Published:Updated:

ஷேர்லக் : ஏற்றத்தில் வீட்டு வசதி நிறுவனங்கள்!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

என்ன காரணம்..?

ஷேர்லக் : ஏற்றத்தில் வீட்டு வசதி நிறுவனங்கள்!

என்ன காரணம்..?

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

டந்த வாரம் பட்ஜெட் கூட்டங்களுக்குப் போயிருந்ததால், மெயிலில் பதில்களை அனுப்பிவைத்த ஷேர்லக், இந்த வாரம் நேரில் ஆஜரானார். சரியாக மாலை 4:00 மணிக்கு நம் கேபினுக்குள் நுழைந்தவரை அப்படியே கேன்டீனுக்கு அழைத்துச் சென்றோம். டீயைப் பருகியபடி நம் கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார்.

ஷேர்லக் : ஏற்றத்தில் வீட்டு வசதி நிறுவனங்கள்!

வீட்டு வசதி நிறுவனங்கள் குஷியில் இருக்கின்றனவே..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“கமர்ஷியல் ரியல் எஸ்டேட் புராஜெக்ட்டுக்கான கடன்களை நீட்டிக்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் தந்தது. இதையடுத்து, கடந்த வியான் அன்று, வர்த்தக நாளின் இடையே பி.என்.பி ஹவுஸிங், எல்.ஐ.சி ஹவுஸிங் மற்றும் இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் நிறுவனங்களின் பங்கு விலை 17% வரை அதிகரித்துள்ளது. `சரியான காரணத்துக்காக வீட்டுக் கடன் தாமதப்படுத்தப்பட்டால், அதை ஏற்றுக்கொள்ளலாம்’ என்று வியாழன் அன்று நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கமிட்டியும் கூறியிருக்கிறது. எனவே, பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் வீட்டு வசதி நிதி நிறுவனப் பங்குகளின் மதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலைதான் அதிகபட்சமாக 17% வரை உயர்ந்தது. பி.என்.பி ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 5.82% அதிகரித்தது. எல்.ஐ.சி ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 8% அதிகரித்தது. இதேபோல மற்ற ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனங்களின் பங்கு விலைகள் 1%-7% வரை அதிகரித்துள்ளன.”

ஐ.ஆர்.சி.டி.சி பங்குகளின் விலை தொடர்ந்து அதிகரித்துவருகிறதே..?

‘‘கடந்த ஏழு வர்த்தக தினங்களில் மட்டும் ஐ.ஆர்.சி.டி.சி பங்கு விலை 50% அதிகரித்திருக்கிறது. கடந்த வியாழக்கிழமை மட்டும் 10% அதிகரித்து, ரூ.1,549 என்ற புதிய உச்சத்தைப் பதிவுசெய்தது. வரும் பிப்ரவரி 12-ம் தேதி, இந்த நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு முடிவுகள் வெளியாகவிருக்கின்றன. அவை சிறப்பாக அமைந்தால், ஐ.ஆர்.சி.டி.சி பங்குகளுக்கு நல்ல டிமாண்ட் இருக்கும். 2020-21-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், `தேஜாஸ் விரைவு ரயில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்’ என்று நிதியமைச்சர் தெரிவித்திருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் இந்த நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தியிருக்கிறது. வெள்ளி அன்று வர்த்தகம் முடியும்போது, இந்த நிறுவனத்தின் பங்கு விலை 1,513.50 ரூபாயில் முடிவடைந்தது.’’

அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனத்தில் பங்கு விற்பனை மூலமாக நிதி திரட்ட ஏற்பாடு நடக்கிறதாமே..?

“கியூ.ஐ.பி முறையில் இந்த நிறுவனப் பங்கு விற்பனை செய்யப்படவிருப்பதாக செபிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அந்த நிறுவனத்தின் பங்கு விலை 5% வரை ஏற்றம் கண்டது. இரண்டு கோடி பங்குகளை குவாலிஃபைடு இன்ஸ்டிட்யூஷனல் பிளேஸ்மென்ட் (QIP) முறையில் விற்பனை செய்ய அந்த நிறுவனத்தின் நிர்வாகக்குழு கடந்த புதன் அன்று ஒப்புதல் தந்தது. இதன் மூலம் ரூ.4,098 கோடி திரட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாள்களில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு விலை மொத்தம் 12.14%, ஒரு வாரகாலத்தில் 13%, கடந்த ஒரு மாத காலத்தில் 30%, கடந்த ஓராண்டில் 54% என்ற அளவில் உயர்ந்துள்ளது.’’

கடந்த ஏழு வர்த்தக தினங்களில் மட்டும் ஐ.ஆர்.சி.டி.சி பங்கு விலை 50% அதிகரித்திருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பங்கு விலை திடீரென 3% ஏற்றம் கண்டிருக்கிறதே!

“மூன்றாவது காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 14.5% அதிகரித்து ரூ.880 கோடியாக இருந்தது. காலாண்டு முடிவுகள் நல்ல நிலையில் இருந்ததால், அவை வெளியானதுமே வர்த்தக நாளின் இடையே இந்த நிறுவனத்தின் பங்கு விலை 3% அதிகரித்தது. லாபத்தைப் போலவே நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 11% அதிகரித்து ரூ.6,996.7 கோடியாக இருந்தது. காலாண்டு முடிவுகள் நல்லபடியாக இருந்ததால், இந்த நிறுவனத்தின் ரேட்டிங்கை ‘அண்டர்வெயிட்’ என்ற நிலையிலேயே மார்கன் ஸ்டேன்லி நிறுவனம் வைத்திருக்கிறது.’’

ஷேர்லக்
ஷேர்லக்

லூபின் நிறுவனத்தின் பங்கு விலை இறங்க என்ன காரணம்?

“மூன்றாம் காலாண்டு முடிவில் லூபின் நிறுவனத்தின் வருமானம் சரிவு கண்டதால், பங்கு விலை 3% இறக்கம் கண்டது. இந்த நிறுவனம், மூன்றாம் காலாண்டில் ரூ.835 கோடி நிகர இழப்பைச் சந்தித்தது. கடந்த நிதியாண்டில், இதே காலாண்டில் ரூ.151.7 கோடி நிகர இழப்பைச் சந்தித்திருந்தது. வருவாய் 4.5% குறைந்து ரூ.3,769 கோடியாக இருந்தது. எபிட்டா 37% சரிவடைந்து ரூ.429 கோடியாக இருந்தது. சி.எல்.எஸ்.ஏ ரேட்டிங் நிறுவனம், லூபின் ரேட்டிங்கை ‘விற்கலாம்’ என மாற்றியதுடன், இலக்கு விலையை ரூ.690-லிருந்து ரூ.600-ஆகக் குறைத்தது.”

பங்குச் சந்தையில் இரு வர்த்தக தினங்களில், முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு அதிகரிக்க என்ன காரணம்?

“நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையை நிதியமைச்சர் வாசிக்கும் போதே சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் பெரும் இறக்கம் கண்டன. கடந்த திங்கள் அன்று இந்த இரு சந்தைகளும் ஏற ஆரம்பித்தன. செவ்வாய் அன்று சென்செக்ஸ் 917 புள்ளிகள் அதிகரித்து, 40789.38 என்ற நிலைக்கு வந்தது. இந்த இரு தினங்களில் மட்டும் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.3.57 லட்சம் கோடி அதிகரித்தது. உலகச் சந்தைகளின் ஏற்றம், ஆயில் விலை ஏற்றம், பொருளாதார முன்னேற்றம், அரசின் வருவாய் வளர்ச்சி மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை ஆகியவையே சந்தையின் ஏற்றத்துக்கு முக்கியக் காரணங்கள்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டாப் 20 நிறுவனங்களின் பட்டியலிலிருந்து விப்ரோ நிறுவனம் வெளியேறியிருக்கிறதே..!

“தொழில்நுட்பத்துறையின் ஜாம்பவானான விப்ரோ நிறுவனம், ரூ.1,38,428 கோடி சந்தை மதிப்புடன், டாப் 20 நிறுவனங்களின் பட்டியலில் 20-வது இடத்தில் இருந்தது. 21-வது இடத்திலிருந்த டி-மார்ட் க்யூ.ஐ.பி நிதி திரட்டுவது குறித்த அறிவிப்பால், அதன் சந்தை மதிப்பு 1,41,205 கோடியாக அதிகரித்தது. 21-வது இடத்தில் இருந்த அந்த நிறுவனம், விப்ரோ நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு 20-வது இடத்துக்கு முன்னேறியது. விப்ரோ இப்போது 21-வது இடத்தில் இருக்கிறது.”

ஷேர்லக்
ஷேர்லக்

ஐ.டி.ஐ நிறுவனம் எஃப்.பி.ஓ வெளியீட்டை ஏன் திரும்பப் பெற்றுக்கொண்டது?

“ஐ.டி.ஐ நிறுவனம் ஃபாலோ ஆன் ஆஃபர் (FPO) மூலம் ரூ.1,400 கோடி ரூபாய் நிதி திரட்டத் திட்டமிட்டிருந்தது. ஆனால், ஏறக்குறைய பாதி அளவு அதாவது, 58% பங்குகள் மட்டுமே விற்பனையானதால், அந்த வெளியீட்டை திரும்ப வாங்கிக்கொள்வதாக அறிவித்திருக்கிறது. `சந்தைச் சூழ்நிலை சரியில்லை என்பதே இதற்குக் காரணம்’ என்கிறது இந்த நிறுவனம்’’ என்ற ஷேர்லக், புறப்படுவதற்கு முன்னர், ‘‘சீன கொரோனோ வைரஸ் காரணமாக சில நாட்டுப் பங்குச் சந்தைகள் சிறிது இறங்கினாலும், அமெரிக்கச் சந்தை தொடர்ந்து ஏறுகிறது. நீண்டகால முதலீட்டாளர்கள் இனியாவது முதலீடு செய்வது நல்லது’’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism