Published:Updated:

ஷேர்லக் : சந்தைச் சரிவை சாதகமாக்கிய எல்.ஐ.சி..! - புதிதாகப் பல பங்குகளில் முதலீடு!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

பங்குகள் விலை மிகவும் வீழ்ச்சி கண்டிருந்த 43 நிறுவனப் பங்குகளில் எல்.ஐ.சி முதலீட்டை அதிகரித்திருக்கிறது.

ஷேர்லக் : சந்தைச் சரிவை சாதகமாக்கிய எல்.ஐ.சி..! - புதிதாகப் பல பங்குகளில் முதலீடு!

பங்குகள் விலை மிகவும் வீழ்ச்சி கண்டிருந்த 43 நிறுவனப் பங்குகளில் எல்.ஐ.சி முதலீட்டை அதிகரித்திருக்கிறது.

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்
காலையில் வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பியபடியே, சரியாக மாலை 4:30 மணிக்கு போன் செய்தார் ஷேர்லக். அவசர மீட்டிங் ஒன்றுக்குத் தயாராக வேண்டியிருப்பதாகச் சொன்னவர், கேள்விகளை மெயில் அனுப்பச் சொல்லிவிட்டு, போனை வைத்துவிட்டார்.

அவசர அவசரமாக நாம் கேள்விகளை மெயில் அனுப்பி வைத்துவிட்டுக் காத்திருந்தோம். அடுத்த ஒரு மணி நேரத்தில் நம்முடைய அத்தனை கேள்விகளுக்கும் பதில்களை மெயிலில் அனுப்பிவைத்தார் ஷேர்லக்.

ஐ.டி.பி.ஐ பேங்க் பங்கு விலை வேகமாக அதிகரித்திருக்கிறதே..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ஐ.டி.பி.ஐ பேங்க் நிறுவனத்தின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் ரூ.50,000 கோடியைக் கடந்து ரூ.50,034 கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் ரூ50,000 கோடியைக் கடந்த பங்குகளின் பட்டியலில் 54-வது இடத்தை இந்த வங்கி பெற்றுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி இந்த மதிப்பு ரூ.33,144 கோடியாக இருந்தது. கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் பங்கு விலை 51% அதிகரித்துள்ளது. இதனால் அதன் பங்குச் சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது. இந்தப் பங்கு தொடர்ந்து ஏழு வர்த்தக தினங்களாக அப்பர் சர்க்யூட் பாண்ட்-ஐ தாண்டி வர்த்தகமாக முயன்றுவருகிறது.

தொடர்ச்சியாக 13 காலாண்டுகளாக இந்த வங்கி நிகர இழப்பைச் சந்தித்துவந்த நிலையில், மார்ச் காலாண்டில் நிகர லாபத்துக்கு வந்திருக்கிறது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் இந்த நிறுவனப் பங்கில் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எல்.ஐ.சி., பங்குச் சந்தைச் சரிவைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறதே..?

“முடிந்த நான்காம் காலாண்டில் எல்.ஐ.சி நிறுவனம் புதிதாகப் பல நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதோடு, பல பங்குகளில் முதலீட்டை அதிகரித்திருக்கிறது. 2020, மார்ச் இறுதியில் எல்.ஐ.சி மொத்தம் 3,260 பங்குகளில் முதலீடு செய்திருந்தது.

ஷேர்லக்
ஷேர்லக்

2020, ஜனவரியில் இந்தியப் பங்குச் சந்தை அதுவரை இல்லாத அளவுக்கு உச்சநிலையை அடைந்தது. 2020, ஜனவரி 20-ம் தேதி சென்செக்ஸ் 42272 புள்ளிகளுக்கு உயர்ந்தது. இது நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2020, மார்ச் 24–ம் தேதி 25981–க்கு இறக்கம் கண்டது. இது கிட்டத்தட்ட 40 சதவிகித வீழ்ச்சி.

இந்தக் காலகட்டத்தில் நல்ல நிறுவனப் பங்குகள்கூட கணிசமான அளவு இறக்கம்கண்டன. அப்போது துணிச்சலான முதலீட்டாளர்களும், நிறுவனங்களும் அதிக அளவில் முதலீடு செய்திருக்கின்றனர். அப்படி முதலீடு செய்த நிறுவனங்களில் ஒன்றாக எல்.ஐ.சி இருக்கிறது.

2020, ஜனவரி முதல் மார்ச் வரை எல்.ஐ.சி புதிதாகப் பல நிறுவனங்களில் முதலீட்டை அதிகரித்துள்ளது. ஹெச்.சி.எல் டெக்னாலஜீஸ், ஸ்ரீசிமென்ட், ரோல்டா இந்தியா, எல் அண்ட் டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ், கொச்சின் ஷிப்யார்டு, இந்துஸ்தான் யூனிலீவர், இண்டஸ்இண்ட் பேங்க், அமரராஜா பேட்டரீஸ், பிர்லா டயர்ஸ் மற்றும் டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களில் எல்.ஐ.சி புதிதாக முதலீடு செய்திருக்கிறது. அதாவது, சந்தைச் சரிவை சரியாகப் பயன்படுத்தி எல்.ஐ.சி முதலீட்டை மேற்கொண்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பங்குகள் விலை மிகவும் வீழ்ச்சி கண்டிருந்த 43 நிறுவனப் பங்குகளில் எல்.ஐ.சி முதலீட்டை அதிகரித்திருக்கிறது. இந்தப் பங்குகள் பார்மா, எஃப்.எம்.சி.ஜி மற்றும் நுகர்வோர், எரிசக்தி மற்றும் கட்டுமானத் துறைகளைச் சேர்ந்தவை. மேலும், இந்த நிறுவனங்கள் அடிப்படையில் வலுவானவை.

இன்ஃபோசிஸ், ஹெச்.டி.எஃப்.சி., ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஹேவல்ஸ் இந்தியா, ஹீரோ மோட்டோகார்ப்., காவிரி சீட் கம்பெனி, அதானி போர்ட்ஸ், அசோக் லேலாண்ட், பாரத் ஃபோர்ஜ், பார்தி இன்ஃப்ராடெல், பயோகான், கோல்கேட், கும்மின்ஸ், டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகளில் எல்.ஐ.சி நிறுவனம் முதலீட்டை அதிகரித்துள்ளது.

ஏ.சி.சி., அம்புஜா சிமென்ட்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபின்சர்வ், பாட்டா இந்தியா, பாரத் எலெக்ட்ரானிக்ஸ், பி.ஹெச்.இ.எல்., பி.பி.சி.எல்., பார்தி ஏர்டெல், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், தாபர் இந்தியா, ஜி.எஸ்.கே பார்மா, ஹெச்.இ.ஜி., ஹிண்டால்கோ, யெஸ் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், ஐ.டி.சி., இக்ரா, கோட்டக் மஹிந்திரா பேங்க் உள்ளிட்ட நிறுவனப் பங்குகளை பகுதி விற்பனை செய்து, லாபத்தை புக் செய்திருக்கிறது.”

ஃபைசர் நிறுவனத்தின் பங்கு விலை உயர்வுக்கு என்ன காரணம்?

“ஜெர்மன் நிறுவனமான ‘பயோ என் டெக்’ நிறுவனத்துடன் இணைந்து, ஃபைசர் (Pfizer) நிறுவனம் கோவிட்-19 வைரஸுக்கான தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பில் ஈடுபட்டிருந்தது. இவை கண்டுபிடித்திருக்கும் தடுப்பூசி மருந்தை பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் நோயாளிகளுக்குப் பயன்படுத்தியபோது, பாசிட்டிவ் ரிசல்ட் கிடைத்திருப்பதாக மருத்துவர்குழு தெரிவித்துள்ளது. இதன் காரணமாகக் கடந்த வியாழக்கிழமை, ஃபைசர் நிறுவனப் பங்கின் விலை 8.5% அதிகரித்து வர்த்தகமானது.

கடந்த மார்ச் காலாண்டு முடிவில், இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 5.90% குறைந்து ரூ.103.01 கோடியாகப் பதிவு செய்திருந்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.109.47 கோடியாக இருந்தது.

அதேபோல, இந்த நிறுவனத்தின் வருமானமும் ரூ.535.66 கோடியிலிருந்து ரூ.502.01 கோடியாகக் குறைந்துள்ளது. இந்த நிறுவனப் பங்கு எஃப் அண்ட் ஓ வர்த்தகப் பட்டியலில் விரைவில் சேர்க்கப்படலாம் என்று தகவல்.’’

ஷேர்லக்
ஷேர்லக்

அதானி போர்ட்ஸ் ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு நிதியைத் திரட்டப் போகிறதாமே?!

“ஷிப்பிங் மற்றும் கட்டுமானத்துறை நிறுவனமான அதானி போர்ட்ஸ் குஜராத்தின் மிக முக்கியமான சிறப்புப் பொருளாதார மையங்களை எல்லாம் கட்டமைத்துவருகிறது. இந்த நிறுவனத்துக்கு ரூ.18,694.46 கோடி கடன் உள்ளது. இந்தக் கடன்களின் ஒரு பகுதியை அடைக்கும் பொருட்டு, சர்வதேச பாண்ட் வெளியீட்டின் மூலம் ஒரு பில்லியன் டாலர் (சுமார் ரூ.7,547 கோடி) நிதியைத் திரட்ட இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. திரட்டப்படும் இந்த நிதியிலிருந்து, 826 மில்லியன் டாலர் பணத்தைக் கொண்டு, கிருஷ்ணபட்டினம் போர்ட் நிறுவனத்தின் மீதான கடன்களை அடைக்க முடிவு செய்திருக்கிறது. 10, 20 அல்லது 30 ஆண்டுகள் முதிர்வுகொண்ட பாண்ட் விற்பனையானது, நடப்பு ஜூலை மாதத்தில் ஆரம்பிக்க வாய்ப்பு அதிக அளவில் இருக்கிறது. நிறுவனத்தின் இந்த முடிவால், கடந்த வியாழக்கிழமை அன்று இந்த நிறுவனத்தின் பங்கு விலையில் 2% ஏற்றம் காணப்பட்டது.”

ரயில்வே சார்ந்த பங்குகள் விலை உயர்ந்துள்ளனவே?

‘‘தனியார் நிறுவனங்கள் பயணிகள் ரயில்களை இயக்க அனுமதி கொடுக்கவிருப்பதாக இந்திய ரயில்வே அறிவித்தது. இதைத் தொடர்ந்து, ஐ.ஆர்.சி.டி.சி., ரைட்ஸ், ரயில் விகாஸ் ஆகிய ரயில்வே துறை சார்ந்த பங்குகளின் விலை 14% வரை அதிகரித்து வர்த்தகமானது.

ரைட்ஸ் நிறுவனத்தின் பங்கு 14% அதிகரித்து 293 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமானது. ரயில் விகாஸ் நிறுவனத்தின் பங்கு 13.5% அதிகரித்து 21.45 ரூபாய்க்கும், இர்கான் இன்டர்நேஷனல் பங்கு 10.36% விலை அதிகரித்து 99 ரூபாய்க்கும், ஐ.ஆர்.சி.டி.சி பங்கு விலை 7.3% அதிகரித்து 1,463 ரூபாய்க்கும், பி.ஏ.எம்.எல் நிறுவனப் பங்கு விலையானது 3% வரை அதிகரித்து 649 ரூபாய்க்கும் வர்த்தகமானது. இந்தத் திட்டம் மூலம் ரூ.30,000 கோடி தனியார் முதலீடு இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.’’

ஆக்ஸிஸ் பேங்க் ரூ.15,000 கோடி நிதி திரட்டயிருக்கிறதே..?

‘‘ஆக்ஸிஸ் பேங்க்கின் நிர்வாகக்குழு ரூ.15,000 கோடி நிதி திரட்டுவதற்கான திட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ஆக்ஸிஸ் பேங்க், பங்கு வெளியீட்டின் மூலம் அல்லது கடன் சார்ந்த திட்டங்கள் மற்றும் நிதி ஆவணங்களை வெளியிடுவதன் மூலம் ரூ.15,000 கோடி நிதியைத் திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ஜூலை 18-ம் தேதி நடக்கும் வங்கியின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட விருக்கிறது.’’

இந்தியப் பங்குச் சந்தை ஏற்றத்தின் போக்குக்குத் திரும்பியிருக்கிறதே..?

‘‘கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையில், பங்குச் சந்தை ஏற்றம்காண ஆரம்பித்திருக்கிறது. ஃபைசர் மற்றும் பயோ என் டெக் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியால், கண்டுபிடிக்கப் பட்டிருக்கும் தடுப்பூசி பலனளிக்கும் வகையில் இருப்பதும், உலக முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் இந்தியப் பங்குச் சந்தை ஏற்றத்தில் காணப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை அன்று வர்த்தகம் முடியும்போது, சென்செக்ஸ் 429.25 புள்ளிகள் அதிகரித்து 35843.70 என்ற நிலையில் முடிவடைந்தது. அதேபோல, நிஃப்டியும் 121.70 புள்ளிகள் அதிகரித்து, 10551.70 என்ற நிலையில் முடிவடைந்தது. அன்றைய தினத்தில், ஐ.டி., ஆட்டோ, இன்ஃப்ரா மற்றும் எனர்ஜி துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின.’’

கடைசிச் செய்தி: ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் முன்னாள் நிர்வாக அதிகாரியாக இருந்த முரளி ராமகிருஷ்ணன், சவுத் இந்தியன் பேங்கின் சி.இ.ஓ-ஆக நியமிக்கப்படவிருக்கிறார்.

எழுச்சி பெறும் துறைகளும் பங்குகளும்..! ஆன்லைன் பயிற்சி வகுப்பு

ஷேர்லக் : சந்தைச் சரிவை சாதகமாக்கிய எல்.ஐ.சி..! - புதிதாகப் பல பங்குகளில் முதலீடு!

கொரோனாவுக்குப் பிறகு எந்தெந்தத் துறைகள் எழுச்சி பெறும், இதனால் வளர்ச்சி பெறும் நிறுவனங்கள் எவையெவை என்பது குறித்து நாணயம் விகடன் ஆன்லைன் பயிற்சி வகுப்பை நடத்துகிறது. இதில் முன்னணி பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகர் விளக்க உரையாற்றுகிறார்.

பயிற்சி வகுப்பு ஜூலை 26, 2020, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இரண்டு மணி நேரம் நடக்கிறது. இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க கட்டணம் ரூ.350. ஜூலை 25 மாலை 6 மணிக்கு (இந்திய நேரம்) பதிவு நிறைவு பெறுகிறது. முன் பதிவுக்கு: https://bit.ly/2NvntZg

பெண்களுக்கான முதலீடுகள்! விழிப்புணர்வு ஆன்லைன் நிகழ்ச்சி

ஷேர்லக் : சந்தைச் சரிவை சாதகமாக்கிய எல்.ஐ.சி..! - புதிதாகப் பல பங்குகளில் முதலீடு!

‘பெண்களுக்கான முதலீடுகள்..!’ என்ற தலைப்பில் நாணயம் விகடன் முதலீட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறது. நிதிச் சேவையில் சுமார் 20 ஆண்டுகள் அனுபவம் கொண்ட நிதி ஆலோசகர் வித்யா பாலா (இணை நிறுவனர், Primeinvestor.in) பேசுகிறார். ஜூலை 13, 2020 மாலை 4 முதல் 5:30 மணி வரை. அனுமதி இலவசம். முன்பதிவு செய்ய: https://bit.ly/3f5JjOQ

கொரோனாவுக்குப் பிறகு பிசினஸ்... வெற்றி தரும் பாசிட்டிவ் அணுகுமுறை!

ஷேர்லக் : சந்தைச் சரிவை சாதகமாக்கிய எல்.ஐ.சி..! - புதிதாகப் பல பங்குகளில் முதலீடு!

‘கொரோனாவுக்குப் பிறகு பிசினஸ்... வெற்றி தரும் பாசிட்டிவ் அணுகுமுறை’ என்ற நிகழ்ச்சியை நாணயம் விகடன் வழங்குகிறது. கொரோனாவுக்குப் பிறகு தொழில்முனைவோர்கள் பிசினஸை எப்படி அணுகினால் ஜெயிக்க முடியும்..?

வழிகாட்டுகிறார் ‘கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன். நாள்: 6.7.2020 நேரம்: மாலை 6 மணி முதல் 7:30 வரை. அனுமதி இலவசம். பதிவு செய்ய: http://bitly.ws/8VXo

ஷேர்லக் : சந்தைச் சரிவை சாதகமாக்கிய எல்.ஐ.சி..! - புதிதாகப் பல பங்குகளில் முதலீடு!

டிரேடர் பக்கங்கள் மற்றும் எஃப் & ஓ பகுதியைப் படிக்க: https://bit.ly/38pRwLA

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism