Published:Updated:

`ராஜா கையை வச்சா' மோடில் எலான் மஸ்க்; ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த ட்விட்டர் பங்கு விலை!

Elon musk

கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதற்கு முன்பாக, கிரிப்டோ பற்றிய கேள்வியையும் இதே போல எழுப்பியிருந்தார். அதற்குப் பிறகு, ஒரு சில தினங்களில் கிரிப்டோவிலும் முதலீடு செய்து, கிரிப்டோவின் விலையை உச்சத்துக்குக் கொண்டு சென்றார்.

`ராஜா கையை வச்சா' மோடில் எலான் மஸ்க்; ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த ட்விட்டர் பங்கு விலை!

கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதற்கு முன்பாக, கிரிப்டோ பற்றிய கேள்வியையும் இதே போல எழுப்பியிருந்தார். அதற்குப் பிறகு, ஒரு சில தினங்களில் கிரிப்டோவிலும் முதலீடு செய்து, கிரிப்டோவின் விலையை உச்சத்துக்குக் கொண்டு சென்றார்.

Published:Updated:
Elon musk

டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் சி.இ.ஓ எலான் மஸ்க், கடந்த மாதம் 25-ம் தேதி, அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ட்விட்டர் குறித்து, ``ஜனநாயகம் சிறப்பாகச் செயல்பட பேச்சு சுதந்திரம் தேவை. ட்விட்டர் இந்தக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறது என நீங்கள் நினைக்கிறீர்களா" எனக் கேள்வி கேட்டிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவர் கேட்ட இந்தக் கேள்விக்கு 70% பேர் `இல்லை' என்கிற பதிலை சொல்லி இருந்தாலும், ட்விட்டர் நிறுவனத்தின் 10% பங்குகளை வாங்கி இருக்கிறார் எலான் மஸ்க். நேற்று (4.4.2022) எலான் மஸ்க் ட்விட்டரில் 9.2% (சுமார் 73.5 மில்லியன் டாலர்) பங்குகளை வாங்கியுள்ளார்.

கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதற்குமுன்பாக, கிரிப்டோ பற்றிய கேள்வியையும் இதே போல எழுப்பியிருந்தார். அதற்குப் பிறகு, ஒரு சில தினங்களில் கிரிப்டோவிலும் முதலீடு செய்து, கிரிப்டோவின் விலையை உச்சத்துக்கு கொண்டு சென்றார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமை நிர்வாக செயல் அதிகாரியான எலான் மஸ்க், உலகின் முதல் நிலை பணக்காரராக இருக்கிறார். இதில் உலகம் முழுவதும் டெஸ்லா தயாரிப்பான மின்னணு காருக்கு பிரத்யேக வரவேற்பு உண்டு. இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் 9.2% பங்குகளை எலான் மஸ்க் வாங்கியிருப்பது அமெரிக்கப் பங்குச் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்டர் குறித்த கேள்வியை அவர் எழுப்பியிருந்தபோதே, எலான் மஸ்க் புதிதாக ஒரு சமூக வலைதளத்தைத் திறக்கப்போகிறார் என்கிற பேச்சு அடிபட்டது. ஆனால், அவர் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு முன்னோட்டம் பார்த்திருக்கிறார் என்பதை அப்போது யாரும் அனுமானிக்கவில்லை.

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் முதலீடு செய்ததால் அந்த நிறுவனப் பங்கு விலை நேற்றைய வர்த்தகத்தில் 26% வரை அதிகரித்துள்ளது. இந்த முதலீட்டின் மூலம் ட்விட்டர் நிறுவனத்தின் மிகப் பெரிய முதலீட்டாளராக உருவாகி இருக்கிறார் எலான் மஸ்க். தற்போது ட்விட்டர் நிறுவனத்தில், 7.3 கோடி பங்குகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார் இவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ட்விட்டர் நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் டோர்சே வசம் 2.25% பங்குகள் மட்டுமே உள்ள நிலையில், அவரைவிட நான்கு மடங்கு அளவுக்கு கூடுதல் பங்குகளை வைத்திருக்கிறார் எலான் மஸ்க். ட்விட்டர் பங்குகளை வாங்கிவிட்டு, அதற்குப் பிறகு அவர் போட்ட ட்விட்டர் பதிவுதான் இது...

எலான் மஸ்கின் ட்விட்டர் பக்கத்தை 8.4 கோடி மக்கள் பின்தொடர்கிறார்கள். அவர்களில் சிலர், ``அடுத்தமுறை நீங்கள் எந்தப் பங்கை வாங்கப் போகிறீர்கள் என்பதை முன்பே தெரிவித்துவிட்டால், நாங்களும் அந்தப் பங்கை வாங்கி பணக்காரர்களாக மாற முயற்சி செய்வோம்" எனப் பதிலுக்கு ட்வீட் செய்து வருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism