இது வரை பங்குச் சந்தை குறியீட்டில் உள்ள சில முக்கிய பங்குகளும் லார்ஜ்கேப் பங்குகளும் மட்டுமே உயர்ந்து வந்தன. மல்ட்டிகேப் ஃபண்டுகளுக்கான விதிமுறையை சமீபத்தில் செபி மாற்றி அமைத்த பின், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும், அதில் உள்ள சில பங்குகளும் வேகமாக உயர்ந்து வருகின்றன.
இந்த நிலையில், முதலீட்டாளர்கள் தங்களுடைய போர்ட்ஃபோலியோவை மறுபரிசீலனை செய்வது நல்லது. ஒரு சிலரின் போர்ட்ஃபோலியோவில் தரமான நிறுவனப்பங்குகளும் தரமற்ற பங்குகளும் இருக்கும். தற்போதுள்ள சூழலைப் பயன்படுத்தி தரமற்றதாகக் கருதும் பங்குகள் லாபத்தில் இருக்கும்பட்சத்தில், அவற்றை விற்றுவிட்டு, போர்ட்ஃபோலியோவை மாற்றி அமைத்துக்கொள்ளலாம். இதன்மூலம் லாபத்தை காசாக்கிக் கொண்டு நம்மால் நன்மை அடைய முடியும்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இன்னும் சிலர் தெரிந்தோ, தெரியாமலோ தங்கள் போர்ட்ஃபோலியோவில் அதிகளவில் ஸ்மால்கேப் பங்குகளைத் தேர்வு செய்து வைத்திருப்பார்கள். இத்தனை ஸ்மால்கேப் பங்குகள் தேவைதானா, அந்தப் பங்கு நிறுவனங்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதைக் கவனித்து, அதைத் தொடர்ந்து வைத்திருக்கலாமா அல்லது விற்றுவிடலாமா என்று முடிவு செய்யலாம்.
இதற்கு நன்கு விஷயம் தெரிந்த பங்கு ஆய்வாளர் ஒருவரிடம் உங்கள் போர்ட்ஃபோலியோவில் உள்ள பங்குகள் குறித்து ஆய்வு செய்வது அவசியம்!