Published:Updated:

பங்குச் சந்தை 2020... எதிர்பாராத ஏற்றம் இனியும் தொடருமா? - முதலீட்டாளர்கள் இனி என்ன செய்யலாம்?

SHARE MARKET 2020

பிரீமியம் ஸ்டோரி
ந்த 2020-ம் ஆண்டில் நாம் எல்லோரும் வியக்கும்படி வரலாற்று உச்சத்தைத் தொட்ட பங்குச் சந்தை, தற்போது ஏற்ற இறக்கத்தில் இருக்கிறது. இதற்குக் காரணம், தொடர்ந்து எட்டு வாரங்களாக சந்தை உயர்ந்ததுதான். பெரும் பாலானவர்கள் சந்தை இறங்கும் என்று கணித்தாலும் சந்தை உயர்ந்து கொண்டுதான் வந்தது.

தற்போது வைரஸ் உருமாறி இருப்பதாலும், இதன் பரவும் வேகம் அதிகரித்திருப்பதாலும், இங்கி லாந்தில் ஊரடங்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டிருப்பதால் மீண்டும் மக்களிடையே அச்சம் உருவாகியிருக்கிறது. இதனால் சந்தையில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் இந்த ஆண்டில் பங்குச் சந்தையில் நடந்த முக்கியமான நிகழ்வுகளைப் பார்ப்போம்.

எப்படி இருந்தது பங்குச் சந்தை?

இந்த ஆண்டின் தொடக்கத்தில் சந்தையில் உற்சாகம் இருந்தது. முக்கிய குறியீடுகள் உயர்ந்து கொண்டே இருந்தன. ஜனவரி 20-ம் தேதி அப்போதைய நிலவரப்படி 12430 புள்ளி என்னும் புதிய உச்சத்தை நிஃப்டி தொட்டது. இந்தச் சமயத்தில் வெளிநாட்டிலிருந்து கேரளா வந்த ஒருவருக்கு வைரஸ் தாக்கம் கண்டு பிடிக்கப்பட்டது.

வி.விஜயகுமார்
  நிறுவனர், zebuetrade.com
வி.விஜயகுமார்   நிறுவனர், zebuetrade.com

இதைத் தொடர்ந்து படிப்படியாக நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருந்தது. இதனால் ஏற்றத்தில் இருந்த இந்தியப் பங்குச் சந்தை சரியத் தொடங்கியது. மார்ச் 24-ம் தேதி 7511 என்னும் அளவுக்கு நிஃப்டி சரிந்தது. 46 வர்த்தக நாளில் 40% அளவுக்கு நிஃப்டி சரிந்தது. இந்தச் சமயத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதனால் ஒட்டு மொத்த பொருளா தாரமும் பாதிக்கப் படக்கூடும் என்னும் அச்சம் அனைவரிடத்திலும் எழுந்தது.

பங்குச் சந்தை கடுமையாகச் சரிந்திருந்த சூழலில் பொருளா தாரத்திலும் முடக்கம் ஏற்பட்டதால் பங்குச் சந்தை மேலும் சரியக்கூடும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். இதற்கு ஏற்ப ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அந்நிய முதலீடு தொடர்ந்து வெளியேறிவந்தது.

உயர்ந்த தங்கம்...

ஆனால், சந்தை வேறுவிதமாக ரியாக்ட் செய்தது. இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பல நாடுகளில் கடுமையான கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் முதலீடு செய்வதற்கு ஏதுவான சந்தை சர்வதேச அளவில் குறைவாகவே இருந்தது. அதனால் இங்கிருந்து வெளியேறி அந்நிய முதலீடு மீண்டும் வந்தது. மே மாதத்திலிருந்து தற்போதுவரை தொடர்ந்து நிகர முதலீடு இருந்து வருகிறது. (செப்டம்பரில் அந்நிய முதலிடு வெளியேறியது) சந்தையில் முதலீடு செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை; மற்றும் சர்வதேச அளவில் நிச்சயமற்ற சூழல் நிலவியதால் தங்கத்தின் விலையும் கடுமையாக உயர்ந்தது. ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் புதிய உச்சத்தைத் தொட்டது. (ஒரு அவுன்ஸ் தங்கம் 2,034 டாலர்) மார்ச் மாதத் திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை தொடந்து உயர்ந்த தங்கம் தற்போது கொஞ்சம் குறைய தொடங்கி யிருக்கிறது.

இறக்கத்தில் கச்சா எண்ணெய் விலை...

கமாடிட்டி சந்தையில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மதிப்பு இருக்கும். அந்த மதிப்புக்குக் கீழ் சரிவு ஏற்படாது என்பது பல முதலீட்டாளர்களின் நம்பிக்கை. ஆனால், அந்த நம்பிக்கை இந்த ஆண்டு உடைந்தது.

வீட்டிலிருந்தே வேலை, வெளியே செல்ல கடும் கட்டுப்பாடுகள், விமான பயணங்கள் ரத்து என சர்வதேச அளவில் விதிமுறைகள் இருந்ததால் போக்குவரத்துக்கான தேவை குறைந்தது. பொருளாதார மந்த நிலை ஏற்படும் என்னும் அச்சத்தால் கச்சா எண்ணெய் தேவை குறையும் என முதலீட்டாளர்கள் கருதினார்கள்.

பங்குச் சந்தை 2020... எதிர்பாராத ஏற்றம் இனியும் தொடருமா? - முதலீட்டாளர்கள் இனி என்ன செய்யலாம்?

அதனால் கச்சா எண்ணெய் தொடர் சரிவில் இருந்தது. உச்சபட்சமாக ஏப்ரல் 20-ம் தேதி கச்சா எண்ணெய் எதிர் மறையில் சென்றது. புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் வாங்குபவர்களுக்கு பணம் கொடுத்தது எனச் சொல்லலாம். அப்போது இந்தியாவில் ஊரடங்கு விதிமுறைகள் இருந்தன. பங்குச் சந்தையின் நேர வர்த்தகத்துக்கும் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டன. இரவு வரை நீடிக்கும் கமாடிட்டி சந்தை மாலை 5 மணிக்கு முடிக்கப்பட்டது.

சர்வதேச அளவில் நடக்கும் கமாடிட்டி வர்த்த கத்தில் இந்திய முதலீட்டாளர்கள் பங்கேற்க முடி யவில்லை. அதனால் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் வைத்திருக்கும் பொசிஷனை வாடிக்கை யாளர்களாலும் மாற்றியமைக்க முடியவில்லை. ஒருவேளை வர்த்தகம் நடந்திருக்கும் பட்சத்தில் புரோக்கிங் நிறுவனங்கள் ஸ்கோயர் ஆப் செய்திருக்கும். எதுவும் செய்ய முடியாத தால் பல முதலீட் டாளர்கள் பெரிய தொகையை இழந்து சந்தையிலிருந்து வெளியேறினார்கள்.

கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் புதிதாக சந்தைக்கு முதலீடு செய்ய வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது..!

முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்த தால் அவர்களால் புரோக்கிங் நிறுவனங் களுக்கு பணம் செலுத்த முடியவில்லை. ஆனால், அந்த ஒப்பந்தத்துக்கு (கச்சா எண்ணெய்) புரோக்கிங் நிறுவனங்கள் பணம் செலுத்தும் சூழலுக்குத் தள்ளப் பட்டார்கள். சில புரோக்கிங் நிறுவனங் களுக்கு இந்த ஒரு நாள் வர்த்தகத்தில் சில கோடிகள் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதே காலத்தில் அமெரிக்க முதலீட்டாளரான வாரன் பஃபெட், விமான நிறுவனங்களில் வைத்திருந்த பங்குகளை முழுமை யாக விற்றார்.

மீண்டும் உயர்ந்த சந்தை...

வீட்டிலிருந்தே வேலை செய்வது என்பது புது வாழ்வியல் முறையாக மாறியது. சில துறை களுக்கு இது வரம். பல துறை களுக்கு இது சாபம். இந்தச் சூழலில் சர்வதேச அளவில் வேலை இழப்புகள், சம்பள குறைப்புகள் நடந்தன. இதனால் சர்வதேச அளவில் பல அரசுகள் ஊக்க நடவடிக்கையை எடுத்தன. பல நாடுகளில் பல பில்லியன் டாலர் அளவுக்கு ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டது. சர்வதேச அளவில் பல நாடுகளின் வட்டி விகிதமும் குறைவாகவே இருந்தது.

அடுத்ததாக மக்களின் செலவழிக்கும் பழக்கத்தில் மாற்றம் இருந்து. அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே செலவு செய்தனர். அதனால் உபரித் தொகை பெரும்பாலானவர் களிடம் இருந்தது. தவிர அவர்களிடம் நிறைய நேரமும் இருந்ததால் பங்குச் சந்தை முதலீட்டைக் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தினார்கள். இதுபோன்ற நபர்களிடம் உள்ள உபரி பணம் பங்குச் சந்தைக்கு முதலீடாக வந்தது.

புதிய இளம் வயது முதலீட்டாளர்கள்...

மேலும், பல புதிய இளம் வயது முதலீட்டாளர்கள் ஏப்ரல் மாதத் துக்குப் பிறகு, முதலீட்டைத் தொடங்கினார்கள். ஒவ்வொரு மாதமும் புதிதாக சந்தைக்கு முதலீடு செய்ய வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா விலும் இது போன்ற முதலீட் டாளர்கள் (ராபின்வுட் முதலீட் டாளர்கள் என அழைக் கிறார்கள்) உயர்ந்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 30 லட்சம் முதலீட்டாளர்கள் அமெரிக் காவில் முதலீட்டைத் தொடங்கி யிருக்கிறார்கள். இதே காலத்தில், தடுப்பூசி தொடர்பாக நம்பிக்கை அளிக்கும் தகவல்களும் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. வைரஸ் பாதிப்புகள் குறையத் தொடங்கின. இது போல, பல காரணங்களால் மார்ச் மாதம் 7511 புள்ளிகள் என்ற அளவுக்கு சரிந்த நிஃப்டி, டிசம்பரில் 13777 என்னும் அளவுக்கு உயர்ந்தது.

ஐ.பி.ஓ-களின் காலம்...

நிதி திரட்ட வேண்டும் எனத் திட்டமிட்ட நிறுவனங்கள் பங்குச் சந்தையின் ஏற்றத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டன. இந்த ஆண்டு இதுவரை 13 நிறுவனங்களின் ஐ.பி.ஓ வெளியாகியிருக்கிறது. ரூ.26,186 கோடி அளவுக்கு நிதி திரட்டி இருக்கின்றன.

பெரும்பாலான நிறுவனங் களின் ஐ.பி.ஓ-வுக்கு முதலீட் டாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு இருந்தது. பர்கர் கிங், கெம்காம், மசகன் டாக், ஹாப்பியஸ்ட் மைண்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் ஐ.பி.ஓ-வுக்கு 100 மடங்குக்கு மேல் விண்ணப்பங்கள் குவிந்தன. ஒரு சிலவற்றைத் தவிர பெரும் பாலான ஐ.பி.ஓ-க்கள் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்தன. 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2020-ம் ஆண்டு வெளியான ஐ.பி.ஓ-க்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதனால் மேலும் பல நிறுவனங்கள் ஐ.பி.ஓ வெளியிடத் தயாராகின. அடுத்தாண்டு ஐ.பி.ஓ-வுக்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்பதை சந்தையின் போக்கை வைத்துதான் நிறுவனங்கள் தீர்மானிக்கும்.

செபியின் அதிரடி...

முதலீட்டாளர்கள் நலனை பாதுகாக்கும் நடவடிக்கையை செபி தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்த ஆண்டும் அந்த நடவடிக்கையைத் தொடர்ந்தது. பங்குகள் அடமானம் மற்றும் மார்ஜின் தொடர்பாகப் புதிய விதிமுறையைக் கொண்டு வந்தது. அதாவது வாடிக்கையளர் டீமேட் கணக்கில் இருக்கும் பங்குகள் அவர் வசம் மட்டுமே இருக்கும். பங்குகளை விற்கும்போது மட்டுமே வெளியேறும். முன்பு மார்ஜின் தேவை களுக்கு பங்குகளை அடமானத்தில் வைத்தால், பங்குகளின் உரிமத்தையே மாற்றிக் கொடுக்க வேண்டிய சூழல் இருந்தது.

ஆனால், இப்போது பங்குகளை அடமானத்தில் வைக்கும்போது உங்கள் கணக்கில்தான் அந்த பங்கு இருக்கும். உங்களிடம் இருக்கும் தொகைக்கு ஏற்பவே வர்த்தகத்தின் அளவும் இருக்க வேண்டும் என்பதுதான் மார்ஜின் விதிமுறையின் சாரம்சம். புரோக்கிங் மட்டுமல்லாமல், பி.எம்.எஸ், மியூச்சுவல் ஃபண்ட் என பங்குச் சந்தை சார்ந்த அனைத்து இடங்களிலும் செபி பல முன்னெடுப்புகளைச் செய்தது.

ஒட்டுமொத்தமாக, 2020-ம் ஆண்டு சிறப்பாக இருந்த மிகச் சில துறைகளில் பங்குச் சந்தையும் ஒன்று. இதே அளவுக்கான லாபம் அடுத்தாண்டு கிடைக்கலாம், கிடைக்காமல் போகலாம். உணர்வுகளைத் தவிர்த்து முதலீடு செய்தால் நிச்சயம் லாபம் கிடைக்கும். மார்ச் மாதத்தில் இனி உலகம் அவ்வளவு தான் என நினைப்பதும் தவறு, டிசம்பரில் இனி எல்லாம் ஏற்றமே என நினைப்பதும் தவறு.

பிட்ஸ்

மூலதனம் இல்லாமல் தவிக்கும் பஞ்சாப் & சிந்த் வங்கிக்காக ரூ.5,500 கோடிக்கு வட்டி எதுவும் இல்லாத ஜீரோ கூப்பனை வெளியிட மத்திய அரசாங்கம் முடிவு செய்து உள்ளது. இந்த ஜீரோ கூப்பன் வெளியிடுவது இதுவே முதல் முறை ஆகும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு