Published:Updated:

ஷேர்லக் : என்.பி.எஃப்.சி பங்குகள் உஷார்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

வாராக்கடன் சிக்கல்..!

ஷேர்லக் : என்.பி.எஃப்.சி பங்குகள் உஷார்..!

வாராக்கடன் சிக்கல்..!

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்
ரியாக மாலை 4:30 மணிக்கு கூகுள் ஹேங் அவுட்ஸில் வந்தார் ஷேர்லக். வழக்கமான நல விசாரிப்புக்குப் பிறகு நாம் தயாராக வைத்திருந்த கேள்விகளைக் கேட்கத் தொடங்கினோம்.

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை 10% ஏற என்ன காரணம்?

“பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், நான்காவது காலாண்டில் நல்ல வருமானத்தை எட்டியிருக்கும் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக, கடந்த வியாழன் அன்று அதன் பங்கு விலையில் 10% அளவுக்கு ஏற்றம் ஏற்பட்டது. பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள், வாடிக்கையாளர்களின் அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்வதாலும், கூடுதல் தரத்துடன் தயாரிக்கப்படுவதாலும் அதன் விற்பனை அதிகரித்திருப்பதாக நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இல்லாதபடி பாதுகாப்பான முறையில் பேக்கிங் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஷேர்லக்
ஷேர்லக்

வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இருக்கிறதாமே?

‘‘வோடஃபோன் ஐடியா நிறுவனம் நிதிச் சிக்கலில் மாட்டித் தவிக்கும் சூழலில், இங்கிலாந்திலுள்ள அதன் தாய் நிறுவனமான வோடஃபோன் குரூப், 200 மில்லியன் டாலரை வோடஃபோன் ஐடியா நிறுவனத்துக்கு வழங்கியிருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக, இந்தியாவிலுள்ள 30 கோடி வோடஃபோன் வாடிக்கை யாளர்களுக்கான சேவை பாதிக்காமல் இருப்பதற்காகவும், ஆயிரக்கணக்கான வோடஃபோன் பணியாளர்களுக்கான கொரோனாப் பாதுகாப்புச் செயல்பாடுகளுக்காகவும் தற்போது இந்த நிதியை அளிதிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

வோடஃபோன் ஐடியா நிறுவன விதிமுறைகளின்படி, 2020, செப்டம்பர் மாதத்துக்கு வோடஃபோன் ஐடியா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய தவணையை, தற்போதிருக்கும் சூழலைக் கணக்கில்கொண்டு முன்கூட்டியே வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. இதையடுத்து, வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் பங்கு விலை ஒரே நாளில் 14.9% அதிகரித்தது.”

யூனிலிவர் நிறுவனம், தனது வளர்ச்சிக்கான வழிகாட்டல் மதிப்பீட்டைத் திரும்பப் பெற்றிருக்கிறதே?

“கொரோனா காரணமாக இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு நீடிக்கும் சூழலில், யூனிலிவர் நிறுவனம், 2020-ம் ஆண்டு வளர்ச்சிக்கான வழிகாட்டல் மதிப்பீட்டைத் திருப்பிப் பெற்றிருக்கிறது. 2020-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்குத் தேவை அதிகரித்து, 3% அளவுக்கு வளர்ச்சியை எட்டக்கூடும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய ஊரடங்குச் சூழலில் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நீண்ட காலம் எடுக்கும் எனத் தெரிவதால், 2019, டிசம்பர் மாதத்தில் வெளியிட்ட வழிகாட்டல் மதிப்பீட்டைத் திரும்பப் பெற்றுள்ளது. பொருளாதார மந்தநிலை, கொரோனா பாதிப்பு காரணமாக நான்காம் காலாண்டில், இந்த நிறுவனத் தயாரிப்புகளின் விற்பனையில் வளர்ச்சி பெரிதாக இல்லை. ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா தாக்குதலின் தீவிரத்தன்மை, அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அறிய முடியாததால், சந்தையில் அதனால் ஏற்படும் தாக்கத்தை மதிப்பிட முடியாத சூழல் இருக்கிறது. எனவே, ஏற்கெனவே வெளியிட்ட வழிகாட்டல் மதிப்பீட்டைத் திரும்பப் பெற்றுள்ளது.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வங்கிச்சாரா நிதிச் சேவை நிறுவனப் பங்கு முதலீடு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறதே?

“வெளிநாட்டுப் பங்கு தரகு நிறுவனமான யூ.பி.எஸ் (UBS), வங்கிசாரா நிறுவனப் (என்.பி.எஃப்.சி) பங்குகளின் இலக்கு விலையை சுமார் 10% முதல் 65% வரை குறைத்திருக்கிறது.

மேலும், `இந்த நிறுவனங்களின் வளர்ச்சி குறைவதுடன், வாராக்கடன் முன்பைவிட அதிகரிக்கும் அபாயம் உள்ளது’ என எச்சரித்திருக்கிறது. `பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனப் பங்கின் விலை ரூ.1,600-க்கு குறையும்; அதை விற்கவும்’ என்று பரிந்துரைத்துள்ளது. வெள்ளிக்கிழமை இந்தப் பங்கின் விலை சுமார் ரூ.2,050 என்ற அளவில் வர்த்தகமானது.

நுண்கடன்துறையில், நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்தின் தரம் குறித்த கவலை எழுந்திருப்பதால், உஜ்ஜீவன் நிறுவனத்தின் பங்கின் தரக் குறியீட்டை `நியூட்ரல்’ எனத் தரம் குறைத்துள்ளது. `ஹெச்.டி.எஃப்.சி., ஸ்ரீராம், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, எல் அண்ட் டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ், ஈக்விடாஸ், பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாம்’ என்று சொல்லியிருந்தாலும், இலக்கு விலையைக் கணிசமாகக் குறைத்திருக்கிறது.”

ஷேர்லக்
ஷேர்லக்

தொடர்ந்து இறக்கத்திலிருந்த ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பங்கு விலை ஏறியிருப்பது ஏன்?

‘‘ஜீ என்டர்டெயின்மென்ட் மீடியா நிறுவனத்தின் 51,09,188 பங்குகளை, ஃப்ளோரிடா ரிட்டையர்மென்ட் சிஸ்டம் (எஃப்.ஆர்.எஸ்) நிறுவனம் வாங்கியிருக்கிறது. பங்கு ஒன்றின் விலை ரூ.141.29 என்ற மதிப்பில், ரூ.24.96 கோடிக்கு இந்த விற்பனை நடந்திருக்கிறது. இதையடுத்து கடந்த வியாழன் அன்று, இந்த நிறுவனப் பங்கின் விலையில் 14% ஏற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்காலத்தில் இந்தப் பங்கின் விலை 60% இழப்பைச் சந்தித்திருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கம் முதல் 44.16% இழப்பைச் சந்தித்திருக்கிறது.”

என்.ஐ.ஐ.டி., புது ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டிருக்கிறதாமே?

“என்.ஐ.ஐ.டி நிறுவனத்தின் அமெரிக்கத் துணை நிறுவனம், என்.ஐ.ஐ.டி (யூ.எஸ்.ஏ) இங்க் நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த எட்டெக் நிறுவனத்தின் விர்ச்சுவல் சேவைகளைப் பெறுவதற்காக ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இதற்கான அறிவிப்பு வெளியானதுமே என்.ஐ.ஐ.டி நிறுவனப் பங்கின் விலை வர்த்தக நாளின் இடையே 11.21% ஏற்றத்தை எட்டியது. இந்தப் பங்கு, கடந்த ஓராண்டுக்காலத்தில் 17.83% இழப்பைச் சந்தித்திருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கம் முதலாக 7.79% இழப்பைச் சந்தித்திருக்கிறது.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரிலையன்ஸ் பங்கு விலை வேகமாக ஏற்றம்கண்டு வருகிறதே?

‘‘ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 9.9% பங்குகளை ஃபேஸ்புக் நிறுவனம் 43,574 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பதை அடுத்துதான் இந்தத் தொடர் ஏற்றம். வியாழக்கிழமை பங்கு வர்த்தகத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை 10% அதிகரித்து வர்த்தகமானது. இந்த ஒப்பந்தத்துக்குப் பிறகு 22% அதிகரித்து 1,377 ரூபாய்க்கு வர்த்தகமானது. இது கடந்த 2019, டிசம்பரில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 1,617.55 ரூபாயாக உயர்ந்து காணப்பட்டது. இதுவே இந்த நிறுவனத்தின் 52 வார அதிகபட்ச விலை. ஃபேஸ்புக் முதலீட்டால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் செயல்பாடு இனி நன்றாக இருக்கும் என்பதாலும், நிறுவனத்தின் கடன் சுமை குறையும் என்பதாலும் பங்கு விலை அதிகரிக்கும் வாய்ப்பிருக்கிறது.

தரகு நிறுவனமான ஷேர்கான், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கை வாங்கச் சொல்லி பரிந்துரை செய்திருக்கிறது.

இதன் இலக்கு விலையை 1,710 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. அதேபோல, மோதிலால் ஆஸ்வால் தரகு நிறுவனமும் இலக்கு விலையை 1,589 ரூபாயாக அதிகரித்திருக்கிறது.

யெஸ் பேங்க் பங்குகளை, அதில் முதலீடு செய்த வங்கிகள் விற்று லாபம் பார்த்திருக்கின்றனவே?

‘‘நிதிச் சிக்கலில் சிக்கிய யெஸ் பேங்க்கில் ஆர்.பி.ஐ விதிமுறைகளின்படி பொதுத்துறை வங்கிகளும், பல தனியார் வங்கிகளும் பங்கு மூலதனம் மேற்கொண்டன. அவற்றில் எஸ்.பி.ஐ (ரூ.6,050 கோடி), ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் (ரூ.1,000 கோடி), கோட்டக் மஹிந்திரா பேங்க் (ரூ.500 கோடி), ஃபெடரல் பேங்க் (ரூ.300 கோடி), ஐ.டி.எஃப்.சி பேங்க் (ரூ.250 கோடி) முதலீடு செய்தன. இந்தப் பங்குகளில் 75% பங்குகளை விற்க மூன்றாண்டு லாக்இன் விதிக்கப்பட்டது. இந்த வங்கிகள் பங்கு ஒன்றை ரூ.10-க்கு வாங்கிய நிலையில், பங்கின் விலை ரூ.58.65-க்கு ஏற்றம்காணவே, கோட்டக் மஹிந்திரா பேங்க், ஃபெடரல் பேங்க், ஐ.டி.எஃப்.சி பேங்க் ஆகியவை பங்குகளை விற்று லாபம் பார்த்திருக்கின்றன. கோட்டக் மஹிந்திரா பேங்க் தன் வசமிருந்த யெஸ் பேங்க் பங்குகளில் 9.4%, ஐ.டி.எஃப்.சி பேங்க் 16%, ஃபெடரல் பேங்க் 19.5% பங்குகளை விற்பனை செய்திருக்கின்றன’’ என்றவர், ‘‘ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் ஃபண்டில் நடந்தது சிறு முதலீட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்வதுபோல இருக்கிறது. எல்லாக் கடன் ஃபண்டுகள் மீதும் முதலீட்டாளர்களுக்குச் சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதே என் கவலை’’ என்று சொல்லிவிட்டு, வீடியோவில் டாடா காட்டினார்.

ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன்... ஆறு கடன் ஃபண்டுகள் நிறுத்தம்!

ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், அதன் ஆறு டெப்ட் ஃபண்டுகளை நிறுத்திவைத்திருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு மற்றும் பொருளாதார மந்தநிலையால் பங்குப் பத்திரச் சந்தைகள்போலவே கடன் பத்திரச் சந்தைகளும் சிக்கலைச் சந்தித்துவருகின்றன.

கடன் பத்திரங்களை விற்று பணமாக்குவது மிகவும் கடினமாக இருப்பதோடு, புதிய கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய யாரும் முன்வராத நிலை காணப்படுகிறது. இந்த நிலையில், ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனத்தின் டெப்ட் ஃபண்டுகளில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்களின் நலன் கருதி, தனது ஆறு டெப்ட் மியூச்சுவல் ஃபண்டுகளின் முதலீடுகளை நிறுத்திவைத்திருக்கிறது. அதாவது, ஃப்ராங்க்ளின் இந்தியா லோ டியூரேஷன் ஃபண்ட், டைனமிக் அக்யூரல் ஃபண்ட், கிரெடிட் ரிஸ்க் ஃபண்ட், ஷார்ட் டேர்ம் இன்கம் பிளான், அல்ட்ரா ஷார்ட் பாண்ட் ஃபண்ட் மற்றும் இன்கம் ஆப்பர்ச்சூனிட்டிஸ் ஃபண்ட் ஆகிய ஆறு டெப்ட் ஃபண்டுகளைக் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி முதல் நிறுத்திவைத்திருக்கிறது. இவற்றில் புதிய முதலீடு செய்ய முடியாது. ஏற்கெனவே செய்திருக்கும் பணத்தை சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான் மூலம் மாற்றவோ, சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் மூலம் எடுக்கவோ முடியாது. முதலீட்டாளர்களுக்கு பணம் எப்போது கொடுக்கப்படும் என்பது தெரிவிக்கப்படவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism