Published:Updated:

ஷேர்லக் : பிரீமியத்தில் பட்டியலாகும் ஐ.பி.ஓ பங்குகள்..! - முதலீட்டு வழிகாட்டல்

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

ஐ.சி.ஐ.சி.ஐ டைரக்ட், இருபதுக்கும் மேலான பங்குகளைக் கவனிக்கலாம் எனச் சொல்லி உள்ளது!

திகாலையில் வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பியபடி சரியாக மாலை 5 மணிக்கு வந்து சேர்ந்தார் ஷேர்லக். தானே பிளாஸ்க்கில் கொண்டு வந்த மூலிகைத் தேநீரை பிளாஸ்க் கப்பில் ஊற்றிப் பருகிக்கொண்டே “தவறாக நினைக்கக் கூடாது. கொஞ்ச நாளைக்கு விருந்தோம்பல் கலாசாரத்தை ஒதுக்கி வைப்பதுதான் பாதுகாப்பு” என்றவர் சைகை காட்ட, கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்க ஆரம்பித்திருக்கிறார்களே?

“இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில், தகுதி வாய்ந்த முதலீட்டாளர்களிடமிருந்து 683 கோடி ரூபாய் திரட்டியிருக்கிறது. ஓக்நார்த் ஹோல்டிங் நிறுவனத்தில் இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் கொண்டிருந்த பங்குகளை 1,149 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது. ஆக மொத்தம் 1,832 கோடி ரூபாயைத் திரட்டியிருக்கிறது. இதனால் கடந்த புதன்கிழமை இந்த நிறுவனத்தின் பங்கு விலை 5% வரை அதிகரித்துள்ளது.”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஷேர்லக்
ஷேர்லக்

ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்துக்கு முதலீடு குவிந்து வருகிறதே?

“ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தில் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான ஜெனரல் அட்லான்டிக் 3,675 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெயில் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் 0.84%பங்குகளை, 3,675 கோடி ரூபாய்க்கு, ஜெனரல் அட்லான்டிக் வாங்க உள்ளது. ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தில் இது மூன்றாவது தனியார் பங்கு நிறுவன முதலீடாகும். இதற்கு முன் அமெரிக்காவைச் சேர்ந்த சில்வர் லேக், 1.75% பங்குகளை 7,500 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அடுத்து, கே.கே.ஆர் நிறுவனம், 1.28% பங்குகளை 5,550 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஜெனரல் அட்லான்டிக் இதற்கு முன், ரிலையன்ஸ் ஜியோ பிளாட்ஃபார்மில் 6,598 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தது.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஐ.பி.ஓ பங்குகள் கணிசமான லாபத்தை முதல் நாளிலேயே முதலீட்டாளர்களுக்கு அளித்திருக்கிறதே?

“அண்மைக்காலத்தில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டும் ஐ.பி.ஓ (புதிய பங்கு வெளியீடு) பங்குகள், முதல் நாளிலேயே முதலீட்டாளர்களுக்கு கணிசமான லாபத்தைக் கொடுத்து வருகின்றன. கேம்ஸ் (CAMS), மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பிற நிதி நிறுவனங்களுக்கு நிதி சார்ந்த உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்கும் தொழில்நுட்ப நிறுவனமாகும். கடந்த செப்டம்பர் 21 முதல் 23 வரை இந்த நிறுவனம் பங்கு வெளியீட்டில் இறங்கியது. மொத்தம் ரூ.2,244 கோடி திரட்டியது. இந்த நிறுவனத்தின் பங்குகளைக் கேட்டு 47 மடங்கு அதிக விண்ணப்பங்கள் வந்தன. பங்கு ஒன்று ரூ.1,230-க்கு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது. பட்டியலிடப்பட்ட அன்று பங்கின் விலை வெளியீட்டு விலையைவிட 23% அதிகரித்து, ரூ.1,518 என்ற விலையில் வர்த்தகத்தைத் தொடங்கியது. வியாழக்கிழமை 11.45 மணிவாக்கில் பங்கின் விலை 18% அதிகரிப்புடன் ரூ.1450-க்கு வர்த்தகமானது. புதிதாக 2.64 லட்சம் பங்குகள் வாங்கப்பட்ட நிலையில், சுமார் 13.69 லட்சம் பங்குகள் விற்கப்பட்டு வர்த்தகமானது. அதாவது, அதிக எண்ணிக்கையிலான முதலீட்டாளர்கள் பட்டியலிட்டப்பட்ட அன்றே சுமார் 20% லாபத்துடன் வெளியேறியிருக்கிறார்கள்.

ஷேர்லக்
ஷேர்லக்

இதேபோல் இன்னொரு நிறுவனப் பங்கும் பட்டியலிடப்பட்ட அன்று பயங்கரமாக ஏறியிருக்கிறதே?

‘‘கெம்கான் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் நிறுவனம், செப்டம்பர் 21-ம் தேதி ஐ.பி.ஓ வெளியிட்டது. புதிய பங்கு வெளியீட்டின் மூலம் 318 கோடி ரூபாயைத் திரட்ட வேண்டி 149.3 மடங்கு விண்ணப்பங்கள் வந்திருந்தன. பங்கு ஒன்று ரூ.340-க்கு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இந்தப் பங்கு, சந்தையில் பட்டியலிடப்பட்டபோது 115% அதிகரித்து, ரூ.731-க்கு வர்த்தகமானது. இந்தப் பங்கிலும் புதிதாக வாங்குவதைவிட விற்று லாபம் பார்ப்பது அதிகமாக இருந்தது. வியாழக்கிழமை மதியம் 12.50-க்கு 30,700 பங்குகள் வாங்கப்பட்ட நிலையில், 2.76 லட்சம் பங்குகள் விற்பனை செய்யப்பட்டன.”

அக்டோபர் மாதத்தில் வாங்கக்கூடிய பங்குகள் ஏதாவது..?

“பங்குத் தரகு நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐ டைரக்ட், அக்டோபர் மாதத்தில் எட்டு துறைகளைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட பங்குகளை முதலீட்டுக்குக் கவனிக்கலாம் எனச் சொல்லியிருக்கிறது. பார்மா பங்குகளான லூபின், நாட்கோ பார்மா, அபாட் ஆகியவற்றை வாங்கலாம் எனச் சொல்லியிருக்கிறது. ஐ.டி நிறுவனப் பங்குகளான சோனட்டா சாஃப்ட்வேர், சையன்ட், வங்கித் துறை பங்குகளான பந்தன் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்.டி.எஃப்.சி பேங்க், வேளாண் பொருள்களான ராலிஸ், சுதர்ஷன் கெமிக்கல்ஸ், வாகனத்துறை பங்குகளான சியட், பிலிப்ஸ் கார்ப்பன், மஹிந்திரா சி.ஐ.இ ஆகியவற்றையும் முதலீட்டுக்குக் கவனிக்கலாம் எனச் சொல்லியிருக்கிறது.”

வெல்ஸ்பன் கார்ப் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“வெல்ஸ்பன் கார்ப் நிறுவனம் ரூ.1,400 கோடி மதிப்புள்ள புதிய ஆர்டர்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பெற்றிருக்கிறது. இந்த ஆர்டரின் மூலம் 147 கே.எம்.டி அளவிலான பைப்களை உள்நாட்டு ஆயில் அண்டு கேஸ் மற்றும் தண்ணீர் விநியோக வர்த்தக நிறுவனங்களுக்குச் செய்து தர வேண்டும். இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் பங்கு விலை ஒரே நாளில் 5% அதிகரித்தது. தற்போதைய நிலையில், ரூ.6,300 கோடி மதிப்புள்ள ஆர்டர் புத்தகம், இந்த நிறுவனத்தின் கைவசம் இருக்கிறது.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யூ.டி.ஐ புதிய பங்கு வெளியீட்டுக்கான ஆதரவு எப்படியிருக்கிறது?

“நிதித் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்ட யூ.டி.ஐ ஏ.எம்.சி ஐ.பி.ஓ மூலம் நிதி திரட்டுகிறது. பங்கு ஒன்றின் விலை 552 - 554 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் 3,000 கோடி ரூபாய் நிதி திரட்ட இந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இந்தப் புதிய பங்கு வெளியீட்டில் இரண்டாவது நாளில் முதலீட் டாளர்களிடமிருந்து பங்குகள் வேண்டி 56% விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. இரண்டு நாள்களில் 2,160 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் வேண்டி முதலீட்டாளர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள்.”

ஷேர்லக்
ஷேர்லக்

ஷேர்லக்வா டெக் வாபாக் பங்கின் விலை அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறதே?

“பங்குச் சந்தை முதலீட்டாளர்களில் ஒருவரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, வா டெக் வாபாக் (‘Va Tech Wabag’) நிறுவனத்தில், மிகப்பெரிய பங்குதாரராக இருக்கிறார். இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் 8% பங்குகளை 80 கோடி ரூபாய்க்கு, அவருடைய மனைவி ரேகா வாங்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. இதன்பிறகு, கடந்த வாரம் புதன்கிழமை அன்று, இந்த நிறுவனத்தின் பங்கு விலை 6% வரை அதிகரித்து வர்த்தகமானது.’’

ஜி.எஸ்.எம் ஃபட்லர் பங்கு உயர்ந்தது பற்றி..?

“புளூட்டஸ் வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனம் கண்ணாடி உபகரணங்கள் தயாரிக்கும், ஜி.எம்.எம் ஃபட்லர் (GMM Pfaudler) நிறுவனப் பங்குகளை வாங்கியது. இதனால், ஜி.எஸ்.எம் ஃபட்லர் விலை, கடந்த புதன்கிழமை அன்று அப்பர் சர்க்கியூட்க்கு உயர்ந்து வர்த்தகமானது. இதன் காரணமாக பங்கு விலை 5% உயர்ந்தது. அன்றைய தினத்தில் ஒரு பங்கின் விலை 185.20 ரூபாய் அதிகரித்து, 4,007 ரூபாய்க்கு முடிந்தது.”

கேட்டி நிறுவனப் பங்கு விலை குறைந்திருக்கிறதே?

“கேட்டி (Gati) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் மகேந்திர அகர்வால், பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, செப்டம்பர் 30-ம் தேதி வர்த்தகத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 3% குறைந்தது. அன்றைய வர்த்தகத்தில் பங்கு ஒன்றின் விலை 1.70 ரூபாய் குறைந்து 55.20 ரூபாய்க்கு வர்த்தகமானது’’ என்று படபடவென நம் கேள்விகளுக்கு பதில் சொல்லி முடித்து, மீண்டும் புல்லட்டில் வீட்டிக்குப் பறந்தார் ஷேர்லக்!

பங்குச் சந்தையில் வெற்றி பெற டெக்னிக்கல் அனாலிசிஸ்..!

நாணயம் விகடன், ‘பங்குச் சந்தையில் வெற்றி பெற டெக்னிக்கல் அனாலிசிஸ்..!’ என்ற ஆன்லைன் கட்டணப் பயிற்சி வகுப்பை அக்டோபர் 24-ம் தேதி மாலை 6.00 - 7.30 மணிக்கு நடத்த உள்ளது. பயிற்சி கட்டணம் ரூ.500 ஆகும்.

ஷேர்லக் : பிரீமியத்தில் பட்டியலாகும் ஐ.பி.ஓ பங்குகள்..! - முதலீட்டு வழிகாட்டல்

பங்குச் சந்தை நிபுணர் டாக்டர் சி.கே.நாராயண் பயிற்சியளிக்கிறார். இவர் இந்தியாவின் முன்னணி டெக்னிக்கல் அனலிஸ்ட்களில் குறிப்பிடத்தக்கவர். இவர், குரோத் அவென்யூஸ் (Growth Avenues) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி. பங்குச் சந்தை முதலீடு மற்றும் வர்த்தகத்தில் 40 ஆண்டுகளுக்கு மேல் பழுத்த அனுபவம் கொண்டவர். இவர் செபி பதிவு பெற்ற ரிசர்ச் அனலிஸ்ட் ஆவார்.

பதிவு செய்ய: https://bit.ly/33cNIw8

போராடினால் நாம் வெல்லலாம்!

பிசினஸில் ஜெயிக்க டிப்ஸ்

ஷேர்லக் : பிரீமியத்தில் பட்டியலாகும் ஐ.பி.ஓ பங்குகள்..! - முதலீட்டு வழிகாட்டல்

‘போராடினால் நாம் வெல்லலாம்!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்துகிறது நாணயம் விகடன். இதில், மேனகா கார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் எஸ்.சங்கரலிங்கம் சிறப்புரையாற்றுகிறார். அக்டோபர் 12–ம் தேதி, மாலை 6.30 - 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. அனுமதி இலவசம்.

பதிவு செய்ய: https://bit.ly/2GfyUUD

பங்குச் சந்தை ஃபண்டமென்டல் அனாலிசிஸ்..!

ஷேர்லக் : பிரீமியத்தில் பட்டியலாகும் ஐ.பி.ஓ பங்குகள்..! - முதலீட்டு வழிகாட்டல்

நாணயம் விகடன், பங்குச் சந்தை ஃபண்டமென்டல் அனாலிசிஸ் – பேசிக்ஸ் & அட்வான்ஸ்டு என்ற ஆன்லைன் கட்டணப் பயிற்சியை நடத்துகிறது. இந்தப் பயிற்சி நவம்பர் 7 மற்றும் 8-ம் தேதி நடக்கிறது. இரண்டு வகுப்புகளுக்கும் சேர்த்து கட்டணம் ரூ.4,500 ஆகும். எக்ட்ரா பங்குச் சந்தை மற்றும் கமாடிட்டி பயிற்சி நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி தி.ரா.அருள்ராஜன் பயிற்சி அளிக்கிறார். பதிவு செய்ய: https://bit.ly/2HJNBzS

உயில் எழுதுவது ஏன் அவசியம்?

ஷேர்லக் : பிரீமியத்தில் பட்டியலாகும் ஐ.பி.ஓ பங்குகள்..! - முதலீட்டு வழிகாட்டல்

பெரும்பாலான சொத்துத் தகராறுகளுக்குக் காரணம், குடும்பத் தலைவர் உயில் எழுதாமல் இறந்துவிடுவதே. இதுபோன்ற பிரச்னைகள் வராமல் இருக்க உயில் (WILL) எழுதுவதுதான் தீர்வு.

‘உயில் எழுதுவது ஏன் அவசியம்?’ என்கிற நிகழ்ச்சியை நாணயம் விகடன் வருகிற அக்டோபர் 5, மாலை 6.30 மணி - 7.30 மணி வரை நடத்துகிறது. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.அழகுராமன் சிறப்புரை ஆற்றுகிறார். முன்பதிவு செய்ய: https://bit.ly/3kjEcNk