பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் தற்போது வெளியாகிவருகின்றன. சில முக்கிய நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு முடிவுகளை இங்கே பார்ப்போம்.

பஜாஜ் ஃபைனான்ஸ்

பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் மூன்றாம் காலாண்டில் 52% அதிகரித்து, ரூ.1,614 கோடியாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.1,060 கோடியாக இருந்தது. சொத்து மதிப்பு 35% அதிகரித்து, ரூ.1,45,092 கோடியாக இருக்கிறது. நிகர வட்டி வருவாய் 42% அதிகரித்து, ரூ.4,537 கோடியாக உள்ளது.

மாருதி சுஸூகி

மாருதி சுஸூகி நிறுவனத்தின் நிகர லாபம் மூன்றாம் காலாண்டில் 5.1% அதிகரித்து, ரூ.1,564.8 கோடியாக உள்ளது. மூன்றாம் காலாண்டில் வாகனங்கள் விற்பனை 2% அதிகரித்து, 4,37,361-ஆக உள்ளது. இவற்றில் உள்நாட்டு வாகன விற்பனை 2% அதிகரித்து, 4,13,698 வாகனங்களாக இருக்கின்றன. ஏற்றுமதி 2.7% அதிகரித்து, 23,663 வாகனங்களாக இருக்கின்றன. நிகர விற்பனை 3.8% அதிகரித்து, ரூ.19,649 கோடியாக உள்ளது. லாப வரம்பு 0.3% அதிகரித்து, 10.1 சதவிகிதமாக உள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க்கின் நிகர லாபம் மூன்றாம் காலாண்டில் 158% அதிகரித்து, ரூ.4,146 கோடியாக உள்ளது.

இண்டிகோ

இண்டிகோ நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் மூன்றாம் காலாண்டில் 168% அதிகரித்து, ரூ.496 கோடியாக உள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.185.17 கோடியாக இருந்தது. கொள்ளளவைக் கடந்த ஆண்டு 19% அதிகரித்ததால், இதன் வருவாய் 25.53% அதிகரித்து, ரூ.10,330 கோடியாக உள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ.560 கோடியாக உள்ளது. வரிக்கு முந்தைய லாப வரம்பு 2.3 சதவிகிதத்திலிருந்து 5.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மொத்தச் செலவு 21.5% அதிகரித்து, ரூ.9,773.64 கோடியாக உள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி

ஹெச்.டி.எஃப்.சி-ன் நிகர லாபம் மூன்றாம் காலாண்டில் நான்கு மடங்கு அதிகரித்து, ரூ.8,372.49 கோடியாக உள்ளது. மொத்தச் செயல்பாட்டு வருவாய் 92% அதிகரித்து, ரூ.20,285.47 கோடியாக உள்ளது. நிகர வட்டி வருவாய் 13.56% அதிகரித்து, ரூ.2,957.83 கோடியாக உள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க்

ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க்கின் நிகர லாபம் மூன்றாம் காலாண்டில் 158% அதிகரித்து, ரூ.4,146 கோடியாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.1,605 கோடியாக இருந்தது. வாராக்கடன் ஒதுக்கீடு 51% குறைந்து, ரூ.2,083 கோடியாக உள்ளது. மொத்த வாராக்கடன் 5.95 சதவிகிதமாக உள்ளது. புதிதாக உயர்ந்துள்ள வாராக்கடன் தொகை ரூ.4,363 கோடியாக உள்ளது. நிகர வட்டி வருவாய் 24% அதிகரித்து, ரூ.8,545 கோடியாக உள்ளது. வழங்கப்படும் சில்லறைக் கடன்கள் 16 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.