தமிழ்நாடு பட்ஜெட் குறித்த செய்திகளை அலசிக்கொண்டிருந்தோம். “பட்ஜெட் எப்படி..?’’ என்று கேட்டபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். “இந்தக் கேள்விக்கான பதிலை நீங்கள் அல்லவா சொல்ல வேண்டும்...” என்று நாம் பந்தைத் திருப்பிவிட, “நான் தலையங்கத்தில் படித்துக்கொள்கிறேன். நீங்கள் கேள்விகளைக் கேளுங்கள்” என்றார். நாம் தயாராகவைத்திருந்த கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

எஸ் & பி ரேட்டிங் நிறுவனம், இந்தியாவின் ரேட்டிங்கை அதே வரம்பிலேயே வைத்திருப்பது நல்ல விஷயம்தானே!

‘‘உலகளாவிய ரேட்டிங் நிறுவனமான எஸ் & பி, இந்திய அரசுக்கான ரேட்டிங்கை ‘BBB-’ என்ற வரம்பிலேயே தொடர்ந்து வைத்திருக்கிறது. நீண்டகாலப்போக்கில் அதாவது, இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் ஜி.டி.பி படிப்படியாக மீண்டுவருவதுபோல் இருப்பதால், ரேட்டிங்கை அப்படியே தக்கவைத்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது. எனினும், இந்தியாவின் நிதி நிலவரம் இன்னமும் ஆபத்தான கட்டத்திலேயே இருப்பதையும், நிதிப் பற்றாக்குறை அதிகரித்துவருவதையும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

அரசின் திட்டங்களில் நிதிப் பற்றாக்குறை அதிகரித்திருப்பதுடன், வரும் ஆண்டுகளில் இது கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது. `2019-20-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதமாகக் குறையும்’ என்று கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் (2020-21) 6 சதவிகிதமாக உயரும் என்று அரசு கருதுகிறது. இந்தியாவுக்கான ரேட்டிங், நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சி சராசரிக்கும் சற்றுக் கூடுதலாக இருப்பதையும், வளர்ந்துவரும் நிதி அமைப்பாக இருப்பதையும் காட்டுகிறது.’’

நிஃப்டி 50 சரிந்தாலும், பி.எம்.எஸ் திட்டங்கள் மட்டும் லாபமாக செயல்பட்டுள்ளனவாமே?

‘‘கடந்த ஜனவரி மாதத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் மற்றும் பட்ஜெட்டின் நிச்சயமற்ற தன்மையால் பலரும் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால், நிஃப்டி50 பங்குகள் 1.7% இறக்கம்கண்டன. அதே நேரத்தில், சுமார் 115 போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் திட்டங்கள் (பி.என்.எஸ்), பெஞ்ச்மார்க் இண்டெக்ஸைவிட அதிக வருமானத்தைத் தந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் முன்னணி எட்டு திட்டங்கள் 10 சதவிகிதத்தை விட அதிக வருமானத்தைக் கொடுத்திருக்கின்றன. கேப்குரோ கேப்பிட்டல் அட்வைசர்ஸ் ஸ்பெஷல் திட்டம், மோதிலால் ஆஸ்வால்ஸ் ஐ.ஓ.பி திட்டம், சென்ட்ரம் பி.எம்.எஸ் மைக்ரோ ஃபண்ட், நிப்பான் இந்தியா எமர்ஜிங் இந்தியா, ஆம்பிட் கேப்பிட்டல்’ஸ் எமர்ஜிங் ஜெயன்ட்ஸ், சுந்தரம் ஏ.எம்.சி உள்ளிட்ட எட்டு திட்டங்கள் நல்ல வருமானத்தைக் கொடுத்திருக்கின்றன.’’

கடந்த ஜனவரியில் கொரோனா வைரஸ் தாக்குதல் மற்றும் பட்ஜெட்டின் நிச்சயமற்ற தன்மையால் நிஃப்டி50 பங்குகள் 1.7% இறக்கம்கண்டன!

எஸ்.பி.ஐ கார்ட்ஸ் ஐ.பி.ஓ பற்றி..?

“எஸ்.பி.ஐ கார்ட்ஸ் அண்டு பேமன்ட் சர்வீசஸ் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி செபியிடம் விண்ணப்பித்திருந்தது. செபி அதற்கு அனுமதி வழங்கியிருக்கிறது. இதன் மூலம் ரூ.9,000 - 10,000 கோடி வரை நிதி திரட்ட எஸ்.பி.ஐ கார்ட்ஸ் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.’’

ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகளில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மீண்டும் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கின்றனவே?

“கடந்த ஜனவரியில் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகளில் முதலீட்டை அதிகரித்திருக்கின்றன. ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனப் பங்குகளில் ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் கணிசமாக முதலீடு செய்திருக்கிறது. க்வெஸ்கார்ப் (Quesscorp) பங்குகளில் ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்திருக்கிறது. சி.டி.எஸ்.எல்., நாராயணா ஹிருதாயலாயா பங்குகளில் எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுசெய்திருக்கிறது. இவை தவிர, முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலிவர், எல் அண்ட் டி, பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்குகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முதலீடு செய்திருக்கின்றன.”

அவென்யூ சூப்பர் மார்ட்ஸ் மேலும் 1.5 கோடி பங்குகளை விற்கிறதே... என்ன காரணம்?

“அவென்யூ சூப்பர் மார்ட்ஸ் (டி-மார்ட்) நிறுவனம் நடப்பு மாதத்தின் ஆரம்பத்தில் இரண்டு கோடி பங்குகளை தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்தது. இதனால் புரொமோட்டர்களின் பங்கு 79.73 சதவிகிதத்திலிருந்து, 77.27 சதவிகிதமாகக் குறைந்தது. `ஒரு நிறுவனத்தில் புரொமோட்டர்களின் பங்கு 75 சதவிகிதத்துக்குள் இருக்க வேண்டும்’ என்ற செபியின் விதிமுறைகளால் மேலும் 2.8% பங்குகள் அதாவது, ரூ.3,500 கோடி மதிப்புள்ள 1.5 கோடி பங்குகளை விற்க முடிவுசெய்திருக்கிறது. கடந்த மார்ச் 2017-ம் ஆண்டில் இதன் ஐ.பி.ஓ வெளியானபோது அதன் பங்கு ஒன்றின் விலை 299 ரூபாயாக இருந்தது. அது தற்போது 730% உயர்ந்து, 2,461 ரூபாய்க்கு வர்த்தகமாகிவருகிறது.”

வோடஃபோன் ஐடியா நிறுவனத்துக்கு ரூ.6,438.8 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறதே..?

“வோடஃபோன் ஐடியா, கடந்த டிசம்பர் காலாண்டில் ரூ.6,438.8 கோடியை இழப்பாகச் சந்தித்துள்ளது. இது, 2018 டிசம்பர் காலாண்டில் ரூ.5,004.6 கோடியாக இருந்தது. இந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் 5% குறைந்து, ரூ.11,380.5 கோடியாக இருக்கிறது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.11,982.8 கோடியாகக் காணப்பட்டது.

மூன்றாம் காலாண்டு முடிவுகள் சிறப்பாக வெளிவராததால், இந்த நிறுவனத்தின் பங்கு கடந்த வெள்ளி அன்று சரிந்து வர்த்தகமானது” என்றவர், தமிழக பட்ஜெட் குறித்த தலையங்கத்தை வாங்கிப் படித்துவிட்டு, ``சூப்பர்’’ என்று சொல்லிவிட்டுப் போனார்!

எல்.ஐ.சி - ஐ.பி.ஓ தாமதமாகலாம்!

எல்.ஐ.சி ஐ.பி.ஓ வருவது பற்றி பட்ஜெட்டில் தகவல் வெளியானது. வரும் 2020-21-ம் நிதியாண்டில் இந்தப் பங்கு வெளியீடு நடக்கும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில், மெக்குவாரி செக்யூரிட்டீஸ், `இந்த ஐ.பி.ஓ வருவது தாமதமாகலாம்’ என்று சொல்லியிருக்கிறது. `சொத்து மதிப்பில் சிறிய நிறுவனமான எஸ்.பி.ஐ லைஃப் ஐ.பி.ஓ வர 12 மாதங்கள் வரை ஆனது. எல்.ஐ.சி மாதிரியான மிகப்பெரிய நிறுவன விதிமுறைகள் ஏராளம். அப்படியிருக்க, அவற்றில் மாற்றங்களைக் கொண்டு வராமல், திடீரென பங்குச் சந்தையில் பட்டியலிட முடியாது. மேலும், பங்கு மதிப்பீடு மற்றும் சட்டரீதியாகச் சிக்கல்கள் நிறைய இருக்கின்றன. இதுவும் காலதாமத்துக்கு ஒரு முக்கியமான காரணமாக அமையும்’ என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.