Published:Updated:

ஆர்.பி.ஐ அதிரடி.. ஈக்விடாஸ் பேங்க்... என்னதான் பிரச்னை?

equitas bank
பிரீமியம் ஸ்டோரி
News
equitas bank

சிக்கல்

ஆர்.பி.ஐ விதித்திருக்கும் சில கட்டுப்பாடுகளால் ஈக்விடாஸ் ஹோல்டிங் நிறுவனப் பங்கு விலை கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கமாகவே இருந்தது. இதனால் இந்தப் பங்கில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் குழம்பிப் போனார்கள். இந்த நிறுவனப் பங்கில் என்ன பிரச்னை என பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம்.

ஆர்.பி.ஐ அதிரடி.. ஈக்விடாஸ் பேங்க்... என்னதான் பிரச்னை?

பிரச்னையின் பின்னணி

“ஈக்விடாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம், கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. இதன் துணை நிறுவனமான ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் (Equitus Small Finace Bank) நிறுவனம் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதியன்று செயல்படத் தொடங்கியது.

ரிசர்வ் வங்கி விதிமுறைகளின்படி, ஈக்விடாஸ் எஸ்.எஃப்.பி, வணிகம் ஆரம்பித்த மூன்று ஆண்டுகளுக்குள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்க வேண்டும். அதற்கான காலக்கெடு கடந்த செப்டம்பர் 4-ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. இந்தக் காலக்கெடுவை நீட்டிக்குமாறு ரிசர்வ் வங்கியிடம் ஈக்விடாஸ் எஸ்.எஃப்.பி கோரிக்கை வைத்திருந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆர்.பி.ஐ அதிரடி.. ஈக்விடாஸ் பேங்க்... என்னதான் பிரச்னை?

இந்தக் கோரிக்கையை ரிசர்வ் வங்கி நிராகரித்திருப்பதுடன், ஈக்விடாஸ் எஸ்.எஃப்.பி மீது பல்வேறு புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது ரிசர்வ் வங்கி. இந்த வங்கி புதிய கிளைகளைத் திறக்கக்கூடாது; இந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியின் சம்பளத்தை அதிகரிக்கக் கூடாது எனவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதற்குப் பின்னரும் ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் ஆர்.பி.ஐ விதிமுறைகளைப் பின்பற்றத் தவறினால், மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப் படலாம் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது’’ என்றவர், இந்தக் கட்டுப்பாடுகளால் இந்த நிறுவனத்தின் பங்கு விலையில் என்ன மாற்றம் ஏற்படும் என்பது குறித்தும் சொன்னார்.

பங்கு விலை வீழ்ச்சி

“ஐ.பி.ஓ மூலம் ஈக்விடாஸ் எஸ்.எஃப்.பி நிறுவனப் பங்குகளைப் பட்டியலிடுவது, ஏற்கெனவே பட்டியலிடப்பட்டுள்ள ஈக்விடாஸ் ஹோல்டிங் நிறுவனத்தின் தற்போதைய பங்குதாரர்களுக்குச் சாதகமாக இருக்காது. அதுமட்டுமல்லாமல், இரண்டாவதாக ஒரு நிறுவனத்தைப் பட்டியலிடும்போது அதற்கான செலவினங்களும் அதிகமாகும்.

உஜ்ஜீவன் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்தின் ஒரு பிரிவான உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் ஐ.பி.ஓ வெளியிட செபி அமைப்பிடம் விண்ணப்பித்து அனுமதி வாங்கியது. உஜ்ஜீவன் ஃபைனான்ஸ் தனது வணிகத்தை உஜ்ஜீவன் எஸ்.எஃப்.பி-க்கு மாற்றியபின்னர், பிப்ரவரி 2017-ம் ஆண்டில் வங்கி நடவடிக்கைகளைத் தொடங்கியது. ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் நிறுவுவதற்கு அந்த நிறுவனத்தின் குழுவானது கடந்த 2015 அக்டோபரில் ரிசர்வ் வங்கியிடமிருந்தும் கொள்கைரீதியான ஒப்புதல் பெற்றது. ஆனால், ஈக்விடாஸைப் பொறுத்தவரை, ஈக்விடாஸ் எஸ்.எஃப்.பி பங்கைப் பட்டியலிடுவது குறித்துக் கூடுதல் தெளிவு கிடைக்கும் வரை, அந்த நிறுவனத்தின் பங்கு விலை ஏற்ற இறக்கமாக இருக்கலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நிராகரிக்கப்பட்ட நிறுவனங்கள் இணைப்பு

ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் மற்றும் ஈக்விடாஸ் ஹோல்டிங்ஸ் இயக்குநர்கள் குழு இந்த ஆண்டு ஜனவரி - பிப்ரவரியில், ஈக்விடாஸ் ஹோல்டிங்ஸின் பங்குதாரர்களுக்கு ஈக்விடாஸ் எஸ்.எஃப்.பி சுமார் 89.2 கோடி பங்குகளை வெளியிட ஒப்புதல் வழங்கியது. இது ஈக்விடாஸ் ஹோல்டிங்ஸின் பங்குகளை 53 சதவிகிதமாகக் குறைக்க வழிவகுக்கும் (ஹோல்டிங் நிறுவனம் வைத்திருக்கும் பங்கு அளவை இன்னும் இரண்டு ஆண்டுகளில் 40 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும்). மீதமுள்ள 47% பொது பங்குதாரர்களிடம் உள்ளது.

ஆர்.பி.ஐ அதிரடி.. ஈக்விடாஸ் பேங்க்... என்னதான் பிரச்னை?

ஈக்விடாஸ் எஸ்.எஃப்.பி-யை ஈக்விடாஸ் ஹோல்டிங் நிறுவனத்துடன் இணைக்கவும், ஈக்விடாஸ் எஸ்.எஃப்.பி-யின் கையிருப்புகளை மூலதனமாக்குவதற்கும், அதன் பங்குதாரர் களுக்குப் பணப்பரிமாற்றம் இல்லாமல் பங்குகளை வழங்குவதற்கும் ஈக்விடாஸ் ஹோல்டிங் நிறுவனம் ஒப்புதல் வழங்கியது. ஆனால், இந்த நடைமுறையில் பல சிக்கல்கள் இருப்பதாகச் சொல்லி ரிசர்வ் வங்கி ஒப்புதல் கொடுப்பதற்கு மறுத்துவிட்டது. ரிசர்வ் வங்கியானது நீட்டிப்பை வழங்க மறுத்ததால், இந்த நிறுவனத்தின் எதிர்கால நடவடிக்கை குறித்து நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது. இது ஈக்விடாஸ் ஹோல்டிங்ஸ் பங்குகளின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது...

வியாழனன்று வர்த்தக முடிவில் ஈக்விடாஸ் ஹோல்டிங்ஸின் பங்கு 115.80 ரூபாய் என்கிற விலையில் வர்த்தகமானது. ஈக்விடாஸ் எஸ்.எஃப்.பி பங்குகள் பட்டிய லிடப்படும்போது, ஈக்விடாஸ் ஹோல்டிங்ஸ் பங்கின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.கடந்த ஜூன் காலாண்டில் இந்த வங்கி வழங்கிய கடன் 38% அளவுக்கு அதிகரித்துள் ளது. இதற்குக் காரணம், சிறிய வணிகக் கடன்கள் அதிகம் தரப்பட்டதுதான். இந்த வங்கியின் காசா வைப்புத்தொகை விகிதம் சற்று குறைந்துள்ள நிலையில், டேர்ம் டெபாசிட் தொகையின் அளவு அதிகரித்துள்ளது. இது சாதகமான விஷயமாகத் தெரிந்தாலும் இந்த வங்கி தொடர்பான விஷயங்களில் மேலும் தெளிவு கிடைக்கும் வரை இந்தப் பங்கின் விலை ஏற்ற இறக்கமாகவே இருக்க வாய்ப்புண்டு’’ என்றார் ரெஜி தாமஸ்.

இந்தப் பங்கில் முதலீடு செய்தவர்கள் இந்தப் பின்னணியைப் புரிந்துகொண்டு செயல்படுவது நல்லது!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முத்தூட் ஃபைனான்ஸ்... பங்கு விலை என்ன ஆகும்?

‘‘கேரளாவில் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தார்கள். முத்தூட் ஃபைனான்ஸ் வணிகத்தில் இந்த வேலைநிறுத்தம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை. ஏனெனில், இந்த நிறுவனம் வழங்கிய மொத்தக் கடனில் கேரளாவின் பங்களிப்பு 4% மட்டுமே. பணியாளர் களில் 12 சதவிகிதமும் நாடு தழுவிய கிளைகளில் 15% மட்டுமே கேரளாவில் இருக்கிறது.

முத்தூட் ஃபைனான்ஸ் நாடு முழுவதும் 5,092 கிளைகளைக் கொண்டுள்ளது. ரூ.40,227 கோடி கடன்களை நிர்வகித்து வருகிறது. 2018-19-ம் ஆண்டில் ஒருங்கிணைந்த மொத்த வருமானம் ரூ.7,601 கோடியாக இருந்தது. வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.2,103 கோடி. கேரளக் கிளைகளிலிருந்து இதன் வணிகம், தேசிய சராசரியைவிட மிகக் குறைவே. இதுவே, கேரளாவில் கிளைகளைக் குறைக்கக் காரணம்.

இந்த வேலை நிறுத்தமானது முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனப் பங்கின் விலையில் குறைவான தாக்கத்தைத்தான் ஏற்படுத்தும். இருப்பினும், இந்தப் பங்கின் விலை ரூ.585-க்கு குறைய வாய்ப்புண்டு” என்றார் ரெஜி தாமஸ்!