Published:Updated:

அலாவுதீனும் அற்புத விளக்கும்... பங்குச் சந்தை முதலீடு தரும் எல்லையற்ற வருமானம்!

SHARE MARKET

பிரீமியம் ஸ்டோரி
லாவுதீனும் அற்புத விளக்கும் கதையை நாம் அனைவரும் படித்திருப்போம். அலாவுதீனுக்குக் கிடைத்த அற்புத விளக்கு நமக்குக் கிடைத்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்?

அது இந்த ஜென்மத்தில் நடக்க வாய்ப்பில்லை. அப்படியானால், சாதாரண மனிதர்கள் தங்கள் வாழ்நாளில் கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதிக்கவே முடியவே முடியாதா என்று நீங்கள் எதிர்பார்ப்புடன் கேட்கலாம்.

முடியாது என்று யார் சொன்னது? நிச்சயம் முடியும். அலாவுதீனின் அற்புத விளக்கு தருவதுபோல, எல்லையற்ற வருமானத்தை நமக்கு வழங்கத் தயாராக இருக்கிறது பங்குச் சந்தை.

ரமேஷ் 
ஆதிநாராயணன்
ரமேஷ் ஆதிநாராயணன்

நம்மால் இனி ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி, நாராயண மூர்த்தி போல மாற முடியாது. ஆனால், அவர்களது நிறுவனத்தின் பங்குதாரர் ஆகிவிட்டால், அவர்களுக்குக் கிடைக்கிற லாபம் நமக்கும் கிடைக்கும்.

வெறும் முதலீட்டின் மூலமே செல்வந்தர்களாக மாற முடியுமா என்று நீங்கள் கேட்டால், முடியும் என்பதற்கு பல உதாரண புருஷர்கள் இருக்கிறார்கள்.

விண்டோ இல்லாமல்கூட வீடு இருக்கலாம். ஆனால், விண்டோஸ் இல்லாத கம்ப்யூட்டர் இல்லை. அந்த அளவு உலகையே தன் கட்டுக்குள் கொண்டு வந்த பில்கேட்ஸை வெறும் முதலீட்டு வியாபாரத்தின் மூலமாகவே வாரன் பஃபெட் வென்று உலகப் பணக்கார வரிசையில் முதலிடத்தைப் பெற்றார்.

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வெறும் 5,000 ரூபாயில் முதலீட்டை ஆரம்பித்தார். இன்று அவரது முதலீடு 20,000 கோடி ரூபாயாக இருக்கிறது. 35,000 ரூபாய் முதலீட்டில் ஆரம்பித்த விஜய் கேடியாவின் முதலீடு, இன்று 1,000 கோடியாக மாறியுள்ளது. இப்படி, பங்குச் சந்தை முதலீட்டின் மூலம் பெரும் பணக் காரர்களானவர்களின் பட்டியல் நீள்கிறது.

இது தெரிந்துதான் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அவர்களிடம் இருக்கும் பணத்தில் குறிப்பிட்ட அளவை நம் பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்கள். 1994-ம் ஆண்டு நிஃப்டி பங்குகளில் அந்நிய முதலீடு வெறும் 1%. இன்று அது 25 சதவிகிதத்தைத் தாண்டிவிட்டது. இது 50% ஆகிவிட்டால், அவர்கள் லாபம் சம்பாதிப்பவர்களாகவும், நாம் சம்பாதித்துத் தருபவர்களாகவும் இருப்போம்.

பங்குச் சந்தை முதலீடு
பங்குச் சந்தை முதலீடு

பங்குச் சந்தை முதலீடு என்னும் அற்புத விளக்கு நம் அனைவரின் கனவுகளை நிஜமாக்க வல்லது. ஆனால், அந்த விளக்குக்கான சாவி நம் மனதில்தான் பூட்டிக் கிடக்கிறது.

உத்தரவாதமான வருமானம் என்கிற எதிர்பார்ப்பில் 5 - 6% வருமானத்துக்குள் நாம் அடங்கி விடாமல், கொஞ்சம் ரிஸ்க் எடுத்து பங்குச் சந்தை பற்றி நன்கு புரிந்து கொண்டு முதலீடு செய்தால், நம்மாலும் நிறைய சம்பாதிக்க முடியும்.

‘பங்குச் சந்தை முதலீடு எனக்கு சரிப்பட்டு வராது; முதலீட்டுக்கான சூட்சுமங்களைக் கவனிக்க எனக்கு நேரமும் இல்லை, அறிவும் இல்லை’ என்கிறவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் தாராளமாக முதலீடு செய்யலாம்.

2020-ம் ஆண்டில் கொரோனா நோய் உருவாக்கிய ஊரடங்கு நமக்கு எத்தனையோ பல புதிய அனுபவங் களைக் கற்றுத் தந்திருக்கிறது.

புதிய வாழ்வியல் முறைகளையும், புதிய முதலீட்டு முறைகளையும் நோக்கி பயணிக்க அந்தக் காலகட்டம் நமக்கு உந்துதலை அளித்துள்ளது. அந்த வகையில் வருகிற 2021-ம் ஆண்டு தொடங்கி, பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்குவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு