Published:Updated:

மூன்றாம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

மூன்றாம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

காலாண்டு முடிவுகள்

Published:Updated:
காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

ங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் தற்போது வெளியாகிவருகின்றன. சில முக்கிய நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு முடிவுகளை இங்கே பார்ப்போம்.

காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்

அதானி என்டர்பிரைஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதானி என்டர்பிரைஸ்
அதானி என்டர்பிரைஸ்

இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை, மூன்றாம் காலாண்டில் 4.97% அதிகரித்து ரூ.10,948.17 கோடியாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.10,429.67 கோடியாக இருந்தது. இதன் காலாண்டு நிகர லாபம் 362.07% அதிகரித்து ரூ.426.26 கோடியாக உள்ளது. எபிட்டா 57.51% அதிகரித்து ரூ.884.46 கோடியாக உள்ளது. இந்த நிறுவனப் பங்கின் இ.பி.எஸ் 0.84 ரூபாயிலிருந்து 3.88 ரூபாயாக அதிகரித்திருக்கிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி

2019-2020-ம் ஆண்டில் வாராக் கடனுக்காகக் கூடுதல் தொகையை ஒதுக்கீடு செய்ததால், இந்த வங்கியின் நிகர இழப்பு மூன்றாம் காலாண்டில் ரூ.492.28 கோடியாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.246.51 கோடி நிகர லாபத்தைச் சம்பாதித்தது. கடந்த செப்டம்பர் காலாண்டில் இதன் லாபம் ரூ.507.05 கோடியாக இருந்தது. மூன்றாம் காலாண்டில் இதன் மொத்த வருவாய் ரூ.15,967.49 கோடியாக உள்ளது. வாராக் கடனுக்கான ஒதுக்கீடு ரூ.2,565.77 கோடியிலிருந்து ரூ.4,445.36 கோடியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. வங்கியின் ஒருங்கிணைந்த நிகர இழப்பு ரூ.501.93 கோடியாக உள்ளது.

சி.எஸ்.பி வங்கி
சி.எஸ்.பி வங்கி

சி.எஸ்.பி வங்கி

இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் மூன்றாம் காலாண்டில் 31.18% அதிகரித்து ரூ.155.23 கோடியாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.118.33 கோடியாக இருந்தது. மூன்றாம் காலாண்டில் இதன் நிகர லாபம் 3,754.79% அதிகரித்து ரூ.28.14 கோடியாக உள்ளது. இதன் செயல்பாட்டு லாபம் 62.78% அதிகரித்து ரூ.70.01 கோடியாக உள்ளது.

ஜி.இ பவர் இந்தியா
ஜி.இ பவர் இந்தியா

ஜி.இ பவர் இந்தியா

இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை மூன்றாம் காலாண்டில் 38.74% அதிகரித்து ரூ.765.27 கோடியாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.551.57 கோடியாக இருந்தது. நிகர லாபம் 145.49% அதிகரித்து ரூ.100.92 கோடியாக உள்ளது. எபிட்டா 6.86% குறைந்து ரூ.97.01 கோடியாக உள்ளது.

ஜி.இ பவர் இந்தியா நிறுவனத்தின் நிகர விற்பனை மூன்றாம் காலாண்டில் 38.74% அதிகரித்து, ரூ.765.27 கோடியாக உள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்

பார்தி ஏர்டெல்

பார்தி ஏர்டெல்
பார்தி ஏர்டெல்

இந்த நிறுவனம் மூன்றாம் காலாண்டில் ரூ.1,035 கோடி நிகர இழப்பைச் சந்தித்துள்ளது. கடந்த 14 ஆண்டுகளில் மூன்று காலாண்டுகளில் இழப்பைச் சந்தித்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் இந்த நிறுவனம் ரூ.86 கோடி நிகர லாபத்தை ஈட்டியிருந்தது. இதன் ஒருங்கிணைந்த செயல்பாட்டு வருவாய் 8.5% அதிகரித்து ரூ.21,947 கோடியாக உள்ளது. பார்தி ஏர்டெல் கடந்த டிசம்பரில் கட்டணங்களை 40% உயர்த்தியது. இந்த நிறுவனம் ரூ.35,586 கோடி மதிப்பிலான ஏ.ஜி.ஆர் தவணைகளைச் செலுத்த வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேட்ரிமோனி டாட் காம்
மேட்ரிமோனி டாட் காம்

மேட்ரிமோனி டாட் காம்

இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை மூன்றாம் காலாண்டில் 4.73% அதிகரித்து ரூ.88.74 கோடியாக உள்ளது. இதன் நிகர லாபம் மூன்றாம் காலாண்டில் 24.9% குறைந்து ரூ.4.89 கோடியாக உள்ளது. நிகர லாபம் கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.6.52 கோடியாக இருந்தது. இதன் எபிட்டா 45.31% அதிகரித்து, ரூ.14.24 கோடியாக உள்ளது.

இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ்
இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ்

இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ்

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் மூன்றாம் காலாண்டில் 44.02% சரிவடைந்து ரூ.551.70 கோடியாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.985.51 கோடியாக இருந்தது. இதன் மொத்த வருவாய் 24.75% குறைந்து ரூ.3,369.76 கோடியாக உள்ளது. இதன் தனித்த நிகர லாபம் 60.40% சரிந்து, ரூ.377.23 கோடியாக உள்ளது. இதன் வருவாய் கடந்த ஓராண்டில் ரூ.4,045 கோடியிலிருந்து ரூ.2,976.14 கோடியாகக் குறைந்துள்ளது.

டி.எல்.எஃப்
டி.எல்.எஃப்

டி.எல்.எஃப்

இதன் நிகர லாபம் மூன்றாம் காலாண்டில் 23.81% அதிகரித்து ரூ.414.10 கோடியாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.335.15 கோடியாக இருந்தது. மொத்த வருவாய் 36.26% சரிவடைந்து ரூ.1,533.34 கோடியாக உள்ளது. இருப்பினும், மூன்றாம் காலாண்டில் இதன் நிகர லாபமாக ரூ.231 கோடி கிடைத்துள்ளது. இந்த நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு ரூ.1.20 தரவுள்ளது.

டிவிஸ் லேப்ஸ்
டிவிஸ் லேப்ஸ்

டிவிஸ் லேப்ஸ்

இதன் நிகர விற்பனை மூன்றாம் காலாண்டில் 3.54% அதிகரித்து ரூ.1,390.49 கோடியாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.1,342.92 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபம் மூன்றாம் 4.94% குறைந்து, ரூ.360.73 கோடியாக உள்ளது. எபிட்டா 3.71% குறைந்து ரூ.537.18 கோடியாக உள்ளது. இந்த நிறுவனப் பங்கின் இ.பி.எஸ் ரூ.14.29-லிருந்து ரூ.13.59-ஆகக் குறைந்துள்ளது.

டைட்டன்
டைட்டன்

டைட்டன்

இதன் நிகர லாபம் 12.9% அதிகரித்து, ரூ.470 கோடியாக உள்ளது. மூன்றாம் காலாண்டில் ரூ.492.28 கோடியாக உள்ளது. மொத்த விற்பனை 9.4% அதிகரித்து, ரூ.6,206 கோடியாக உள்ளது. ஜூவல்லரி விற்பனை வருவாய் 10.6% வளர்ச்சி பெற்று ரூ.5,409 கோடியாக உள்ளது. வாட்ச் மூலமான விற்பனை வருவாய் சற்றுக் குறைந்து, ரூ.625 கோடியாக உள்ளது. மூக்குக் கண்ணாடி விற்பனை மூலமான வருவாய் மதிப்பு 2.9% அதிகரித்து ரூ.133 கோடியாக உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism