Published:Updated:

ஷேர்லக் : ஃபண்ட் மேனேஜர்களும் பங்குகளும்..! - ஏப்ரலில் நடந்த நிகழ்வுகள்!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

கடந்த புதன் அன்று வர்த்தக நாளில், தேசியப் பங்குச் சந்தையிலுள்ள 12 பங்குகள் கடந்த 52 வாரங்களைவிடக் குறைந்த விலையை எட்டியிருந்தன.

ஷேர்லக் : ஃபண்ட் மேனேஜர்களும் பங்குகளும்..! - ஏப்ரலில் நடந்த நிகழ்வுகள்!

கடந்த புதன் அன்று வர்த்தக நாளில், தேசியப் பங்குச் சந்தையிலுள்ள 12 பங்குகள் கடந்த 52 வாரங்களைவிடக் குறைந்த விலையை எட்டியிருந்தன.

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்
டந்த சில வாரங்கள்போலவே இந்த வாரமும் வீடியோ காலில் பேசினார் ஷேர்லக். வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு நாம் குறித்துவைத்திருந்த கேள்விகளைக் கேட்க, பதில் சொல்ல ஆரம்பித்தார்.

ஆர்.இ.சி நிறுவனம் பாண்டுகளை வெளியிடுகிறதே..?

“அனைத்து நிறுவனங்களும் கொரோனா தொற்றால் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்றன. இந்த நேரத்தில் நிதி திரட்டுவதற்குப் பல்வேறு முயற்சிகளை நிறுவனங்கள் மேற்கொண்டுவருகின்றன. அந்த வகையில் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஆர்.இ.சி., சுமார் ரூ.3,773 கோடி மதிப்பிலான சர்வதேசக் கடன் பத்திரங்களை வெளியிடுகிறது. இதற்கான முதிர்வுக் காலம் 2023, மே 19 என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் பத்திரம் லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்இன்டர்நேஷனல் செக்யூரிட்டீஸ் மார்க்கெட் (ஐ.எஸ்.எம்), சிங்கப்பூர் எக்ஸ்சேஞ்ச் (எஸ்.ஜி.எக்ஸ்-எஸ்.டி), இந்தியா இன்டர்நேஷனல் எக்ஸ்சேஞ்ச் மற்றும் எஸ்.எஸ்.இ ஐ.எஃப்.எஸ்.சி-யில் பட்டியலிடப்படுகிறது.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஷேர்லக்
ஷேர்லக்

ஜூபிலான்ட் லைஃப் சயின்சஸ் நிறுவனத்தின் பங்கின் திடீர் விலை உயர்வுக்கு என்ன காரணம்?

“ஜூபிலான்ட் லைஃப் சயின்சஸ் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த வியாழன் அன்று 5% அதிகரித்தது. கோவிட்-19 வைரஸ் நோய்த் தொற்றுக்குத் தரப்படும் ஒருவகை மருந்தைத் தயாரிக்கும் நிறுவனமான கிலீடு (Gilead) உடன் ஜூபிலான்ட் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டிருக்கிறது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் பங்கு விலை உயர்ந்திருக்கிறது. இந்தியா உட்பட 127 நாடுகளில் இந்த மருந்து விற்பனை செய்யப்படுகிறது.”

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த ஏப்ரலில் ஃபண்ட் மேனேஜர்கள் வாங்கிய பங்குகளை முதலீட்டாளர்கள் இப்போது வாங்கலாமா..?

“கோவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் ஃபண்ட் மேனேஜர்கள் பாதுகாப்பான தீம்களைச் சேர்ந்த பங்குகளில் முதலீட்டை அதிகரித் திருக்கிறார்கள். பார்மா, ஹெல்த்கேர், இன்ஷூரன்ஸ் மற்றும் தங்க நகைகளுக்குக் கடன் வழங்கும் நிறுவனப் பங்குகளைத் தேடிப்பிடித்து முதலீடு செய்து வருகிறார்கள். குறிப்பாக, மெட்ரோபொலிஸ் ஹெல்த்கேர், டாக்டர் ரெட்டீஸ், லாரஸ் லேப்ஸ், அப்பாட் இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி லைஃப் இன்ஷூரன்ஸ், முத்தூட் ஃபைனான்ஸ், மணப்புரம் ஃபைனான்ஸ் ஆகிய பங்குகளில் புதிதாக முதலீடு செய்திருக்கிறார்கள். ஐ.டி.சி., பேஜ் இண்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் விப்ரோ, இன்ஃபோசிஸ், என்.டி.பி.சி., பார்தி ஏர்டெல் பங்குகளில் முதலீட்டை அதிகரித்திருக்கிறார்கள்.

அதே நேரத்தில், ஆர்.பி.எல் பேங்க், கோட்டக் மஹிந்திரா பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ லொம்பார்ட், சன் பார்மா, ஐ.சி.டி., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி, டெக் மஹிந்திரா உள்ளிட்ட பங்குகளை விற்றிருக்கிறார்கள்.

ஃபண்ட் மேனேஜர்கள் வாங்கியிருக்கிறார்கள், விற்றிருக்கிறார்கள் என்பதற்காக முதலீட்டாளர்களும் அந்த ஃபண்டை வாங்க வேண்டியதில்லை. காரணம், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் ஃபண்ட் மேனேஜர்கள் அந்தப் பங்குகளை எந்த விலையில் வாங்கியிருக்கிறார்கள், எந்த விலையில் விற்றிருக்கிறார்கள் ஆகிய தகவல்கள் பொதுவெளியில் கிடைப்பது கடினம்.

அதேநேரத்தில், ஒரு ஃபண்ட் மேனேஜர் குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்கை வாங்கியிருக்கும் நிலையில், மற்றொரு ஃபண்ட் மேனேஜர் அந்தப் பங்கை ஏப்ரல் மாதத்தில் விற்றிருக்கிறார். கடந்த ஏப்ரலில் ஐ.டி.சி., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகளை சில ஃபண்ட் மேனேஜர்கள் வாங்கியிருக்கும் நிலையில் சில ஃபண்ட் மேனேஜர்கள் விற்றிருக்கிறார்கள்.

ஏற்கெனவே ஃபண்ட் மேனேஜர்கள் குறிப்பிட்ட பங்குகளை லாபத்தில் விற்றிருக்கும் நிலையில் அந்தக் குறிப்பிட்ட பங்குகளின் விலை இன்னும் ஏறக்கூடும் என்ற கணிப்பில் வேறு ஃபண்ட் மேனேஜர்கள் வாங்கியிருக்கிறார்கள். எது எப்படியிருந்தாலும், சிறு முதலீட்டாளர்கள் தாங்களாகவே அலசி ஆராய்ந்து அல்லது தங்களின் பங்கு ஆலோசகரின் ஆலோசனைப்படி பங்குகளில் முதலீடு செய்வது அல்லது விற்பது லாபகரமாக அமையும்.”

ஷேர்லக்
ஷேர்லக்

வாகனப் பங்குகளின் விலை தற்போது வேகமெடுத்திருக்கிறதே?

“ஊரடங்குத் தளர்வை அடுத்து வாகனப் பங்குகளின் விலை ஏற்றம் காண ஆரம்பித்தி ருக்கிறது. குறிப்பாக, ஹீரோ மோட்டோ கார்ப்., டி.வி.எஸ்., டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, மாருதி சுஸூகி இந்தியா, மதர்சன் சுமி, அசோக் லேலண்ட், அமரராஜா பேட்டரீஸ் மற்றும் பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை ஏறத் தொடங்கியிருக்கிறது.

`ஊரடங்கு முழுமையாக விலக்கிக் கொள்ளப்படும்போது வாகனங்களின் தேவை அதிகரிக்கும். அப்போது இந்த நிறுவனப் பங்குகளுக்குத் தேவை அதிகமாக இருக்கும்; அதிக ரொக்க இருப்புள்ள மாருதி, ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனங்கள் அதிகம் பயனடையும்’ என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.”

கோட்டக் மஹிந்த்ரா பேங்க் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

‘‘கோட்டக் மஹிந்த்ரா வங்கியின் நிகர லாபம் நான்காம் காலாண்டில் 10% குறைந்திருக்கிறது. இருப்பினும், 2019-20-ம் நிதியாண்டுக்கான நிகர லாபம் 22% அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக இந்த வங்கியின் பங்கு விலை 5.31% அதிகரித்து வர்த்தகமானது. நான்காம் காலாண்டில் நிகர லாபம் 1,267 கோடி ரூபாயாக இருக்கிறது. நிகர வட்டி வருமானம் ரூ.3,036 கோடியிலிருந்து ரூ.3,560 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது.

கடந்த ஓராண்டில் இந்த வங்கியின் பங்கு விலை 14.4% வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. நடப்பு ஆண்டின் தொடக்கத்திலிருந்து 29.56% இறக்கத்தைச் சந்தித்து, தற்போது ஏற்றத்தில் வர்த்தகமாகிவருகிறது.’’

அசோக் லேலண்ட் நிறுவனம் ரூ.500 கோடிக்கு பாண்டுகளை வெளியிடுகிறதே!

‘‘மே 14-ம் தேதிக்குப் பிறகு அசோக் லேலண்ட் நிறுவனத்தின் அனைத்துத் தொழிற்சாலைகளும் இயக்கப்படுகின்றன. இது பங்கு முதலீட்டாளர் களிடையே நம்பிக்கையை வரவழைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இந்த நிறுவனம் ரூ.500 கோடிக்கு பாண்டுகளை வெளியிடுகிறது. இதற்கான ஒப்புதலை இந்த நிறுவனத்தின் இயக்குநர்குழு வழங்கியிருக்கிறது. இதனால் இந்த நிறுவனத்தின் பங்கு விலை ஒரே நாளில் 4% ஏற்றம்கண்டிருக்கிறது.’’

எஸ்.பி.ஐ கார்ட்ஸ் பங்கு விலைச் சரிவுக்கு என்ன காரணம்?

“எஸ்.பி.ஐ கார்ட்ஸ் & பேமன்ட்ஸ் நிறுவனத்தின் நான்காவது காலாண்டு முடிவுகள் பாதகமாக வந்ததால், அந்த நிறுவனத்தின் பங்கு விலையில் சரிவு ஏற்பட்டது. நான்காவது காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 66% சரிந்து ரூ.84 கோடியாக உள்ளது. நிதி நிலை முடிவுகள் வெளியானதுமே இந்த நிறுவனத்தின் பங்கின் விலை 2.33% சரிந்தது. இந்த நிறுவனப் பங்கு கடந்த மார்ச் 16-ம் தேதிதான் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. ஆனால், சில நாள்களிலேயே கொரோனா பரவலால் ஏற்பட்ட உலகளாவிய மாற்றத்தால் தடுமாற்றத்தைச் சந்தித்து வருகிறது. எனினும், இந்த நிறுவனத்தின் மொத்த வருமானம், கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.1,983 கோடியிலிருந்து ரூ.2,433 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் தரக்குறியீடு நல்ல நிலையிலேயே இருக்கிறது.

ஹெச்.எஸ்.பி.சி குளோபல் ரிசர்ச் நிறுவனம், எஸ்.பி.ஐ கார்ட்ஸ் & பேமன்ட்ஸ் நிறுவனத்தின் தரக்குறியீட்டை ‘வாங்கலாம்’ எனக் குறிப்பிட்டு, இலக்கு விலையை ரூ.720 என நிர்ணயித்துள்ளது. `கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு அதிகரிக்கும்’ என்று கருதுவதால், இந்த நிறுவனத்தின் தரக்குறியீட்டை உயர்த்தியுள்ளதாகக் குறிப்பிட்டிருக்கிறது.”

பிரமல் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் பாதகமாக வரக் காரணம் என்ன?

“பிரமல் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நான்காவது காலாண்டில் அந்த நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.1,702.59 கோடியாக இருந்தது. கொரோனா தாக்கத்தால் ஏற்படக்கூடிய இழப்பை ஈடுசெய்யக் கூடுதல் தொகையாக ரூ.1,903 கோடியை ஒதுக்கியிருந்தது.

இதனால் மொத்த ஒதுக்கீடு ரூ.2,693 கோடியாக அதிகரித்து வருமான இழப்பு ஏற்பட்டிருக்கிறது. காலாண்டு நிதிநிலை முடிவுகள் பாதகமாக வெளியானதையடுத்து, நிறுவனத்தின் பங்கு விலை ஆரம்பத்தில் 9.99% சரிந்தது. இந்த இறக்கம் மேலும் தொடர்ந்து 13.87% அளவுக்குச் சரிந்தது. கடந்த நிதியாண்டில், இதே காலாண்டில் இந்த நிறுவனம் ரூ.454.63 கோடி ரூபாய் நிகர லாபத்தை ஈட்டியிருந்தது.”

ஒரு டஜன் பங்குகள் 52 வார இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றனவே?

“கடந்த புதன் அன்று வர்த்தக நாளில், தேசியப் பங்குச் சந்தையிலுள்ள 12 பங்குகள் கடந்த 52 வாரங்களைவிடக் குறைந்த விலையை எட்டியிருந்தன.

டெல்டா மேனுஃபேக்சரிங், கிரீன்பேனல் இண்டஸ்ட்ரீஸ், மேக்மா ஃபின்கார்ப், விகாஸ் ப்ரோப்பன்ட் & கிரானைட், சாங்கி இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட 12 நிறுவனங்கள் பெரிய அளவிலான இழப்பைச் சந்தித்தன” என்ற ஷேர்லக், “ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் எல்லாம் சரியாகிவிட்டதாக நினைத்து, அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். எப்போதும் உஷாராகவே இருப்பது நல்லது” என்று சொல்லிவிட்டு, வீடியோவில் டாடா காட்டினார்.

ஷேர்லக் : ஃபண்ட் மேனேஜர்களும் பங்குகளும்..! - ஏப்ரலில் நடந்த நிகழ்வுகள்!

டிரேடர் பக்கங்கள் மற்றும் எஃப் & ஓ பகுதியைப் படிக்க: https://bit.ly/2WTLQ7c

நாணயம் விகடனின் ஆன்லைன் வகுப்புகள்..!

‘கொரோனாவுக்குப் பிறகு பங்குச் சந்தை முதலீட்டில் லாபம் தரும் உத்திகள்!’ என்ற பங்கு முதலீட்டாளர்களுக்கு வழிகாட்டும் ஆன்லைன் பயிற்சியை நாணயம் விகடன் மே 25-ம் தேதி நடத்துகிறது. பயிற்சியாளர்: ஜி.சொக்கலிங்கம், நிறுவனர், ஈக்னாமிக்ஸ் ரிஸர்ச் அண்டு அட்வைஸரி. பயிற்சிக் கட்டணம்: ரூ.350

இதேபோல், ‘ஏற்றுமதி தொழிலில் புதிய வாய்ப்புகள்’ என்ற ஆன்லைன் சிறப்புப் பயிற்சியை மே 30-ம் தேதி நடத்துகிறது. பயிற்சியாளர்: கே.எஸ்.கமாலுதீன், இயக்குநர், புளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட். மேலும் விவரங்களுக்கு: +91 9940415222