முதல் நாள் இரவே போன் செய்து, “நான் வொர்க் ஃப்ரம் ஹோம்’’ என்றார் ஷேர்லக். ‘‘நாங்களும் அப்படியே’’ என்றோம். ‘‘நல்லது. மாலை 4:30 மணிக்கு போன் செய்யுங்கள்’’ என்றார். அவர் சொன்ன நேரத்துக்கு போன் செய்தோம். உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை தொடர்ந்து இறங்கி, இன்று 11 சதவிகிதத்துக்குமேல் உயர்ந்திருக்கிறதே!

“கடந்த வாரம் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்த காரணத்தால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்று வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. நடப்பு வாரத்திலும் அதே போன்ற சூழல் தொடர்கிறது. நடப்பு வாரத்திலும் தொடர்ந்து நான்கு வர்த்தக நாள்களாகப் பங்கு விலை இறங்கிவந்த நிலையில், கடந்த வியாழன் அன்று 7.87% வரை இறங்கி 892.20 ரூபாய்க்கு வர்த்தகமானது. இது கடந்த ஓராண்டுக்காலத்தில் இந்த நிறுவனப் பங்கின் குறைந்த விலை.கடந்த நான்கு மாதங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 10 லட்சம் கோடியிலிருந்து 5,83,212 கோடியாகச் சரிந்தது. வெள்ளிக்கிழமை அன்று இந்தப் பங்கின் விலை 11% அதிகரித்ததையடுத்து சந்தை மூலதன மதிப்பு ரூ.6,46,732 கோடியாக அதிகரித்திருக்கிறது.”

இந்த இறக்கத்தைப் பயன்படுத்தி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகளில், முகேஷ் அம்பானி குடும்பமே முதலீட்டை அதிகரித்திருக்கிறதே?

“முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 72.31 லட்சம் பங்குகளைத் தன்வசம் வைத்திருந்தார். அதைத் தற்போது 75 லட்சமாக அதிகரித்திருக்கிறார். அவருடைய மனைவியும் தனது 67.96 லட்சம் பங்குகளை 75 லட்சமாக அதிகரித்திருக்கிறார். பிள்ளைகளான ஆகாஷ் மற்றும் இஷா ஆகிய இருவரும் 67.2 லட்சம் பங்குகளை 75 லட்சம் பங்குகள் வரைக்கும் உயர்த்தியிருக்கிறார்கள். மூன்றாவது மகனான ஆனந்திடம் இதுவரை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இரண்டு லட்சம் பங்குகள் மட்டுமே இருந்தன. அதை தற்போது அவர் 75 லட்சமாக அதிகப்படுத்தியிருக்கிறார். முகேஷ் அம்பானியும், அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே அளவில் பங்குகளை வைத்திருப்ப்பது இதுவே முதன்முறை.”
.ஷேர்லக் : சந்தைச் சரிவில் அதிகரித்த முதலீடு!.
அசோக் லேலாண்டு நிறுவனம், ஹிந்துஜா லேலாண்டு நிறுவனத்தில் முதலீடு செய்கிறதே?!

“அசோக் லேலாண்டு நிறுவனம், ஹிந்துஜா லேலாண்டு நிறுவனத்தின் 19% பங்குகளைக் கையகப்படுத்த முடிவுசெய்திருக்கிறது. இதற்கான முதலீட்டுத் தொகை 1,200 கோடி ரூபாய். இந்த அறிவிப்புக்குப் பிறகு அசோக் லேலாண்டு நிறுவனத்தின் பங்கு விலை சரிய ஆரம்பித்தது. கடந்த மார்ச் 19-ம் தேதி வர்த்தகத்தில் 22% குறைந்து 50.15 ரூபாய்க்கு வர்த்தகமானது. அனுமதி வழங்கிய நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் இந்த கையகப்படுத்தும் நடவடிக்கை முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.”

இடைக்கால டிவிடெண்ட் 500% அறிவித்திருக்கிறதே எல் அண்ட் டி நிறுவனம்?

“லார்சன் அண்டு டூப்ரோ (எல் அண்ட் டி), பங்கு முதலீட்டாளர்களுக்கு முதல் இடைக்கால டிவிடெண்ட் 500% அறிவித்தது. அதன்படி, 2 ரூபாய் முகமதிப்புக்கொண்ட பங்கு ஒன்றுக்கு 10 ரூபாய் டிவிடெண்டாக அறிவித்துள்ளது. கடந்த ஒன்பது மாதங்களில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 38% குறைந்திருக்கிறது.”

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தனியார் வங்கிப் பங்குகள், ஐ.டி பங்குகள், கெமிக்கல் நிறுவனப் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனவே?

“பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், தற்போதைய சந்தை இறக்கத்தை முதலீட்டுக்கேற்ற வாய்ப்பாகப் பார்க்கின்றன. அதனால், தனியார் வங்கிப் பங்குகள் மீதும், கெமிக்கல், தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் நுகர்வு சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் மீதும் முதலீடு செய்ய முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஹெச்.டி.எஃப்.சி பேங்க், கோட்டக் மஹிந்திரா பேங்க், பாட்டா இந்தியா மற்றும் ரிலாக்ஸோ (Relaxo) ஆகிய நிறுவனப் பங்குகளை வாங்கியிருக்கின்றன.”

ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பங்கு விலை திடீரென சரிந்ததற்கு என்ன காரணம்?

“கோட்டக் இன்ஸ்டிட்யூஷன்ல் ஈக்விட்டீஸ் நிறுவனம், ஜஸ்ட் டயல் நிறுவனப் பங்குகளை வாங்கச் சொல்லிப் பரிந்துரை செய்திருக்கிறது. அதே நேரத்தில், அதன் இலக்கு விலையை 570 ரூபாயிலிருந்து 470 ரூபாய்க்குக் குறைத்திருக்கிறது. இதனால் முதலீட்டாளர்கள் இந்தப் பங்குகளை அதிக அளவில் விற்க ஆரம்பித்துவிட்டார்கள். கடந்த மார்ச் 19-ம் தேதி அன்று ஒரே நாளில் பங்கின் விலை 15% சரிந்து வர்த்தகமானது. ஆனால், கடந்த வெள்ள அன்று வர்த்தம் முடியும்போது ரூ.16 அதிகரித்து வர்த்தகமானது.”

தனியார் வங்கிப் பங்குகளின் விலை 75% வரைக்கும் வீழ்ச்சி கண்டிருக்கின்றனவே?

“கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியப் பங்குச் சந்தை ஒட்டுமொத்தமாக வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. கூடவே, தனியார் துறையைச் சேர்ந்த யெஸ் பேங்க் பிரச்னையால் இதர தனியார் வங்கிப் பங்குகளும் கணிசமாக விலை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. பிப்ரவரியிலிருந்து இதுவரை இண்டஸ்இண்ட் பேங்க் (-75%), பந்தன் பேங்க் (-60%), ஆர்.பி.எல் (-55%), ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் (-55%), ஐ.டி.பி.ஐ (-54%), ஆக்ஸிஸ் பேங்க் (-45%), ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் (-38%), கோட்டக் மஹிந்திரா பேங்க் (-35%) ஆகிய பங்குகளின் விலை அதிக வீழ்ச்சியைச் சந்திருக்கின்றன. யெஸ் பேங்க் போல, இந்த வங்கிகளிலும் சிக்கல் இருக்கக்கூடும் என்ற பயத்தில்தான் இந்த வங்கிப் பங்குகளின் விலை இந்த அளவுக்கு அதிக இறக்கம் கண்டிருக்கிறது.

`விலை இறங்கி மலிவாக இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் இந்தப் பங்குகளில் எதையும் வாங்கிவிட வேண்டாம். வங்கிகளின் அடிப்படை விஷயங்கள் பலமாக இருந்தால் மட்டுமே அவற்றின் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும்’ என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.”

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு செபி சில சலுகைகளை அறிவித்திருக்கிறதாமே?

“ஆமாம். கொரோனா பாதிப்பு காரணமாக கார்ப்பரேட் நிறுவனங்களின் தினசரிப் பணிகளில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே, கார்ப்பரேட் நிறுவனங்கள் அடுத்த மாதம் முதல் வெளியிடவிருக்கும் நான்காம் காலாண்டு முடிவுகளுக்கான கால அவகாசத்தை ஜூன் 30 வரை அதிகரித்துள்ளது செபி. பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு மேலும் சில சலுகைகளையும் செபி வழங்கியுள்ளது. பங்குப் பரிவர்த்தனைகளுக்கான அரையாண்டு சான்றிதழ் பெறுவதற்கும், காலாண்டு கார்ப்பரேட் நிர்வாகச் செயல்பாடுகள் குறித்த விவரங்களை அளிப்பதற்கும் ஒரு மாத காலம் கூடுதல் அவகாசம் தரப்பட்டுள்ளது. காலாண்டில் முதலீட்டாளர்களின் புகார்கள் குறித்த விவரங்களை அளிப்பதற்கும், காலாண்டு ஷேர் ஹோல்டிங் பேட்டர்ன் விவரத்தைத் தருவதற்கும் மூன்று வார காலம் கூடுதல் அவகாசம் தரப்பட்டுள்ளது.

`கொரோனா தாக்கத்தால் பொருளாதார வளர்ச்சி மேலும் பாதிக்கப்படும்’ என்ற அச்சத்தில் நிறுவனங்கள் இருக்கின்றன.

பங்குச் சந்தையிலும் கடந்த சில வாரங்களாக முதலீட்டாளர்கள் வெளியேறியபடியே இருக்கிறார்கள். எனவே, நிறுவனங்களுக்கிருக்கும் சிக்கலான சூழலைப் புரிந்துகொண்ட செபி இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.”

கொரோனா பாதிப்பால் இந்தியப் பங்குச் சந்தை மூலதனத்தில் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதே?

“கொரோனா தாக்கத்தால் உலகப் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் தொடர்ச்சியாக, இந்தியப் சந்தைகளிலும் கரடியின் போக்கே மேலோங்கியிருக்கிறது. ஜனவரி மாதத்தின் இடைப்பகுதியில் நன்முறையில் செயல்பட்ட இந்தியப் பங்குச் சந்தைகள், பிப்ரவரி 1 பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகு சற்று கட்டுக்குள் வந்த நிலையில், தற்போது வைரஸ் தாக்கத்தால் பெரிய அளவில் இறக்கத்தைச் சந்தித்து வருகின்றன. ஜனவரி 20-ம் தேதி சென்செக்ஸ் வரலாற்று உச்சமாக 42273 புள்ளிகளையும், நிஃப்டி 12430 புள்ளிகளையும் எட்டியிருந்தன.

சென்செக்ஸ் 45000 புள்ளிகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த இரு மாதங்களில் மட்டுமே 13985 புள்ளிகளை இழந்திருக்கிறது.

நிஃப்டியும்கூட 4165 புள்ளிகள் இறங்கியிருக்கிறது. இதன் காரணமாக முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.51 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளி அன்று சென்செக்ஸ் 1627.73 புள்ளிகள் அதிகரித்து 29915.96 புள்ளிகளிலும், நிஃப்டி 482 புள்ளிகள் உயர்ந்து 8745.45 புள்ளிகளிலும் நிலைபெற்றிருக்கின்றன.

பார்தி இன்ஃப்ரா, கெயில், ஓ.என்.ஜி.சி., அல்ட்ரா டெக் சிமென்ட், ஹெச்.யூ.எல் போன்ற பங்குகள் ஏற்றம்கண்டன. யெஸ் பேங்க், ஹெச்.டி.எஃப்.சி பேங்க், இண்டஸ்இண்ட் பேங்க், அதானி போர்ட்ஸ், ஆக்ஸிஸ் பேங்க் போன்றவற்றின் விலை இறங்கிக் காணப்பட்டன. ஐ.டி மற்றும் எஃப்.எம்.சி.ஜி குறியீடுகள் 8%-க்கு மேல் ஏற்றம் கண்டன. மிட் மற்றும் ஸ்மால்கேப் இண்டெக்ஸ்களும் வெள்ளிக்கிழமை 4% ஏறின” என்றவர், ‘‘அடிக்கடி தண்ணீரால் கைகளைக் கழுவிக் கொண்டே இருங்கள்’’ என்றபடி போனை கட் செய்தார்.