கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது கச்சா எண்ணெய். அமெரிக்க கச்சா எண்ணெய் ஏற்றுமதி, சீனப் பொருளாதாரத்தில் காணப்படும் சரிவு, அமெரிக்க–சீன வர்த்தகப் போர், உலக நாடுகளுக்கு கொரானா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்பு எனப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கிடையே ஏற்பட்டிருக்கும் ‘எண்ணெய்ப் போர்’தான் தற்போதைய சரிவுக்கு முக்கியக் காரணம்.

திடீர் சரிவுக்கு என்ன காரணம்?

கடந்த நான்கு ஆண்டுகளாகவே ஒபெக் (The Organization of the Petroleum Exporting Countries (OPEC)) மற்றும் ஒபெக் அல்லாத நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கூடும் கூட்டத்தில் உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்து, அதன் மூலமாக விலைச் சரிவைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டன. முதலில் ஒரு நாளைக்கு 1.2 மில்லியன் பேரல்களாகவும், அதன் பின்னர், அதை அதிகப்படுத்தி ஒரு நாளைக்கு 1.7 மில்லியன் பேரல்களாகவும் குறைப்பது என்று ஒருமனதாக ஏற்றுக்கொண்டன.

ஒபெக் நாடுகளில் இல்லாத ரஷ்யாவின் ஒத்துழைப்பு இதற்கு முந்தைய கூட்டம் வரை இருந்துவந்தது. கடந்த 6-ம் தேதி வியன்னாவில் நடைபெற்ற கூட்டத்தில் சவுதி அரேபியா, இப்போதுள்ள உற்பத்திக் குறைப்பு அளவை, 1.70 பில்லியன் பேரல்களாக அளவை உயர்த்த ரஷ்யாவைக் கேட்டுக்கொண்டது. அதற்கு ரஷ்யா சம்மதம் தெரிவிக்கவில்லை. சவுதியின் கோரிக்கையை நிராகரித்தது. எனவே, சவுதிக்கும் ரஷ்யாவுக்கும் எண்ணெய்ப் போர் மூண்டிருக்கிறது. ரஷ்யாவுக்கு பதில் தரும்விதமாக சவுதி, கச்சா எண்ணெய் விலையைக் குறைத்தது.

கச்சா எண்ணெய் விலை 25-30 டாலர்களாகக் குறைந்தாலும், அதனால் ஏற்படும் பட்ஜெட் பற்றாக்குறையைத் தன்னால் அடுத்த ஆறு முதல் பத்து வருடங்களுக்குச் சமாளிக்க முடியும் என்று ரஷ்யா அறிவித்திருக்கிறது. சந்தைப் போட்டியை இதுவரை அனைத்து நாடுகளும் ஒருமித்து சந்தித்துவந்த நிலையில், தற்போது தனித்தனியாகப் பிரிந்திருப்பது விலை ஏற்றம் நிச்சயமாக இல்லை என்பதை உணர்த்தியிருக்கிறது.

ஒபெக் நாடுகளுக்கு இந்த விலைச்சரிவின் காரணமாக ஒரு நாளைக்கு 500 மில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் மற்ற நாடுகளான ஈராக், அங்கோலா, நைஜீரியா போன்ற நாடுகளும் நிதிச் சிக்கல்களைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சவுதி அரேபியாவின் எதிர்பார்ப்பு நிறைவேறாததும், ஏற்றுமதியை அதிகரித்ததும்!

2019 செப்டம்பர் மாதத்தில் எண்ணெய்க் கிணறுகள் மீதான தாக்குதல்கள் காரணமாக ஏற்றுமதி ஒரு நாளைக்கு 6.67 மில்லியன் பேரல்களாகச் சரிந்தது. ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி, சீனாவின் தொழில் வளர்ச்சி குறைந்துபோனது, கொரோனா வைரஸ் தாக்குதல் இவையெல்லாம் சவுதியின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை பாதித்தன. ரஷ்யா உற்பத்திக் குறைப்புக்கு சம்மதம் தெரிவிக்காததால் உடனடியாக சவுதி எடுத்த முடிவின் காரணமாக, ஏற்றுமதி விலையைத் தடாலடியாகக் குறைத்தது.

வடமேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு வரும் ஏப்ரலிலிருந்து 4 முதல் 8 டாலர் வரை விலையைத் தள்ளுபடி செய்து அறிவித்தது. அதாவது, மறைமுகமாக ரஷ்யாவின் பொருளாதாரத்துக்கு நெருக்கடி தரும்விதமாக இந்தச் செயல் அமைந்தது.

சவுதியின் ஏற்றுமதி 2018-ம் ஆண்டைவிட 2019-ம் ஆண்டில் 10.75% குறைந்திருக்கிறது. ஆனால், சந்தைப் போட்டியின் காரணமாக சவுதி அரேபியா இப்போதைய உற்பத்தி அளவான 9.7 மில்லியன் பேரல்களை (ஒரு நாளைக்கு) வரும் ஏப்ரல் முதல் 12.3 மில்லியன் பேரல்களாக அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கிறது.

அமெரிக்க ஷெல் எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலைமை

`ஷெல் எண்ணெய் எடுக்கும் எக்ஸான், செவரான், ஆக்ஸிடென்டல், கிரௌன்கெஸ்ட் போன்ற முக்கிய நிறுவனங்களுக்குக் குறைந்தது 25 டாலர் (WTI) வர்த்தகம் நடைபெற்றால் மட்டுமே லாபத்தை ஈட்டமுடியும்’ என்றும், `மற்ற பெரும்பாலான நிறுவனங்களுக்கு விலை இறக்கம் என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்’ என்றும் சொல்லப்படுகிறது. தற்போதைய நிலையில் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களில் பாதிக்குமேல் நிதி ஆதாரத்தைத் திரட்டுவதில் சிக்கல்களைச் சந்திக்கலாம் எனவும், கடன் பத்திரங்களின் முதிர்வுக் காலம் நெருங்குதல் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே விலைச் சரிவு என்பது வரும் இரண்டு ஆண்டுகளில் வருவாய் மற்றும் லாபத்தை ஈட்டுதலிலும் பின்னடைவைச் சந்திக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நிறுவனங்களின் நிதிநிலை மோசமடைந்தால், இந்தத் துறை சார்ந்த நிறுவனப் பங்குகளின் விலைகளும் சரிவடையும். எஸ்.பி.டி.ஆர்-ன் (SPDR Oil & Gas ETF) விலை மிகவும் கீழ்நோக்கி வர்த்தகமாகியிருக்கிறது. அதாவது, 2006-ம் ஆண்டிலிருந்த விலைக்கு இறக்கம் கண்டுள்ளது. இத்தகைய எண்ணெய் மற்றும் கெமிக்கல் நிறுவனங்களின் பாதிப்புகள், கடனுதவி செய்திருக்கும் அமெரிக்க வங்கிகள் மற்றும் நிதிச் சந்தைகளில் அடுத்தடுத்து அதிர்வுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையுமே சிதைக்கச் செய்யும்.

கச்சா எண்ணெய் விலைச் சரிவு இந்தியாவுக்கு நல்லதா?

இந்தியாவைப் பொறுத்தவரை 83 சதவிகிதத்துக்கு மேல் இறக்குமதி செய்யும் நாடாக இருப்பதால், இந்த விலைச் சரிவால் அரசாங்கத்துக்கு நிதிச்சுமை குறையும். வருடத்துக்கு 8.80 லட்சம் கோடி இதற்காகச் செலவு செய்யப்படுகிறது. இதே விலை நீடிக்கும்பட்சத்தில், அரசுக்கு சுமார் 2 லட்சம் கோடி சேமிப்பாக வாய்ப்பிருக்கிறது. `இதில் ஒரு பகுதி நுகர்வோருக்குத் திருப்பிவிடப்படுமா’ என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுவது வாடிக்கை. அதாவது பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பிருக்கிறதா எனில் சந்தேகமே. ஏனெனில், ஏற்கெனவே போடப்பட்டுள்ள ஒப்பந்த விலை அதிகமாக இருக்கும்போது உடனடியாகக் குறைக்கும்பட்சத்தில் எண்ணெய் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் என்பதால், அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வரி வருவாய் குறையும் என்பது மட்டுமல்லாமல், வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்கும் என்பதாலும் அத்தகைய நடவடிக்கையை எடுக்கப்பட மாட்டாது. நுகர்வோருக்கு உடனடிப் பலன்களைத் தருவதற்கு பதிலாக நீண்டகால ஸ்திரத்தன்மையான பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அரசின் நடவடிக்கைகள் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

மறைமுகப் பலன்கள் என்பவை உடனடியாக நுகர்வோருக்குக் கிடைக்காவிட்டாலும், நீண்டகால அடிப்படையில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாக அரசின் செயல்பாடுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, எரிபொருள் விலையை இதே நிலையில் நீடிக்கச் செய்வதால் பணவீக்கத்தைக் குறைப்பது, ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்க முயல்வதன் மூலம் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்வது, அந்நியச் செலாவணிக் கையிருப்பை அதிகப்படுத்துவது போன்ற நிலைப்பாட்டில் அரசு கவனத்தைச் செலுத்தும் என்று கருதப்படுகிறது. கச்சா எண்ணெயில் கிடைக்கும் முழுப் பலன்களில், குறைந்த அளவுக்கே நுகர்வோருக்கு எரிபொருள் விலையில் சலுகைகளை அரசு கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

2019-ம் நிதியாண்டில் இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக 112 பில்லியன் டாலரைச் செலவழித்தது. இதற்கு முன்னர் 2016-ம் நிதியாண்டில் 64 பில்லியன் டாலராகக் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதே விலை நீடித்தால், வரும் நிதியாண்டில் முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியாவின் இறக்குமதிச் செலவு குறையலாம்.

2020-ல் கச்சா எண்ணெய் தேவை குறையும்

கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவை (உலக அளவில்) நடப்பு 2020-ம் ஆண்டில் குறைய வாய்ப்பிருப்பதாக சர்வதேச எரிசக்தி ஆணையம் தெரிவித்துள்ளது. 2009-ம் ஆண்டுக்குப் பிறகு, இப்போது ஒரு நாளைக்கு 99.9 மில்லியன் பேரல்களாக தேவை இருக்கும் என்று கணித்திருக்கிறது. `முதல் காலாண்டில் மட்டும் ஒரு நாளைக்கு 2.5 மில்லியன் பேரல்கள் குறையலாம்’ என்று தனது அறிக்கையில் கூறியுள்ளது.

வளர்ந்த நாடுகளுக்கு இருக்கும் சிக்கல்கள் என்னவெனில், வட்டி விகிதங்களை மிகக் குறைவாக வைத்திருப்பதும், பணவீக்கம் அதிகரிக்காமல் இருப்பதும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், இப்போதைய கச்சா எண்ணெய் விலைச் சரிவு மேலும் பணவீக்கத்தைக் குறைக்கச் செய்யும். எனவே, அந்தந்த நாடுகளின் மத்திய வங்கிகளால் இப்போதைய சிக்கல்களைச் சமாளிப்பதற்கான திறன் மிகக் குறைவாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. சர்வதேச விலை ஒரு டாலர் குறைந்தால், இந்தியாவின் இறக்குமதிச் செலவு சுமார் ரூ.2,900 கோடி குறையும். அதே நேரம், டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு ரூ.1 குறைந்தால், சுமார் ரூ.2,700 செலவு அதிகரிக்கும்.

விலைச் சரிவு நீடிக்குமா?

இப்போது ஏற்பட்டுள்ள ‘எண்ணெய்ப் போர்’ உடனடியாக முடிவுக்கு வர வாய்ப்பில்லை.

எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் ஒபெக் மற்றும் ஒபெக் அல்லாத நாடுகள் அனைத்துமே இதுவரை நடைமுறையிலிருந்த உற்பத்திக் கட்டுப்பாடுகள் என்ற நிலையைத் தவிர்த்து விட்டு, தங்கள் நாடுகளின் பொருளாதார வலிமையைப் பொறுத்து எத்தகைய விலையிலும் ஏற்றுமதி செய்ய முனைந்திருக்கின்றன. இதனால் கச்சா எண்ணெயின் மொத்த உற்பத்தி இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக இருக்கப்போகிறது.

கச்சா எண்ணெய்க்கான தேவை குறைந்துவரும் நிலையில், உற்பத்தி அதிகரித்திருக்கிறது. இதனால் ‘நைமெக்ஸ் க்ரூடு’ ஒரு பீப்பாய் 25 டாலராகவும், பிரென்ட் க்ரூடு 30 டாலராகவும் வர்த்தகமாக வாய்ப்பிருக்கிறது. கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து மிகவும் பாதிப்பைச் சந்தித்திருக்கிறது. இது தவிர, நாடுகளுக்கு இடையிலான வர்த்தகமும் முடக்கப்பட்டுள்ளது. பொதுவாக, கச்சா எண்ணெயின் விலை என்பது தேவைக்கும் பயன்பாட்டுக்குமான இடைவெளியால் நிர்ணயம் செய்யப்படுவது. தற்போது அதிலிருந்து விலகி, அந்தத் துறையில் முதலீடு செய்திருக்கும் நிதி நிறுவனங்களையும் கச்சா எண்ணெயின் விலை ஆட்டம்காண வைத்துவிடும் போலிருக்கிறது!