Published:Updated:

ஷேர்லக் : தொடர்ந்து அதிகரிக்கும் எஃப்.ஐ.ஐ முதலீடு!

நூற்றுக்கும் மேற்பட்ட பங்குகளில்..!

பிரீமியம் ஸ்டோரி
ரியாக மாலை 4:00 மணிக்கு ஷேர்லக்கிடமிருந்து போன் வந்தது. “இன்னும் அரை மணி நேரத்தில் ஜூம்-ல் முக்கியமான மீட்டிங் இருக்கிறது. சீக்கிரம் பேசி முடிப்போம்” எனப் பரபரக்க, நாம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

கெயில் இந்தியா நிறுவனப் பங்கின் விலை உயரக் காரணம் என்ன?

“மார்ச் காலாண்டில் கெயில் நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. காலாண்டு முடிவு முதலீட்டாளர்கள் எதிர்பார்த்ததைவிடச் சிறப்பாக வந்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் தனித்த நிகர லாபம் 169% அதிகரித்து 3,108 கோடி ரூபாயாக இருக்கிறது. சிறப்பான காலாண்டு முடிவைப் பதிவு செய்திருப்பதால், இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த புதன்கிழமை அன்று சுமார் 2% விலை உயர்ந்து வர்த்தகமானது. நிறுவனத்தின் செயல்பாடு எதிர்பார்ப்பால், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 30% வரை அதிகரித்திருக்கிறது.”

ஷேர்லக் : தொடர்ந்து அதிகரிக்கும் எஃப்.ஐ.ஐ முதலீடு!

பேஜ் இண்டஸ்ட்ரீஸ் காலாண்டு முடிவு மோசமாக இருந்தாலும் பங்கு விலை ஏறியிருக்கிறதே?

“பேஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு முடிவு மோசமாக இருந்தாலும், கடந்த புதன்கிழமை மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 10% வரை அதிகரித்து வர்த்தகமானது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 28% பங்கு விலை ஏற்றம்கண்டுள்ளது. ஆனால், இது கடந்த ஜனவரி மாத விலையைவிட 20% குறைவான விலை. கடந்த மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 11% குறைந்துள்ளது. இருப்பினும், அதேநேரத்தில் சப்ளை செயின் வலுவாக இருப்பதால் பங்கு விலை அதிகரித்துள்ளது.”

பங்கு வெளியிட யூ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்டுக்கு அனுமதி கிடைத்திருக்கிறதே?

“பொதுத்துறையைச் சேர்ந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமான யூ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் புதிய பங்குகளை வெளியிட்டு நிதி திரட்ட (ஐ.பி.ஓ) செபி அமைப்பு அனுமதி அளித்திருக்கிறது. `இந்த நிறுவனம் ரூ.3,000 கோடி அளவுக்கு நிதி திரட்டும்’ எனச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹெச்.டி.எஃப்..சி ஏ.எம்.சி மற்றும் நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்குப் பிறகு பங்கு வெளியீட்டில் களமிறங்கும் மூன்றாவது நிறுவனம் யூ.டி.ஐ ஏ.எம்.சி.

யூ.டி.ஐ ஏ.எம்.சி-யில் தற்போது எஸ்.பி.ஐ., எல்.ஐ.சி ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை தலா 18.5% பங்கு மூலதனத்தைக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த டி ரோவ் பிரைஸ் இன்டர்நேஷனல் 26% பங்குகளை வைத்திருக்கிறது.

2019 டிசம்பரில், எஸ்.பி.ஐ., எல்.ஐ.சி மற்றும் பி.என்.பி ஆகியவை அவற்றின் பங்கு மூலதனத்தை 2020 டிசம்பருக்குள் 10 சதவிகிதத்துக்கும் கீழே குறைக்கும்படி செபி சொன்னது. இந்தியாவில் செயல்படும் `மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஒன்று மற்றொரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் 10 சதவிகிதத்துக்குமேல் பங்கு மூலதனத்தைக்கொண்டிருக்கக் கூடாது’ என்பது செபி விதிமுறை. மொத்தம் 3.90 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படவிருக்கின்றன. எஸ்.பி.ஐ., எல்.ஐ.சி., பேங்க் ஆஃப் பரோடா ஆகியவை தலா 1.05 கோடி பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கி, டி ரோவ் பிரைஸ் இன்டர்நேஷனல் தலா 38 லட்சம் பங்குகளை விற்பனை செய்யவிருக்கின்றன.”

ஊரடங்கு காலத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அதிகரிக்க என்ன காரணம்?

“எல்லாம் தொழில்நுட்பம்தான். பங்குச் சந்தை இறக்கத்தில் இருப்பதால், முன்னணி பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் கூட நல்ல மதிப்பிறக்கத்தைச் சந்தித்துள்ளன. மேலும், ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி மிகவும் குறைந்திருக்கிறது. இதனால், மியூச்சுவல் ஃபண்டில் கடன் சார்ந்த மற்றும் பங்கு சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு அதிகரித்துவருகிறது. புதிதாக லட்சக்கணக்கானவர்கள் இந்த ஊரடங்கு காலத்திலும் முதலீட்டை ஆரம்பித்திருக்கிறார்கள். உதாரணமாக, ஊரடங்கு காலத்தில் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் திட்டங்களில் இ.கே.ஒய்.சி மூலம் 50,000-க்கும் மேற்பட்ட முதன்முறை முதலீட்டாளர்கள் முதலீட்டை மேற்கொண்டிருக்கிறார்கள். ஊரடங்கு காலத்தில் இந்த நிறுவனத்தின் மியூச்சுவல் ஃபண்ட் பரிவர்த்தனைகளில் 97% ஆன்லைன் மூலம் நடந்துவருவதாக அதன் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி ஏ.பாலசுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.”

ஷேர்லக்
ஷேர்லக்

கடந்த ஓராண்டுக் காலத்தில் பல நிறுவனங்களில் எஃப்.ஐ.ஐ-க்களின் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறதே?

“பொருளாதார மந்தநிலை, கொரோனா பரவலால் ஏற்பட்டிருக்கும் தொழில் முடக்கம் ஆகியவற்றையும் தாண்டி இந்திய நிறுவனப் பங்குகளில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்களின் (எஃப்.ஐ.ஐ-க்கள்) முதலீடு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதிலும் குறிப்பாக, ஸ்மால்கேப் மற்றும் மிட் கேப் நிறுவனப் பங்குகளில் முதலீட்டை எஃப்.ஐ.ஐ-க்கள் அதிகரித்துவருகிறார்கள். இதற்கு முக்கியக் காரணம், இவற்றின் விலை மிகவும் இறங்கி கவர்ச்சிகரமாக இருப்பது. எஃப்.ஐ.ஐ-க்கள் முதலீட்டை ஆரம்பித்து, தொடரும் இந்தக் காலகட்டத்தில் பல பங்குகளின் விலை 60-70% வரைகூட விலை வீழ்ச்சிகண்டிருக்கின்றன.

கடந்த ஓராண்டுக் காலத்தில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் எஃப்.ஐ.ஐ-க்கள் ரூ.5,000 கோடிக்கு மேல் முதலீடு செய்திருக்கிறார்கள்.

எஃப்.ஐ.ஐ-க்களின் தொடர் முதலீட்டுப் பட்டியலில் ஃப்யூச்சர் கன்ஸ்யூமர், ஈக்விடாஸ் ஹோல்டிங்ஸ், பென்னார் இண்டஸ்ட்ரீஸ், நியூஜென் சாஃப்ட்வேர், செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ், எம்.எம் ஃபோர்ஜிங்ஸ், கரூர் வைஸ்யா பேங்க், முத்தூட் கேப்பிட்டல் சர்வீசஸ், வொண்டர்லா ஹாலிடேஸ், அவென்யூ சூப்பர்மார்ட்ஸ், ஆர்த்தி டிரக்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ், டாரன்ட் பார்மாசூட்டிக்கல்ஸ் போன்ற நிறுவனங்கள் அடங்கும். `பொருளாதார வளர்ச்சி சரியாகும்போது இந்த நிறுவனங்கள் நல்ல வளர்ச்சி காணும்’ என்ற அடிப்படையில் எஃப்.ஐ.ஐ-க்களின் முதலீடு அமைந்திருக்கிறது. இவற்றில் பல பங்குகள் இப்போதே நல்ல வருமானம் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றன.

ஷேர்லக்
ஷேர்லக்

மிட் மற்றும் ஸ்மால்கேப் இண்டெக்ஸ்களும் ஏற்றம் பெற்றிருக்கின்றனவே?

“இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களில் பி.எஸ்.இ மிட்கேப் இண்டெக்ஸ் 37% ஏற்றம்கண்டிருக்கிறது. அதே நேரத்தில், ஸ்மால்கேப் இண்டெக்ஸ் 40% ஏற்றத்தைச் சந்தித்திருக்கிறது.

மருந்துப் பொருள்களுக்கு அதிக டிமாண்டு இருந்ததால், பார்மா துறை சார்ந்த பங்குகள் 60% வரை ஏற்றம் கண்டிருக்கின்றன. கடந்த மூன்று மாதங்களில் பி.எஸ்.இ 500 பங்குகளில், 33 பங்குகள் மூன்று இலக்கத்தில் ஏற்றத்தைச் சந்தித்திருக்கின்றன. அவற்றில், அதானி கிரீன் எனர்ஜி, வோடாஃபோன் இந்தியா, ரிலையன்ஸ் பவர், ஹாத்வே கேபிள் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ரா ஆகிய பங்குகள் முதல் ஐந்து இடங்களில் இருக்கின்றன. இந்தப் பங்குகளின் விலை சுமார் 200% முதல் 250% வரை ஏற்றம்கண்டுள்ளன.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெளியிடுவதில் மத்திய அரசு மும்முரம் காட்டுகிறதே?!

“கடந்த 2020-21 பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், `பொதுத்துறையை சேர்ந்த எல்.ஐ.சி நிறுவனத்தின் ஒரு பகுதி பங்கு விற்கப்படும்’ என அறிவித்திருந்தார். அதோடு, `ஏர் இந்தியாவின் பங்குகள், பி.பி.சி.எல் நிறுவனப் பங்குகளும் விற்கப்படும்’ என அறிவித்திருந்தார். ஆனால், கொரோனா காரணமாக இவையெல்லாம் தள்ளிவைக்கப்பட்டன.

ஆனால், தற்போது மத்திய அரசு, எல்.ஐ.சி பங்கு வெளியீட்டில் மும்முரமாக இறங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதற்காக, பொதுச் சொத்து மேலாண்மைத்துறை (Department of Public Asset Management) பல்வேறு வங்கிகளிடமும், ஆலோசனை நிறுவனங்களிடமும், நிதி நிறுவனங்களிடமும் பங்கு விற்பனைக்கான ஆலோசனைகளைக் கேட்டுள்ளது. `இந்தியாவிலேயே எல்.ஐ.சி-யின் பொதுப் பங்குகளை விற்பதுதான் மிகப்பெரிய பங்கு விற்பனையாக இருக்கும்’ என எதிர்பார்க்கப்படுகிறது.”

ஷேர்லக் : முதலீட்டு உத்தியை மாற்றிய ஃபண்ட் நிறுவனங்கள்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!

மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் நிறுவனர் பங்குகளை விற்க என்ன காரணம்?

“மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்திலிருந்து, புரொமோட்டர் அந்த நிறுவனத்தில் தனக்கிருந்த 6.03% பங்குகளை 422.58 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். பங்கு ஒன்றுக்கு 1,383.44 ரூபாய் வீதம் 30,54,545 பங்குகளை விற்பனை செய்திருக்கிறார். இந்த விற்பனை மூலமாகக் கிடைக்கும் தொகை மெட்ஸ் அட்வைஸரி எல்.எல்.பி பெற்ற கடனைக் கணிசமாகத் திருப்பிச் செலுத்தப் பயன்படும் என மெட்ரோபோலிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த புதன்கிழமை 3.69% விலை குறைந்து 1,398.85 ரூபாய்க்கு வர்த்தகமானது.”

சுவென் பார்மா நிறுவனப் பங்கின் விலை திடீரென குறைந்திருக்கிறதே..?

“சுவென் பார்மா நிறுவனத்தின் பங்கு விலை, கடந்த புதன்கிழமை வர்த்தகம் முடியும்போது 10% சரிந்து காணப்பட்டது. இந்தப் பங்கின் விலை கடந்த ஜூலை 17-ம் தேதி முதல் 23-ம் தேதி வரையிலான வர்த்தகத்தில் 61% வரை ஏற்றம் கண்டிருக்கிறது. மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 28.1% அதிகரித்து 74.18 கோடி ரூபாயாக இருக்கிறது. இதன் வருமானம் 3.4% அதிகரித்து 184.76 கோடி ரூபாயாக இருக்கிறது.

2019-20-ம் நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் லாபம் மற்றும் வருமானம் முறையே 190.1% மற்றும் 120.7% அதிகரித்தது. எனவே, பங்கின் விலை ஏறுவதற்கான வாய்ப்பிருப்பதாக அனலிஸ்ட்கள் சொல்கிறார்கள்” என்றவர் நேரம் ஆகிவிட்டதால்,, “ அடுத்த வாரம் பேசுவோம்” என்று சொல்லிவிட்டு போனை வைத்தார். சற்று நேரத்தில் `கடைசிச் செய்தி’ என்று குறிப்பிட்டு வாட்ஸ்அப்பில் அவர் அனுப்பியது...

கடைசிச் செய்தி: யெஸ் பேங்க் வழக்கில் சி.பி.ஐ முதல் குற்றப்பத்திரிகைத் தாக்கல்!

“யெஸ் பேங்க் வழக்கில் அதன் இணை நிறுவனர் ரானா கபூர் மற்றும் டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனர்கள்மீது சி.பி.ஐ முதல் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. ரானா கபூர், யெஸ் பேங்க் மூலமாக டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனர்கள் கபில் மற்றும் தீரஜ் வாத்வான் ஆகியோருக்குக் கடன்களை வழங்கி, அதன் மூலம் சலுகைகள் பெற்றிருப்பது சி.பி.ஐ விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதை யடுத்து இவர்கள்மீது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டுள்ளது.’’

சொந்தத் தொழில்: லாபம் சம்பாதிக்கும் சூட்சுமங்கள்!

தொழில் தொடங்கும் முன்னர் எங்கெங்கு பதிவு செய்ய வேண்டும், வங்கிகளிலிருந்து கடன் வாங்க முடியுமா, லாபம் சம்பாதிக்கும் சூட்சுமங்கள் என்னென்ன ஆகியவை குறித்த அடிப்படைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் கற்றுத் தரவே நாணயம் விகடன் ‘நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம் வாங்க..!’ என்ற ஆன்லைன் பயிற்சி வகுப்பை நடத்துகிறது.

ஷேர்லக் : தொடர்ந்து அதிகரிக்கும் எஃப்.ஐ.ஐ முதலீடு!

இந்தப் பயிற்சி வகுப்பை கே.எஸ்.கமாலூதீன் (இயக்குநர், புளூபாரத் எக்சிம் பிரைவேட் லிமிடெட்) நடத்துகிறார்.

ஜூலை 4-ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள கீழ்க்காணும் லிங்க்கில் பதிவு செய்துகொள்ளவும். https://bit.ly/2C5NQT2

எழுச்சி பெறும் துறைகளும் பங்குகளும்..! ஆன்லைன் பயிற்சி வகுப்பு

கொரோனாவுக்குப் பிறகு எந்தெந்தத் துறைகள் எழுச்சி பெறும், இதனால் வளர்ச்சி பெறும் நிறுவனங்கள் எவையெவை என்பது குறித்து நாணயம் விகடன் ஆன்லைன் பயிற்சி வகுப்பை நடத்துகிறது. இதில் முன்னணி பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகர் விளக்க உரையாற்றுகிறார்.

ஷேர்லக் : தொடர்ந்து அதிகரிக்கும் எஃப்.ஐ.ஐ முதலீடு!

பயிற்சி வகுப்பு ஜூலை 26, 2020, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இரண்டு மணி நேரம் நடக்கிறது. இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க கட்டணம் ரூ.350 ஆகும். ஜூலை 25 மாலை 6 மணிக்கு (இந்திய நேரம்) பதிவு நிறைவு பெறுகிறது. முன் பதிவுக்கு: https://bit.ly/2NvntZg

ஷேர்லக் : தொடர்ந்து அதிகரிக்கும் எஃப்.ஐ.ஐ முதலீடு!

டிரேடர் பக்கங்கள் மற்றும் எஃப் & ஓ பகுதியைப் படிக்க: https://bit.ly/3fPynVM

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு