Published:Updated:

ஷேர்லக் : ராகேஷ் முதலீடு செய்த பங்குகள்..! - புதிதாக செப்டம்பர் காலாண்டில்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

ஐ.ஓ.பி-யின் நிகர லாபம் ரூ.121 கோடியிலிருந்து தற்போது ரூ.148 கோடியாக அதிகரித்துள்ளது!

டந்த வாரம் சொன்னபடியே, ஷேர்லக் இந்த வாரம் வெளியூருக்குச் சென்றுவிட, நாம் கேள்விகளை அவருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தோம். மாலை 5 மணிக்கு நம் கேள்விகளுக்கான பதில்களை நம் மெயிலுக்கு அனுப்பியிருந்தார்.

தீபாவளி பரிசாக பி.டி.சி இந்தியா நிறுவனம் இடைக்கால டிவிடெண்டை அறிவித்திருக்கிறதே?

“பி.டி.சி இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டம் அண்மையில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு நடப்பு நிதியாண்டுக்கான இடைக்கால டிவிடெண்டாக 2 ரூபாய் வழங்குவதாக முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் பங்கு விலை நவம்பர் 10-ம் தேதி 3% அதிகரித்து வர்த்தகமானது.”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஷேர்லக் : ராகேஷ் முதலீடு செய்த பங்குகள்..! - புதிதாக செப்டம்பர் காலாண்டில்..!

கொரோனா காலத்திலும் சில துறைகளின் செயல்பாடுகள் சிறப்பான முறையில் அமைந்திருப்பதற்கு என்ன காரணம்?

“கடந்த மார்ச் முதல் நவம்பர் மாதம் 9-ம் தேதி வரையில் ஹெல்த்கேர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தி ஆகிய மூன்று துறைகளும் முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானத்தை ஈட்டித் தந்திருக்கின்றன. கொரோனா நோய்த்தொற்று பரவல் காலத்தில் மற்ற துறைகளைவிடவும் இந்த மூன்று துறை சார்ந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததே இதற்குக் காரணம். ஹெல்த்கேர், தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் எரிசக்தி நிறுவனப் பங்குகள் முறையே 40%, 35% மற்றும் 15% ஏற்றத்தைச் சந்தித்திருக்கின்றன.”

ஈ.ஐ.டி பாரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை திடீரென அதிகரிக்க என்ன காரணம்?

“இந்த நிறுவனம் தனது செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பிறகு, இந்த நிறுவனப் பங்கு விலை 3% வரை அதிகரித்து வர்த்தகமானது. இந்த நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு முடிவின்படி, லாபம் 317.8 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 181.6 கோடி ரூபாயாக இருந்தது. இதன் வருமானம் 5,675 கோடி ரூபாயிலிருந்து, 5,836.2 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அன்றைய தின வர்த்தகத்தில் பங்கு விலை 9.05 ரூபாய் அதிகரித்து, 294.90 ரூபாய்க்கு வர்த்தகமானது.”

ஐநாக்ஸ் லீசர் நிறுவனம் நிதி திரட்டுவது ஏன்?

“இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு தகுதி வாய்ந்த முதலீட்டாளர்களிடமிருந்து (க்யூ.ஐ.பி) நிதி திரட்ட அனுமதி வழங்கியிருக்கிறது. பங்கு ஒன்றுக்கு 263.10 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நவம்பர் 10-ம் தேதி நிறுவனத்தின் இந்த நிறுவனப் பங்கின் விலை 5% வரை அதிகரித்து வர்த்தகமானது.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நம் ஊர் ஐ.ஓ.பி வங்கி நிதிநிலையில் தொடர்ந்து மேம்பட்டு வருவது கண்டு முதலீட்டாளர்கள் ஆச்சர்யப் பட்டிருக்கிறார்களே..!

“2020 ஜூன் மாதத்துடன் முடிந்த நிதி காலாண்டில் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்கின் (ஐ.ஓ.பி) நிகர லாபம் ரூ.121 கோடியாக இருந்தது, செப்டம்பர் காலாண்டில் ரூ.148 கோடியாக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் வழங்கப்பட்ட மொத்த கடன்கள் ரூ.1,31,565 கோடியிலிருந்து ரூ.1,35,469 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்தம் திரட்டப்பட்ட டெபாசிட்டுகள் ரூ.2,25,546 கோடியிலிருந்து ரூ.2,29,607 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கியின் மொத்த வணிகமும் ரூ.4,40,609 கோடியிலிருந்து ரூ.4,60,034 கோடியாக அதிகரித்திருக்கிறது.”

ஷேர்லக்
ஷேர்லக்

பங்குச் சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா புதிதாக இரண்டு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்திருக்கிறாரே?

“பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் போர்ட் ஃபோலியோவின் மார்ச் இறக்கத்திலிருந்து மதிப்பு 50 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்து உள்ளது. அவர் செப்டம்பர் காலாண்டில் ஏழு நிறுவனப் பங்குகளில் முதலீட்டை அதிகரித்திருக்கிறார்.

டாடா குழுமத்தின் டைட்டன், இந்தியன் ஹோட்டல்ஸ் மற்றும் ராலீஸ் இந்தியா நிறுவனப் பங்குகளில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஏற்கெனவே முதலீடு செய்திருக்கிறார். செப்டம்பர் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் பங்கில் புதிதாக முதலீடு செய்திருக்கிறார். மொத்தம் நான்கு கோடிப் பங்குகளை வாங்கி யிருக்கிறார். இவரின் மனைவி ரேகா, வா டெக் வாபேக் நிறுவனப் பங்கில் முதலீடு செய்திருக் கிறார். மொத்தம் 50 லட்சம் பங்குகளை வாங்கி யிருக்கிறார். ஜூன் 30-லிருந்து இந்த நிறுவனப் பங்குகளின் விலை முறையே சுமார் 40% மற்றும் 80% விலை ஏற்றம் கண்டிருக்கின்றன.

50,000 டைட்டான் பங்குகளை ரேகா விற்று லாபம் பார்த்திருக்கும் நிலையில், ராகேஷ் தன்வசம் இருக்கும் இந்த நிறுவனப் பங்குகளில் எந்த மாற்றமும் செய்யாமல் வைத்திருக்கிறார். ராகேஷ், லூபின், என்.சி.சிம் அக்ரோடெக் ஃபுட்ஸ், டெல்டா கார்ப், ஜூபிளியன்ட் லைஃப் சயின்சஸ், டிவி18 பிராட்காஸ்ட் ஆகிய நிறுவனப் பங்குகளில் செப்டம்பர் காலாண்டில் முதலீட்டை அதிகரித்திருக்கிறார். அதே நேரத்தில், ஃபெடரல் பேங்க், எஸ்கார்ட்ஸ், பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனப் பங்குகளில் செப்டம்பர் காலாண்டில் ராகேஷ் முதலீட்டைக் குறைத்திருக்கிறார்.”

ராகேஷ் ஜுன்ஜுன் வாலாவின் போர்ட் ஃபோலியோவின் மதிப்பு மார்ச் இறக்கத்திலிருந்து 50% மேல் அதிகரித்து உள்ளது. செப்டம்பர் காலாண்டில் ஏழு பங்குகளில் முதலீட்டை அதிகரித்திருக்கிறார்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஃபைசர் பங்கு விலை உயர்வுக்கு என்ன காரணம்?

“கொரோனா வைரஸுக்குத் தடுப்பூசி கண்டு பிடித்துவரும் நிறுவனங்களுள் ஒன்றான ஃபைசர் நிறுவனம், தான் கண்டுபிடித்திருக்கும் தடுப்பூசி 90% பலனளிக்கும் வகையில் இருப்பதாகத் தெரிவித்திருந்தது. இதனால் அந்த நிறுவனத்தின் பங்கு விலை நவம்பர் 10-ம் தேதி 13% வரை அதிகரித்து வர்த்தகமானது. அன்றைய தினத்தில் 656.10 ரூபாய் அதிகரித்து, 5,573.95 ரூபாய்க்கு வர்த்தகமானது. 52 வார அதிகபட்ச விலையான 5,875 ரூபாயை இந்தப் பங்கு விலை தொட்டது.”

புதிய நிறுவனம் ஒன்றை டி.சி.எஸ் வாங்குகிறதே?

“போஸ்ட்பேங்க் சிஸ்டம்ஸ் ஏ.ஜி நிறுவனம் டாய்ச் வங்கிக்கு ஐ.டி சேவைகளை வழங்குகிறது. இந்த நிறுவனத்தின் 100% பங்குகளை டி.சி.எஸ் கையகப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டிருக் கிறது. இந்தக் கையகப்படுத்தல் தொடர்பான விஷயங்கள் 2020 டிசம்பருக்குள் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் போஸ்ட்பேங்க் சிஸ்டம்ஸ் ஏ.ஜி–யின் 1,500 பணியாளர்கள் டி.சி.எஸ் நிறுவனத்தின் பணியாளர்களாக மாறுவார்கள். இந்தக் கையகப்படுத்தல், ஜெர்மனியில் டி.சி.எஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.”

ஹெச்.சி.எல் டெக்னாலஜி நிறுவனத்துக்கு வந்திருக்கும் முதலீடு விஷயம் பற்றிச் சொல்லுங்கள்..!

“ஹெச்.சி.எல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஹெச்.சி.எல் டெக்னாலஜி நிறுவனத்தின் 45.85 லட்சம் பங்குகளை வாமா சுந்தரி இன்வெஸ்ட்மென்ட் (டெல்லி) நிறுவனம் வாங்கி இருக்கிறது. இந்த விற்பனையில் பங்கு ஒன்றின் விலை 852 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.390.64 கோடி.

செப்டம்பர் 2020 காலாண்டு அடிப்படையில், ஹெச்.சி.எல் கார்ப்பரேஷன் மற்றும் வாமா சுந்தரி இன்வெஸ்ட்மென்ட்ஸ் முறையே ஹெச்.சி.எல் டெக்னாலஜி நிறுவனத்தில் 0.34% மற்றும் 43.22% பங்குகளை வைத்திருக்கின்றன.”

அமர் என்டர்பிரைசஸ் பங்கு விலை ஒரே நாளில் 6% ஏன் குறைந்தது?

“அமர் என்டர்பிரைசஸ் செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இந்த நிறுவனத்தின் விற்பனை 34.55% குறைந்து, 407.93 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 623.24 கோடி ரூபாயாக இருந்தது. அதேபோல, நிறுவனத்தின் நிகர லாபம் 85.9% குறைந்து, 1.66 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 11.77 கோடி ரூபாயாக இருந்தது. மோசமான காலாண்டு முடிவுகளால், நவம்பர் 10-ம் தேதி 6% குறைந்து, 2,161.05 ரூபாய்க்கு வர்த்தகமானது. இந்த நிறுவனத்தின் நிறுவனர்கள் நிறுவனத்தில் தங்கள் பங்கு மூலதனத்தைக் குறைத்து வருகிறார்கள். மேலும், நிறுவனத்தின் லாப வரம்பு குறைந்து வருவதால், நிகர லாபம் குறைந்து வருகிறது. இந்த நிறுவனப் பங்கில் சிறு முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.”

அசோக் லேலாண்டு நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் எப்படி வந்திருக்கிறது?

“செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர இழப்பு 96.23 கோடி ரூபாய். இது கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ரூ.69.95 கோடியாக இருந்தது. அதேபோல, ஒருங்கிணைந்த வருமானமும் 3,852.84 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 5,096.13 கோடி ரூபாயாக இருந்தது. இதன் காரணமாக, நவம்பர் 10-ம் தேதி அசோக் லேலாண்டு நிறுவனத்தின் பங்கு விலை 1.47% குறைந்து, 83.70 ரூபாய்க்கு வர்த்தகமானது.”

டிவிஸ் லேபாரட்டரீஸ் பங்கு விலை உயர்ந்திருக்கிறதே?

“டிவிஸ் லேபரட்டரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம் செப்டம்பர் காலாண்டில் 45.63% அதிகரித்துள்ளது. இதனால் பங்கு விலை 4% வரை அதிகரித்தது. அன்று 52 வார அதிகபட்ச விலையான 3,461.8 ரூபாயையும் தொட்டிருக் கிறது. மேலும், இந்த பங்கின் விலை ஒரு வருடத்தில் 99.62% அதிகரித்துள்ளது மற்றும் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து 83.86% உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து தினத்தில் மட்டும் 10.71% அதிகரித்து வர்த்தகமாகியிருக்கிறது.”

நீண்ட நாள்களாக இறக்கத்திலிருந்த யெஸ் பேங்க் விலை உயர என்ன காரணம்?

“யெஸ் பேங்க் கடன் திட்டங்களுக்கான ரேட்டிங்கை கேர் ரேட்டிங் நிறுவனம் அதிகப்படுத்தியிருக்கிறது. அது யெஸ் பேங்கின் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பாண்டுகளுக்கு ‘CARE B’ என்ற ரேட்டிங்கிலிருந்து ‘CARE BBB’ என்ற ரேட்டிங்குக்கு மாற்றியுள்ளது. இதன் காரணமாக இந்த வங்கியின் பங்கு விலை, நவம்பர் 10-ம் தேதி சுமார் 5% அதிகரித்தது” என்றவர், ‘‘ஹேப்பி தீபாவளி’’ சொல்லி முடித்திருந்தார்!

அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்ற ஹைபிரிட் ஃபண்டுகள்!

ஸ்ரீகாந்த் மீனாட்சி , எஸ்.ஆர்.செந்தில் பாபு
ஸ்ரீகாந்த் மீனாட்சி , எஸ்.ஆர்.செந்தில் பாபு

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து, ‘அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்ற ஹைபிரிட் ஃபண்டுகள்!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்த உள்ளன. இதில், மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஸ்ரீகாந்த் மீனாட்சி (Primeinvestor.in), ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் புராடக்ட் ஸ்பெஷலிஸ்ட் (தமிழ்நாடு) எஸ்.ஆர்.செந்தில் பாபு ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சி நவம்பர் 22-ம் தேதி காலை 10.30 - 11.30 மணிக்கு நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்குப் பதிவு செய்ய: https://bit.ly/2TRgMUx

வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்களிடமிருந்து முதலீட்டைத் திரட்டுவது எப்படி?

ஷேர்லக் : ராகேஷ் முதலீடு செய்த பங்குகள்..! - புதிதாக செப்டம்பர் காலாண்டில்..!

‘ஸ்டார்ட்அப்... வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்களிட மிருந்து முதலீட்டைத் திரட்டுவது எப்படி?’ என்ற கட்டணமில்லா ஆன்லைன் நிகழ்ச்சி ஒன்றை 16.11.2020 அன்று மாலை 6.30 - 7.30 மணிக்கு நாணயம் விகடன் நடத்தவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கேப்பிடல் மார்க்கெட் சர்வீசஸ் நிறுவனத்தின் நிறுவனர் சிவக்குமார் சிறப்புரை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய: https://bit.ly/35eLYDn