Published:Updated:

ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க்... ரிசல்ட் எப்படி? முக்கிய நிறுவனங்களின் 3-ம் காலாண்டு முடிவுகள்!

Q 3 R E S U L T S

பிரீமியம் ஸ்டோரி

நடப்பு 2020-21-ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு முடிவுகளை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. சில முக்கிய நிறுவனங் களின் டிசம்பர் காலாண்டு முடிவுகள் இங்கே...

டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் (TATA Consumer Products)

டிசம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை 23.13% அதிகரித்து, 3,069.56 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தில் 2,492.96 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 28.83% அதிகரித்து, 218.17 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 169.35 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 9.85% அதிகரித்து, 380.82 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 346.67 கோடி ரூபாயாக இருந்தது. இதன் பங்கின் இ.பி.எஸ் 1.84 ரூபாயிலிருந்து அதிகரித்து, 2.37 ரூபாயாக உயர்ந்துள்ளது.

எஸ்கார்ட்ஸ் (Escorts)

டிசம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனை 23.51% அதிகரித்து, 2,017.43 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,633.44 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 83.37% அதிகரித்து, 280.65 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 153.05 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 72.09% அதிகரித்து, 411.28 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 238.99 கோடி ரூபாயாக இருந்தது.

இந்தப் பங்கின் இ.பி.எஸ் 12.81 ரூபாயிலிருந்து அதிகரித்து, 21.28 ரூபாயாக உயர்ந்துள்ளது.

காலாண்டு
காலாண்டு

ஹெச்.டி.எஃப்.சி (HDFC)

இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை டிசம்பர் காலாண்டில் 35.39% அதிகரித்து, 39,259.06 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 28,996.17 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 34.97% அதிகரித்து, 5,176.76 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 3,835.38 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 10.7% அதிகரித்து, 12,095.55 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 10,926.75 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் இ.பி.எஸ் 22.16 ரூபாயில் இருந்து அதிகரித்து, 28.79 ரூபாயாக உயர்ந்துள்ளது.

சன் பார்மா இண்டஸ்ட்ரீஸ் (Sun Pharmaceutical Industries)

டிசம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை 8.36% அதிகரித்து, 8,836.78 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 8,154.85 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 87.7% அதிகரித்து, 1,913.41 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,019.38 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 38.74% அதிகரித்து, 2,721.09 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,961.28 கோடி ரூபாயாக இருந்தது. இந்தப் பங்கின் இ.பி.எஸ் 3.81 ரூபாயில் இருந்து அதிகரித்து, 7.72 ரூபாயாக உயர்ந்துள்ளது.

மணப்புரம் ஃபைனான்ஸ் (Manappuram Finance)

டிசம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை 17.5% அதிகரித்து, 1,643.81 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,399.02 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 20.84% அதிகரித்து, 482.24 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 399.07 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 21.68% அதிகரித்து, 1,233.57 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,031.88 கோடி ரூபாயாக இருந்தது. இதன் பங்கின் இ.பி.எஸ் 4.77 ரூபாயில் இருந்து அதிகரித்து, 5.71 ரூபாயாக உயர்ந்துள்ளது.

ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (Reliance Infrastructure)

டிசம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை 3.12% குறைந்து, 3,831.69 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 3,954.92 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 76.82% குறைந்து, 80.08 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 345.51 கோடி ரூபாயாக இருந்தது.

எபிட்டா வருமானம் 70.43% குறைந்து, 161.06 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 544.69 கோடி ரூபாயாக இருந்தது. இந்தப் பங்கின் இ.பி.எஸ் 13.14 ரூபாயிலிருந்து குறைந்து, 3.04 ரூபாயாக இருக்கிறது.

ஐ.ஐ.எஃப்.எல் (IIFL)

டிசம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை 30.49% அதிகரித்து, 1,488.61 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,140.75 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 26.77% அதிகரித்து, 231.32 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 182.46 கோடி ரூபாயாக இருந்தது.

எபிட்டா வருமானம் 14.37% அதிகரித்து, ரூ.984.54 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 860.86 கோடி ரூபாயாக இருந்தது. இதன் இ.பி.எஸ் 4.83 ரூபாயிலிருந்து அதிகரித்து, 7.09 ரூபாயாக உயர்ந்துள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் (ICICI Bank)

இந்த வங்கியின் ஒருங்கிணைந்த நிகர வட்டி வருமானம், டிசம்பர் காலாண்டில் 14.29% அதிகரித்து, 11,801.84 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 10,325.82 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 17.73% அதிகரித்து, 5,498.15 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 4,670.10 கோடி ரூபாயாக இருந்தது.

செயல்பாட்டு லாபம் 15.3% அதிகரித்து, 10,258.28 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 8,896.72 கோடி ரூபாயாக இருந்தது. இந்தப் பங்கின் இ.பி.எஸ் 7.22 ரூபாயிலிருந்து 7.97 ரூபாயாக உயர்ந்துள்ளது.

சிப்லா (Cipla)

டிசம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை 18.25% அதிகரித்து, 5,168.69 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 4,371 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 113.13% அதிகரித்து, 748.15 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 351.03 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 58.69% அதிகரித்து, 1,317.82 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 830.46 கோடி ரூபாயாக இருந்தது. இந்தப் பங்கின் இ.பி.எஸ் 4.35 ரூபாயிலிருந்து அதிகரித்து, 9.28 ரூபாயாக உயர்ந்துள்ளது.

டெக் மஹிந்திரா (Tech Mahindra)

டிசம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை 0.08% குறைந்து, 9,647.10 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 9,654.60 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 14.3% அதிகரித்து, 1,309.80 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,145.90 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 10.64% அதிகரித்து, 2,116.40 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,912.90 கோடி ரூபாயாக இருந்தது. இந்தப் பங்கின் இ.பி.எஸ் 13.13 ரூபாயிலிருந்து அதிகரித்து, 14.98 ரூபாயாக உயர்ந்துள்ளது.

டி.எம்.பி: நிகர லாபம் 50% அதிகரிப்பு..!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (TMB), பழைமையான தனியார் துறை வங்கி. டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகள் குறித்த இயக்குநர்களின் கூட்டம் சென்னையில் நடந்தது. நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கே.வி.ராமமூர்த்தி முன்னிலையில் நிதிநிலை அறிக்கையை வங்கி அறிவித்தது. நிகர லாபம் ரூ120.78 கோடியிலிருந்து, ரூ180 கோடியாக 49.70% வளர்ச்சி கண்டுள்ளது. செயல்பாட்டு லாபம் ரூ.258.54 கோடியிலிருந்து, ரூ.349.82 கோடியாக 35.10% வளர்ச்சி அடைந்திருக்கிறது.

பிட்ஸ்

ரு தனிநபர் நடத்தும் நிறுவனம் ரூ.20 கோடி வரை டேர்ன் ஓவர் செய்தாலும் அது சிறு நிறுவனமாகக் கருதப்படும் என இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டிருப்பதால், சுமார் இரண்டு லட்சம் நிறுவனங்கள் நன்மை அடையும் என எதிர்பார்க்கப் படுகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு