Published:Updated:

மஹிந்திரா & மஹிந்திரா மூன்றாம் காலாண்டு ரிசல்ட் எப்படி..?

முக்கிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்!

பிரீமியம் ஸ்டோரி

Q 3 R E S U L T S

பிரமேஷ் எஸ்

நடப்பு 2020-21-ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு முடிவுகளை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. சில முக்கிய நிறுவனங்களின் டிசம்பர் காலாண்டு முடிவுகள் இங்கே...

பார்தி ஏர்டெல் (Bharti Airtel)

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான இதன் மொத்த விற்பனை மூன்றாம் காலாண்டில் ரூ.26,517 கோடியாக உள்ளது. இதுவே அந்த நிறுவனம் இதுவரை ஈட்டியதில் அதிகமான வருமானம் ஆகும். இது கடந்த டிசம்பர் 2019 காலண்டுடன் ஒப்பிட்டால், 20.83% அதிகம் ஆகும். இதன் நிகர லாபம் ரூ.853.6 கோடியாக உள்ளது. இந்த நிறுவனம் தொடர்ந்து இரண்டு இலக்க வளர்ச்சியைப் பெற்று வருகிறது. 5ஜி சேவை வழங்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது.

மஹிந்திரா & மஹிந்திரா (M&M)

ஆட்டோமொபைல் மற்றும் டிராக்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான இது, மூன்றாம் காலாண்டில் 530 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த காலண்டுடன் ஒப்பிட்டால் 40% அதிகமாகும். மொத்த வருவாயும் 16% உயர்ந்து, 14,056 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த காலாண்டில் 97,420 ட்ராக்டர்களை விற்பனை செய்துள்ளது இந்த நிறுவனம். இது 20% வளர்ச்சியாகும். இந்தப் பங்கின் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் 15% அதிகரித்துள்ளது.

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் (Britannia Industries)

எஃப்.எம்.சி.ஜி துறையில் பிஸ்கட் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான இது, கடந்த டிசம்பர் காலாண்டில் மொத்த வருவாய் 6.1% உயர்ந்து, ரூ.3,165 கோடியாக உள்ளது. நிகர லாபம் 22.4% உயர்ந்து, ரூ.453 கோடியாக உள்ளது. சந்தை வல்லுநர் களின் எதிர்பார்ப்பைக் காட்டிலும் அதிக லாபத்தை அந்த நிறுவனம் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் நேஷனல் பேங்க் (PNB)

இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான இது, கடந்த டிசம்பர் காலாண்டில் 506 கோடி ரூபாயை நிகர லாபமாகவும், மொத்த வருவாயாக 8,313 கோடி ரூபாயும் ஈட்டியுள்ளது. இது சென்ற காலாண்டில் ரூ.8444.9 கோடி நிகர வருவாயாகவும், ரூ. 621 கோடி நிகர லாபமாகவும் ஈட்டி யிருந்தது. கடந்த காலண்டுடன் இதை ஒப்பிட்டால் குறைந்த லாபம் ஈட்டி யிருந்தாலும் சந்தை ஆர்வலர்கள் எதிர்பார்த்தைவிட அதிக லாபத்தை இந்தக் காலாண்டில் ஈட்டியுள்ளது கவனிக்கத்தக்கது.

காலாண்டு
காலாண்டு

அசோகா பில்டுகான் (Ashoka Buildcon)

சாலை கட்டுமானத்தில் முன்னணி நிறுவனமான இது, டிசம்பர் காலாண்டில் 88.4 கோடி ரூபாயை நிகர லாபமாகவும், மொத்த வருவாயாக 1305.5 கோடி ரூபாயும் ஈட்டியுள்ளது. இது சென்ற காலாண்டில் ரூ.32.4 கோடி நிகர லாபமாகவும், 1280.4 கோடி நிகர வருவாயாகவும் ஈட்டி யிருந்தது.

சமீபத்தில் வந்த மத்திய பட்ஜெட்டில் உள்கட்டமைப்புப் பணிகளுக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலை உள்கட்டமைப்பு நிறுவனங்களும் சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அதனால் பெரும்பாலான முன்னணி கட்டுமானத் துறை பங்குகள் சென்ற வாரத்தில் 10 முதல் 30% வரை விலை உயர்ந்து வர்த்தகமாகின.

ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் (Fortis Healthcare)

மருத்துவமனைகளை நிர்வகிக்கும் நிறுவனமான இது, கடந்த டிசம்பர் காலாண்டில் 53.8 கோடி ரூபாயை நிகர லாப மாகவும், மொத்த வருவாயாக 1,177 கோடி ரூபாயும் ஈட்டி யுள்ளது. இது சென்ற காலாண்டில் 69.3 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்தது. சென்ற காலாண்டின் நிகர வருவாயாக 1,169 கோடி ரூபாய் ஈட்டியிருந்தது.

ஜிண்டால் சா (Jindal Saw)

மெட்டல் துறையில் முன்னணி நிறுவனமான இது, முடிந்த காலாண்டில் 88.09 கோடி ரூபாயை நிகர லாபமாகவும், மொத்த வருவாயாக 2864.7 கோடி ரூபாயும் ஈட்டியுள்ளது. இது சென்ற காலாண்டில் 65.49 கோடி நிகர லாபமாகவும், ரூ.2,988 கோடி நிகர வருவாயாகவும் ஈட்டியிருந்தது.

என்.டி.பி.சி (NTPC)

மின்துறை நிறுவனமான இது, கடந்த டிசம்பர் காலாண்டில் 3,766.46 கோடி ரூபாயை (8.32% உயர்வு) நிகர லாபமாகவும், மொத்த வருவாயாக 27,526.03 கோடி ரூபாயும் (18.48% உயர்வு) ஈட்டியுள்ளது.

ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (Shipping Corporation of India)

கப்பல் கட்டுமானத்தில் முன்னணி நிறுவனமான இது, கடந்த காலாண்டில் 295.24 கோடி ரூபாயை நிகர லாப மாகவும், மொத்த வருவாயாக 872.82 கோடி ரூபாயும் ஈட்டியுள்ளது. இது கடந்த காலாண்டைக் காட்டிலும் நிகர வருவாயில் 46% மற்றும் நிகர லாபத்தில் 55% குறைவாகும்.

மிஸ்சஸ் பெக்டர்ஸ் ஃபுட் ஸ்பெஷாலிட்டீஸ் (Mrs Bectors Food Specialities)

சமீபத்தில் புதிய பங்கு வெளியிட்ட இந்த நிறுவனம், டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.20.67 கோடி ஈட்டியுள்ளது. இது கடந்த காலாண்டு நிகர லாபமான ரூ.11.14 கோடியைவிட 85% அதிகமாகும். நிகர வருவாயும் கடந்த கால அளவான 203.8 கோடி என்கிற அளவில் இருந்து ரூ.225.75 கோடியாக அதிகரித்துள்ளது.

கிளாக்ஸோஸ்மித்க்லைன் பார்மா (Glaxosmithkline Pharmaceuticals)

பார்மா துறையில் மற்றொரு முன்னணி நிறுவனமான இது, ரூ.661.16 கோடி இழப்பு என்ற நிலையிலிருந்து 2020 டிசம்பர் காலாண்டில் ரூ.56.5 கோடி லாபம் ஈட்டி யுள்ளது. நிகர வருவாயும் ரூ.778.6 கோடியிலிருந்து ரூ.857.20 கோடியாக அதிகரித்துள்ளது.

கோத்ரேஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் (Godrej Consumer Products)

சில்லறை வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமான இது, டிசம்பர் காலாண்டில் நிகர வருவாயாக 1,694.75 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது. நிகர லாபமாக 351.38 கோடியைப் பெற்றுள்ளது. சென்ற காலாண்டில் இந்த நிறுவனம் நிகர வருவாயாக ரூ.1,523.87 கோடியும் நிகர லாபமாக ரூ.364.91 கோடியும் ஈட்டியிருந்தது.

ஹீரோ மோட்டோ கார்ப் (Hero Motocorp)

இருசக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணி நிறுவனமான இது, கடந்த டிசம்பர் காலாண்டில் இதன் நிகர வருவாய் 3.7% உயர்ந்து, ரூ.9,827 கோடியாக உள்ளது. நிகர லாபம் ரூ.950 கோடியில் இருந்து 1,127 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் பங்கு ஒன்றுக்கு 65 ரூபாய் இடைக்கால டிவிடெண்ட் மற்றும் 5 ரூபாய் சிறப்பு டிவிடெண்ட் வழங்குகிறது.

பிட்ஸ்

அமெரிக்காவில் 1.9 ட்ரில்லியன் கோடிக்கு ஊக்கத் தொகை அளிக்க ஒப்புதல் வழங்கப்படும் எனத் தகவல் வெளி வந்ததைத் தொடர்ந்து கூகுள் பங்கு விலை ஒரே நாளில் 14% உயர்ந்தது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு