Published:Updated:

பங்கு முதலீடு... அதிகரித்த நிறுவனர்கள்..! - மார்ச் காலாண்டு நிகழ்வு..!

பங்கு முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
News
பங்கு முதலீடு

அடுத்த 10, 15 ஆண்டுகளுக்கு வைத்திருக்கும் நோக்கில்தான் இந்த முதலீட்டைச் செய்கிறார்கள் பங்கு நிறுவனர்கள்.

கடந்த சில மாதங்களாகப் பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தில் இருப்பதைக் கண்டு, சந்தையை விட்டு விலகத் தொடங்கியிருக்கிறார்கள் சில முதலீட்டாளர்கள்.

ஆனால், பங்கு நிறுவனங்களை நடத்துபவர்களோ தங்கள் நிறுவனப் பங்குகளை மீண்டும் வாங்கிச் சேர்த்துவருகிறர்கள். பி.எஸ்.இ 500 பட்டியலில் இடம்பெற்றுள்ள 500 நிறுவனங்களில், சுமார் 100 நிறுவனங்களின் புரொமோட்டர்கள் தங்கள் நிறுவனப் பங்குகளில் முதலீட்டை கணிசமாக அதிகரித்திருக்கிறார்கள்.

பங்கு முதலீடு
பங்கு முதலீடு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பி.எஸ்.இ 500 நிறுவனங்களில் 90% நிறுவனப் பங்குகளின் விலை 2020-ம் ஆண்டு 10 சதவிகிதம் முதல் 60 சதவிகிதத்துக்குமேல் வீழ்ச்சிகண்டிருக்கும் நிலையில், புரொமோட்டர்கள் தங்கள் நிறுவனப் பங்குகளை வாங்கிச் சேர்த்திருக்கிறார்கள். குறிப்பாக, டால்மியா பாரத், டாடா பவர், அசோக் லேலண்ட், டைம் டெக்னோபிளாஸ்ட், பஜாஜ் ஃபின்சர்வ், பி.வி.ஆர்., என்.சி.சி., இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் மற்றும் சன்டெக் ரியால்டி ஆகிய நிறுவனங்களின் புரொமோட்டர்கள் முதலீட்டை கணிசமாக அதிகரித்திருக்கிறார்கள். `நிறுவனத்தின் பங்கு குறைந்த விலையில் கிடைப்பதே இதற்கு முக்கியக் காரணம்’ என்கிறார்கள் அனலிஸ்ட்டுகள்.

அடுத்த 10, 15 ஆண்டுகளுக்கு வைத்திருக்கும் நோக்கில்தான் இந்த முதலீட்டைச் செய்கிறார்கள் பங்கு நிறுவனர்கள். தொழில் பற்றிய புரிந்துகொள்ளலும் பொறுமையும் இருந்தால், இவர்களைப் போலச் சிறு முதலீட்டாளர்களும் லாபம் பெற முடியும்!