சரியாக மாலை 4 மணிக்கு மழைக் கோட்டு, தொப்பி சகிதமாக நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். “மழை பெய்வதால் டிராஃபிக் இருக்கும் என்பதால், கார் எடுத்து வரவில்லை. சந்துபொந்துகளில் புகுந்து வர டூவீலர்தான் பெஸ்ட்...’’ என்றவருக்கு சூடான ஏலக்காய் டீயைக் கொடுத்தோம். அதைப் பருகிக் கொண்டே நம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

டைனாமிக்ஸ் சொல்யூஷன் நிறுவனத்துக்கு செபி அபராதம் விதிக்க என்ன காரணம்?

“பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, பங்குச் சந்தை விதிமுறைகளை மீறி தவறான கணக்கு வழக்குகளைப் பராமரித்ததுக்காக, டைனாமிக்ஸ் சொல்யூஷன் (Edynamics Solutions) மற்றும் நான்கு தனிநபர் களுக்கு மொத்தம் 1.8 கோடி ரூபாய் அபராதத்தை விதித்திருக்கிறது.

இந்த நிறுவனம், கணக்கு வழக்குகளில் மோசடி செய்வதாக செபி அமைப்பு சந்தேகம் கொண்டது. அதை அடுத்து இதன் கணக்கு வழக்குகளை சுயேச்சையான தணிக்கையாளர் (Independent auditor) ஒருவரை நியமித்து தணிக்கை செய்ய சொன்னது. அதன்படி, இந்த நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை ஆராய்ந்ததில், பொது மக்களிடமிருந்து திரட்டிய நிதியில் சுமார் 37 கோடி ரூபாயைத் தவறாகப் பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது. மேலும், இந்த நிறுவனம், அந்த நிறுவனப் பங்குகளில் முதலீட் டாளர்களை வர்த்தகம் செய்யத் தூண்டியிருப்பதற் கான ஆதாரமும் சிக்கியது.

இதை அடுத்து இந்த அபராதத்தை செபி அமைப்பு விதித்திருக்கிறது. மேலும், முறைகேடுகள் நடந்த காலகட்டத்தில் நிறுவனத்தின் இயக்குநர்களாக இருந்த பாரத் குப்தா, வினோத்குமார், விகாஸ் சைனி மற்றும் அனிதா குப்தா ஆகியோருக்கும் அபராதம் விதிக்கப் பட்டிருக்கிறது.

தவறு செய்யும் பங்கு நிறுவனங்கள் மீது அதிகமாக அபராதம் விதிப்பதன் மூலம் பிற நிறுவனங்கள் இந்தத் தவற்றைச் செய்யாமல் இருக்க உதவும். இதனால் சிறு முதலீட்டாளர் களுக்கு நன்மை உருவாகும்.”

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகித்துவரும் சொத்து மதிப்பு அதிகரித் திருக்கிறதாமே?

“இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகித்துவரும் சொத்து மதிப்பு டிசம்பர் காலாண்டு முடிவில் 7.6% அதிகரித்து, ரூ.29.71 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ரூ.27.6 லட்சம் கோடியாக இருந்தது. டிசம்பர் காலாண்டில் ஈக்விட்டி சந்தையின் போக்கு சிறப்பாக இருந்ததால், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகித்துவரும் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.

டிசம்பர் காலாண்டு முடிவில் எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ரூ.4.56 லட்சம் கோடியுடன் முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் ரூ.3.89 லட்சம் கோடி ரூபாயுடன் ஹெச்.டி. எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும், மூன்றாவது இடத்தில் ரூ.3.8 லட்சம் கோடியுடன் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும், நான்காவது இடத்தில் ரூ.62.55 லட்சம் கோடியுடன் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் இருக்கின்றன.”

ஹெச்.டி.எஃப்.சி பங்கு விலை உயர்வுக்கு என்ன காரணம்?

“கடந்த டிசம்பர் காலாண்டில் வழங்கிய கடன் அளவு 26% அதிகரித்திருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித் ததைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 5-ம் தேதி ஹெச்.டி.எஃப்.சி பங்கு விலை புதிய உச்சத்தைத் தொட்டது. டிசம்பர் காலாண்டில், ஹெச்.டி.எஃப்.சி வழங்கிய கடன் மதிப்பு ரூ.7,076 கோடி. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.4,258 கோடியாக இருந்தது. இதன் காரணமாக அன்றைய வர்த்தகத் தொடக்கத்தின்போது பங்கு ஒன்றின் விலை 43.75 ரூபாய் அதிகரித்து, 2,623 ரூபாய்க்கு வர்த்தகமானது. அன்றைய தினத்தில் இதன் பங்கு விலை அதிகபட்சமாக 2,634.70 ரூபாய் வரை வர்த்தகமானது.”

நேஷனல் ஃபெர்டிலைசர் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“கொரோனா காலகட்டத்தில் இக்கட்டான சூழ்நிலைகளைச் சமாளித்து, நேஷனல் ஃபெர்டிலைசர் நிறுவனம் அதன் உற்பத்தியை அதிகரித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 9.9 லட்சம் மெட்ரிக் டன் யூரியாவை இந்த நிறுவனம் உற்பத்தி செய்திருக்கிறது. இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று, ஒரே நாளில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 12% வரை அதிகரித்து வர்த்தகமானது.”

பி.இ.எம்.எல் பங்கு விலை உயர்வுக்கு என்ன காரணம்?

“அதிக இயங்குசக்தி கொண்ட வாகனங்கள் தயாரித்துக் கொடுப்பதற்கான ஆர்டரை பி.இ.எம்.எல் நிறுவனம், இந்திய பாதுக்காப்பு அமைச்சகத் திடமிருந்து பெற்றிருக்கிறது. இந்த ஆர்டரின் சராசரி மதிப்பு 758 கோடி ரூபாய். இதன் காரணமாகக் கடந்த புதன்கிழமை அன்று, இந்த நிறுவனத்தின் பங்கு விலை 5.59% வரை அதிகரித்து வர்த்தகமானது.”

இண்டிகோ பெயின்ட்ஸ் ஐ.பி.ஓ வெளியிடுகிறதாமே?

“இண்டிகோ பெயின்ட்ஸ் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் மூலம் 1,000 கோடி ரூபாய் நிதியைத் திரட்ட முடிவு செய்திருந்தது. இதற்காக அனுமதி கேட்டு செபி அமைப்புக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், அதற்கான அனுமதியை செபி அமைப்பு தற்போது வழங்கி யிருக்கிறது.

இந்த புதிய பங்கு வெளியீட்டின் மூலம் 300 கோடி ரூபாயையும், சீக்வோயா கேப்பிட்டல் (Sequoia Capital) நிறுவனத்தின் 58,40,000 பங்குகளை சலுகை விலையில் விற்பனை செய்வதன் மூலமும் நிதியை திரட்ட இண்டிகோ பெயின்ட்ஸ் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

கோட்டக் மஹிந்திரா கேப்பிடல், எடெல்வைஸ் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த புதிய பங்கு வெளியீட்டை நிர்வகிக்கப் போகின்றன.

இந்தப் பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதி, புதுக்கோட்டையில் உள்ள இந்த நிறுவனத்தின் தொழிற்சாலையை விரிவாக்கம், புதிய இயந்திரங்கள் வாங்க, கடன்களை அடைக்க பயன்படுத்திக்கொள்ளும்.”

வெங்கீஸ் நிறுவனத்தின் பங்கு விலை திடீரென சரிந்திருக்கிறதே?

“கேரளா உட்பட ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாசலப் பிரதேசம் ஆகிய இந்தியாவின் நான்கு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவும் என்ற அச்சத்தில் கோழிப்பண்ணை பொருள்களை விநியோகம் செய்யும் வெங்கீஸ் நிறுவனத்தின் பங்கு விலை ஜனவரி 6-ம் தேதி 5 சதவிகிதத்துக்கும் மேலாக சரிந்தது. இதனால் அன்றைய தின வர்த்தகத்தில் இதன் பங்கு விலை 82.05 ரூபாய் குறைந்து, 1,576.20 ரூபாயாக வர்த்தகமானது. வியாழக்கிழமை வர்த்தகத்திலும் பங்கின் விலை சுமார் 2% இறக்கம் கண்டது.”

இ.டி.எஃப்-களில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளதே?

“அண்மைக் காலத்தில் நிஃப்டி, சென்செக்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் சார்ந்த எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகளில் (இ.டி.எஃப்-க்கள்) சிறு முதலீட்டாளர்கள் முதலீடு செய்வது கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும். நிஃப்டி நெக்ஸ்ட், நிஃப்டி 500,எஸ் அண்ட் பி 500, நாஸ்டாக் 100 போன்ற இ.டி.எஃப்-களும் சிறு முதலீட் டாளர்களைக் கவர்ந்திருக்கிறது.

இந்த இ.டி.எஃப்-க்கள் கிட்டத்தட்ட நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள் குறிப்பாக, ஈக்விட்டி ஃபண்டுகள் போன்றவை. இவற்றில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு தேவை. அந்த வகையில், இந்த இ.டி.எஃப்-களில் பங்குச் சந்தை செயல்படும் நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். எப்போது வேண்டும் என்றாலும் வெளியேறிக்கொள்ளலாம். நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி ஃபண்டு களுடன் ஒப்பிடும்போது முதலீடு செய் வதற்கான செலவு இதில் மிகவும் குறைவு. அதுவும் தரகுக் கட்டணமில்லை என்றால் செலவு இன்னும் குறையும்.

சிறு முதலீட்டாளர்கள் இண்டெக்ஸ் ஃபண்டுகள், இ.டி.எஃப்-களில் முதலீடு செய்வதை ரிஸ்க்கைக் குறைக்கும் நடவடிக்கை என்று சொல்லலாம். ஒருவரின் முதலீட்டுக் கலவையில் இண்டெக்ஸ் ஃபண்டுகள், இ.டி.எஃப்-களில் செய்யப்படும் முதலீடு 10%-15% இருக்கலாம். 2020 நவம்பர் நிலவரப்படி, இ.டி.எஃப்-களில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு ரூ.2.33 லட்சம் கோடியாக இருக்கிறது.”

யெஸ் பேங்க் லார்ஜ்கேப் அந்தஸ்தைப் பெற என்ன காரணம்?

“மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்காக ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால் நிறுவனப் பங்குகள் எவை என்கிற பட்டியலை ஆம்ஃபி அமைப்பு வெளியீடு வருகிறது. 2020 டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி 5,044 நிறுவனப் பங்குகளை ஆம்ஃபி வகைப்படுத்தியிருக்கிறது.

இதில் புதிதாக ஐந்து பங்குகள் லார்ஜ் கேப் பங்குகள் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. அதானி என்டர்பிரைசஸ், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், ஜூபிளியன்ட் ஃபுட்வொர்க்ஸ், பி.ஐ இண்டஸ்ட்ரீஸ், யெஸ் பேங்க், கிளாண்ட் பார்மா ஆகிய நிறுவனப் பங்குகள் லார்ஜ்கேப் பங்குகள் பட்டியலில் சேர்ந்திருக்கிறது. அதே நேரத்தில், லார்ஜ்கேப் பங்குகள் பட்டியலிலிருந்து மிட் கேப் பட்டியலுக்கு பேங்க் ஆஃப் பரோடா, கண்டைனர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஜெனரல் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, எம்.ஆர்.எஃப், என்.எம்.டி.சி, யூனைடெட் புரூவரிஸ் ஆகிய நிறுவனப் பங்குகள் மாற்றப் பட்டிருக்கின்றன.

இன்று (7.1.21) பங்குச் சந்தைகள் சிறிது இறக்கம் கண்டிருக்கிறதே!

‘‘சில வாரங்களுக்குப் பிறகு, நம் சந்தைகள் சிறிது இறக்கம் கண்டுள்ளன. இனி பட்ஜெட் வருகிற வரை சந்தைகள் கொஞ்சம் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். கடந்த ஒன்பது மாதங்களில் சந்தைகள் நன்கு உயர்ந்ததால், இப்போதைக்கு லாபத்தை எடுத்துவிடுவோம் எனப் பலரும் நினைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், பட்ஜெட்டுக்குப் பிறகு, சந்தைகள் மேலும் உயர்வதற்கு வாய்ப் பிருப்பதாக சந்தை நிபுணர்கள் சொல்கிறார்கள். நீண்டகாலத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள், இப்போதைய ஏற்ற இறக்கம் குறித்து அதிகம் கவலைப்படத் தேவையில்லை. அதே சமயம், கடந்த ஒன்பது மாதங்களில் பங்குச் சந்தைகளிலோ, பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலோ கிடைத்த வருமானத்தைப் பார்த்து, இதே அளவு அபரி மிதமான லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம் என்பதும் என் ஆலோசனை’’ என்று சொன்ன ஷேர்லக், ‘‘வாசகர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்’’ என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குப் புறப்பட்டார்!

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பார்க்கும் ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் உத்தி..!

ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் (F&O) இரண்டு நாள்கள் ஆன்லைன் கட்டணப் பயிற்சி வகுப்பை 2021, ஜனவரி 16, (சனிக்கிழமை - காலை 9.30 மணி முதல் 1.30 மணி), ஜனவரி 17, 2021, (ஞாயிற்றுக்கிழமை – மாலை 4 மணி முதல் இரவு 8 மணி) நாணயம் விகடன் நடத்துகிறது. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பார்க்கும் உத்தியாக ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் உள்ளது. பங்குச் சந்தை மற்றும் கமாடிட்டி பயிற்சி நிறுவனத்தின் (Ectra.in) முதன்மை செயல் அதிகாரி தி.ரா.அருள்ராஜன் பயிற்சி அளிக்கிறார். இரு தினங்களுக்கும் சேர்த்து பயிற்சிக் கட்டணம்: ரூ.7,000. பதிவு செய்ய: https://bit.ly/3gBEtuC

என்.ஆர்.ஐ: வரி முதல் முதலீடு வரை..!

நாணயம் விகடன் நடத்தும் ‘என்.ஆர்.ஐ: வரி முதல் முதலீடு வரை’ என்ற ஆன்லைன் பயிற்சி நடக்கிறது. இந்த வகுப்பு ஜனவரி 30, 2021 இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை (இந்திய நேரம்) நடக்கிறது. இதில், கோயம்புத்தூரை சேர்ந்த முன்னணி ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் சிறப்புரையாற்றுகிறார். கட்டணம் ரூ.900. முன்பதிவுக்கு: https://bit.ly/38rk4EL

என்.சி.டி வெளியிடும் பவர் ஃபைனான்ஸ்!

பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், சிறு முதலீட்டாளர்களுக்காக பங்குகளாக மாறாத கடன் பத்திரங்களை (NCD) வெளியிடுகிறது. இதன் மூலம் ரூ.4,500 கோடி திரட்டுகிறது. ஜனவரி 18-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பம் செய்யலாம்.

என்.சி.டி ஒன்றின் முகமதிப்பு 1,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் முதிர்வுக்காலம் 10 ஆண்டுகள். இந்த என்.சி.டி முதலீட்டின் மூலம் ஆண்டுக்கு 7.50% வரை வட்டி கிடைக்கும். வங்கிகள் தற்போது டெபாசிட்டுகளுக்கு 5-6% மட்டுமே வட்டி வழங்கி வருவதால், இந்தக் கடன் பத்திரத்துக்கு வழங்கும் வட்டி கவர்ச்சிகரமானதாக இருக்கிறது.

கடன் A - Z தொகுப்பு

நம்மில் பலரும் தாராளமாகக் கடன் வாங்குகிறோம். ஆனால், எவ்வளவு வட்டிக்குக் கடன் வாங்குகிறோம், வாங்கிய கடனை எப்படித் திரும்பக் கட்ட வேண்டும், அப்படிக் கட்டா விட்டால் நமக்கு ஏற்படும் பாதகங்கள் என்னென்ன என்பது பற்றி நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. கடன் பற்றிய அனைத்து விஷயங்களையும் எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் விகடன்.காமில் வணிகம் பகுதியில் ‘லோன் வேணுமா சார்?’ (#LoanVenumaSir) என்கிற கட்டுரைத் தொடர் வெளியாகிறது. சென்னை ஆடிட்டர் வெங்கட்ராமன் தியாகராஜன் எழுதும் இந்தக் கட்டுரைத் தொடர், கடன் பற்றி உங்களுக்குத் தெளிவான புரிதலைத் தரும். கட்டுரைத் தொடரைப் படிக்க: http://bit.ly/2K7a0sg