Published:Updated:

மூன்றாம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

காலாண்டு முடிவுகள்

பிரீமியம் ஸ்டோரி

ங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் தற்போது வெளியாகிவருகின்றன. சில முக்கிய நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு முடிவுகளை இங்கே பார்ப்போம்.

ஆக்ஸிஸ் பேங்க்
ஆக்ஸிஸ் பேங்க்

ஆக்ஸிஸ் பேங்க்

ஆக்ஸிஸ் வங்கியின் நிகர லாபம் மூன்றாம் காலாண்டில் 4.53% அதிகரித்து, ரூ.1,757 கோடியாக இருக்கிறது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.1,680.85 கோடியாக இருந்தது. நிகர வட்டி வருவாய் 15% அதிகரித்து, ரூ.6,453 கோடியாக உள்ளது. மொத்த வாராக் கடன் விகிதம் 5.75 சதவிகிதத்திலிருந்து, 5 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. செயல்பாட்டு லாபம் 22% அதிகரித்து, ரூ.5,743 கோடியாக உள்ளது. வழங்கப்பட்ட கடன் 16% அதிகரித்து, ரூ.5,50,138 கோடியாக உள்ளது. வழங்கப்பட்ட சில்லறைக் கடன்கள் 25% அதிகரித்து, ரூ.2,91,554 கோடியாக உள்ளது.

 ஏசியன் பெயின்ட்ஸ்
ஏசியன் பெயின்ட்ஸ்

ஏசியன் பெயின்ட்ஸ்

ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபம் மூன்றாம் காலாண்டில் 20.5% அதிகரித்து, ரூ.779.71 கோடியாக உள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.647.28 கோடியாக இருந்தது. செயல்பாட்டு வருவாய் 3% அதிகரித்து, ரூ.5,420.28 கோடியாக இருக்கிறது. இந்த நிறுவனத்தின் எபிட்டா 7.7% அதிகரித்து, ரூ.1,189.4 கோடியாக உள்ளது. எபிட்டா லாப வரம்பு 0.96% அதிகரித்து, 21.94 சதவிகிதமாக உள்ளது.

எல் அண்ட் டி
எல் அண்ட் டி

எல் அண்ட் டி

எல் அண்ட் டி நிறுவனத்துக்கு மூன்றாம் காலாண்டில் ரூ.41,579 கோடி மதிப்பிலான புதிய பணி ஆணைகள் கிடைத்துள்ளன. இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை மூன்றாம் காலாண்டில் 1.49% அதிகரித்து, ரூ.36,242.68 கோடியாக உள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.35,708.87 கோடியாக இருந்தது. நிகர லாபம் 15.21% அதிகரித்து, ரூ.2,352.12 கோடியாக உள்ளது. எபிட்டா 0.27% அதிகரித்து, ரூ.6,596.99 கோடியாக உள்ளது. இந்த நிறுவனப் பங்கின் இ.பி.எஸ் 14.56 ரூபாயிலிருந்து, 16.76 ரூபாயாக அதிகரித்துள்ளது.

டி.சி.எஸ் நிறுவனத்தின் நிகர லாபம் மூன்றாம் காலாண்டில் 0.2% அதிகரித்து, ரூ.8,118 கோடியாக உள்ளது.
எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ்
எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ்

எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ்

எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் புதிய பிரீமியம் வசூல், மூன்றாம் காலாண்டில் 35% அதிகரித்து, ரூ.12,787 கோடியாக உள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.9,470 கோடியாக இருந்தது. புதிய பிரீமியம் வசூல் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 37% அதிகரித்து, ரூ.1,444 கோடியாக இருக்கிறது. தனிநபர் புதிய வணிக பிரீமிய வசூல் 27% அதிகரித்து, ரூ.8,394 கோடியாக உள்ளது. நிகர லாபம் கடந்த ஒன்பது மாத காலத்தில் ரூ.892 கோடியாக இருக்கிறது.

காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்

நிறுவனத்தின் சொத்து மதிப்பு மூன்றாம் காலாண்டில் 22% அதிகரித்து, ரூ.1,64,191 கோடியாக உள்ளது. எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் நாடு முழுவதும் 923 அலுவலகங்களுடன், 1,80,525 காப்பீட்டு நிபுணர்களுடன் பரந்துபட்ட நெட்வொர்க் நிறுவனமாகச் செயல்பட்டுவருகிறது.

உஜ்ஜிவான் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்
உஜ்ஜிவான் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்

உஜ்ஜிவான் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்

உஜ்ஜிவான் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்கின் நிகர லாபம் மூன்றாம் காலாண்டில் ரூ.90 கோடியாக உள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.45 கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டில், இந்த வங்கியின் நிகர லாபம் கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 104% அதிகரித்து, ரூ.277 கோடியாக உள்ளது.

காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்

கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், மூன்றாம் காலாண்டில் நிகர வட்டி வருமானம் 52% அதிகரித்து, ரூ.427 கோடியாக உள்ளது. வழங்கப்பட்ட மொத்தக் கடன் தொகை 46% அதிகரித்து, ரூ.13,617 கோடியாக உள்ளது. மொத்த வாராக் கடன் விகிதம் 1.4 சதவிகிதத்திலிருந்து 0.9 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. 2019-ம் ஆண்டில் உஜ்ஜிவான் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்கின் ஐ.பி.ஓ வெளியீடு வெற்றிகரமான ஒன்றாக அமைந்தது. இந்த வங்கியின் பங்குகளுக்கு 101 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரேமண்ட்
ரேமண்ட்

ரேமண்ட்

ரேமண்ட் நிறுவனத்தின் நிகர விற்பனை மூன்றாம் காலாண்டில் 6.03% அதிகரித்து, ரூ.933.21 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.880.17 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபம் 24.54% அதிகரித்து, ரூ.33.09 கோடியாக உள்ளது. எபிட்டா 17.16% அதிகரித்து, ரூ.141.90 கோடியாக உள்ளது. ரேமண்ட் பங்கின் இ.பி.எஸ் 4.33 ரூபாயிலிருந்து 5.34 ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி ஏ.எம்.சி
ஹெச்.டி.எஃப்.சி ஏ.எம்.சி

ஹெச்.டி.எஃப்.சி ஏ.எம்.சி

ஹெச்.டி.எஃப்.சி அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் மூன்றாம் காலாண்டில் 44.93% அதிகரித்து, ரூ.352.55 கோடியாக உள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.243.26 கோடியாக இருந்தது. மொத்த வருவாய் 11% அதிகரித்து, ரூ.592 கோடியாக உள்ளது. மொத்தச் செலவுகள் 23.39% குறைந்து, ரூ.125.96 கோடியாக உள்ளது. மொத்தச் சொத்து மதிப்பு 14% அதிகரித்து, ரூ.3.83 ட்ரில்லியனாக உள்ளது.

டி.சி.எஸ்
டி.சி.எஸ்

டி.சி.எஸ்

டி.சி.எஸ் நிறுவனத்தின் நிகர லாபம் மூன்றாம் காலாண்டில் 0.2% அதிகரித்து, ரூ.8,118 கோடியாக உள்ளது. வருவாய் 6.7% அதிகரித்து, ரூ.39,854 கோடியாக உள்ளது. செயல்பாட்டு லாப வரம்பு 25 சதவிகிதமாக உள்ளது. டி.சி.எஸ் நிறுவனம் தன் பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.5 இடைக்கால டிவிடெண்ட் அறிவித்துள்ளது. லைஃப் சயன்ஸ் & ஹெல்த்கேர் பிரிவில் இந்த நிறுவனம் 17.1% வளர்ச்சியை எட்டியுள்ளது.

ஃபெடரல் பேங்க்
ஃபெடரல் பேங்க்

ஃபெடரல் பேங்க்

வாராக்கடன் ஒதுக்கீடு குறைவாகவும், இதர வருவாய் அதிகமாகவும் இருந்த காரணத்தால் மூன்றாம் காலாண்டில் ஃபெடரல் வங்கியின் நிகர லாபம் 32% அதிகரித்து, ரூ.440.64 கோடியாக உள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.333.63 கோடியாக இருந்தது. வங்கியின் நிகர வட்டி வருவாய் 7.21% அதிகரித்து, ரூ.1,154.93 கோடியாக உள்ளது. இதர வருவாய் 18.03% அதிகரித்து, ரூ.407.86 கோடியாக உள்ளது. மொத்த வாராக்கடன் 2.99 சதவிகிதமாக உள்ளது. வாராக்கடன் ஒதுக்கீடு 15.39% குறைந்து, ரூ.160.86 கோடியாக உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு