Published:Updated:

தொடர்ந்து இறக்கத்தில் பங்குச் சந்தை...

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

ஏறும் வாய்ப்புள்ள பங்குகள்!

தொடர்ந்து இறக்கத்தில் பங்குச் சந்தை...

ஏறும் வாய்ப்புள்ள பங்குகள்!

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை
கொரோனா வைரஸ், உள்நாட்டு- சர்வதேசக் காரணிகள் ஆகியவற்றால் இந்தியப் பங்குச் சந்தை இறக்கத்தைச் சந்தித்து வருகிறது.

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதிலிருக்கும் அனுபவம் அல்லது பங்குச் சந்தைச் செயல்பாட்டின் வரலாறுதான் பல நேரங்களில் நமக்குச் சிறந்த ஆசானாக விளங்குகிறது. பங்குச் சந்தையில் ஏதாவது பிரச்னை எழும்போதெல்லாம் முந்தைய காலங்களில் இது போன்ற சூழலில் முதலீட்டாளர்களின் செயல்பாடு எப்படி இருந்தது என்று கவனிப்பது பயனுள்ளதாக இருக்கும். அது போன்ற சூழ்நிலைதான் தற்போது ஏற்பட்டிருக்கிறது. தற்போது `கோவிட்-19’ (COVID-19) எனப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுக்கத் தொற்றுநோயாகப் பரவிவருகிறது. `இதுவரை 76 நாடுகளில் சுமார் 93,062 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 3,200 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்’ என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

தொடர்ந்து இறக்கத்தில் பங்குச் சந்தை...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொரோனா வைரஸ் பாதிப்பால் சர்வதேசப் பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. இது, உலகம் முழுவதுமுள்ள முதலீட்டாளர்களை ஒருவித பயத்தில் மூழ்கடித்திருப்பதுடன், முதலீட்டுக்கான வாய்ப்பாகவும் பார்க்கவைத்து ஒரு புதிய விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. இதே போன்ற சூழலை இதற்கு முன்னர் நம் பங்குச் சந்தைகள் எப்படி எதிர்கொண்டன என்பதையும் முக்கியமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. இதுதான் இந்த விஷயத்தில் ஓர் ஆரோக்கியமான விவாதத்துக்கு தொடக்கமாக அமையக்கூடும்.

குறிப்பிட்ட தொற்றுநோய் பாதிக்கப்பட்ட காலகட்டங்களில் அமெரிக்காவின் எஸ் & பி 500, இந்தியாவின் சென்செக்ஸ் இண்டெக்ஸ்கள் எவ்வாறு செயல்பட்டன என்பதை ஒப்பிட்டுப் பார்க்கலாம். (பார்க்க, அடுத்த பக்கத்திலுள்ள அட்டவணை.)

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த அட்டவணையில் குறிப்பிட்டிருக்கும் தகவல்கள் நம்மை ஆச்சர்யப்படுத்துவதாக இருக்கின்றன. இதற்கு முன்னர் நடந்த வைரஸ் தாக்குதல்களில் 2003-ம் ஆண்டில் சார்ஸ் வைரஸ் தாக்குதல், 2009-ம் ஆண்டில் ஸ்வைன் புளூ வைரஸ் தாக்குதல் ஆகிய இரண்டைத் தவிர மற்ற வைரஸ் தாக்குதல்கள் பங்குச் சந்தைகளில் பெரிய அதிர்வை ஏற்படுத்தவில்லை. ஆனால், தற்போது கொரோனா பாதிப்பு பங்குச் சந்தைகளில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய வங்கிகளும்கூட வட்டி விகிதங்களைக் குறைத்திருக்கின்றன. விநியோகச் சங்கிலியில் தொடர்பு அறுபட்டிருப்பதால், உலகளாவிய வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

முதலீடு
முதலீடு

இப்படியான சூழலில், முதலீட்டாளர்கள் எந்த மாதிரியான நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாம், கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்தப்படும் வரை எதிலெல்லாம் முதலீடு செய்யலாம் என்பதைக் கண்டறிய எளிய முறை எதிர்மறையாக அணுகுவது. அதாவது, எந்தெந்தத் துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யக் கூடாது என்பதைத் தெரிந்துகொண்டால், அதன் மூலம் எந்தத் துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யலாம் என்பதை எளிதில் அடையாளம் காணலாம்.

இப்போதைக்கு சுற்றுலாத் துறை மற்றும் அது சார்ந்த விமானப் போக்குவரத்து, ஹோட்டல்கள், வாகனங்கள், ஏற்றுமதி, இறக்குமதி, எலெக்ட்ரானிக்ஸ் & மொபைல் போன்கள் மற்றும் மருந்துத் தயாரிப்புத் துறைகளை முதலீட்டிலிருந்து விலக்கிவைக்கலாம். மாறாக, வங்கிகள் & நிதிச் சேவை, ஐ.டி., ஆடைகள் மற்றும் அவற்றுக்கான உதிரிப் பொருள்கள், மின்சாதனங்கள், எரிசக்தி உற்பத்தி & விநியோகம், பொழுதுபோக்கு உள்ளிட்ட துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யலாம். இங்கே நான் ஐந்து பங்குகளைப் பரிந்துரை செய்கிறேன்.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

1. நியூக்ளியஸ் சாஃப்ட்வேர் (Nucleus Software)

இது, உலகளாவிய நிதிச் சேவை நிறுவனங்கள் வழங்கும் கடன் மற்றும் பரிவர்த்தனைக்கான மென்பொருள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. உலகெங்குமுள்ள பிசினஸ்கள் இவர்களால் டிஜிட்டல் பயன்பாட்டுக்கு மாறிவருகின்றன. வாடிக்கையாளர்களுக்கு மதிப்புமிக்க மென்பொருள்களை வழங்குவதற்காக புதிய தொழில்நுட்பங்களுக்கு அவர்கள் செலவிடும் முதலீடு, அவர்களை நல்ல நிலையில் உயர்த்தியிருக்கிறது.

இந்த நிறுவனத்தின் தயாரிப்பான `ஃபின்அக்ஸியா’ (FinnAxia) என்ற வங்கித்துறைப் பயன்பாட்டு மென்பொருளுக்கு உலகின் முன்னணி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மத்தியில் அதிகரித்துவரும் வரவேற்பே இந்த நிறுவனத்தின் வலுவான வளர்ச்சிக்கு சாட்சியமாக இருக்கிறது. இந்த நிறுவனத்தின் வருவாயும் லாபமும் வலுவான வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன. குறுகியகால மற்றும் நீண்டகால முதலீட்டுக்கேற்ற வலுவான பங்காக இது இருக்கிறது.

2. பைசலோ டிஜிட்டல் (Paisalo Digital)

எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு டிஜிட்டல் மூலமாகக் கடன் வழங்க உதவக்கூடிய மிக முக்கியமான செயலியான ‘பைசலோ ஆப்’ இந்த நிறுவனத்தின் முக்கியமான தயாரிப்பு. கடன் வழங்குவதை முறைப்படுத்துவதுடன், வாடிக்கையாளர்களின் தேவை என்ன என்பதையும் இந்த ஆப் மூலம் தெளிவாகக் கண்டறிய முடியும்.

கடன் வழங்குவதில் இந்த ஆப்பின் சிறந்த வடிவமைப்பு காரணமாக அனைவரையும் கவரக்கூடிய இந்த நிறுவனத்தின் பங்கு, நீண்டகால முதலீட்டுக்கு உகந்ததாக இருக்கிறது. இதன் வருமானம் மிதமாகக் காணப்பட்டாலும், சீராக வளர்ச்சி பெற்று வலுவடையக்கூடும்.

எந்தெந்தத் துறை சார்ந்த பங்குகளில் இப்போது முதலீடு செய்யக் கூடாது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

3. கே.இ.சி இன்டர்நேஷனல் (KEC International)

இந்த நிறுவனம் மின் பகிர்மான கோபுரங்கள் அமைப்பதில் இந்தியாவில் இரண்டாவது பெரிய நிறுவனமாக விளங்குகிறது. மேலும், மின் பகிர்மானப் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானத்தில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. நிதியாண்டுக் கணக்கில் பார்த்தால், நிறுவனத்தின் லாபம் 29% வளர்ச்சியடைந்திருக்கிறது. உங்கள் போர்ட்ஃபோலியோவில் நீண்டகால முதலீட்டுக்காக இந்த நிறுவனப் பங்கை இணைத்துக்கொள்ளலாம்.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

4. மேக்ஸ் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் (Max Financial Services Ltd)

மேக்ஸ் குழுமத்தின் ஓர் அங்கமான மேக்ஸ் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் (MFS) நிறுவனத்தின் கீழ் இன்ஷூரன்ஸ் நிறுவனமான `மேக்ஸ் லைஃப்’ இருக்கிறது. `இந்தியாவின் நான்காவது பெரிய தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனம்’ என்ற பெருமை பெற்றது மேக்ஸ் லைஃப். வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு பரிமாணங்களில் ஆயுள் காப்பீட்டுத்துறையில் இந்த நிறுவனம் முத்திரை பதித்துவருகிறது. நீண்டகாலமாக நல்ல நிதிநிலையுடன் செயல்படும்விதத்தில் தரமான நிறுவனமாக விளங்குகிறது. டிசம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 168.3% அதிகரித்து, ரூ.105.22 கோடியாக உள்ளது. ஆயுள் காப்பீட்டுத்துறை பெரிய அளவில் வளரக்கூடிய ஆற்றலுடன் இருப்பதால், இந்த நிறுவனப் பங்கில் நீண்டகால இலக்கில் முதலீடு செய்யலாம்.

தொற்றுநோய் Vs சந்தை வருமானம்
தொற்றுநோய் Vs சந்தை வருமானம்

5. ஐ.ஓ.எல் கெமிக்கல்ஸ் & பார்மசூட்டிக்கல்ஸ் (IOL Chemicals and Pharmaceuticals)

இந்தியாவின் முன்னணி அடிப்படை மருந்துத் தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் ஐ.ஓ.எல்.சி.பி ஆர்கானிக் கெமிக்கல் மருந்துப் பிரிவில் குறிப்பிடத்தக்க நிறுவனமாக உள்ளது. வலி நிவாரணிகள், சர்க்கரைநோய் எதிர்ப்பு மருந்துகள், உயர் ரத்த அழுத்த எதிர்ப்பு மருந்துகள், தசைப்பிடிப்பு நீக்கும் மருந்துகள் எனப் பல்வேறு வகையான மருந்துகளைத் தயாரித்துவருகிறது. டிசம்பருடன் முடிந்த ஒன்பது மாதங்களில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 100.69% அதிகரித்து ரூ.271.03 கோடியாக உள்ளது. இந்த நிறுவனப் பங்கு விலை குறுகிய மற்றும் நீண்டகாலத்தில் உயரக்கூடும்.

தற்போது உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவுவதால் ஏற்படும் பயம் பங்குச் சந்தையின் நம்பிக்கையைச் சிதைப்பதாக இருந்தாலும், இந்தச் சூழலை ஓர் வாய்ப்பாக முதலீட்டாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வளர்ச்சியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனப் பங்குகளில் குறுகிய மற்றும் நீண்டகால இலக்கில் முதலீடு செய்ய வேண்டும். `ரிஸ்க்கே வேண்டாம்’ என்று நினைப்பவர்களுக்கு பங்குச் சந்தை என்றும் லாபம் தராது என்பதை மறக்காதீர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism