக, தற்போதைய நிலையில் இவரின் வசம், மொத்த என்.சி.சி நிறுவனப் பங்குகளில் 13.7% பங்குகள் இருக்கின்றன.

இவர் 6 வருடங்கள் கழித்து என்.சி.சி நிறுவனத்தின் பங்குகளை மீண்டும் வாங்கியிருப்பதால், அன்றைய வர்த்தகத்தில் பங்கு விலை 4.13% அதிகரித்தது.”

ஷேர்லக்
ஷேர்லக்

ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் பங்குகள் விற்பனைக்கு வருகிறதாமே?!

“ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் பங்குகளை பங்குச் சந்தையில் விற்பனை செய்ய ஐ.சி.ஐ.சி.ஐ பேங்கின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த விற்பனையின் மூலம் 71,21,403 பங்குகளை, பங்கு ஒன்றுக்கு 440 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்ய ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் முடிவு செய்துள்ளது.

மொத்த பங்குகளில் இதன் அளவு 2.21 சதவிகிதமாகும். இந்த விற்பனை முடிவை அறிவித்த பிறகு, கடந்த வார புதன்கிழமை வர்த்தகத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ பங்கு விலை 4 ரூபாய் அதிகரித்து 512.45 ரூபாய்க்கு வர்த்தகமானது.”

வாஸ்கன் இன்ஜீனியர்ஸ் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“மும்பையில் கட்டடம் கட்டு வதற்கான ஆர்டரை டிரான்ஸ் கான்-ஷெத் கிரியேட்டர்ஸ் நிறுவனத் திடமிருந்து வாஸ்கன் இன்ஜினீயர்ஸ் (Vascon Engineers) பெற்றது. இதனால், டிசம்பர் 9 அன்று வாக்ஸ்கான் இன்ஜினீயர்ஸ் பங்கு விலை 5% வரை ஏற்றம் கண்டது.”

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் சில குறிப்பிட்ட நிறுவனப் பங்குகளில் தொடர்ந்து முதலீட்டை அதிகரித்து வருகிறார்களே?

“இந்தியப் பங்குச் சந்தையைப் பொறுத்தவரையில், உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் (மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்) மற்றும் அந்நிய நிதி நிறுவனங்கள் தொடர்ந்து முதலீட்டை மேற்கொண்டு வருகின்றன.

லார்ஜ்கேப் நிறுவனப் பங்குகளின் விலை ஏற்கெனவே மிகவும் ஏற்றம் கண்டு, மதிப்பீடு அதிகமாக உள்ளது. அதனால், உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் எஃப்.ஐ.ஐ-க்களின் பார்வை கவர்ச்சிகரமான மதிப்பீட்டிலுள்ள மிட் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகளின் பக்கம் திரும்பி இருக்கிறது.

குறிப்பாக, பாரத் எலெக்ட்ரிகல்ஸ், கிரானுல்ஸ் இந்தியா, ஹோண்டா இந்தியா, இந்தியாமார்ட் இன்டர்மேஷ் மற்றும் ரிலாக்ஸோ ஃபுட்வேர் ஆகிய ஐந்து நிறுவனங்களில் கடந்த ஓராண்டு காலமாகத் தொடர்ந்து முதலீட்டை அதிகரித்துள்ளன” என்று முடித்திருந்த ஷேர்லக், “அடுத்த வாரம் நேரில் சந்தித்துப் பேசுவோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

கோடிகளில் வருமானம்... நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம்!

வள் விகடன் மற்றும் நாணயம் விகடன் இணைந்து வழங்கும் ‘ஏற்றுமதி - இறக்குமதி தொழில்களுக்கான வழிகாட்டுதல்’ பயிற்சி. பயிற்சியை வழங்குபவர்கள் கிஷோர் - இன்பா தம்பதி. டிசம்பர் 20-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 முதல் 6 மணி வரை பயிற்சி நடைபெறும். பயிற்சிக்கான கட்டணம் ரூ.300. ஆன்லைன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கீழ்க்காணும் லிங்கில் பதிவு செய்யவும்: https://bit.ly/2Japhbr

செல்வம் உருவாக்கும்: ஈக்விட்டி ஃபண்டுகள்..!

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து ‘செல்வம் உருவாக்கும்: ஈக்விட்டி ஃபண்டுகள்..!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை, டிசம்பர் 20-ம் தேதி காலை 10.30 - 11.30 மணிக்கு நடத்துகிறது. இதில், மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஶ்ரீகாந்த் மீனாட்சி (Primeinvestor.in) மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் கிளஸ்டர் மேலாளர் (திருச்சி) ஜி.வினோத் குமார் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.அனுமதி இலவசம். பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru

ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் - கட்டணப் பயிற்சி வகுப்பு!

ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் (F&O) இரண்டு நாள்கள் ஆன்லைன் கட்டணப் பயிற்சி வகுப்பை 2011, ஜனவரி 16, 2020, (சனிக்கிழமை - காலை 9.30 மணி முதல் 1.30 மணி), ஜனவரி 17, 2020, (ஞாயிற்றுக்கிழமை – மாலை 4 மணி முதல் இரவு 8 மணி) நாணயம் விகடன் நடத்துகிறது. பங்குச் சந்தை மற்றும் கமாடிட்டி பயிற்சி நிறுவனத்தின் (Ectra.in) முதன்மை செயல் அதிகாரி தி.ரா.அருள்ராஜன் பயிற்சி அளிக்கிறார். இரு தினங்களுக்கும் சேர்த்து பயிற்சிக் கட்டணம்: ரூ.7,000. பதிவு செய்ய: https://bit.ly/3gBEtuC