பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் தற்போது வெளியாகிவருகின்றன. சில முக்கிய நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு முடிவுகளை இங்கே பார்ப்போம்.

ஐ.ஆர்.சி.டி.சி

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் மூன்றாம் காலாண்டில் 179.66% அதிகரித்து ரூ.205.8 கோடியாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.73.59 கோடியாக இருந்தது. இதன் வருவாய் 64.59% அதிகரித்து ரூ.715.98 கோடியாக உள்ளது. எபிட்டா 168.74% அதிகரித்து ரூ.265.7 கோடியாக உள்ளது. எபிட்டா லாப வரம்பு 37.11 சதவிகிதமாக உள்ளது. இந்த நிறுவனம் இடைக்கால டிவிடெண்டாக பங்கு ஒன்றுக்கு ரூ.10 அறிவித்திருக்கிறது.

ஐ.டி.பி.ஐ பேங்க்

மூன்றாம் காலாண்டில் எல்.ஐ.சி நிறுவனம் அதிக பங்கு மூலதனத்தைக் கொண்டிருக்கும் ஐ.டி.பி.ஐ வங்கியின் தனித்த நிகர இழப்பு ரூ.5,763.04 கோடியாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.4,185.48 கோடி நிகர இழப்பாக இருந்தது. இதன் மொத்த வருவாய் ரூ.6,215.60 கோடியாக உள்ளது. வழங்கப்பட்ட மொத்தக் கடனில், வாராக்கடன் விகிதம் 28.72 சதவிகிதமாக உள்ளது. மொத்த வாராக்கடன் ரூ.49,502.68 கோடி. நிகர வாராக்கடன் விகிதம் 5.25 சதவிகிதமாக இருக்கிறது. வாராக்கடன் ஒதுக்கீடு ரூ.440 கோடியாக உள்ளது.

கல்பதரு பவர் டிரான்ஸ்மிஷன்

இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை மூன்றாம் காலாண்டில் 14.67% அதிகரித்து ரூ.3,162 கோடியாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.2,757.48 கோடியாக இருந்தது. இதன் காலாண்டு நிகர லாபம் 9.72% அதிகரித்து ரூ.127 கோடியாக உள்ளது. எபிட்டா 14.26% அதிகரித்து, ரூ.398 கோடியாக உள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனத்தின் நிகர லாபம் மூன்றாம் காலாண்டில் 179.66% அதிகரித்து ரூ.205.8 கோடியாக உள்ளது.

இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட்

இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை மூன்றாம் காலாண்டில் 3.05% குறைந்து ரூ.1,232.26 கோடியாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.1,271.07 கோடியாக இருந்தது. இதன் காலாண்டு நிகர லாபம் 75.7% குறைந்து ரூ.49.20 கோடியாக உள்ளது. எபிட்டா 47.87% குறைந்து ரூ.210.77 கோடியாக உள்ளது. இந்த நிறுவனப் பங்கின் இ.பி.எஸ் 4.49 ரூபாயிலிருந்து 1.08 ரூபாயாகக் குறைந்திருக்கிறது.

ஹிண்டால்கோ

இந்த நிறுவனத்தின் தனித்த நிகர லாபம் மூன்றாம் காலாண்டில் 21.9% குறைந்து ரூ.193 கோடியாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.247 கோடியாக இருந்தது. இதன் வருவாய் 14.4% குறைந்து ரூ.10,230 கோடியாக உள்ளது.எபிட்டா 9.3% அதிகரித்து ரூ.1,013 கோடியாக உள்ளது. எபிட்டா லாப வரம்பு 2.1% அதிகரித்து 9.9 சதவிகிதமாக உள்ளது.

மஹிந்திரா & மஹிந்திரா

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் மூன்றாம் காலாண்டில் 73% குறைந்து ரூ.380 கோடியாக உள்ளது. இதன் வருவாய் 6% குறைந்து ரூ.12,120 கோடியாக உள்ளது. எபிட்டா லாப வரம்பு 13.2 சதவிகிதத்திலிருந்து 14.8 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

கல்கத்தா எலெக்ட்ரிக் சப்ளை கார்ப்பரேஷன்

இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை மூன்றாம் காலாண்டில் 2.94% குறைந்து ரூ.2,344 கோடியாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.2,415 கோடியாக இருந்தது. இதன் காலாண்டு நிகர லாபம் 12.18% அதிகரித்து ரூ.267 கோடியாக உள்ளது. எபிட்டா 11.89% அதிகரித்து ரூ.687 கோடியாக உள்ளது. இந்த நிறுவனப் பங்கின் இ.பி.எஸ் 20.16 ரூபாயாக உள்ளது.

சிண்டிகேட் பேங்க்

இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம், மூன்றாம் காலாண்டில் 15.62% அதிகரித்து ரூ.1,871.60 கோடியாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.1,618.69 கோடியாக இருந்தது. இதன் காலாண்டு நிகர லாபம் 309.07% அதிகரித்து ரூ.480.37 கோடியாக உள்ளது. எபிட்டா 91.59% அதிகரித்து ரூ.1,335.94 கோடியாக உள்ளது. இந்த வங்கிப் பங்கின் இ.பி.எஸ் 1.79 ரூபாயாக உள்ளது.

கோல் இந்தியா

இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை மூன்றாம் காலாண்டில் 7.41% குறைந்து ரூ.23,190.49 கோடியாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.25,045.83 கோடியாக இருந்தது.

இதன் காலாண்டு நிகர லாபம் 14.08% குறைந்து ரூ.3,923.87 கோடியாக உள்ளது. எபிட்டா 19.76% குறைந்து, ரூ.6,380.14 கோடியாக உள்ளது. இந்த நிறுவனப் பங்கின் இ.பி.எஸ் 7.36 ரூபாயிலிருந்து, 6.37 ரூபாயாகக் குறைந்துள்ளது.

ஜிண்டால் ஸ்டெயின்லெஸ்

இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை, மூன்றாம் காலாண்டில் 0.13% குறைந்து ரூ.3,302.39 கோடியாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.3,306.70 கோடியாக இருந்தது. இதன் காலாண்டு நிகர லாபம் 21.33% அதிகரித்து ரூ.51.81 கோடியாக உள்ளது. எபிட்டா 33.19% அதிகரித்து, ரூ.308.59 கோடியாக உள்ளது. இந்த நிறுவனப் பங்கின் இ.பி.எஸ் 0.89 ரூபாயிலிருந்து 1.06 ரூபாயாக அதிகரித்துள்ளது.