Published:Updated:

ஷேர்லக் : எஃப்.ஐ.ஐ-க்கள் முதலீட்டை அதிகரித்த பங்குகள்..! - இரண்டாம் காலாண்டில் முதலீடு..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

நடப்பு நிதியாண்டில் இந்தியப் பங்குச்சந்தையில் எஃப்.ஐ.ஐ-க்கள் செய்த முதலீடு ரூ.35,000 கோடிக்குமேல்!

ஷேர்லக் : எஃப்.ஐ.ஐ-க்கள் முதலீட்டை அதிகரித்த பங்குகள்..! - இரண்டாம் காலாண்டில் முதலீடு..!

நடப்பு நிதியாண்டில் இந்தியப் பங்குச்சந்தையில் எஃப்.ஐ.ஐ-க்கள் செய்த முதலீடு ரூ.35,000 கோடிக்குமேல்!

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்
னிப்புகள் அடங்கிய பார்சலுடன் மாலை 4.30-க்கு வந்து சேர்ந்தார் ஷேர்லக். “அடுத்த வாரம் தீபாவளிக்காக வெளியூர் சென்றுவிட வாய்ப்பிருப்பதால், அட்வான்ஸ் தீபாவளி பரிசாக ஸ்வீட் பாக்ஸ்” எனக் கொடுத்தார். நாம் பெற்றுக்கொண்டு நன்றி சொல்ல, அவர் கேள்விகளைக் கேளுங்கள் என்றார்.

சன்பார்மா பங்கு விலை உயர்வு என்ன காரணம்?

“சன் பார்மா நிறுவனத்தின் விற்பனை கொரோனா நோய்த் தொற்றுக்கு முன் இருந்ததைவிட, அதிகமாக உயர்ந்திருக்கிறது. மேலும், செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகள், எதிர்பார்த்தைவிட நல்லவிதமாக வந்திருக்கிறது. இந்தக் காரணங்களால் கடந்த வார புதன்கிழமை அன்று பங்கின் விலை 6% வரை உயர்ந்து, 515 ரூபாய்க்கு வர்த்தகமானது.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஷேர்லக்
ஷேர்லக்

கிளாண்ட் பார்மா ஐ.பி.ஓ வெளியீடுவது பற்றி..!

“ஃபோசன் நிறுவனத்துக்கு சொந்தமான கிளாண்ட் பார்மா (Gland Pharma) நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.1,250 கோடி நிதி திரட்ட முடிவு செய்திருக்கிறது. இந்தப் பங்கு வெளியீட்டில் 3.49 கோடி பங்குகள் வெளியிடப்படுகின்றன. இதில் ஃபோசன் பார்மா இண்டஸ்ட்ரியல் நிறுவனத்தின்

1.94 கோடி பங்குகளும், கிளாண்ட் செல்ஸஸ் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் 1,00,47,435 பங்குகளும் விற்கப்படுகின்றன. மொத்த பங்குகளில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமானவை தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கும் குறைந்தபட்சம் 35% பங்குகள் சிறு முதலீட்டாளர் களுக்கும் ஒதுக்கப்படும். இந்த ஐ.பி.ஓ வெளியீட்டில் பங்கு ஒன்றின் விலைப் பட்டை ரூ.1,490-1,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வெளியீடு நவம்பர் 9-ம் தேதி ஆரம்பிக்கிறது.”

இந்தத் தேர்தலில் ஜோ பிடன் ஜெயிப்பதற்கு பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக வெளியானதால், உலகம் முழுக்க சற்று இறங்கிய பங்குச் சந்தைகள் மீண்டும் உயரத் தொடங்கின.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

செப்டம்பர் காலாண்டில் எஃப்.ஐ.ஐ-க்கள் இந்தியப் பங்குச் சந்தையில் முதலீட்டைக் கணிசமாக அதிகரித்தது ஏன்?

“பொருளாதார மந்தநிலையிலும் இந்தியப் பங்குச் சந்தை ஏற்றம் கண்டுவருவதற்கு இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்.ஐ.ஐ-க்கள்) தொடர்ந்து முதலீடு செய்து வருவதாகும். நடப்பு 2020-21-ம் நிதியாண்டில் செப்டம்பருடன் முடிந்த காலாண்டில் எஃப்.ஐ.ஐ-க்கள் இந்தியப் பங்குச் சந்தையில் செய்த நிகர முதலீடு ரூ.35,000 கோடிக்குமேல் உள்ளது. அவர்கள் சுமார் 400 நிறுவனப் பங்குகளில் முதலீட்டை அதிகரித்திருக்கிறார்கள். அவற்றில் நூறுக்கும் மேற்பட்ட நிறுவனப் பங்குகளின் விலை, மார்ச் மாத அதிகபட்ச இறக்கத்துக்குப் பிறகு, இரு மடங்குக்கு மேல் விலை அதிகரித்திருக்கிறது. அதானி காஸ், கிளென்மார்க் பார்மா, ஜிண்டால் ஸ்டெய்ன்லஸ், ஜிந்தால் பாலி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, இமாமி, அஃப்லே இந்தியா மற்றும் டிக்சன் டெக்னாலஜிஸ் (Affle India and Dixon Technologies) உள்ளிட்ட நிறுவனப் பங்குகளின் விலை, மார்ச் இறக்கத்திலிருந்து இரு மடங்குக்கு மேல் விலை அதிகரித்திருக்கிறது. பல நிறுவனங்களில் பங்கு 100% - 500% வரைகூட விலை உயர்ந்துள்ளன.

அதிகமாக விலை ஏறிய பங்குகள் பெரும்பாலும் மிட் மற்றும் ஸ்மால்கேப் பிரிவைச் சேர்ந்தவையாக உள்ளன. அதுவும் தரமான நிர்வாகம், வலிமையான வணிகத்தைக் கொண்டவையாக இந்த நிறுவனங்கள் உள்ளன. இதன் அடிப்படையிலேயே எஃப்.ஐ.ஐ-க்கள் இந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்திருப்பதைக் கணிக்க முடிகிறது. நல்ல லாபத்தில் இருக்கும் பங்குகளில் எஃப்.ஐ.ஐ-க்கள் ஃபிராபிட் புக்கிங் மேற்கொள்ள வாய்ப்பிருப்பதால், இந்தப் பங்குகளில் இப்போது புதிதாக முதலீட்டை மேற்கொள்வது ரிஸ்க் என்கிறார்கள் அனலிஸ்ட்கள். முதலீடாளர்களே உஷார்.’’

ஷேர்லக்
ஷேர்லக்

செப்டம்பர் மாதத்தில், தனிப்பட்ட பங்கு முதலீடு சரிந்திருக்கிறதாமே, என்ன காரணம்?

“பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தொழில் விரிவாக்கம், கடன்களை திரும்பச் செலுத்துதல் மற்றும் மூலதனத் தேவைகள் ஆகிவற்றுக்காகப் பங்குகள் வெளியீடு மற்றும் கடன் பத்திரங்கள் வெளியீடு ஆகியவற்றின் மூலம் நிதி திரட்டுவது வழக்கம். அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் தனிப்பட்ட பங்கு முதலீட்டாளர்களுக்கு பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களை ஒதுக்கி ரூ.75,230 கோடியைத் திரட்டியுள்ளன. இதற்கு முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் செய்யப்பட்ட ரூ.1.1 லட்சம் கோடி முதலீட்டுடன் ஒப்பிடும்போது, இது 31% சரிவாகும். ரூ.75,230 கோடியில் கடன் பத்திரங்கள் ஒதுக்கீடு மூலம் ரூ.64,389 கோடியும், பங்குகள் ஒதுக்கீடு மூலம் ரூ.9,022 கோடியும் திரட்டப்பட்டிருக்கிறது. பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கத்தில் இருப்பதால், பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டுவதற்குப் பதில், தனிப்பட்ட பங்கு ஒதுக்கீடு மூலம் நிதித் திரட்டுவதையே பெரும்பாலான நிறுவனங்கள் விரும்புகின்றன. செப்டம்பர் மாதத்தில் புதிய பங்கு வெளியீடு மூலம் ரூ.1,302 கோடி மட்டுமே திரட்டப் பட்டிருக்கிறது.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டாபர் இந்தியா நிறுவனத்தின் காலாண்டு முடிவு எப்படி வந்திருக்கிறது?

“எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்களில் முக்கியமான ஒரு நிறுவனமான டாபர் இந்தியா நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் உள்நாட்டு வணிகம் 16.8% வளர்ச்சி கண்டது எதிர்பார்த்ததைவிட அதிகமாகும். இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் 13.7% உயர்ந்து, ரூ.2,516 கோடியாக அதிகரித்துள்ளது. ஒருங்கிணைந்த நிகர லாபம் 19.5% உயர்ந்து, ரூ.481.7 கோடியாக அதிகரித் துள்ளது.”

ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை உயர்ந்துள்ளதே!

“ஜார்க்கண்டில் உள்ள சக்லா நிலக்கரி பிளாக் ஏலத்தில் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பங்கெடுத்தது. இந்த ஏலத்தை இந்த நிறுவனம் வென்றதையடுத்து இந்த நிறுவனத்தின் பங்கு விலை செவ்வாயன்று 5% வரை உயர்ந்தன. அன்றைய வர்த்தகம் முடியும்போது 179.25 ரூபாய்க்கு வர்த்தகமானது.”

எஸ்.பி.ஐ காலாண்டு முடிவு எப்படி?

“நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கடந்த செப்டம்பர் காலாண்டில் தனித்த நிகர லாபமாக ரூ.4,574 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 51.9% அதிகமாகும். 2019-ல் செப்டம்பர் காலாண்டில் இந்த வங்கி நிகர லாபமாக ரூ.3,012 கோடி ஈட்டியிருந்தது. இதன் மொத்த வருமானம் 3.42% அதிகரித்து, ரூ.75,341.80 கோடியாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.72,850.78 கோடியாக இருந்தது.

இந்த வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ.28,181.5 கோடியாக உயர்ந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 14.56% அதிகமாகும். மேலும், கடந்த காலாண்டில் இந்த வங்கியின் நிகர வட்டி லாப வரம்பு 3.34 சதவிகிதமாக இருந்தது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 3.22 சதவிகிதமாக இருந்தது. கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்த வங்கியின் மொத்த வாராக் கடன் 5.88 சதவிகிதமாகவும், நிகர வாராக்கடன் 2.08 சதவிகிதமாகவும் உள்ளது.”

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் பங்குகளைத் திரும்பப் பெறுவது ஏன்?

“இந்த நிறுவனத்தின் 10 கோடி பங்குகளை அல்லது 6.56% பங்குகளைத் திரும்ப வாங்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கு அந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பங்கு ஒன்றுக்கு ரூ.250 விலை நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இது கடந்த நவம்பர் 4-ம் தேதி வர்த்தக முடிவு விலையான 186.74 ரூபாயைவிட 33.88% அதிகமாகும்.”

ஜே.கே.சிமென்ட் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்துள்ளதே!

“இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் செப்டம்பர் காலாண்டில் 86.90% உயர்ந்து, ரூ.92.93 கோடியாக அதிகரித்திருப்பதாக, தனது செப்டம்பர் காலாண்டு முடிவுகளில் அந்த நிறுவனம் பதிவு செய்திருக்கிறது. இதனால் அந்த நிறுவனத்தின் பங்கு விலை வியாழக்கிழமை வர்த்தகத் தொடக்கத்தின் போது 5.77% வரை அதிகரித்து, 306.95 ரூபாய்க்கு வர்த்தகமானது. இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருமானம் 11.79% அதிகரித்து, ரூ.1,131.74 கோடியாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.1,012.36 கோடியாக இருந்தது.”

அஜந்தா பார்மா பங்குகளைத் திரும்ப பெறுகிறதாமே?

‘‘இந்த நிறுவனம் ரூ. 135.97 லட்சம் மதிப்பிலான 7.35 லட்சம் பங்குகளைத் திரும்ப பெறுவதற்கான முடிவுக்கு, அந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. முதலீட்டாளர்களிட மிருந்து திரும்பப் பெறும் பங்கு ஒன்றுக்கு ரூ.1,850 கொடுக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த வார புதன்கிழமை அன்று வர்த்தகம் முடியும்போது, இந்த நிறுவனத்தின் பங்கு விலை 1,609.95 ரூபாய்க்கு வர்த்தகமானது.”

ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் தனது செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இதன் காலாண்டு முடிவுகள் எதிர்பார்ப்பைவிட நல்ல முறையில் இருந்ததால், இதன் பங்கு விலை 6.64% அதிகரித்து ரூ.418-க்கு வர்த்தக மானது. என்.எஸ்.இ சந்தையில் 6.59% அதிகரித்து ரூ.418-க்கு வர்த்தகமானது. இந்த வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 4,882 கோடியாக அதிகரித்துள்ளது. நிகர வட்டி வருமானம் 16% அதிகரித்து, ரூ.9,366 கோடியாக உள்ளது.”

பங்குச் சந்தை தொடர்ந்து நான்கு நாள்களாக உயர்ந்து வருவது நல்ல விஷயம்தானே!

‘‘எல்லாம் அமெரிக்கத் தேர்தல் முடிவின் எதிரொலிதான். இந்தத் தேர்தலில் ஜோ பிடன் ஜெயிப்பதற்கு பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக வெளியானதால், உலகம் முழுக்க சற்று இறங்கிய பங்குச் சந்தைகள் மீண்டும் உயரத் தொடங்கின. நிஃப்டி 12,100 புள்ளிகளைத் தாண்டி வர்த்தகமானது’’ என்று அமெரிக்கத் தேர்தல் நிலை குறித்து தனது ஐ-போனில் பார்த்தவர், ‘‘இப்போதைய நிலையில் (வியாழன் மாலை) ஜோ பிடன் 264 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறார். மீதமுள்ள இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்துவருகிறது. இதிலிருந்து சிலபல இடங்களில் வெற்றி பெற்று, பெரும்பான்மை இடமான 270 இடங்களைப் பெறுவதில் ஜோ பிடனுக்குப் பிரச்னை இருக்காது. புதிய அமெரிக்க ஜனாதிபதிக்கு நாம் வாழ்த்துகள் சொல்வோம்’’ என்று சொல்லி விட்டு, வீட்டுக்குப் புறப்பட்டார்.

அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்ற ஹைபிரிட் ஃபண்டுகள்!

ஸ்ரீகாந்த் மீனாட்சி , எஸ்.ஆர்.செந்தில் பாபு
ஸ்ரீகாந்த் மீனாட்சி , எஸ்.ஆர்.செந்தில் பாபு

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து, ‘அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்ற ஹைபிரிட் ஃபண்டுகள்!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்த உள்ளன. இதில், மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஸ்ரீகாந்த் மீனாட்சி (Primeinvestor.in), ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் புராடக்ட் ஸ்பெஷலிஸ்ட் (தமிழ்நாடு) எஸ்.ஆர்.செந்தில் பாபு ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சி நவம்பர் 22-ம் தேதி காலை 10.30 - 11.30 மணிக்கு நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்குப் பதிவு செய்ய: https://bit.ly/2TRgMUx

இந்துக் கூட்டுக் குடும்பம் மூலம் வருமான வரி சேமிப்பது எப்படி?

ஷேர்லக் : எஃப்.ஐ.ஐ-க்கள் முதலீட்டை அதிகரித்த பங்குகள்..! - இரண்டாம் காலாண்டில் முதலீடு..!

‘இந்துக் கூட்டுக் குடும்பம் மூலம் வருமான வரியைச் சேமிப்பது எப்படி?’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நாணயம் விகடன் நடத்துகிறது. இந்துக் கூட்டுக் குடும்ப (HUF) அமைப்பை உருவாக்குவதன் மூலம் வருமான வரியைக் கணிசமாக மிச்சப்படுத்த முடியும். அது எப்படி என்ற விரிவான கருத்தரங்கம்தான் இது. இந்த நிகழ்ச்சி நவம்பர் 9 மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நடக்கிறது. கட்டணமில்லா கருத்தரங்கமான இதில் ஆடிட்டர் கோபால் கிருஷ்ண ராஜு (Kgrca.in) சிறப்புரையாற்றுகிறார்.

முன் பதிவுக்கு: https://events.vikatan.com/151-hindu-undivided-family/

ஷேர்லக் : எஃப்.ஐ.ஐ-க்கள் முதலீட்டை அதிகரித்த பங்குகள்..! - இரண்டாம் காலாண்டில் முதலீடு..!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism