பொதுவாக, பங்குச் சந்தையைப் பற்றி நம் மக்களுக்கு இரண்டு விதமான அபிப்பிராயங்கள் உண்டு. ஒன்று, ‘பங்குச் சந்தையில் நிறைய பணம் சம்பாதிக்கலாம்’ என்பது; மற்றொன்று, ‘பங்குச் சந்தை ஒரு சூதாட்டம்‘ என்பது. இந்த இரு அபிப்பிராயங் களையும் கொஞ்சம் அலசுவோம்.

பங்குச் சந்தை என்பது...

நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற வார்த்தையே பங்குச் சந்தையில் பெரும்பாலானவர்களை நஷ்டமடையச் செய்கிறது. வங்கிகள், நிதி நிறுவனங்கள், அஞ்சலகம் போன்று பங்குச் சந்தையும் நிதி சார்ந்த தொழில் செய்யக் கூடிய ஓர் இடமே. தொழில் செய்பவர் வங்கிகளில் தனது தொழிலுக்குத் தேவையான முதலீட்டை எவ்வாறு பெறுகிறாரோ அதுபோலதான் பங்குச் சந்தையில் உள்ள ஒரு நிறுவனம் தனக்குத் தேவையான முதலீட்டை பல முதலீட்டாளர்களிடையே பெறுகிறது. வங்கிக்கும் சந்தைக்கும் உள்ள வேறுபாடு அதன் சட்டங்களும், அதைச் சார்ந்த வரைமுறைகளும் மட்டுமே.

நமது பக்கத்துக்கு வீட்டில் உள்ள நண்பர் ஒருவர் நம்மிடம் ஒரு லட்சம் ரூபாயைக் கடனாகக் கேட்டால் நாம் என்ன செய்வோம்? மனமும் பணமும் நம்மிடம் இல்லை என்றால், இல்லை என்று சொல்லிவிடுவோம். கையில் பணம் இருந்தால், உடனே அவரிடம் ஒரு லட்ச ரூபாய் பணத்தைக் கொடுத்துவிடுவோமா? நண்பரது தொழில், அவரது குடும்ப நிதிநிலை, ஏதேனும் காரணத்தால் அவரிடமிருந்து நாம் பணம் பெற முடியவில்லை எனில், அதற்கான மாற்று வழி எனப் பலவற்றை நாம் சிந்தித்த பிறகே, பணம் கொடுக்க முயல்வோம் இல்லையா?

சரி, உங்கள் நண்பரை விடுங்கள். டாடா, பிர்லா மாதிரியான ஒரு பெரிய நிறுவனம், உங்களிடம் முதலீட்டைக் கேட்கிறது. உங்கள் முதலீட்டைப் பெறும் நிறுவனங்கள் தொழிலை நன்கு நடத்தலாம். அல்லது சரியாக நடத்த முடியாமல் நஷ்டமும் அடையலாம். ஆக, நீங்கள் கடன் தரும் அல்லது முதலீடு செய்யும் நிறுவனம் எப்படிச் செயல் படுகிறது என்பதன் அடிப்படையில் லாபம் கிடைக்குமா, நஷ்டம் வருமா என்பதைச் சொல்ல முடியுமே, எல்லாத் தொழிலும் அள்ளிவிடலாம் அல்லது அனைத்தையும் இழந்துவிடுவோம் என்று சொல்வதற்கில்லை.

இப்படிப்பட்ட பங்குச் சந்தையில் ஒருவர் நல்ல லாபம் பார்க்க வேண்டும் எனில், என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்று சொல்லி யிருக்கிறார் முதலீட்டின் தந்தை (Father of Value Investing) எனப்படும் பெஞ்சமின் கிரகாம். அவர் சொன்ன ஆறு விஷயங் களை முதலீட்டாளர்கள் அறிந்தால், நஷ்டத்தைத் தவிர்க்கலாம்.

1. நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு

பங்குச் சந்தையில் ஐந்தாயிரத் துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இனிவரும் காலத்தில் இதைவிட அதிகமான நிறுவனங்கள் வரக்கூடும். ஐந்து பைசாவுக்கும், ஐந்து ரூபாய்க்கும் பங்குகளை வாங்குவது (Penny stocks) உங்கள் நோக்கமல்ல. நீங்கள் ஒரு நிறுவனத்துக்கு கடன் தர அல்லது முதலீடு செய்ய வந்திருக்கிறீர்கள். பங்குச் சந்தை யில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் சந்தை மதிப்பு (Market Cap), ஆண்டு வருவாய் (Revenue) மற்றும் நிகர லாபம் (Net Profit) கோடிகளில் உள்ளவற்றைக் காணுங்கள். உதாரணத்துக்கு, சந்தை மதிப்பு ரூ.1,000 கோடிக்கு மேலான நிறுவனங்கள், ஒவ்வொரு நிதியாண்டிலும் ரூ.100 கோடிக்கு மேலான வருவாய் அல்லது லாபத்தைக் கொண்ட நிறுவனங்கள் எனப் பங்குகளைத் தேர்வு செய்யுங்கள்.

2. வலுவான நிதி ஆதாரம்

ஒரு தற்காப்பு முதலீட்டாளராக நீங்கள் செய்ய வேண்டியவை - கடன் இல்லா நிறுவனங்கள் (Debt Free), நடைமுறை மூலதனம் (Working Capital) மற்றும் அதிக சொத்துகளைக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் எனத் தேர்வுகளைத் தொடங்குங்கள். சுருக்கமாக, கடன் - பங்கு (Debt to Equity) விகிதம் 0.5-க்குக் கீழ் உள்ளவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

3. வருவாய் நிலைப்புத்தன்மை

ஒரு நிறுவனம் காலாண்டு வருவாய் மற்றும் நிகர லாபத்தில் தொடர்ச்சியான வளர்ச்சியைப் பெற்று வருகிறதா என ஆராயுங்கள். ஏதாவது, ஒரு காலாண்டில் வருவாய் அல்லது லாபத்தின் அளவு குறைந்தால், அதற்கான காரணத்தைக் கண்டு பிடியுங்கள். வருவாய் அளவு குறையும் சமயத்தில் சந்தையின் பங்கு விலைகளில் மாற்றம் எவ்வாறு நிகழ்கிறது என்பதைக் கண்டு தீர்வு காணுங்கள்.

4. தொடர்ச்சியான டிவிடெண்ட்

பங்குச் சந்தையில் உள்ள ஒரு நிறுவனம்தான் பெற்ற லாபத்தை பல்வேறு வழிகளில் முதலீட் டாளர்களுக்குத் திரும்ப அளிக்கலாம். சில நிறுவனங்கள் தங்களது அடுத்தகட்ட வளர்ச்சிக் காக லாபத்தைப் பயன்படுத்தும். இதன் விளைவு பங்குகளில் விலை மாற்றத்தை ஏற்படுத்தும். மற்ற சில நிறுவனங்கள் போனஸ் பங்குகள், நிறுவனமே பங்கு களைத் திரும்பப் பெறுதல் (Buyback) அல்லது டிவிடெண்ட் முதலீட்டாளருக்கு வழங்கும்.

வங்கிகளின் வட்டி வருமானத் தைப்போல, நிறுவனங்கள் அளிக்கும் டிவிடெண்ட் வரு மானத்தை நாம் அவ்வப்போது பெற்று வரலாம். தொடர்ச்சியான டிவிடெண்ட் தந்து வரும் நிறுவனங்களை உங்கள் முதலீட்டுக்குப் பரிசீலனை செய்யுங்கள். பங்குகளின் விலை அதிகமாக இருந்தாலும், உங்களுக்கான டிவிடெண்ட் வருமானம் (Dividend yield) முதலீட்டைப் பாதுகாக்கும். அதே வேளையில், டிவிடெண்ட் வருமானம், உங்கள் பங்கு விலை பெருக்கத்தை (Price Appreciation) பாதிக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

5. பங்கு - சொத்து மதிப்பு விகிதம் (Price to Assets Ratio)

தற்போது வர்த்தகமாகிவரும் பங்கின் விலை அதன் புத்தக மதிப்பைக் காட்டிலும் அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நன்று. இருப்பினும், பிரபலமான மற்றும் தேவைப்பாடு அதிகமுள்ள நிறுவனங்களின் பங்குகள் எப்போதும் அதிகமான விலையில்தான் வர்த்தகமாகும். இதனால் அதன் புத்தக மதிப்பும் (Price to Book Value) பல மடங்கு இருப்பது இயல்பு. நிறுவன பங்கின் விலை அதன் புத்தக மதிப்பை போன்று இரண்டு மடங்குக்கு அதிகமில்லாமல் இருக்குமாறு கண்டறிந்து, அதன்பின் அந்தப் பங்கை முதலீட்டுக்குத் தேர்வு செய்யுங்கள்.

6. ஒரு பங்கு வருவாய்...

ஒரு நிறுவனத்தின் பங்கு விலை மற்றும் பங்குச் சந்தை மதிப்பில் மாற்றம் ஏற்படுவது இயல்பு. அதைப்போல, நிறுவனத்தின் வருவாய் மாற்றத்தை நாம் அந்தப் பங்கின் இ.பி.எஸ் (Earning Per Share - EPS) மூலம் காணலாம். ஒரு முதலீட்டாளராக நாம் காண வேண்டியது, நிறுவனத்தின் வருவாயைக்காட்டிலும் ஒரு பங்கின் மீதான வருமானத்தைதான்.கடந்த 10 வருட காலத்தில் ஒரு நிறுவனத்தின் பங்கு விலையும், அதன் வருவாயும் எவ்வாறு உள்ளது என்பதை சந்தைக் குறியீட்டுடன் (Benchmark) ஒப்பிட்டு பங்கின் மீதான வருமானத்தைக் கணக்கிடுங்கள். பின்பு துறை சார்ந்த மற்ற நிறுவனங்களின் பங்கு விலை மற்றும் வருமானத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து பங்குகளைத் தேர்வு செய்யுங்கள்!

பிட்ஸ்

ஏர் ஏசியா நிறுவனத்தில் டாடா நிறுவனம் வைத்திருக்கும் மொத்தப் பங்கு 84% அளவுக்கு உயர்ந்துள்ளது. மலேசிய நிறுவனம் வைத்திருந்த 32.67 சதவிகிதத்தை ரூ.276 கோடி தந்து வாங்கி யுள்ளது டாடா நிறுவனம்!

பிட்ஸ்

எஸ்.டி.டி என சுருக்கமாக அழைக்கப் படும் சர்வீஸ் டிரான்ஷாக்சன் டாக்ஸ் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 42% அதிகரித்து, ரூ.19,805 கோடியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு வசூலான இந்த எஸ்.டி.டி வரி ரூ.7,574 கோடி மட்டுமே!