Published:Updated:

ஷேர்லக் : இனிக்கும் சர்க்கரைப் பங்குகள்..! - ஏற்றுமதி மானியம் எதிரொலி...

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

SHARE LUCK

ஷேர்லக் : இனிக்கும் சர்க்கரைப் பங்குகள்..! - ஏற்றுமதி மானியம் எதிரொலி...

SHARE LUCK

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்
டந்த வாரம் சொன்னது போலவே சரியாக மாலை 4 மணிக்கு அலுவலகம் வந்து சேர்ந்தார் ஷேர்லக். சூடான ஏலக்காய் டீயை அவருக்குத் தர, அதை வாங்கிப் பருக ஆரம்பித்தார். நாம் தயாராக வைத்திருந்த கேள்விகளைக் கேட்க ஆரம்பிக்க, அவர் சரசரவென பதில் சொல்ல ஆரம்பித்தார்.

லட்சுமி ஆர்கானிக்ஸ் நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியீடு பற்றி...

“மும்பையைத் தலைமயிடமாகக் கொண்டு செயல்படும் சிறப்பு வகை ரசாயனம் தயாரிக்கும் லட்சுமி ஆர்கானிக்ஸ் (Laxmi Organics) நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் மூலம் 800 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்திருக்கிறது. இதற்காக பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் விண்ணப் பித்திருக்கிறது.

இந்த ஐ.பி.ஓ வெளியீட்டில் 500 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், 300 கோடி ரூபாய்க்கு ஆஃபர் ஃபார் சேல் மூலமும் பங்குகளை வெளியிட திட்டமிட்டிருக்கிறது.”

ஐ.டி.பி.ஐ பேங்க் நிதி திரட்டுகிறதாமே?

“ஐ.டி.பி.ஐ வங்கி, தகுதிவாய்ந்த முதலீட்டாளர்களிடமிருந்து (QIP) 2,000 கோடி ரூபாய் நிதியைத் திரட்ட ஐ.டி.பி.ஐ வங்கி முடிவு செய்திருக்கிறது. 6,000 கோடி ரூபாய்க்கு மிகாமல் நிதி திரட்டுவதற்கு இந்த வங்கியின் இயக்குநர் குழு ஏற்கெனவே ஒப்புதல் அளித்திருக்கிறது.

இந்த நிலையில், ரூ.1,000 கோடிக்கு க்யூ.ஐ.பி-க்கள் மூலம் நிதி திரட்ட இந்த வங்கித் திட்டமிட்டுள்ளது. அதிக ஆதரவு இருக்கும்பட்சத்தில், கூடுதலாக ரூ.1,000 கோடி என மொத்தம் ரூ.2,000 கோடி உடனடி யாகத் திரட்டப்போவதாக இந்த வங்கி, செபி அமைப்புக்குத் தெரிவித்துள்ளது. பங்கு ஒன்றின் விலை ரூ.40.63 என நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது.”

பங்குச் சந்தை டிரேடிங்கில் மோசடியில் ஈடுபட்ட 22 தனிநபர்களுக்கு ரூ.1.58 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறதே?

“பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பான செபியின் விசாரணையில், சினெர்ஜி பிஸ்கான் (Synergy Bizcon) நிறுவனத்தின் பங்கு வர்த்தகத்தில் முறைக்கேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தில் மே 26, 2015 முதல் அக்டோபர் 14, 2016-ம் தேதி வரையிலான காலகட்டத்துக்கான பங்கு வர்த்தகத்தில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட 22 பேருக்கும் சேர்த்து மொத்தம் 1.58 கோடி ரூபாயை செபி அமைப்பு அபராதமாக விதித்திருக்கிறது. இந்த அபராதம் ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை இருக்கிறது.”

பர்கர் கிங் பங்கு முதல் நாளிலேயே அமோக வருமானம் கொடுத்திருக்கிறதே?

“உலக அளவில் பர்கர் கிங் விற்பனையில் ஈடுபட்டுவரும் பர்கர் கிங் நிறுவனத்தின் ஐ.பி.ஓ-வுக்கு இந்திய முதலீட்டாளர்கள் ஏகபோக வரவேற்பைக் கொடுத்திருக்கிறார்கள். கடந்த டிசம்பர் 2-ம் தேதி பர்கர் கிங் ஐ.பி.ஓ தொடங்கியது. கடந்த 14-ம் தேதி அன்று இந்தப் பங்கு பட்டியலிடப்பட்டது. பங்கு வெளியீட்டு விலையைவிட 92% பிரீமியத்தில் பட்டியலிடப்பட்டதால், முதலீட்டாளர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். பங்கின் வெளியீட்டு விலை 60 ரூபாய்.

இந்த நிலையில், 115.35 ரூபாய் விலைக்குப் பட்டியலிடப்பட்டது. அன்று மதியம் 2.10 மணி அளவில், பங்கின் விலை 125% அதிகரித்து, 135 ரூபாய்க்கு வர்த்தகமானது.

இன்றைய இளைய தலைமுறையினரின் பிடித்த பிரத்யேக உணவாக பர்கர் மாறி இருப்பதால் இந்தப் பங்கு விலை எதிர்வரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.”

ஷேர்லக்
ஷேர்லக்

கடந்த 20 ஆண்டுகளில் சில நிறுவனங்கள் அதிகமாக டிவிடெண்ட் வழங்கியிருக்கின்றனவே?

“பங்குச் சந்தையில் பட்டிய லிடப்பட்ட நிறுவனங்களில் ஒரு சில நிறுவனங்கள், கடந்த 20 ஆண்டுகளில் பங்கு முதலீட்டாளர் களுக்கு அதிக டிவிடெண்ட்களை வழங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் மஜெஸ்கோ நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு 19,480% டிவிடெண்டை வழங்கி யிருக்கிறது.

ஆரக்கிள் ஃபைனான்ஷியல் சர்வீஸ் சாஃப்ட்வேர் 9,700% டிவிடெண்டையும், பிரிட் டானியா இண்டஸ்ட்ரீஸ் 8,300% டிவிடெண்டையும், ஸ்டெரிடெஸ் பார்மா சயின்ஸ் நிறுவனம் 5,000% டிவிடெண்டையும், புரொக்டெர் அண்ட் கேம்பிள் ஹெல்த்கேர் 41,150% டிவிடெண்டையும், ஹீரோ மோட்டோகார்ப் 4,000% டிவிடெண்டையும் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் 4,000% டிவிடெண்டையும் வழங்கியிருக்கின்றன.

லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் வஞ்சனை இல்லாமல் அந்த லாபத்தின் ஒரு பகுதியை முதலீட்டாளர்களுக்குத் தரும். இப்படி அதிக டிவிடெண்ட் தரும் நிறுவனப் பங்குகளைத் தேடித் தேடி வாங்கி, அவற்றை நீண்ட காலத்துக்கு வைத்திருப்பது மிக மிக நல்லது.”

பஞ்சாப் நேஷனல் பேங்க் முதலீட்டாளர்களிடம் நிதி திரட்டு கிறதாமே?!

“மத்திய அரசு மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி 14,000 கோடி ரூபாய் பங்கு மூலதனம் திரட்ட திட்டமிட்டுள்ளது.

முதல்கட்டமாக, தகுதி வாய்ந்த முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.7,000 கோடி ரூபாய் நிதியைத் திரட்டுவதற்கு பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூலதனம் திரட்டும் கமிட்டி அனுமதி அளித்திருக் கிறது. இந்தப் பங்கு வெளியீட்டில் வெளியிடப்படும் பங்கு ஒன்றின் விலை 37.35 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மற்றும் செப்டம்பர் மாதத்தில் இந்த வங்கியானது 2,500 கோடி ரூபாயை இதே முறையில் திரட்டியிருந்தது.”

எம்பஸி ஆபீஸ் பார்க்ஸ் நிறுவனம் எதற்காக நிதி திரட்டுகிறது?

‘‘எம்பஸி ஆபீஸ் பார்க்ஸ் ஆர்.இ.ஐ.டி நிறுவனம் க்யூ.ஐ.பி முறையில் பங்கு வெளியிடுவதன் மூலம் 3,700 கோடி ரூபாயைத் திரட்ட முடிவு செய்திருக்கிறது. கடந்த மாதம் இந்த நிறுவனம், பெங்களூரில் ‘எம்பஸி டெக்வில்லேஸ்’ அமைப்பதற்காக எம்பஸி குரூப், பிளாக்ஸ்டோன் மற்றும் மற்ற சில முதலீட்டாளர் களிடமிருந்து 9,782.4 கோடி மதிப்பிலான இடத்தை கையகப் படுத்த முடிவு செய்திருந்தது. இதற்காகத் தேவைப்படும் தொகைக்குத்தான் பங்கு வெளி யீட்டின் மூலம் நிதி திரட்ட முடிவு செய்திருக்கிறது. இந்த வெளியீட்டின் மூலம் வெளியிடப் படும் பங்கு ஒன்றின் விலை 348.38 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.”

சர்க்கரை நிறுவனப் பங்குகள் திடீரென விலை ஏற ஆரம்பித்திருக் கிறதே... என்ன காரணம்?

“சர்க்கரை நிறுவனங்களுக்கு ஏற்றுமதி மானியமாக ரூ.3,500 கோடி வழங்க மத்திய அரசு அறிவித்திருப்பதே இதற்குக் காரணம். மத்திய அரசு நிலுவையில் இருந்த ஏற்றுமதி மானியம் ரூ.5,360 கோடியை சர்க்கரை உற்பத்தி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் விவசாயி களுக்கு ஒரு வாரத்தில் வழங்கப்படும் என அறிவித்தது. இந்தத் தொகை தொடர்புடைவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த மானியம் என்பது சர்க்கரை விற்பனைக்கான சந்தைப்படுத்துதல் செலவுகள், கையாளும் செலவுகள், பதப்படுத்தும் செலவுகள் மற்றும் ஏற்றுமதி செலவுகளை ஈடுகட்டும் விதமாக அளிக்கப்படுகிறது.

இந்த அறிவிப்பு கடந்த புதன்கிழமை அன்று வெளியானது. வியாழக்கிழமை யன்று முன்னணி சர்க்கரை நிறுவனப் பங்குகளின் விலை சுமார் 5% அதிகரித்து வர்த்தகமாகின. பால்ராம்பூர் சினி மில்ஸ், திரிவேணி இன்ஜினீயரிங், உத்தம் சுகர் மில்ஸ், சுகர் மில்ஸ், ஸ்ரீரேணுகா சுகர்ஸ், ஈ.ஐ.டி பாரி மற்றும் துவாரிகேஷ் சுகர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் விலை ஒரே நாளில் 3% முதல் 5% வரை உயர்ந்தன.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் எனத் தொடர்ந்து பண்டிகைகள் வருவதால், குறுகிய காலத்தில் சர்க்கரைக் கான தேவையும் விலையும் அதிகரிக்கக் கூடும் என்கிறார்கள் இந்தத் துறையைச் சார்ந்தவர்கள்.’’

ஏதாவது பங்குப் பரிந்துரைகள்?

“பங்கு தரகு நிறுவனமான, ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் பல்ராம்பூர் சினி மில்ஸ் பங்கை முதலீட்டு நோக்கில் வாங்கலாம் எனப் பரிந்துரை செய்திருக்கிறது. இந்த நிறுவனம் மிகக் குறைந்த விலையில் சர்க்கரை உற்பத்தி செய்து வருவதே இந்தப் பரிந்துரைக்குக் காரணம். மேலும், இதன் வருவாய் நிலையானதாகவும் பண வரத்து வலுவானதாகவும் இருக்கிறது. இந்த நிறுவனம் 40% டிவிடெண்ட் அளித்திருக்கிறது. இது 2021-22–ம் ஆண்டில் 60% ஆக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இதேபோல், திரிவேணி இன்ஜினீயரிங் பங்கையும் வாங்கலாம் எனப் பரிந்துரை செய்துள்ளது. இதன் எத்தனால் வணிக வருவாய் அதிகரிப்பு, விரிவாக்கம், ஏற்றுமதி அதிகரிப்பு ஆகியவை இந்த நிறுவனப் பங்குக்கு சாதக அம்சங்களாக உள்ளன.’’

மிஸஸ்பெக்டர்ஸ் ஃபுட் ஐ.பி.ஓ அமோக வரவேற்பு பெற்றிருக்கிறதே?

‘‘மிஸ்சஸ்பெக்டர்ஸ் ஃபுட் நிறுவனம் பிஸ்கட், பிரட் மற்றும் பண் போன்ற பல உணவுப் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம், ரூ.540 கோடிக்கு பொதுப் பங்கு வெளியீட்டை மேற்கொண்டது.

விலைப்பட்டை பங்கு ஒன்றுக்கு ரூ.286-288 என நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. பங்கு வெளியீடு டிசம்பர் 17-ல் நிறைவு பெற்றது. இதன் பங்கு வெளியீட்டுக்கு க்யூ.ஐ.பி பிரிவில் 174.30 மடங்கும்,

பெரும் பணக்காரர்கள் பிரிவில் 582.47 மடங்கும், எஃப்.ஐ.ஐ பிரிவில் 28.36 மடங்கும் அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது. பணியாளர்கள் பிரிவில் 44.67 மடங்கு விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன’’ என்றவர், புறப்படும் முக்கியமான விஷயத்தைச் சொன்னார்.

‘‘பங்குச் சந்தைகள் வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளன.இதற்குக் காரணம், வெளிநாடு களிலிருந்து வரும் முதலீடுதான். கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெளிநாட்டு முதலீடு நம் சந்தையைத் தேடிவந்திருக்கிறது. இந்த முதலீடு வெளியேறினால், சந்தை சிறிதளவு இறங்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, நீண்ட கால நோக்கில் முதலீடு செய்ய நினைப் பவர்கள் கவனமாக முதலீடு செய்யலாம்’’ என்றபடி, வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்!

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பார்க்க ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ்..!

ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் (F & O) இரண்டு நாள்கள் ஆன்லைன் கட்டணப் பயிற்சி வகுப்பை ஜனவரி 16, 2021, (சனிக்கிழமை - காலை 9.30 மணி முதல் 1.30 மணி), ஜனவரி 17, 2020, (ஞாயிற்றுக்கிழமை – மாலை 4 மணி முதல் இரவு 8 மணி) நாணயம் விகடன் நடத்துகிறது.

பங்குச் சந்தை மற்றும் கமாடிட்டி பயிற்சி நிறுவனத்தின் (Ectra.in) முதன்மைச் செயல் அதிகாரி தி.ரா.அருள்ராஜன் பயிற்சி அளிக்கிறார். இரு தினங்களுக்கும் சேர்த்து பயிற்சிக் கட்டணம்: ரூ.7,000. பதிவு செய்ய: https://bit.ly/3gBEtuC

ஒரே தவணையில் பி.எஃப் வட்டி..!

ழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக, பி.எஃப். சேமிப்புக்கான 8.50 சதவிகித வட்டியில் 8.15% மற்றும் 0.35% என இரண்டு தவணைகளாக வழங்குவதாக அறிவித்திருந்தது. அதை மாற்றி, தற்போது ஒரே முறையில் 8.5% வட்டியையும் வழங்கப்போவதாகச் சொல்லியிருக்கிறது.

பொதுவாக, நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களால் வருங்கால வைப்பு நிதியில் செலுத்தும் தொகை பங்குச் சந்தை, அரசு பத்திரங்கள், மியூச்சுவல் ஃபண்டுகள் எனப் பல்வேறு இடங்களில் அரசு முதலீடு செய்யும். அதன்மூலம் கிடைக்கும் வருமானத்திலிருந்து குறிப்பிட்ட சதவிகிதத்தைப் பயனாளர்களுக்கு வழங்கும்.

அந்த வகையில் நீண்டகால அடிப்படையில் மேற்கொண்ட இந்த முதலீடுகள், கொரோனா பரவல் காரணமாக பங்குச் சந்தை இறக்கத்தைச் சந்தித்தபோது, எதிர்பார்த்த வருமானத்தை வழங்காததால் இரு தவணைகளில் வட்டி விகிதம் வழங்கப்படும் எனக் கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்திருந்தது.

தற்போதைய சந்தை நிலவரங்கள் எதிர்பார்த்த வருமானத்தைவிட அதிகமாகக் கிடைக்கக்கூடிய வாய்ப்பைச் சுட்டிக்காட்டுகின்றன. அதனால் 8.50 சதவிகித வட்டி விகிதத்தை இ.பி.எஃப்.ஓ மொத்தமாகச் சுமார் 6 கோடி பி.எஃப் கணக்குகளில் வரவு வைக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிட்ஸ்

மிஸஸ் பெக்டார்ஸ் ஐ.பி.ஓ பெரும் வெற்றி கண்டுள்ளது. எதிர்பார்த்ததை விட 199 மடங்கு அதிகமான விண்ணப்பம் வந்துள்ளன. பர்கர் கிங் ஐ.பி.ஒ. 157 மடங்கு அதிக விண்ணப்பம் வந்தது குறிப்பிடத் தக்கது!

பிட்ஸ்

அமெரிக்காவில் வேலை இல்லாதவர் களின் எண்ணிக்கை கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்து இருக்கிறது. ஏற்கெனவே 8 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை இல்லாத நிலையில், 23,000 பேர் புதிதாகச் சேர்ந்துள்ளனர்!