கண் தெரியாத சிலர் ஒரு யானையை விதவிதமாகப் பார்த்த கதை நமக்குத் தெரியும். அதுபோலத்தான் பங்குச் சந்தையையும் பலர் விதவிதமாகப் பார்க்கிறார்கள், அணுகுகிறார்கள். சிலர் அதை முதலீட்டு வாய்ப்பாகப் பார்க்கிறார்கள்; சிலர் நல்ல டிரேடிங் வாய்ப்பாகப் பார்க்கிறார்கள். பல டிரேடர்கள், `முதலீடு செய்துவிட்டுக் காத்திருப்பதுதான் ரிஸ்க்; இப்படி வாங்கி அப்படி விற்பதில் ரிஸ்க் குறைவு’ என்று நினைக்கிறார்கள். அதோடு, `முதலீடு செய்வதற்குத்தான் அதிகம் தெரிந்திருக்க வேண்டும்; டிரேடிங்குக்கு பங்கு குறித்து அதிகம் தெரிந்திருக்க வேண்டியதில்லை’ என்பதும் அவர்களில் சிலரின் எண்ணம்.

`டிரேடிங்’ என்பது நீச்சல் அடிப்பதென்றால், `இன்வெஸ்ட்மென்ட்’ என்பது படகு அல்லது கப்பலில் பயணம் போவது போன்றது. அதிலும் ஆபத்து உண்டு. ஆனால், அது குறைவு. டிரேடிங்கில் பணம் சம்பாதிக்க ‘நீச்சல் மன்னர்களாக’ இருக்க வேண்டும். டிரேடிங்கில் தொடர்ந்து லாபம் பார்க்கும், வெற்றிகரமான டிரேடர்கள் கடைப்பிடிக்கும் வழிமுறைகள் பலவும் எளிதானவை; ஆனால், பெரும்பாலானவர்கள் பின்பற்றாதவை. அவற்றில் ஒன்று, டிரேடிங்கில் ‘டிசிப்ளின்.’ டிப்சிப்ளின் என்றால் ஒழுங்குமுறை.

`அப்படியென்ன எளிய, ஆனால் பலரும் கடைப்பிடிக்காத ஒழுங்குமுறைகள் இருக்க முடியும்’ என்று கேட்கிறீர்களா... ஒன்றல்ல, இரண்டல்ல... 15 ஒழுங்குமுறைகளைச் சொல்ல முடியும். அவை...

1. எவ்வளவு நஷ்டமானால் தாங்க முடியுமோ, அந்த அளவுக்கான பணத்தை மட்டும் சந்தைக்கு எடுத்து வருவது. அதற்கு மேல் போகாமல் இருப்பது. `இது ஒரு பெரிய விஷயமா...’ என்று நீங்கள் நினைக்கலாம். உண்மையில், இதைக் கடைப்பிடிப்பவர்கள் அதிகம் பேரில்லை. வாங்கிய பிறகு விலை இறங்கிவிட்டால், `ஆவரேஜ் செய்கிறேன்’ என்று மேலும் வாங்குவது; எதிர்பார்த்ததுபோலவே நடந்துவிட்டால், அதுவும் உடனடியாகவோ, அதிகமாகவோ நடந்துவிட்டால் ஒரு ‘ஓவர் கான்ஃபிடன்ஸ்’ ஏற்பட்டு மேலும் வாங்குவது. அதற்காக மேலும் பணத்தை எடுத்து வருவதெல்லாம் சாதாரணமாக நடக்கும் விஷயங்கள். இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

2. எடுத்து வந்த பணம் முழுவதற்கும் டிரேட் செய்யாமல், 25% அளவு பணத்தையாவது விட்டுவைப்பது. 75% பணத்தில் மட்டும் டிரேட் செய்வது. காரணம், வாங்கிய பிறகு விலை இறங்கலாம். அப்போது எம்-டு-எம் (Mark to Market) காரணமாகவோ அல்லது அதிகரிக்கப் பட்ட கூடுதல் மார்ஜின் தொகை காரணமாகவோ மேலும் பணம் கொடுக்க வேண்டிவரும். அப்போது கையில் பணம் இல்லாவிட்டால் பொசிஷனை விட்டுவிட நேரும்.

3. ஒரே நேரத்தில் பல ‘பொஷிஷன்’கள் எடுக்காமல் இருப்பது. சிந்திக்க, ஆராய, கவனிக்க முயல்வது. குறிப்பாக, ஒரு டிரேடில் நல்ல லாபம் வந்துவிட்டால், அந்தத் தெம்பிலேயே மடமடவென்று பல பொசிஷன்கள் எடுக்கத் தோன்றும். இப்படிச் செய்வது கூடவே கூடாது. வந்த லாபம் நஷ்டத்தில் போய் முடியும் ஆபத்துகள் அதிகம்.

4. `சில டிரேட்கள் நஷ்டம் தரலாம். அது இயல்புதான்’ என்ற மனப்பாங்குடன் அணுகுவது. நாம் எடுத்த முடிவு தவறாகிப் போய், விலை எதிர்த்திசையில் போய்விட்டால் அந்த டிரேடிலிருந்து வெளியேறிவிட வேண்டும். இன்வெஸ்ட்மென்ட் அணுகுமுறை செல்லாது.

5. ஸ்டாப்லாஸ் போட்டு மட்டுமே டிரேட் செய்து நஷ்டங்களை உடனே தடுப்பது. பங்குச் சந்தையில் கண்ணிமைக்கும் நேரத்தில் டிரெண்ட் மாறிவிடலாம். பெரிய செய்திகளின் தாக்கம் கடுமையாக இருக்கலாம். எப்போதும் ஹெல்மெட், சீட்பெல்ட் அணிவது பாதுகாப்பான பயணத்துக்கு எப்படி உத்தரவாதமோ, அதே போன்றதுதான் ஸ்டாப்லாஸ் என்பதும்.

பங்குச் சந்தையில் கண்ணிமைக்கும் நேரத்தில் டிரெண்ட் மாறிவிடும் வாய்ப்புகள் அதிகம்!

6. லாங் டிரேடில் வாங்கிய பங்கின் விலை தொடர்ந்து உயரும்போது கிடைக்கும் லாபத்தை உறுதிசெய்ய, ஸ்டாப் லாஸை உயர்த்திக் கொண்டே போய் லாபங்களைத் தொடர விடுவது.

ஷார்ட் டிரேடில் விற்ற பிறகும் விலை இறங்கிக்கொண்டே போனால், ஸ்டாப் லாஸ் அளவையும் இறக்கிக்கொண்டே போய் லாபங்களைத் தொடரவிடுவதை ‘டிரெயிலிங் ஸ்டாப் லாஸ்’ என்பார்கள். நாம் நினைத்ததற்கு எதிர்மாறாக விலை செல்ல வாய்ப்பு உண்டு. அதனால் வரும் நஷ்டத்தைக் குறைக்க ஸ்டாப் லாஸ். விலை நாம் நினைத்த திசையிலேயே பயணிக்கலாம். ஆனால், நாம் நினைத்ததைக் காட்டிலும் விலை மாற்றம் அதிக தூரம் செல்ல வாய்ப்புண்டு. அந்தக் கூடுதல் லாபத்தைத் தவறவிடாமல் இருக்கத்தான் ‘டிரெயிலிங் ஸ்டாப் லாஸ்.’

7. எல்லா நேரமும் சந்தையில் ஏதாவது பொசிஷன் வைத்திருக்க வேண்டும் என்றில்லாமல் சந்தை சரியாக இல்லையென்றால், நிச்சயமான அறிகுறிகள் தென்படாவிட்டால், சும்மா இருப்பது. ‘ஏதாவது ஒரு டிரேட்’ என்று செய்யாமல் இருப்பது. காபி, சிகரெட், மதுப் பழக்கம் உடையவர்களுக்கு அவை இல்லாமல் முடியாது. டிரேடிங் அப்படிப்பட்ட பழக்கம் ஆகிவிடக் கூடாது.

நல்ல கிரிக்கெட் வீரர்கள், வீசப்படும் எல்லாப் பந்துகளையும் அடிக்கவோ தடுக்கவோ முயல்வதில்லை. அது ஆபத்தில் முடியலாம். அதனால் சிலவற்றை மட்டையைத் தூக்கி ‘வெல் லெஃப்ட்’ என்பதுபோல விட்டுவிடுவார்கள். உறுதியாகத் தெரியா விட்டால் டிரேட் வேண்டாம்.

8. விலை குறைவதாலேயே ஒரு ‘பை டிரேட்’ செய்வதோ, விலை அதிகம் உயர்கிறது என்பதாலேயே ஒரு ‘செல் டிரேட்’ அல்லது ஷார்ட் செய்வதோ ஆபத்தில் முடியலாம். விலை உயரவோ குறையவோ நமக்குத் தெரியாத காரணங்கள் இருக்கலாம். யெஸ் பேங்க் பங்கு விலைபோல.

9. சந்தை நடக்கும்போதே திடீரெனச் செய்யாமல், அதற்கென்று ஒரு திட்டம் வைத்து, விவரங்களை கவனித்து, இண்டிகேட்டர்கள் பார்த்து, திட்டமிட்டுச் செய்வது.

10. ஒரு டிரேடால் எவ்வளவு தரமுடியுமோ, அவ்வளவுதான் தர முடியும். நமக்குத் தேவை என்பதாலோ, அன்றைக்கு பிற டிரேட்களில் நமக்கு நஷ்டம் என்பதாலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ இல்லாததை டிரேடிங்கால் தர இயலாது என்பதை ஏற்றுக்கொண்டு கூடுதல் லாபத்தை எதிர்பார்த்து, கிடைக்கும் லாபத்தைப் பதிவு செய்யவோ நஷ்டத்தைத் தடுக்கவோ கிடைக்கும் வாய்ப்பைத் தவறவிடாமல் இருப்பது.

விலை குறைவதாலேயே ஒரு ‘பை டிரேட்’ செய்வதோ, விலை அதிகம் உயர்கிறது என்பதாலேயே ஒரு ‘செல் டிரேட்’ அல்லது ஷார்ட் செய்வதோ ஆபத்தில் முடியலாம்.

11. தவறவிட்ட டிரேடை `போகட்டும்...’ என்று விட்டுவிடுவது. விரட்டிப் பிடிக்காமல் இருப்பது.

12. விலை போகிற டிரெண்டில் பயணிப்பது.

13. டிரேட் செய்ய வாங்கிய ஒன்றை, விலை இறங்கிவிட்டது என்பதற்காக முதலீட்டுக்கு என்று மாற்றி யோசித்து, தொடராமல் விற்றுவிடுவது.

14. எவரைவிடவும் சந்தை பெரிது. அதற்குக் கூடுதலாகத் தெரியும் என்பதை ஏற்றுக் கொள்வது. நாம் யோசித்த விதம் சந்தையில் நடக்கவில்லையென்றால், அதை ஏற்றுக்கொண்டு டிரேடிலிருந்து அப்போதைக்கு நகர்ந்துவிடுவது. `நாம் நினைத்ததுதான் சரி’ என்று நமக்கு நாமே நிரூபித்துக்கொள்ள மேலும் அதே திசையில் பயணிக்காமல், கூடுதல் பொசிஷன்கள் எடுத்து பெரிய ரிஸ்க்கில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பது.

15. ‘கான்ட்ராக்ட் நோட்’கள் வழங்கப் பட்டாலும், தனியாக ஒரு நோட் புத்தகத்திலோ, கம்ப்யூட்டரிலோ செய்யும் டிரேட்கள் அனைத்தையும் விவரங்களுடன் எழுதி, வாரம் ஒரு முறையும் மாதம் ஒரு முறையும் அதைப் பார்த்து, நமது செய்முறை (பேட்டர்ன்) என்ன என்பதையும், எங்கே தவறவிடுகிறோம் அல்லது எதில் சரியாக வருகிறது என்பதையும் தெரிந்துகொண்டு, நம் அணுகுமுறையில் தேவைப்படும் மாற்றங்கள் செய்வது.

கடைசியாக, உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது... டிரேடிங்கில் பணம் பண்ணலாம்... ஓர் ஒழுங்குமுறையுடன் செய்தால்!