Published:Updated:

ஷேர்லக் : ஃபண்ட் நிறுவனங்கள் வாங்கிய பங்குகள்..! - ஐ.டி, பேங்க் பங்குகளுக்கு முன்னுரிமை..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

குறுகியகால நஷ்டங்களைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் சந்தையில் முதலீடு செய்ய வேண்டியதே இல்லை!

ஷேர்லக் : ஃபண்ட் நிறுவனங்கள் வாங்கிய பங்குகள்..! - ஐ.டி, பேங்க் பங்குகளுக்கு முன்னுரிமை..!

குறுகியகால நஷ்டங்களைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் சந்தையில் முதலீடு செய்ய வேண்டியதே இல்லை!

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்
மாலை சரியாக 4 மணிக்கு நம் அலுவல கத்துக்கு வந்த ஷேர்லக், ‘‘சபாஷ், வாசகர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவதில் நீர் கில்லிதான். நாணயம் விகடன் அச்சு இதழ் தமிழகம் முழுக்க சனிக்கிழமை அன்றே வெளியாவதைத் தொடர்ந்து, ஆன்லைனிலும் அதே நாளில் வெளியிட்டு வருவது மகிழ்ச்சி’’ என்றவரிடம் நாம் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினோம்.

இந்தியாவின் ஜி.டி.பி குறித்து ஐ.நா கணித்திருக்கிறதே?

“ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தக மேம்பாட்டு அமைப்பு நடப்பு 2020–ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) மைனஸ் 5.9 சதவிகிதமாக இருக்கும் எனச் சொல்லி யிருக்கிறது. அதேநேரத்தில், 2021–ம் ஆண்டில் ஜி.டி.பி வளர்ச்சி 3.9 சதவிகிதமாக இருக்கும் என்றும் சொல்லியிருக்கிறது. கொரோனாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பாதிப்பு உலக அளவில் மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக ஐ.நா அமைப்பு சொல்லியிருக்கிறது நடப்பு 2020–ம் ஆண்டில் உலக ஜி.டி.பி வளர்ச்சி மைனஸ் 4.3 சதவிகிதமாக இருக்கும் என அது கணித்திருக்கிறது.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஷேர்லக் : ஃபண்ட் நிறுவனங்கள் வாங்கிய பங்குகள்..! - ஐ.டி, பேங்க் பங்குகளுக்கு முன்னுரிமை..!

மியூச்சுவல் ஃபண்ட் டிரஸ்ட்டிகளுக்கு பிரத்யேக அதிகாரிகளை நியமிக்க செபி காலக்கெடு கொடுத்திருப்பது பற்றி..?

“இந்தியப் பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் கட்டுப்பாட்டு அமைப்பான செபி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் பல்வேறு நடவடிக்கைகளைக் கண்காணிப் பதற்காக, மியூச்சுவல் ஃபண்ட் டிரஸ்ட்டிகள் பிரத்யேக அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. இதற்கு இறுதித் தேதியாக அக்டோபர் 1-ம் தேதியை செபி வழங்கியிருந்தது.

ஆனால், இந்தக் கால அவகாசத்தை ஜனவரி 1, 2021 வரை ஒத்திவைத்திருக்கிறது. நியமிக்கப்படும் அதிகாரி, நிதி மற்றும் நிதிச் சேவைகள் தொடர்பான துறையில் குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் எனவும் செபி சொல்லியிருக்கிறது.”

அதிக விலை கொண்ட பங்குகள் அதிக வருமானம் கொடுக்க என்ன காரணம்?

“பி.எஸ்.இ பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளில், சுமார் 30 பங்குகளின் விலை கடந்த மார்ச் மாதத்தில் 3,000 ரூபாய்க்கும் இருந்தன. இவற்றில் சில பங்குகள், கடந்த ஆறு மாதத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகள் குறைந்தபோதும், இரட்டை இலக்க வருமானத்தைப் பதிவு செய்துள்ளன. டிக்ஸான் டெக்னாலஜி (இந்தியா), பாயர் கார்ப். சயின்ஸ், பாரத் ரசயன், அதுல், புரோக்டர் அண்டு காம்ப்லே ஹெல்த், ஹனிவெல் ஆட்டோமேஷன் இந்தியா மற்றும் மாருதி சுஷூகி இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடந்த மார்ச் 23-ம் தேதி விலையுடன் ஒப்பிடும்போது இப்போது 50 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்திருக்கிறது. இதில் அதிகபட்சமாக டிக்ஸான் டெக்னாலெஜி இந்தியா நிறுவனத்தின் பங்கு 165% அதிகரித்து 8,565 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது.’’

இறங்கிய சந்தை மீண்டும் உயரவே செய்யும். ஐந்து, பத்து வருடம் என நீண்டகாலத்தில் முதலீடு செய்பவர்கள் இந்தக் குறுகியகால இறக்கத்தைக் கண்டு கவலைப்பட வேண்டியதில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டெலிகாம் நிறுவனங்களின் பங்கு விலை திடீர் சரிந்ததன் பின்னணியைச் சொல்லுங்கள்.

‘‘டெலிகாம் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய போட்டியாளராக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ, கடந்த செப்டம்பர் 23-ம் தேதி பலவிதமான போஸ்ட்பெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இதன்பிறகு, மற்ற தொலைத்தொடர்பு பங்குகளான பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் பார்தி இன்ஃப்ராடெல் ஆகியவை வீழ்ச்சியைச் சந்தித்தன. அன்றைய வர்த்தகத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்கு விலை 8% குறைந்து, 433.45 ரூபாய்க்கு வர்த்தகமானது. அதேபோல, வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் பங்கு விலை 9 சதவிகிதமும், பார்தி இன்ஃப்ராடெல் நிறுவனத்தின் பங்கு விலை 8.57 சதவிகிதமும் வீழ்ச்சியைச் சந்தித்தன.”

ஷேர்லக்
ஷேர்லக்

கெம்கான் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் புதிய பங்கு வெளியீடு பற்றி...

“கெம்கான் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் நிறுவனம், கடந்த செப்டம்பர் 21-ம் தேதி புதிய பங்கு வெளியீட்டில் (ஐ.பி.ஓ) வெளியிட்டது. மூன்று நாள்கள் நீடித்த இந்தப் பங்கு வெளியீட்டில், கடைசி தேதியான செம்டம்பர் 23-ம் தேதி, வெளியீட்டு அளவைவிட 149.3 மடங்கு அதிக பங்குகள் கேட்டு முதலீட்டாளர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். அதாவது, இந்தப் பங்கு வெளியீட்டில் 65.59 லட்சம் பங்குகள் மட்டுமே வெளியிடப் படுகின்றன. ஆனால், முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வத்தினால், 97.94 லட்சம் பங்குகளுக்குத் தேவை காணப்பட்டது. இதில் சிறு முதலீட்டாளர்கள் 41.2 மடங்கும், நிறுவன முதலீட்டாளர்கள் 113.53 மடங்கும் பங்குகள் வேண்டி விண்ணப்பித்திருக்கிறார்கள்.”

மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ் பங்கு விலை உயர்ந்திருப்பது ஏன்?

“புரோபிலீன் கிளைகோல் (Propylene Glycol) திறனை அதிகரிக்கும் திட்டத்துக்கு நிறுவனம் ஒப்புதல் அளித்ததையடுத்து, செப்டம்பர் 23-ம் தேதி அன்று மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ் பங்கு விலை 3% அதிகரித்தது. சுமார் 150 கோடி ரூபாய் முதலீட்டில், தற்போதுள்ள 22,000 டி.பி.ஏ-விலிருந்து 48,000 டி.பி.ஏ கூடுதலாக 70,000 டி.பி.ஏ-ஆக புரோபிலீன் கிளைகோலின் திறனை அதிகரிக்கும் திட்டத்துக்கு நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விரிவாக்கம் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்பட உள்ளது.”

யூ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ஐ.பி.ஓ பற்றி..!

“யூ.டி.ஐ ஏ.எம்.சி நிறுவனம் வருகிற செப்டம்பர் 29-ம் தேதி ஐ.பி.ஓ வெளியிடுகிறது. அக்டோபர் 1-ம் தேதி பங்கு வெளியீடு நிறைவு பெறுகிறது. பங்கின் விலை வியாழக்கிழமை வரை நிர்ணயிக்கப்படவில்லை. இந்த ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம் 3,000 கோடி ரூபாய் நிதி திரட்ட இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இந்த வெளியீட்டில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா மற்றும் டி ரோவ் பிரைஸ் இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள், யூ.டி.ஐ ஏ.எம்.சி-யில் கொண்டுள்ள 3,89,87,081 பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்தப் பங்கு வெளியீட்டில் யூ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கு சுமார் இரண்டு லட்சம் பங்குகள் ஒதுக்கப் பட்டுள்ளன. அளிக்கப்பட்ட பங்கு மூலதனத்தில் குறைந்தபட்சம் 30.75% பங்குகள் பொதுமக்களுக்கு வெளியிடப்பட உள்ளன. இந்தப் பங்குகள் பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ-யில் பட்டியலிடப்பட உள்ளன.

யூ.டி.ஐ ஏ.ம்.எம்.சி ஐ.பி.ஒ வரும் அதே செப்டம்பர் 29-ம் தேதி அன்று இன்னொரு நிறுவனமும் ஐ.பி.ஓ வெளியிடவுள்ளது. அரசுக்குச் சொந்தமான மசோகான் டெக் (Mazagon dock) நிறுவனத்தின் 15.17 பங்குகளை ஐ.பி.ஓ-வில் வெளியிட்டு, ரூ.444 கோடியைத் திரட்டவிருக்கிறது. ஒரு பங்கின் விலை ரூ.135 - 145 வரை இருக்கும் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

நடப்பு 2020–ம் ஆண்டில் இதுவரை ஒன்பது புதிய பங்கு வெளியிடப்பட்டுள்ளன. எஸ்.பி.ஐ கார்டு, ரோசாரி பயோடெக், மைண்ட்ஸ்பேஸ் பிசினஸ் பார்க்ஸ் ரெய்ட், ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் டெக்னாலஜிஸ், ரூட் மொபைல், கேம்ஸ், கெம்கான் ஸ்பெஷல்பு கெமிக்கல்ஸ், ஏஞ்சல் புரோக்கிங் மற்றும் லிகிதா இன்ஃப்ரா போன்ற நிறுவனங்கள் ஐ.பி.ஓ வெளியிட்டு நிதி திரட்டியிருக்கின்றன.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீடு தொடர்கிறதே?

“ரிலையன்ஸ் ஜியோவுக்குப் பிறகு, ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகிறார்கள். கடந்த செப்டம்பர் 9-ம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த சில்வர்லேக் நிறுவனம் 7,500 கோடி ரூபாயை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து 1.75% பங்குகளை வாங்கியது. தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு நிறுவனமான கே.கே.ஆர் 5,500 கோடி ரூபாய் முதலீடு செய்து, 1.28% பங்குகளை வாங்குகிறது.

செப்டம்பர் 23-ம் தேதி இந்த அறிவிப்பு வெளியானதும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கின் விலை 3% அதிகரித்து வர்த்தகமானது. முகேஷ் அம்பானியின் முடிவுகளால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் என முதலீட்டாளர்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். இதனால் இந்த நிறுவனப் பங்கு முதலீட்டில் அவர்களிடம் ஆர்வம் அதிகரித்துக் காணப்படுகிறது.”

ஷேர்லக்
ஷேர்லக்

ஃபண்ட் நிறுவனங்கள் ஐ.டி, பேங்க் பங்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து வாங்கியிருக்கின்றனவே?

“இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஆகஸ்ட் மாதத்தில் முதலீடு செய்த பங்குகள் மற்றும் விற்ற பங்குகள் விவரம் வெளியாகி யிருக்கிறது. தகவல் தொழில்நுட்பம், வங்கிப் பங்குகளை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் வாங்கியுள்ளன.

அதுவும் லார்ஜ்கேப் நிறுவனப் பங்கு களில்தான் முதலீட்டாளர்கள் அதிக முதலீட்டை மேற்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, பந்தன் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், விப்ரோ மற்றும் டி.எல்.எஃப் நிறுவனப் பங்குகளை வாங்கியிருக்கிறார்கள். அதே நேரத்தில், வேதாந்தா, டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ், மேரிகோ மற்றும் கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகளை விற்றிருக்கிறார்கள்.

மிட்கேப் பிரிவில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஃபைனான்ஷியல் சர்வீசஸ், அசோக் லேலாண்ட், போனிக்ஸ் மில்ஸ், ஜீ என்டர்டைன்மென்ட், ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் ஆகிய நிறுவனப் பங்குகள் வாங்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், வோடஃபோன் ஐடியா, ஜி.எம்.ஆர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், மணப்புரம் ஃபைனான்ஸ், ஃப்யூச்சர் ரீடெயில் நிறுவனப் பங்குகள் விற்கப்பட்டிருக்கிறது. ஸ்மால்கேப் பிரிவில் கே.பி.ஐ.டி டெக்னாலஜிஸ், சி.சி.எல் புராடக்ட்ஸ் மற்றும் ரெயின் இண்டஸ்ட்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் அதிக எண்ணிக்கையில் வாங்கப் பட்டுள்ளன. மங்களூர் ரீஃபைனரி, என்.ஐ.ஐ.டி, சோமனி ஹோம் இன்னோவேஷன் நிறுவனப் பங்குகள் விற்கப்பட்டுள்ளன.”

பங்குச் சந்தைகள் இந்த வாரத்தில் கடும் இறக்கத்தைச் சந்தித்திருப்பதால், பலரும் வருத்தத்தில் இருக்கிறார்களே!

‘‘இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது? ஆறு மாதங்களுக்கு முன் இறங்கிய சந்தை மீண்டும் ஏறத்தானே செய்தது. இப்போதும் இறங்கிய சந்தை மீண்டும் உயரவே செய்யும். ஐந்து, பத்து வருடம் என நீண்டகாலத்தில் முதலீடு செய்பவர்கள் இந்தக் குறுகியகால இறக்கத்தைக் கண்டு கவலைப்பட வேண்டியதில்லை. சந்தை இறங்கிவிடுமோ என்று அச்சப்படவும் தேவையில்லை. குறுகியகால நஷ்டங்களைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டியதே இல்லை’’ என்றவர், ‘‘எக்மோரில் 5.30 மணிக்கு எனக்கு ஒரு மீட்டிங். நான் கிளம்புகிறேன்’’ என்று சொல்லிவிட்டு, மின்னல் வேகத்தில் கிளம்பிச் சென்றார் ஷேர்லக்.

கோவிட்டுக்குப் பிறகு... பிசினஸ் சக்சஸ்!

ஷேர்லக் : ஃபண்ட் நிறுவனங்கள் வாங்கிய பங்குகள்..! - ஐ.டி, பேங்க் பங்குகளுக்கு முன்னுரிமை..!

‘கோவிட்டுக்குப் பிறகு... பிசினஸ் சக்சஸ் எப்படிக் கொண்டு வரலாம்?’ என்ற நிகழ்ச்சியை நாணயம் விகடன் செப்டம்பர் 28-ம் தேதி மாலை 6.30 - 7.30 வரை நடத்த உள்ளது. கோவிட்டுக்குப் பிறகு, பலரும் சுயமாகத் தொழில் தொடங்கியிருக்கின்றனர். இவர்கள் தங்கள் தொழிலில் வெற்றி காண என்னென்ன விஷயங் களைச் செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் டெர்பி ஜீன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் விஜய் கபூர். இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். பதிவு செய்ய: https://bit.ly/3cuaHWv

உயில் எழுதுவது ஏன் அவசியம்?

ஷேர்லக் : ஃபண்ட் நிறுவனங்கள் வாங்கிய பங்குகள்..! - ஐ.டி, பேங்க் பங்குகளுக்கு முன்னுரிமை..!

பெரும்பாலான சொத்துத் தகராறுகளுக்குக் காரணம், குடும்பத் தலைவர் உயில் எழுதாமல் இறந்துவிடுவதே. இதுபோன்ற பிரச்னைகள் வராமல் இருக்க உயில் (WILL) எழுதுவதுதான் தீர்வு. ‘உயில் எழுதுவது ஏன் அவசியம்?’ என்கிற நிகழ்ச்சியை நாணயம் விகடன் வருகிற அக்டோபர் 5, மாலை 6.30 மணி - 7.30 மணி வரை நடத்துகிறது. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.அழகுராமன் சிறப்புரை ஆற்றுகிறார்.

முன்பதிவு செய்ய: https://bit.ly/3kjEcNk

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism